Page 295 of 401 FirstFirst ... 195245285293294295296297305345395 ... LastLast
Results 2,941 to 2,950 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2941
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    டிஜிட்டல் அடிமைப் பெண் படம் சவுண்ட் சரிிஇல்லை. புதிய இசை சேர்த்திருக்கிறார்கள் நன்றாய் இல்லை என்று மகாலிங்கம் மூப்பானார் ஐயா சொன்னார். அதை நானும் அப்படித்தான் உள்ளது. புதிய இசையை ஏன் சேர்க்க வேண்டும்? புரச்சித் தலைவர் சரி சொன்ன இசைய இவர்கள் ஏன் மாத்துகிறார்கள் என்று பதிவு போட்டிருந்தேன்.

    அதை எடிட் செய்திருக்கிறார்கள். இதில் என்ன தப்பு/ புதிய இசை சேர்ப்பு நன்றாய் இல்லை. பெரும்பாலன ரசிகர்களின் கருத்து இப்படித்தான் இருக்கின்றது என்று சொல்வது தப்பா? புரச்சித் தலைவரையா குறை சொன்னே்ன். அவர் படத்து இசையை சில இடங்களில் மாற்றியது நன்றாய் இல்லை என்ற எழுதினேன். இதைக் கூட சொல்லக் கூடாதா?

    வேண்டுமானால், நானும் மகாலிங்கம் மூப்பனார் ஐயாவும் சொ்ன்னதை மறுங்கள். சென்னையில் இசை ஒலி நன்றாக உள்ளது. கோயம்பத்தூரில் நன்றாக உள்ளது என்று சொல்லுங்கள். உங்களுக்ககுதான் பிடிக்கவில்லை எங்களுக்கு நன்றாய் உள்ளது என்று சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு நான் சொன்னதை அழிக்க வேண்டுமா?

    ஒருத்தரடன் விவாதிக்கின்றோம் இல்லாவிட்டால் கருத்து பறிமாறிக்கிறோம் என்றால் நாம் பாயிண்ட் சரியாக இருந்தால் அதை நாம் நம்பினால் எதிராளி கருத்தை மறுக்க வேண்டும். இல்லை நாம் சொல்றது தப்பு எ்ன்று தெரிஞ்சால் எதிராளி சொல்றதை ஏத்துக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சொன்ன கருத்தை அழித்தால் நமக்கே நம் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

    டிஜிட்டல் அடிமைப் பெண் படம் பல இடங்களில் இசை சேர்ப்பு சரியில்லை என்பது நம் ரசிகர்கள் பல பேரின் கருத்து. இதில் புரட்சித் தலைவருக்கு எந்த குறையும் இல்லை. இப்போ டிஜிட்டல் செய்தவர்களைத்தான் சொல்றேன். இதை சொல்றதில் எந்த தவறும் இல்லை. படம் பிரிண்ட் நன்றாய் கண்ணாடி போல உள்ளது.

    இதை நீக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். நண்பர்கள் அவர்களின் கருத்துக்களை சொல்லலாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2942
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



    Chandran Veerasamy
    1 hr •

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.

    எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

    காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.

    எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

    அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!

    இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.

    ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!

    எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.

    எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

    எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!

    நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?

    - ' நான் நாகேஷ் ' என்ற நடிகர் நாகேஷ் எழுதிய
    நூலிலிருந்து

    நன்றி அண்ணன் சந்திரன் வீராச்சாமி முகநூல்

    ஒரு பின்னூட்டம். நன்றி ரத்தினம்

    Rathinam உதவும் குணம் ஒருவனுக்கு
    கரு உருவாகும் போதே
    உருவாகி விடுகிறது
    LikeShow more reactions
    • 30 mins

  4. #2943
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர்-24/7/2017

  5. #2944
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நவீன தொழில் நுட்பத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்

    ஆயிரத்தில் ஒருவன் - 2014
    அடிமைப்பெண் - 2017

    ஆயிரத்தில் ஒருவன் படம் மிகவும் சிறப்பான துல்லியமான ஒளி ஒலியுடன் டால்பி வடிவில் ரசிகர்களுக்கு விருந்தாக படம் அமைந்தது .

    அடிமைப்பெண் - சினிமாஸ் ஸ்கோப் , 4k , டிஜிட்டல் வடிவில் மிகவும் பிரமாண்டமாக படம் ரசிகர்களுக்கு விருந்ததற்காக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் வந்துள்ளது .
    எம்ஜிஆரின் கடுமையான உழைப்பை இந்த படத்தில் காண முடிகிறது . காட்சிக்கு காட்சி நம்மை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்து செல்ல வைக்கிற அளவிற்கு நவீன தொழில் நுட்ப காட்சிகள் உதவி இருக்கிறது . எம்ஜிஆரின் 52 வயது தோற்றம் 25 வயது வாலிபன் போல் உடல் கட்டுக்கோப்பாக இளமையாக எழிலான தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது .

    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்த வைத்த திரு சொக்கலிங்கத்திற்கும் திரு நாகராஜனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . திரு நாகராஜனின் அடுத்த படைப்பான உலகம் சுற்றும் வாலிபனை வரவேற்க காத்திருக்கிறேன் .

    நன்றி திரு கோபால் .கும்பகோணம்
    முகநூல்

  6. #2945
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொதிகை டிவி செய்திகள் .
    --------------------------------------

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
    நினைவு நாணயம் மத்திய அரசு சார்பாக வெளியாக உள்ளது .

  7. #2946
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் ஒளிபரப்பு .
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    23/7/2017 ஜெயா மூவிஸ் - புதியபூமி இரவு 10 மணி

    24/7/2017 ஜெயா மூவிஸ் - மகாதேவி -இரவு 10மணி

    26/7/2017 - சன்லைப் -என் கடமை - இரவு 7 மணி

    பொதிகை - குடியிருந்த கோயில் - இரவு 8.30 மணி

    27/7/2017 - சன்லைப் - நீதிக்கு தலை வணங்கு - காலை 11 மணி
    Last edited by puratchi nadigar mgr; 27th July 2017 at 07:07 AM.

  8. #2947
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -26/7/2017

    பெரம்பலூர் - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , அரசு பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10000 சதுரடியில் எம்.ஜி.ஆர். உருவப்படம் வரைந்து அசத்தினர் .

    மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 5ல் பெரம்பலூரில் நடக்கிறது .விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார் .

    இதையொட்டி பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன .

    இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் , அரசு மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில்
    எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை நேற்று வரைந்தனர் .

    முன்னூறு கிலோ உப்பு, ,/0 கிலோ கலர் போடி, /0கிலோ கோலமாவு ,, 200 கிலோ சுண்ணாம்பு , ஆகியவற்றின் மூலம் 100 அடி நீளம் , மற்றும் 100அடி அகலத்தில் படத்தை வரைந்து முடித்து பாராட்டு பெற்றனர் .

  9. #2948
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி -27/7/2017


    எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் -மத்திய அரசு வெளியீடு
    ----------------------------------------------------------------------------------------------------
    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை "

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றிருந்தபோது , கடந்த 05/01/2017 அன்று மத்திய அரசுக்கு,தமிழக அரசின் சார்பில்
    ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் .

    எனது வேண்டுகோளை ஏற்று ,எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில்
    அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக
    மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17/7/2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பி இருக்கிறது .

    தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கும் , அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் , தமிழக மக்களின் சார்பாகவும், விசுவாசமிக்க ஒன்றரை கோடி அ. தி.மு.க. தொண்டர்களின் சார்பாகவும் , எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் ,கோடான கோடி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

  10. #2949
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை திருநகர் கலைவாணியில் -இணைந்த 2 வது வாரம்

  11. #2950
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சில சமயங்களில் படம் போட்டால் படத்துக்கு பதிலாய் டினி பிச்சர்ஸ் என்று வருகின்றது. ஏன்? ரொம்ப சிரமமாய் உள்ளது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •