Page 246 of 401 FirstFirst ... 146196236244245246247248256296346 ... LastLast
Results 2,451 to 2,460 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2451
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2452
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like




    மிகச்சரியாக 52-ஆண்டுகளுக்கு முன்பு.... இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில் 'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ராமச்சந்திரனையும்,
    பி.சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.

    23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு. அன்று தீபாவளி பண்டிகை. கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது. கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.

    எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.
    சிறிது நேரத்தில்....
    விண்ணில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....
    ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...

    திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.

    பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுகொடுக்க முடியாமல் சரோஜாதேவி...

    அவர் பயணம் மேற்கொள்ளும் வழியான 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது...

    அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய பிரதமர்
    'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.
    எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம் எதுவாக இருந்தாலும்.. அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.

    விழா நடக்கும் 'நுவரெலியா'விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான். இங்கிருந்து மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.

    விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள். அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை. விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் எம்ஜிஆர் அவர்களும், சரோஜாதேவி அவர்களும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

    'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது. அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.

    அம்மேடையில் தான் M.G.R. அவர்களுக்கு "#நிருத்திய_சக்ரவர்த்தி" என பட்டம் அளிக்கப்பட்டது.

    ('நிருத்திய' என்றால் 'அள்ளிக்குவிக்கின்ற' என்ற பொருள்)

    விழா நிறைவில் பைனாகுலர் மூலமாக அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்த #மக்கள்_திலகம்....
    தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.

    மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
    "ஹனே மகே தெய்யோ" என்று கூற..

    அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...

    பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.
    "அந்த முடமான அன்பு சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம். மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்" என்கிறார் சுப்பையா இராஜசேகரன்.

    இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    மக்களின் திலகமாக
    #நேற்று மட்டுமல்ல..
    #இன்றும்... ஏன்
    #நாளை-யும்...
    அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
    #வாழ்ந்தார்...
    #வாழ்கிறார்....
    #வாழ்வார்....

    (அந்த நிகழ்சியில் பங்கேற்றவர்களின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை தொகுக்கப்பட்டது)
    தங்களின் நினைவுகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்ட...

    *இலங்கையிலிருந்து திரு. Suppaiah Rajasegaran

    *கனடாவிலிருந்து தொலைபேசி வாயிலாக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட
    திரு. Shan Chandrasekar

    *சென்னையிலிருந்து திரு.Sukumar Shan

    ஆகியோர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
    அன்புடன்: துரை வேலுமணி

    *முதல் படம் கொழும்பு 'இரத்மலானை' விமான நிலையத்திலிருந்த வெளியே வரும் எம்ஜிஆர்-சரோஜாதேவி
    *இரண்டவது படம் 'நுவரெலியா' விழாவில் எடுத்தது.
    *கீழே உள்ளபடம்
    'மலை நாட்டு இலட்சுமி' பட்டம் வென்ற இராசம்மாவுடன் எம்ஜிஆர்.


    நன்றி : எம்ஜிஆர் தளம்: துரைவேலுமணி

  4. #2453
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.

    ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.

    எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.

    அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதில் இன்றுவரை அந்த சமுகம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நெஞ்சில் வைத்து துதித்துகொண்டிருக்கின்றது.

    1987 ஆம் ஆண்டுகளின் முன்பகுதி பாரிய அனர்த்தங்கள் ஆபத்துக்கள், குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்களுக்கு மத்தியில் நாளை எங்கள் உயிர் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டுவிடும் என்ற பீதியுடன் நாம் வாழ்ந்துவந்தாலும், எம்.ஜி.ஆர் இருக்கின்றார் என்ற தைரியம் எம் சுற்றத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுக்களிலும், போராளிகளின் நம்பிக்கைகளிலும் தெளிவாகத்தெரிந்தமையினை தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

    உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் உணவுகளுடன் வந்த இந்தியக்கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையினால் எச்சரிக்கப்பட்டு, திரும்பி அனுப்பட்டதும், ஆனால் உடனயடியாகவே பிற நாடு ஒன்றின் வான்பரப்பு என்றாலும் வாடுவது தமிழ் இனம் என்ற எம்.ஜி.ஆரின் அசைக்கமுடியாத பிடிமானத்தால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கைக்கு மேலாக சுற்றிவந்து உணவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றதும், அப்போது எங்களுக்கு வானில் இருந்து அருள் புரிந்தது மிராஜ்களாக தெரியவில்லை எம்.ஜி.ஆராகவே தெரிந்தார்.

    ஆனால் சில சூழ்ச்சிகளால், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் தாயகங்களில் சிங்களவனையும் மீறிய ஊழித்தாண்டவங்கள் இடம்பெற்றபோது, நோய்ப்படுக்கையில் படுத்திருந்தாலும் அவர்களுக்காக ஏங்கிய ஒரே உன்னதமான ஜீவன் எம்.ஜி.ஆர் மட்டுமே.

    இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கும்வேளைகளில், இந்திய அமைதிகாக்கும் படைகள், ட்ராக்குலாக்களாக எங்கள் இரத்தங்களை வெறிகொண்டு குடித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆரின் இழப்பு எங்களின் இழப்பாகவே எங்களுக்கும்தோன்றியது.

    ஐயோ… எங்களைக்காப்பாற்ற இனி எவரும் எம் இனத்தில் இல்லை என்ற அன்றைய நாட்களின் அந்த மக்களின் அவலக்குரல் இறுதிமட்டும் தீர்க்கதரிசனமாகவே போய்விட்டது.

    எம்.ஜி.ஆரின் எங்கள் மீதான கரிசனை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை, அரசியல் இலாபங்களாக இருக்கவில்லை, அதற்கான தேவைகளும் உச்சத்தில் இருந்த அவருக்கு இருக்கவில்லை. காசுக்காகவோ, தன் காரியங்களுக்காகவோ அது இருக்கவில்லை. உண்மையான உணர்வு, பாசம், நேசிப்புக்களுக்காகவே அது இருந்தது. அந்த நேசம், பாசம் அவர் மறையும் வரை அவரிடம் உச்சமாக இருந்தது.

    நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.

    சென்னை சென்ற முதலாவது நாள்.. முதல்வேலையாக மரினாபீச்சுக்கு சென்று அங்கே..இங்கே பார்க்காமல் நேராகச்சென்றேன் எம்.ஜி.ஆரின் புகழுடல் “ஈழத்தமிழன் விடிவு பற்றிய நல்லசெய்தி தன் கல்லறையின் காதுகளில் விழாதா” என்ற ஏக்கத்துடன் இருக்கும் இடத்திற்கு.

    தூரத்தில் “எம்.சி.ஆரின் வாச்சு சத்தம் கேக்குதுப்பா.. என்று சிலர் கல்லறையில் காதுகளை வைத்து கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையாக திறப்புக்களால் தட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அகலும்வரை காத்திருந்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றேன். கண்கள் கலங்குகின்றன, இருதயத்தில் ஒரு பரிதவிப்பு, இதோ கோடி இயதங்களில் வாழும் ஒருவரின், எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் ஒரு உன்னதமானவரின் உறங்கும் இடத்திற்கு செல்கின்றேன் என்ற பதபதப்பு. அமைதியாக கைகளை கட்டி நானும் என்னுடன் வந்த நண்பர்களும் நிற்கின்றோம். எனக்கு கண்கள் குளமாகிவிட்டது. நண்பர்களை பார்த்தேன் அதில் ஒருவர் அழுதே விட்டார். “காற்று நம்மை அடிமை என்று சொல்லவில்லையே” என்று தொடர்ந்து அந்த பாடல் வரிகள் மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தன.

    பக்கத்தில் கடமையில் இருந்த காவல்அதிகாரி தம்பி நீங்கள் சிலோனுங்களா? என்று கேட்டார். ஓம்.. என்றோம். ஏதோ சொல்லவந்தவர், கல்லறையினையும் எங்களையும் பார்த்து தொண்டைவரை வந்த வசனங்களை கஸ்டப்பட்டு விழுங்கிவிட்டு, எங்களை தட்டிக்கொடுத்துவிட்டு அப்பால் சென்றார்.

    தமிழ்நாட்டில் எம் இனத்தின் எம்மீதான் அன்றைய நிலையாக அவரது செய்கை சிம்போலிக்காக இருந்தது நமக்கு.
    இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.




    நன்றி கணேச லிங்கம் முகநூல்

  5. #2454
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2455
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    கருணை இருந்தால் வள்ளலாகலாம்

    கடமை இருந்தால் வீரனாகலாம்

    பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

    மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்


    மூன்றும் இருந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர்.

    நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்

  7. #2456
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை நமதே 4.7.1975

    மக்கள் மீதும் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மீதும் எம்ஜிஆர் வைத்திருந்த நம்பிக்கையின் மந்திர சொல்தான் நாளை நமதே .சரியாக இரண்டு ஆண்டுகளில் 4.7.1977 அன்று தான் நினைத்தை முடித்து காட்டி கோட்டைக்குள் தமிழக முதல்வராக நுழைந்தார் .

    25 ஆண்டுகள் தொடர்ந்து மக்களோடு நேரிடையாக தொடர்பு கொண்டு தான் சேர்ந்திருந்த திராவிட இயக்கத்திற்காக இரவு பகல் உழைத்து தான் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கும் , தர்ம காரியங்களுக்கும் வாரி வழங்கினார் . 1967 ல் அவர் மரணத்தை வென்று மறுபிறவி கண்டார் .எம்ஜிஆர் மீது உயிரையே வைத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் பிராத்தனைகளும் , எம்ஜிஆரின் தர்மங்களும் அன்று காப்பாற்றியது .

    1972ல் எம்ஜிஆருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் அன்றய ஆளுங்கட்சியும் , பத்திரிகைகளும் தொடுத்த தாக்குதல்கள் அனைத்தையும் மக்கள் துணையோடும் தன்னுடைய ரசிகர்கள் பேராதரவுடனும் வெற்றி மேல் வெற்றி கண்டார் .

    நான் சபை ஏறும் நாள் வந்தது என்று நாளை நமதே படத்தில் எம்ஜிஆர் பாடுவார் . நிஜ வாழ்வில் பாடியதை வரலாற்று நிகழ்வாக 4.7.1977 அன்று சென்னை கோட்டையிலே தமிழக முதல்வராக சபை ஏறி நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் என்பது உலகிற்கு அடையாளம் காட்டினார் ..

  8. #2457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    4.7.1977

    ''நினைத்தை முடிப்பவரின் ''வாழ்க்கையில் திருப்புமுனை - மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி திரு நாள் .

    1972 டிசம்பர் மாதத்தில் சட்ட சபையில் மக்கள் திலகத்தை பேச விடாமல் அன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிருகத்தனமாக நடந்த சூழலில் மக்கள் திலகம் அவர்கள் '' சட்ட சபை செத்து விட்டது . இனிமேல் இங்கு வர மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு வெளியேறினார் .

    54 மாதங்களுக்கு பிறகு மக்கள் திலகமே சட்ட சபை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு 30.6.1977 அன்று முதல்வராக பதவி ஏற்று பின்னர் 4.7.1977 அன்று தமிழக சட்ட சபைக்குள் மாபெரும் வெற்றி வீரராக எடுத்த சபதத்தை முடித்தவராக
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நுழைந்தார் .

    வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மக்கள் தலைவரை காண்பது அரிது .

  9. #2458
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சொன்னால் நம்ப மாட்டீர்கள் 1-ம் தேதி முகநூலில் எம்.ஜி.ஆர் பக்கத்தில் தேவசேனாபதி அவர்கள் ஒரு பதிவு போட்டிருந்தார். அதை நம்ப திரியில் போட்டால் பிரச்சனை வரும் என்று பேசாமல் இருந்தேன். இப்போது மக்கள் திலகத்தை தாக்கி மாற்று திரியில் பதிவு போடும்போது நாமும் போட்டால் தப்பு இல்லை.

    நேற்று மாலையில் மக்கள் திலகத்தை தாக்கி மாற்று திரியில் பதிவு போட்டு இருக்கின்றார்கள். இதையும் மொட்டையாக நேரிடியாக தேவசேனாபதி அவர்களின் பதிவை போடாமல் இவ்வளவு பீடிகை போட்டு எதுக்கு சொல்கிறேன் என்றால் இல்லாவிட்டால் நாம்தான் முதலில் பிரச்சினையை ஆரம்பித்தோம் என்று பழிபோடுவார்கள். அதுக்குத்தான் தெளிவாக காரணத்தை சொல்கிறேன்.

    மாற்றுத் திரியில் போட்டுள்ள பதிவை எழுதியவர் ஏகப்பட்ட பொய் சொல்லி இருக்கார். மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த படங்களில் ஆயிரத்தில் ஒருவனை தவிர வேற எதுவும் 100 நாள் ஓடவில்லையாம். ரகசியபோலீஸ் 115 படம் சேலம் அலங்காரிலும் திருச்சி ஃஜூப்பிட்டரிலும் 100 நாள் ஓடியது. நாம் எல்லாம் உயிரோடு இருக்கிற போதே இப்படி பொய் சொல்கிறாரே. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். அந்த பதிவின் பொய்களுக்கு இந்த பொய் பதம்.

    பந்துலு - மக்கள் திலகம் கூட்டணியில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனையும் சேர்த்திருக்கிறார். அது பந்துலு படம் இல்லை. தயாரிப்பு வேலையில் இறங்கியபோதே பந்துலு இறந்துவிட்டார். அதனால், படத்தை அவர் தயாரிக்கவும் இல்லை. கை மாறிவிட்டது. அவர் டைரக்ட்டும் செய்யவில்லை.

    அவர்கள் அகராதிப்படி 100 நாள் ஓடாத படம் எல்லாம் தோல்வி படம். தங்கை, சுமதி என் சுந்தரி உட்பட அவர்களுக்கு இந்த மாதிரி தோல்வி படம் நிறைய என்று ஒத்துப்பார்கள் போல.

    1-ம் தேதி தேவசேனாபதி எம்ஜிஆர் பக்கம் பேஸ்புக் தளத்தில் பதிவு போட்டு இருக்கின்றார். சந்தேகம் இருந்தால் அதில் போய் பார்க்கலாம். சரியான நேரத்தில் தேவசேனாபதி பதிவு போட்டுள்ளார். இதுதான் அமைப்புன்றது.

    வழக்கம்போல ரவிச்சந்திரன் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். மாற்றுத் திரியை பாருங்கள். மக்கள் திலகத்தைப் பற்றி எப்படி எல்லாம் தப்பும் தவறுமா அளந்து கொட்டி இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் பதில் வரும். ஆகவே, இந்த பதிவையும் தேவசேனாபதி முகநூல் பதிவையும் நீக்கி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். பொய்யை அவர்கள் போடும்போது உண்மையை நாம் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கின்றது?

  10. #2459
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி
    Deva Senapathi முகநூல்


    நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்கள் இன்று தனது முகநூல் பக்கத்தில் 2012-ல் சென்னையில் கர்ணன் படம் வெளியானபோது விளம்பரமே இல்லாமல் மற்றொரு திரையரங்கில் மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படம் வெளியாகி நல்ல கூட்டத்துடன் வெற்றிகரமாக சில நாட்கள் ஓடியது. மக்கள் திலகத்தின் படங்கள் விளம்பரமே இல்லாமல் சாதனை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாக ஓடவில்லை. சில இடங்களில் 100 நாள் ஓடினாலும் கிடைத்த வசூல் அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது. அதிகம் பொருள்செலவு இல்லாமல் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை படமான மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் பல இடங்களில் 100 நாட்களை கடந்து ஓடி சூப்பர் ஹிட் ஆனது.

    மறு வெளியீட்டில் சென்னையில் கர்ணன் ஓடியது கூட பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக அழைத்துவந்து படம் பார்க்கவைத்தனர். கர்ணன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்து கொண்டார். அவர் ஒரு சிவாஜி கணேசன் ரசிகர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர் சென்னையில் பத்மா சேஷாத்ரி என்ற பள்ளியை நடத்தி வருகின்றனர். ஒய்.ஜி. மகேந்திரனின் மனைவியும் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதாவும் சகோதரிகள். ரஜினியின் மனைவி லதா, ஆஷ்ரம் என்ற பள்ளி நடத்தி வருகிறார்.

    இவர்களது பள்ளிகள், இவர்களுக்கு உள்ள அறிமுகத்தால் மேலும் பல பள்ளிகளின் பிள்ளைகளை கூட்டி வந்து கர்ணன் படம் பார்க்கவைத்தனர். இது தவிர, மகேந்திரன் மூலமாக சில சபாக்களிலும் டிக்கெட்டுகள் தலையில் கட்டப்பட்டன. இதுபோன்ற காரணங்களால்தான் கர்ணன் படம் சென்னை சத்யம் திரையரங்களில் 155 நாட்கள் ஓடியது.
    ஆனாலும் மறுவெளியீட்டில் புரட்சித் தலைவரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 2014ம் ஆண்டு மறுவெளியீட்டில் சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் படம் சத்யம் திரையரங்கில் 160 நாட்கள் ஓடியது. இதிலேயே கர்ணனை மிஞ்சி விட்டது. என்றாலும் மறுவெளியீட்டில் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக ஆல்பட் திரையரங்கில் வெள்ளிவிழாவையும் தாண்டி 190 நாட்கள் ஓடி ஆயிரத்தில் ஒருவன் சாதனை படைத்தது. சத்யம் தியேட்டரில் 160 நாள். ஆல்பட்டில் 190 நாள். இந்த சாதனையை எந்த மறுவெளியீட்டு படமும் நினைத்து பார்க்க முடியுமா?

    இது முற்றிலும் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவோடு ஓடியது. புராணப் படம் என்று காரணம் கூறி பள்ளிப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து பணம் கொண்டு வரச்சொல்லி படம் பார்க்க வைக்காமல், டிக்கெட்டுகளை சபாக்கள் தலையில் கட்டாமல் ஆயிரத்தில் ஒருவன் அனாயசமாக வெள்ளிவிழா கொண்டாடி மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் என்ற இனி யாராலும் முறியடிக்க முடியாத (ஒருவேளை மக்கள் திலகத்தின் மற்றொருபடம் முறியடிக்கலாம்) சாதனை படைத்தது.

    கருணாநிதியைப் பற்றி நம் எல்லாருக்கும் தெரியும். புரட்சித் தலைவரை எவ்வளவு மோசமாக பேசியவர் என்று என்பது தெரியும். அவருக்கு சிவாஜி கணேசன் சற்றும் குறைந்தவரல்ல. புரட்சித் தலைவரை தேர்தல் நேரங்களில் மிகக் கடுமையாக பேசியவர். புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தபிறகு கூட அவர் பதவி விலக வேண்டும் என்று கடுமையான வார்த்தைகளில் கூறியவர். ஜாடை மாடையாக புரட்சித் தலைவரை குறைகூறுவது, தனது படங்களில் வசனங்கள், காமெடி நடிகர்களை வைத்து கிண்டல் செய்வது என்று செயல்பட்டவர். இன்னும் கூட சிலபேர் மக்கள் திலகத்தை தாக்கி அவர் பேசியதை முகநூலில் பதித்து அற்பதிருப்தி அடைகிறார்கள்.
    சிவாஜி கணேசனுக்கு வாழ்க்கையே நடிப்பாகிவிட்டது. இங்கே வந்தால் மக்கள் திலகத்தைப் பார்த்து அண்ணன் என்பார். அங்கே போனால் கருணாநிதியைப் பார்த்து ஆருயிர் நண்பா என்பார். ஆனால், மேடைகளில் தனிப்பட்ட முறையில் புரட்சித் தலைவரை தாக்கிப் பேசுவார். அண்ணன் என்று அவர் சொல்லும் வார்த்தைக்கு மரியாதை இருந்தால் அப்படி எல்லாம் பேசுவாரா? புரட்சித் தலைவர் மீது சிவாஜி கணேசனுக்கு உள்ள பொறாமைக்கு திரையுலகிலும் அரசியலிலும் அவரை வெல்ல முடியாததுதான் காரணம்.

    அதனால் எனக்கு கருணாநிதி, சிவாஜி கணேசன் என்றாலே வெறுப்பாக இருக்கும். ஆனால், நமது ரசிகர்களிலேயே சிலர் சிவாஜி கணேசனை வாழ்த்துவதை என்னால் ஏற்க முடியவில்லை. சிவாஜி கணேசன் ரசிகர்கள் சிலர் மக்கள் திலகத்தை பாராட்டுகிறார்கள் என்பதற்காக இதை ஏற்க முடியாது. சரி பரவாயில்லை அது அவர்களின் உரிமை. அதை ஏற்க முடியாதது என்னைப் போன்ற மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களின் உரிமை.

    ஆனால், ஒன்று மட்டும் உண்மை. திரையுலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகமே என்பதை ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீட்டின் 190 வது நாள் விளம்பரம் உறுதி செய்யும்.

    என்றும் மாஸ் ஹீரோ மக்கள் திலகம் புகழ் வாழ்க.

  11. #2460
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    தேவசேனாபதி அவர்களின பதிவுக்கு மாதிரிக்கு கணேஷ் ராமசாமி அவர்களின் பின்னூட்டம்.

    Ganesh Ramaswamy முப்பிறவி கண்டு மூன்று முறை முதல்வரானவர் மக்கள் திலகம் ஆனால் திருவையாற்றில் தோற்றுப் போனவர் சிவாஜி. அண்ணா முதல்வர் ஆனதற்கு மக்கள் திலகம் மிக முக்கிய காரணம். ஆனால் கிங் மேக்கராக இருந்த காமராஜரை தன் படங்களில் காட்ட காட்டி தோற்கடித்தவர் சிவாஜி அவர் ராசி அப்படி. அவர் வகித்த MP பதவி கூட கௌரவ பதவி தானே ஒழிய மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வில்லை. சிவாஜி எந்த விதத்திலும் எம்ஜிஆருக்கு ஈடு ஆகவே மாட்டார்.
    LikeShow more reactions
    · Reply ·
    2
    · July 2 at 10:24pm
    Remove
    Baskaran Vairavan
    Baskaran Vairavan உண்மை ! உண்மை ! உ

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •