Results 1 to 10 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post



    நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

    இப்போது சற்று முன்புதான் சர்வாதிகாரி படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதை குறிப்பிடலாம் என்று வந்து பார்த்தால் நீங்கள் படம் ஒளிபரப்பாவதை குறிப்பிட்டு மக்கள் திலகத்தின் அலப்பறையான ஸ்டில்லை போட்டிருக்கிறீர்கள். என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு அழகு. பால் வடியும் முகம். சுறுசுறுப்பு, இளமைத் துடிப்பு, சுருளான ஒரிஜினல் தலைமுடி. பிரதாபன் என்றால் பிரதாபன்தான்.

    சர்வாதிகாரி படம் ஏதோ இங்கிலீஸ் படத்தின் தழுவல் என்று கேட்டிருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை. படத்தின் பெயர் மறந்துவிட்டது. படத்திலும் இங்கிலீஸ் பட சாயல் தெரிகிறது.

    ஒரு காலத்தில் மக்கள் திலகத்தை அட்டை கத்தி வீரர் என்று கேலி செய்தனர். ஆனால், அவர் உண்மையான கத்தியுடன் சண்டை போட்டிருக்கிறார்.இந்தப் படத்தில் சண்டைக் காட்சியின்போது மக்கள் திலகத்தின் வாள் தனது கை விரலை துளைத்துவிட்டதாக நம்பியார் சாமி பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நான் அவரை சந்தித்துப் பேசும்போதும் அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். விரலில் தழும்பை காட்டினார்.

    சர்வாதிகாரி படத்தில் நம்பியாருடன் மோதும் கடைசி சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் பட்டு கதவில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறும். சண்டையின்போது நம்பியார் தள்ளி விட்டதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் மக்கள் திலகம் போய் விழுவார். உடனடியாக விநாடி நேரத்தில் துள்ளி நாற்காலியில் இருந்து எழுந்து விலகுவார். அடுத்த கணம் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நம்பியாரின் வாள் அந்த நாற்காலியின் சாய்ந்து கொள்ளும் பகுதியை துளைத்து மறுபக்கம் வரும். எப்படிப்பட்ட டைமிங்? இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து சிலிர்த்தேன்.

    கடைசியில் நம்பியாரை வளைத்து அவரது வாள் கொண்ட கையை தனது இடதுகையில் மடக்கி அவரின் வயிற்றில் மக்கள் திலகம் தன் கை வாளால் குத்துவார். அப்போது நிஜமாகவே குத்துவது போல கோபமும் அநியாயக்காரனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் மக்கள் திலகத்தின் முகத்தில் தெறிக்கும்.

    வயிற்றில் குத்தப்பட்ட நம்பியார் நீண்ட மேஜையில் சாய்வார். அவரை மக்கள் திலகம் மீண்டும் கத்தியால் குத்த மாட்டார். செத்த பாம்பை அடிக்கவோ மனமில்லை. நம்பியாரின் செயல்களை நினைத்தால் ஆத்திரமோ அடங்கவில்லை. அதன் வெளிப்பாடாகவும் நம்பியாரை வெற்றி கொண்டதை காட்டும் வகையிலும் நம்பியாரின் கையில் உள்ள வாளை தன் கையில் உள்ள வாளால் பலமாக அடித்து அந்த வாளை கீழே விழ வைப்பார். ஆவேசத்தின் அற்புதமான வெளிப்பாடு.

    மக்கள் திலகம் என்றாலே ஸ்டைல்தான் என்றாலும் கத்தியை கையில் எடுத்து விட்டால் கூடுதலாக தனி ஸ்டைல் அவருக்கு வந்துவிடும். மேலே உள்ள நீ்ங்கள் போட்ட அலப்பறை ஸ்டில் அதை நிரூபிக்கிறது லோகநாதன்.

    நான் விடுவேனா? அதே சர்வாதிகாரி படத்தில் இருந்து புரட்சித் தலைவரின் இன்னொரு கலக்கல் ஸ்டைல். இந்தாருங்கள்.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •