Page 43 of 401 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #421
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like





  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

    புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை தலைவர்கள் கொண்டாடியுள்ளனர். வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    திமுக தலைவர் மு.கஸ்டாலின்
    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு
    பாரதிய ஜனதா மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
    பாரதி ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரரஜன்
    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
    தேமுதிக தலைவர் விஜயகாந்த்
    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்
    தி.க. தலைவர் வீரமணி
    பழ. நெடுமாறன்

    மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் புரட்சித் தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவினரை (முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா) இதில் சேர்க்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிப்பதில் ஆச்சிரியம் இல்லை. அதனால் சேர்க்கவில்லை. ஆர்.எம். வீரப்பன் அதிமுக இல்லை என்றாலும் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சி நடத்துகிறார். அவரையும் சேர்க்கவில்லை. திருநாவுக்கரசு புரட்சித் தலைவர் விசுவாசி என்றாலும் இப்போது காங்கிரசில் தலைவராக இருக்கிறார். அதனால் அவர் பெயரை சேர்த்திருக்கிறேன். இவ்வளவு பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தினத்தந்தி, தினமலர், இ்ந்து, தினமணி, தினகரன், மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு மற்றும் இங்கிலீஷ் பத்திரிகைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கன் கிரனிக்கிள் ஆகிய பத்திரிகைகளிலும் ஆனந்த விகடன், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி, புதிய தலைமுறை புத்தகம், பாக்யா, ஆகிய பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
    எல்லா டிவி சேனல்களிலும் புரட்சித் தலைவர் பிறந்த நாளில் அவரது படங்கள் காட்டப்பட்டன. சன் லைபில் மட்டுமே 3 படங்கள் போட்டார்கள். கலைஞர் டி.வி.யில் கூட அன்பே வா போட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் சிலைகளுக்கு எல்லா கட்சிக்காரர்களும் மாலை போட்டு மரியாதை செய்தனர்.

    நடிகர் சங்கம் சார்பில் புரட்சித் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. சமாதிக்கும் நடிகர்கள் சென்று மரியாதை செலுத்தினர். திரை உலகத்தினர் சார்பில் மாலையில் விழா நடத்தப்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டனர். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்போது திரையிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் படங்கள் அங்கங்கே வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் தியேட்டர்களில் புரட்சித் தலைவர் படங்கள் திரையிடப்பட்டன. இன்னும் அவை ஓடிக்கொண்டிருக்கின்றன.
    பார்லிமென்ட்டில் புரட்சித் தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    தமிழக அரசு 17-ம் தேதி விடுமுறை அளித்தது.
    மத்திய அரசின் சார்பி்ல் இதுவரை எந்த தமிழக தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாக இரண்டாவது முறையாக புரட்சித் தலைவர் உருவம் பொதிந்த ஸ்டாம்பு வெளியிடப்பட்டுள்ளது.. புரட்சித் தலைவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
    தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், உடை வழங்கல், அன்னதானங்கள் நடந்துள்ளன.

    ஜல்லி்க்கட்டுப் போராட்டம் கடந்த 17ம் தேதி அவ்வளவு தீவிரம் அடையவில்லை. ஆனாலும், ஆங்காங்கே அலங்காநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் அன்று நடந்தது.
    அந்த போராட்டங்களுக்கு நடுவிலேயும் புரட்சித் தலைவர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

    இதையெல்லாம் நான் சொன்னாலும் அதை ஆதாரத்துடன் பத்திரிகை செய்திகளை பதிவிட்டுள்ளீர்கள். அந்த செய்திகள், எதிர்காலத்தில் ஆதாரங்களாக விளங்கும். உங்கள் அளவு இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த செய்திகளை நானும் பதிவுபோட்டிருக்கிறேன். பெரும்பாலும் நீங்கள் பதிவிடாத செய்திகளாக பார்த்து போடுகிறேன்.

    இன்னும் தினமும் நம் தெய்வத்தைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.அது என்றும் தொடரும்.

    லோகநாதன் சார்,
    உங்கள் அசராத உழைப்புக்கு நன்றி. இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்க எனக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் பதிவிட்ட பிறகுதான் இங்கிலீஷ் பத்திரிகைகளிலும் புரட்சித் தலைவர் பற்றிய கட்டுரைகள் வந்திருப்பது தெரிந்து கொண்டேன். நீங்கள் இல்லாவிட்டால் அது எல்லாம் திரிக்கு பதிவிட வந்திருக்காது. உங்களுக்கு மறுபடியும் நன்றி.

    உங்களுக்காக சிறப்பு பரிசு அளிக்கிறேன். காந்தி, நேரு. லெனின், நெல்சன் மாண்டேலா மாதிரி உலகத் தலைவர்கள் வரிசைக்கு புரட்சித் தலைவர் உயர்ந்து விட்டார். நெல்சன் மாண்டேலா படத்தை கையில் வைத்தபடி 1970 களிலேயே புரட்சித் தலைவர் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். என்ன வருடம் எந்தக் கூட்டம் என்று தெரியவில்லை. அவருடைய கெட்டப்பை பார்த்தால் 70கள் இருக்கலாம் என்று தெரிகிறது. அப்போதே உலக அரசியல் பற்றி எல்லாம் புரட்சித் தலைவர் நுணுக்கமாக அறிந்திருக்கிறார். புரட்சித் தலைவரின் அந்த அரிய புகைப் படத்தையே உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன். மீண்டும் நன்றி.




    அன்பு நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,
    தங்களின் விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் , எனது பதிவுகளுக்கு அளித்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. எல்லா புகழும் இறைவன் எம்.ஜி.ஆருக்கே .உலக தலைவர்கள் வரிசையில் ஒப்பிட்டு புரட்சி தலைவரை வரிசைப்படுத்தியதற்கு நன்றி. பரிசுகளுக்கு மயங்கி நான் பதிவுகள் இடவில்லை. பாராட்டுக்களை எதிர்பார்த்து பதிவிடுபவனும் நான் இல்லை .எனது பணி புரட்சி தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதே..இருப்பினும் தங்களின் மேலான அன்பிற்கு எனது பணிவான நன்றி.

    மாற்று முகாமில் உள்ள நண்பர்கள் பதிவிடும் பொய்யான தகவலுக்கு தாங்கள் அளித்த / அளித்து வரும் இந்த புள்ளி விவரங்கள் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
    என்பது போல் உள்ளது . மக்கள் தலைவரின் 29 வது நினைவு நாள் அனுசரிப்பு, மற்றும் புரட்சி தலைவரின் 100 வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள்
    பற்றி சேகரித்து உள்ளேன். விரைவில் பதிவிட உள்ளேன். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது செல்வாக்கு/புகழ் மங்காமல் நாளுக்கு நாள் ஒளிவிளக்கு போல் சுடர்விட்டு பிரகாசிக்கின்றது /கூடி கொண்டே போகின்றது . ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் வகையில் , தாய்க்கு பின் தாரம் புகைப்படத்தை வெளியிட்டு
    மக்கள் திலகம் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு விளையாடுவதை பதிவிட்டதற்கு நன்றி. நட்சத்திர நடிகராகி, வசூல் சக்கரவர்த்தியாகி , நிகரற்ற அரசியல் தலைவராகி, சிறந்த நிர்வாகியாகி
    10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து மறைந்து 30 ஆண்டுகளாகியும்மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது போல் , இப்படிப்பட்ட போற்றுதல்கள், சாதனைகள், ஆராதனைகள், வழிபாடுகள் , புகழஞ்சலிகள் , எவருக்காவது உண்டா ?
    ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக ஒரு நடிகரின் 100 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஓரம் கட்டி விட்டார்கள் என்று சிலர் பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைகிறார்கள்.
    அதற்கும் தாங்களும், நண்பர் திரு. வினோத் அவர்களும் தக்க பதிலடி அளித்துள்ளீர்.
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சரி சமமாக திரையுலகிலும், அரசியல் உலகிலும் வென்றவர் எவருமில்லை என்பதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது தங்கள்
    பதிவுகள். மீண்டும் ஒரு முறை நன்றி.

    ஆர். லோகநாதன்.
    இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

  4. #423
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி (20/01/2017) முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
    இன்று (22/01/2017) ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

  5. #424
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #425
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #426
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #427
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #428
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #429
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #430
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •