Page 144 of 401 FirstFirst ... 4494134142143144145146154194244 ... LastLast
Results 1,431 to 1,440 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1431
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1432
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    காமராஜர் அரங்க வாயிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்.

  4. #1433
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1434
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    காமராஜர் அரங்க வாயிலில் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிக்கு மலர் அலங்காரம் செய்த பின் ஆராதனைகள் நடைபெற்றன

  6. #1435
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1436
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1437
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நுழைவு சீட்டின் தோற்றம் .


    நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் விவரம் :

    நடிகர் தீபன், அரசு அதிகாரி திரு.கற்பூர சுந்தரபாண்டியன் , மாலை சுடர் ஆசிரியர் திரு.துரை கருணா , தின இதழ் ஆசிரியர் திரு. சிரஞ்சீவி அனீஸ் , பொன்மனம் பண்பலை வரிசை திரு.சிவகுமார் , இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் .
    தொழிலதிபர் திரு. அந்தோணி, மற்றும் சிலர் .

  9. #1438
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் என்ற கர்மயோகி
    ஒளி படைத்த கண்களையும், உறுதி கொண்ட நெஞ்சையும், தலை சிறந்த வாய்மை, தூய்மை, நேர்மை நிறைந்த கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் ஏழைப்பங்காளரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தாயை வணங்காத பொழு தில்லை, ராமாவரம் தோட்ட இ;ல்லத்தில் கோயில் கொண்டுள்ள அன்னை சத்யாவின் திருஉருவத்தை வணங்கி விட்டுத்தான் நாள் தோறும் வெளியே கிளம்புவார்.
    ஈராயிரம் ஆண்டுகள் அன்னை தமிழ் கலைத்தாய் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன் வைரம் பாய்ந்த தேக்குமர உடலமைப்புக் கொண்டு பளபளக்கும் தங்க மேனித்தோற்றமும், சிங்க நடையும், புன்னகை பூக்கும் புன் முறுவலும்,இனிய குரல் வளமும், அனைவரையும் அன்பால் பாசமுடன் ஈர்க்கும் நேசமும் ஒருசேரஇருந்தவர். ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை ஈர்க்கும் கோமான்.
    குடும்பச் சூழ்நிலை காரணமாக நாடகங்களில் நடித்தார். பின்னர் அதில் அனுபவம் பெற்ற அவர் திரைப்படங்களில் நடித்தார். யாருடைய அடிச்சுவட்டையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை (ஸ்டைலை) பின்பற்றி நடிக்கத் தொடங்கினார். காதல் காட்சிகளில்-நடனக்காட்சிகளில், சண்டைக்காட்சிகளில், புதிய டிரெண்டை உருவாக்கி, அமைத்து திரைப்படங்களில் மக்கள் மனதில் இடம் பெற்று மக்கள் திலகம் ஆனார்.
    இதன் விளைவாக எம்.ஜி.ஆர் நாடக மன்றம் அமைத்து இன்பக்கனவு, அட்வகேட் அமரன் நாடகங்களில் நடித்ததின் மூலம்-நாடக விரும்பிகள் மட்டுமல்ல, நாட்டு மக்களும் எம்.ஜி.ஆரை தெரிந்து கொள்ள முடிந்தது.
    எம்.ஜி.ஆரின் இயல்பான நடிப்பைக் கண்டு பட்சிராஜா ஸ்டூடியோவின் அதிபரான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தமிழின் மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகளில் மலைக்கள்ளன் படத்தில் நடிக்க வைத்து, தயாரித்து இயக்கவும் செய்தார்.
    அவரது நடிப்பு சகநடிகர்களுக்கு ஆச்சர்யத்தை விளை வித்தது. அவரது கடினமான உழைப்பால், சிலம்பம், வாள் சண்டை, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்து மக்கள் கலைஞனாக, இந்த நூற்றாண்டின் வசூல் நடிகனாக தமிழகமெங்கும் வெற்றிக் கொடி ஏற்றி பவனி வந்தார்.
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்; திலையுலகில் நுழைந்து நடிப்புலகில் கொடிகட்டிப்பறந்த காலத்திற்கு முன்பும், அவரது மறைவுக்கு பின்பும் அவரது நடிப்பாற்றலை பின்பற்றி மற்ற நடிகர்கள் நடிக்க முயல்கிறார்களே தவிர, அவர்களால் முடியவில்லை என்பதை விட மக்கள் அந்த நடிப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பN;த உண்மை. அதுமட்டுமல்ல அவர் நடித்த படங்களின் தலைப்பு கொண்ட பெயர்கள் அவருக்கே சொந்தம் என்ற வகையில் மற்ற நடிகர்கள் அந்த பெயரில் வெளியான படங்களுக்கு இன்றும் ஆதரவு தரவில்லை. அந்த வகையில் ரகசிய போலீஸ், ராமன் தேடிய சீதை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன் மக்களிடையே பேசப்படவில்லை. அவரது நடிப்பு சாதனை அவருக்கு மட்டும் சொந்தம் என்று மக்கள் அசைக்க முடியாத தனி முத்திரை குத்திவிட்டார்கள்.
    எப்போது திரையிட்டாலும் சளைக்காமல் பார்க்கத் தோன்றும் படங்கள் எம்.ஜி.ஆர் படங்கள் தான்.
    தன்னலமற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் இயல், இசை, நாடகம், அரசியல் ஆன்மீகம் என பன்முகம் கொண்ட மருதூர் கோபலாமேனன் இராமச்சந்திரன், அனைவராலும் ஒட்டு மொத்தமாக வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். அவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும், நடைமுறையிலும் செயல்பட்டவர் என்பது அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கும், தொடர்புடையவர் களுக்கும், ரசிகர்களுக்கும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் நன்றாகவே தெரியும்.
    மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் சுருக்கமாக எம்.ஜி.ஆர் தமிழக நடிகர்களில் மூம்மூர்;த்திகளில் ஒருவர். எதையும் திட்டமிட்டு செய்வதில் வல்லவர் என்பதை விட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை திரைப்படங்கள் வாயிலாக எடுத்துரைத்து அதில் வெற்றிகரமாக நடந்து தமிழகத்தின் முதல்வரானார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் ஒரு மிக நல்ல பழக்கம் இருந்தது. யார் கடிதம் எழுதினாலும் தம் கைப்பட பதில் எழுதி வருவார். தவிர்க்க முடியாத சில நேரங்களில் அவரது நேர்முக செயலாளராக இருந்த சாமி அவர்கள் பதில் எழுதி எம்.ஜி.ஆர் கையெழுத்திடுவார். இதற்கு அவர் கூறும் காரணம.; யாராவது நேரில் வந்தால் பேசாமல் இருக்கோமா? டெலிபோனில் கூப்பிட்டால் உடனே பதில் சொல்லாமல் இருப்போமா? நேரில் வரவோ, டெலிபோனில் தொடர்பு கொள்ளவோ வசதிப்படாதவர்களும், வாய்ப்பில்லாத வர்களும் கடிதம் போடும் பொழுது, அதையும் நேரில் வந்ததாக பாவித்து பதில் சொல்வது தானே நியாயம் என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
    அடிமைப்பெண் பட ஷ_ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர் குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தாhர்.
    முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல என்பாராம்.
    இவருக்கு புரட்சி நடிகர் என்று முதல்வர் கலைஞர் கருணாநிதியும், பொன்மனச்செம்மல் என்று கிருபானந்த வாரியாரும், கொடுத்து சிவந்த கரம் என்று கும்பகோணம் ரசிகர்களும், வாத்தியார் என்று திருநெல்வேலி ரசிகர்களும், எட்டாவது வள்ளல் என்று எம்.ஜி.ஆர் பக்தரான ‘பாக்யா” சினிமா பகுதி ஆசிரியரும், எழுத்தாளரும், நூலாசிரியரும், பத்திரிக்கையாளருமான மணவை பொன்.மாணிக்கம் ‘எட்டாவது வள்ளல்” என்று அவர் எழுதிய எம்.ஜி.ஆர்; அருமை பெருமைகள் விளக்கி வெளியிட்ட நூலின் மூலம் ‘எட்டாவது வள்ளல்” என்று பெருமைப்படுத்திய புத்தகத்தின் மூலமும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று பெயர் சூட்டி கலைப்பூங்கா சினிமா செய்திகளில் வெளியிட்டதை மேலும் பெருமைபடுத்தும் வகையில் மெருகேற்றி அவர் அதிமுக ஆரம்பித்த காலகட்டத்தில் புரட்சித்தலைவர் என்று கலைப்பூங்கா பெருமைப் படுத்தியதை தொடர்ந்து தென்னகம் நாளிதழில் முன்னால் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி தொடர்ந்து புரட்சி தலைவர் என்று பிரபலபடுத்தி வழங்கி மகிழ்ந்தார்.
    மன்னவன் ஆனாலும் மாடு ஓட்டும் சின்னவனானாலும் மண் குடிசையில் வாழும் குசேலனானாலும் மற்ற யாரையும் சந்திக்கச் சென்றாலும், வேறு யாராவது தன்னை சந்திக்க வந்தாலும் முதலில் வணக்கம் சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். சில சமயங்களில் வந்தவர்கள் முந்திக் கொண்டு வணக்கம் சொல்லிவிட்டாலும், வணக்கம் சொல்லிய அவர்களுக்கு ஒரு வணக்கமும், தன் சார்பில் ஒரு வணக்கம் சொல்வதையும் பழக்கமாக கொண்டிருந்தார். அதே நேரம் அவர்கள் எதிரிலோ, அல்லது பொது மேடைகளில் கால் மேல் கால் போட்டு உட்கார மாட்டார். ஒரு நாளும் வாக்கிங் போகாமல் இருந்ததில்லை.
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்; தொட்டது துலங்கும். கைபட்டது மணக்கும் என்பார்கள். ராசியான கரங்களுக்கு சொந்தக்காரர் அவர். திரையுலகமாகட்டும், அரசியலாகட்டும் மாபெரும் வெற்றி நடைதான் போட்டிருக்கிறார். தோல்விக்கும் அவருக்கும் தூரம்தான். எப்போதாவது சில சமயங்களில் தோல்வி நெருங்குவது போலிருக்கும். அது கானல் நீராகவே தோன்றும். அதுவும் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். வெற்றி மீது ‘வெற்றி வந்து என்னைச் சேரும் “என்று பாடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரே எதிரிகளை வீழ்த்துவதிலும் ஏழைகளை உயர்த்துவதிலும்,ஏழையின் கண்ணீர் குமுறும் எரிமலையின் நெருப்பு என்று உணர்ந்து வாழ்ந்து காட்டிய கர்மயோகி.
    பொதுவாக எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் தனது இமேஜுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதில் படு ஜாக்கிரதையாக இருந்தார். திரைப்படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டார். மது அருந்த மாட்டார். தாய்க்குலத்தைப் போற்றி புகழுபவராக இருந்ததால் மக்கள்மனதில் அவருக்கு நீங்கா இடத்தைப் பிடித்து மக்கள் திலகமானார்.
    மதுவிலக்கு கொள்கையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காட்டிய தீவிரமும், ஏழை எளிய மக்கள் மீது அவர் கொண்ட பரிவும், பாசமும், நேசத்தையே காட்டுவதாக அமைந்தது. சட்டசபையில் மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஆனால் அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் செவி சாய்க்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மேடைகள் தோறும் மது விலக்கு ரத்தை எதிர்த்து முழக்கமிட்டார்.
    30-8-1972ல் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு நாள் விழாவில் தலைமை வகித்து பேசும் போது மதுவிலக்கு ரத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
    1972-ஆம் டிசம்பர் 2ஆம் தேதி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒலிபெருக்கி இல்லாமலேயே நீண்ட நேரம் பேசினார். இந்த சட்டசபை செத்து விட்டது என்று முழங்கி அன்று சபையை விட்டு வெளியேறினார். சட்டசபையை விட்டு படி இறங்கிய போது எம்.ஜி.ஆரை ஆளும் கட்சியினர் ஆபாசமான வார்த்தைகளால் இழிவாகப் பேசி எம்.ஜி.ஆர். மீது செருப்பை வீசினார்கள்.பின்னர் முதல்வராகத்தான் சட்டசபைக்கு திரும்பினார்.
    எம்.ஜி.ஆரிடம் ஒரு பழக்கம் அவரிடம் ஒருவர் உதவி என்று கேட்டு வந்துவிட்டால் அதன் பின் வேறு யாரிடமும் உதவி கேட்கக் கூடாது.
    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர். அரசியலைக் கலக்கி இன்று திமுக அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருக்கும் துரைமுருகன், சினிமாவில் வலம் வந்து காமெடியில் கலக்கிய கோவை சரளா.
    பொதுவாக அவரது இயல்பான குணம் முன்பின் அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து நான் எம்.ஜி.ராமச்சந்திரன்-சினிமா நடிகர் என்று அறிமுகம் செய்து கொள்வார்.ரொம்பவும் நெருக்கமான வர்களை ஆண்டவனே என்று தான் அழைப்பார்.
    அவரை எதிர்ப்;பவர்கள் அவரை மலையாளி என்று விமர்சித்தப் போதிலும் தமிழன் என்று காட்டிக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். பொதுவாக மலையாள பத்திரிகையாளர்களை பார்க்கும்போது மலையாளத்தில் பேசமாட்டார். தமிழிலேயே தான் பேசுவார். அந்த விஷயத்தில் கூட தனது இமேஜுக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
    அதிமுகவை ஆரம்பித்த புதிதில், தேர்தல் பிரச்சாரத்திற்காக பாண்டிச்சேரி மாநிலம் மாஹிக்கு எம்.ஜி.ஆர் சென்றார். அங்கு பெரும்பான்மையான மக்கள் மலையாளம் பேசுபவர்கள். அவர்கள் எம்.ஜி.ஆரிடம் மலையாளத்தில் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
    அதற்கு எம்.ஜி.ஆர் நான் வளர்ந்தது, புகழ்பெற்றது என அனைத்துக்குமே காரணம் தமிழ்நாடுதான். எனக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் பேசும் தமிழில் என் பேச்சைக் கேளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கலைந்து செல்லலாம் என்றார். கூட்டத்தினர் வாயடைத்துப்போய் எம்.ஜி.ஆரின் தமிழ் பேச்சை ரசித்தனர்.
    எம்.ஜி.ஆர் அரசியலில் வருவதற்கு திரையுலகை திட்டமிட்டே பயன்படுத்தினார். கச்சிதமாக வியூகம் வகுத்து சரியான நேரத்தில் அரசியலில் இறங்கி அங்கேயும் பல அற்புதமான சாதனைகளை நிகழ்த்தினார்.
    எம்.ஜி.ஆர் உடல் எந்த அளவு வலிமையானதோ அந்த அளவு அவர் உள்ளம் மென்மையானது. அவர் குடும்பத்தினர் மீது மட்டுமல்ல தனது ரசிகன், தொண்டர்கள் மீது வைத்திருக்கும் பாசமும், நேசமும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வானது.
    எம்.ஜி.ஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக் கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன? என்பது தான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும் கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும் போது ஒரு முறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
    ஒருவன் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலே போதும் எந்த தவறும் செய்ய மாட்டான். இப்பொழுது எந்த நடிகருக்கும் இந்த பண்பும், அன்பும், பாசமும் இல்லை.
    யாரையும் பாராட்ட வேண்டுமென்றால், அவர்களுடைய திறமையைப் பாராட்டுவதோடு பணமும் கொடுத்து அவர்களுக்கு உற்சாகப்படுத்துவது எம்.ஜி.ஆரின் தனிச் சிறப்புகளில் ஒன்று.
    உலகமெங்கும் வியாபாரத்திற்கும் தமிழ் பெருங்குடி மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களது இதயத்தில் தங்கச்சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் சக்கரவர்த்தித்திருமகன். சிந்தை ஒவ்வொன்றையும் சிலிர்க்க செய்யும் வகையில், அவரது வழித்தோன்றல்களை விழியின் பார்வையால் இனிய கம்பீரமான இனிய குரலில் இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று அழைத்திட்ட பொன் ;மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சி நடிகர், வாத்தியார், என்று எல்N;லாராலும் அன்போடு அழைத்திட்ட புரட்சித் தலைவர் தீர்க்கதரிசி – பாரத் ரத்னா எம்.ஜி.ஆர்; நம்மை விட்டு பிரிந்து வங்க கடலோரம் தங்கத்தலைவர் மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.
    1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அதன் பின்னர், 1984ஆம் ஆண்டில் ஆரோக்கியம் குறைந்து நோய்வாய்பட்டிருந்த போதிலும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியிலிருந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1987ல் மறைந்தார்.
    கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்; இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக் கிறார்.மத்திய அரசு சிறந்த நடிகராக 1972ல் ரிக்ஷாக்காரன் படத்திற்கு விருது வழங்கி கௌரவித்தது.இவரது மறைவுக்குப் பின்னர் 1988-ல் மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
    மக்கள் இதயங்களில் குடியிருந்த கோயிலாக குடிகொண் டிருந்த புரட்சித்தலைவர் இப்பொழுது நம்முடன் இல்லை. ஆனால் அவரது திரைப்படங்கள் எப்பொழுதும் நம்முடன் காலங்காலமாக பேசிக் கொண்டிருக்கும். இன்று அவர் நம்மிடையே இல்லை யென்றாலும் அந்த சொல்லைக் கூறும் போது எழுகின்ற தாக்கத்திற்கு எல்லையே இல்லை.
    மனித உருவில் நம்மை விட்டு அமரானார் என்றாலும் அவரது எண்ணங்களும், சிந்தனைகளும், மக்கள் பால் கொண்ட அன்பெல்லாம் நம் எழுச்சியோடும், உயிரோடும், உதிரத்தோடும,; உயிர் மூச்சோடும், நாடித் துடிப்போடும் புரட்சித்தலைவர் இரண்டறக் கலந்து நம்மையெல்லாம் அவர் தாக்கமான கொள்கை முழக்கங்களால் நம் நாடிநரம்புகள் முறுக்கேறி விழிப்புணர்வு கொண்டுவிடும் அளவுசெயல்பட்டிருக்கிறார். எனவே இன்னும் எத்தனை காலமானாலும் அவரையும் அவர் உழைப்பிலும் நடிப்பிலும் உருவான திரைப்படைப்புகளை நாம் மறக்கவே முடியாது, நின்று நிலைக்கும்.
    கலைஞன் குனிந்து நடக்கக்கூடாது, நிமிர்ந்து தான் நடக்கணும், ஆண்மையா அடக்கமா இருக்கணும். காலத்தின் வரையறுக்கும் ”தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”” – என்ற வள்ளுவரின் வாக்குக ;கேற்ப வாழ்ந்து தமிழையும் வாழ்வித்து, தமிழர்களையும் வாழ்வித்துக் கொண்டிருக்கும் அவர் உலக மக்களிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பேரறிஞர் அண்ணாவின் தத்துவப்படி மக்களின் உயிரினில் கலந்து வாழ்கிறார்.
    பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாகவும், கோடான கோடி இந்திய மக்களால் பாரத் ரத்னா என்று போற்றப்படும் கர்மயோகி எம்.ஜி.ஆர்-”டைனமிக் என்று அழைக்கப்படும் சுறுசுறுப்பான சக்திவாய்ந்த தலைவராக எவரெஸ்ட் போல் உயர்ந்து, நிமிர்ந்து நின்று பீனிக்ஸ் பறவை போன்று மக்கள் இதயங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையின் நிகழ்வுகள் வரலாறு காணாத உலக அதிசயம்.
    இன்றும் உலகமெங்கும் எங்கு திரும்பினாலும் கர்மயோகி தீர்க்கதரிசி மக்கள் திலகம் நடித்த ஒளிவிளக்கு படத்தில் வரும் பாடல்தான் அவர் பேரும், புகழையும் பெருமையும் போற்றி என்றென்றும் அவரது திருநாமம் வாழ நாட்டு மக்கள் நினைவஞ்சலியாக செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆண்டவனே உன் பாதங்களை
    கண்ணீரில் நீராட்டினேன்
    இந்த ஓர் உயிரை நீ வாழ வைக்க
    இன்று உன்னிடம் கையேந்தினேன்-முருகையா!
    பன்னிரண்டு கண்களிலே
    ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    எண்ணிரண்டு கண்களிலும்
    இன்ப ஒளி உண்டாகும்
    உள்ளமதில் உள்ளவரை
    அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வா என்றால்
    மண்ணுலகம் என்னாகும்
    மேகங்கள் கண்கலங்கும்
    மின்னல் வந்து துடிதுடிக்கும்
    வானகமே உருகாதோ
    வள்ளல் முகம் பாராமல்
    உன்னுடனே வருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு….
    -என்கிற பாடலே உலகமெங்கும் விண்ணைப் பிளந்து என்றும் ஒலித்து கொண்டிருக்கிறது.
    -இந்திரஜித்

  10. #1439
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப் பெண் பட வேலைகள் துவங்கிய நேரம் அது. திரைக்கதை,வசனம் எழுதும் பணிகள் முடிந்து சூட்டிங் செய்ய ஆயத்தமானார்கள்.

    பாடல் கம்போசிங் முடிந்தபோது ஜெயலலிதவை அழைத்த எம்ஜிஆர் படத்தில் நீ பாடுகிறாய் என்று சொல்லிவிட்டார்.

    அதிர்ந்து போனார் ஜெ., என்னால் எப்படி என்று திரும்ப திரும்ப கேட்டுள்ளார். உன்னால் முடியும் என்று உறுதியாக கூறி விட்டார் மக்கள் திலகம்.

    அடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது.

    அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்ய ஆயத்தமானார்கள். அம்மு கொஞ்சம் பொறு ஒரு கெஸ்ட் வர்றாங்க வந்தபின் ஸ்டார்ட் பண்ணலாம் என்று எம்ஜிஆர் கூறி விட்டார்.

    கொஞ்ச நேரத்தில் எம்ஜிஆரின் கார் வந்து நிற்க ஒரு பெண் இறங்குகிறார். அந்தப் பெண்ணைப் பார்த்த ஜெ.,விற்கு பயங்கர அதிர்ச்சி.

    அவர் பெயர் கோகிலவாணி. ஜெ., வுடன் படித்தவர். ஒரு சின்ன பிளாஷ்பேக். ஜெ. காண்வென்டில் படிக்கும் போது பாட்டுப் போட்டி ஒன்று வர ஜெ.,வும் கோகிலவாணியும் பெயர் கொடுத்தார்கள்.

    ஆனால் சில சிபாரிசுகளில் கோகிலா தேர்வு செய்யப்பட்டார். நிறைய பயிற்சி எடுத்துப் போன ஜெ.,விற்கு கோகிலா தான் பாடப் போகிறார் என்று தெரிந்ததும் அழுதே விட்டார்.

    இரண்டு நாள் பள்ளிக்கு வராமல் அழுதபடியே இருந்தார். கோகிலவாணி கிண்டல் செய்ய, நானும் பாடிக்காட்டுகிறேன் என்று சபதம் செய்தாராம்.

    இது எப்படி எம்ஜிஆருக்கு தெரியும் என்று ரொம்பவே குழம்பிப் போனார் ஜெ., அந்த தோழியை சிரித்தபடி ரிக்கார்டிங் தியேட்டருக்குள் ஜெ.,பாடும் அறையில் அமரவைத்து உபசரித்து பாடல் பதிவு செய்தாராம் எம்ஜிஆர்.

    ஜெ., விற்கு இரண்டு சந்தோசம். ஒன்று சபதம் நிறைவேறியது. இரண்டாவது தோழியை சந்தித்தது.

    சபதம் மேட்டர் எப்படி எம்ஜிஆருக்கு தெரியும் என்பதை இறுதி வரை ஜெ., விடம் எம்ஜிஆர் கூறவே இல்லையாம்.

    அதுதான் எம்.ஜி.ஆர்.

  11. #1440
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -21/03/2017

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •