Page 200 of 401 FirstFirst ... 100150190198199200201202210250300 ... LastLast
Results 1,991 to 2,000 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1991
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    அமுதசுரபி மாத இதழ் -மே 2017





    பதிவுக்கு நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே,

    யாரோ எழுத்தாளர் நா.பா. என்று போட்டிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தேடிப்பார்த்தேன். அவர் முழுப்பெயர் இல்லை. அவர் பெயர் என்ன என்பது அறிய முடியவில்லை. அவர் பெரிய எழுத்தாளரா என்றும் தெரியவில்லை. புரட்சித் தலைவரே போன் போட்டு விழாவி்ல் கலந்து கொள்ளச் சொல்லி கூப்பிடுகிறார் எனில் பெரிய எழுத்தாளராக இருப்பார் என்று நினைக்க வேண்டி உள்ளது.

    இந்தப் பதிவில் படித்து நான் புரிந்து கொண்டது, கொஞ்சம் கூட ஈகோ இல்லாது அந்த எழுத்தாளருக்கு போன் போட்டு விழாவில் கலந்து கொள்ள புரட்சித் தலைவர் அழைத்திருக்கிறார். அவர் குளிக்கிறார் என்று பதில் சொல்லப்பட்டதும் குளித்த பிறகு என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று புரட்சித் தலைவர் சொல்லாமல் பத்து நிமிடங்கள் பிறகு மீண்டும் தானே மறுபடி போனில் பேசியிருக்கிறார்.

    விழாவில் கலந்து கொள்ள அந்த எழுத்தாளர் கட்சி வேறுபாட்டை சொல்லி மறுத்தபோதும், நீங்கள் இலக்கியம் பேசுங்கள் என்று கூறி அன்போடு புரட்சித் தலைவர் அழைத்துள்ளார். மேடையில் பேச வந்த புரட்சித் தலைவரை மறித்து ‘நான் பேசிய பிறகு உங்களுக்கு பேசும் நேரம் வரும். அப்போது பேசுங்கள்’ என்று அந்த எழுத்தாளர் சொல்கிறார். (யார் இந்த திமிர் பிடிச்ச எழுத்தாளர்? )

    அதற்கும் புரட்சித் தலைவர் அமைதியாக பேசாமல் இருந்துவிட்டு தான் பேசும்போது ‘நூலகத்துறை 200 ஆக குறைத்துவிட்ட புத்தகங்களை மீண்டும் 600 ஆக உயர்த்தி உத்தரவு இட்டுவிட்டேன்’ என்று புரட்சித் தலைவர் பெருந்தன்மையோடு கோவமே இல்லாமல் சொல்லி இருக்கிறார். (நானாக இருந்தால் ஆரம்பத்திலேயிருந்தே அவமானப்படுத்தும் எழுத்தாளன் மீது உள்ள கோவத்தில் விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டு கோட்டைக்குப் போய் உத்தரவை மாற்றி 200 புத்தகம் என்பதை 100 ஆக குறைத்திருப்பேன்)

    செல்வாக்கு பெற்ற ஒரு முதல் அமைச்சர் எவ்வளவு தூரம் ஈகோவே இல்லாமல் செல்வாக்கு இல்லாத பிரபலம் இல்லாத எழுத்தாளருக்கெல்லாம் மரியாதை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது புரட்சித் தலைவரின் உயர்ந்த உள்ளம் தெரிகிறது.

    ஆனால், அந்த எழுத்தாளருக்கு புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு விசயம் நன்றாக தெரிந்துள்ளது. ‘ஏகோபித்த மக்கள் ஆதரவு பெற்ற வெற்றியாளர்தான்’ என்று இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார்.

    கொஞ்சம் கூட தலைக்கனம், கர்வம் இல்லாமல் எல்லாருக்கும் மரியாதை கொடுத்து அன்புடன் நடந்து கொண்டதால்தான் புரட்சித் தலைவர் வெற்றியாளராக இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழுகின்றார்.

    தேடிப்பிடித்து எல்லாப் பத்திரிகையில் இருந்தும் புரட்சித் தலைவர் பற்றிய செய்திகளை பதிவிடும் உங்கள் தொண்டுக்கு நன்றி திரு.லோகநாதன் அவர்களே. நீங்கள் பதிவிடாவிட்டால் இந்த மாதிரி செய்திகள் எங்களைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விடும். அது மட்டும் இல்லாமல், இப்ப மட்டும் இல்லை. இன்னும் 100 வருசம் கழிச்சு பார்த்தாலும் முதல் அமைச்சராக இருந்த புரட்சித் தலைவரின் பெருமையை எளிமையை ஈகோ இல்லாத அவரின் சிறப்புகளை இதைப் படிப்பவர்கள் அறிந்து ஆச்சிரியப்படுவார்கள். அதற்கு காரணமான உங்களுக்கு மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1992
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1993
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

    தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. நா. பா. என்பவரின் முழுப்பெயர் திரு. நா. பார்த்தசாரதி சிறந்த எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதி .

    தமிழக முதல்வர் என்கிற ஈகோ இல்லாமல், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளை
    எவ்வளவு மரியாதை, மற்றும் பண்புடன் மதித்து நடத்தியுள்ளார் என்பதற்கு
    இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். அதனால்தான் திருப்பூர் கிருஷ்ணன் அறிவித்தபடி
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற
    வெற்றியாளராக திகழ்ந்தார் .

  5. #1994
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது (24/05/2017) காலை 11 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.நடித்த "கொடுத்து வைத்தவள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது

  6. #1995
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

  7. #1996
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புதுயுகம் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு" திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

  8. #1997
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் லைப் வார இதழ் -31/05/2017




  9. #1998
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  10. #1999
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினி சாரல் -மே 2017






    குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்கள் தொகுப்பில் பல தவறுகள் உள்ளன .1940ல் வெளியான "சகுந்தலையில் " எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்கவில்லை .

    கீழ்கண்ட வெற்றிப்படங்கள் தொகுப்பில் விடுபட்டுள்ளன :
    ---------------------------------------------------------------------------------------------------
    1.தட்சயக்ஞம் .
    2.மீரா
    3.மோகினி.
    4.மருத நாட்டு இளவரசி
    5.என் தங்கை
    6..குலேபகாவலி
    7.சக்கரவர்த்தி திருமகள்
    8.புதுமைப்பித்தன்
    9.பாக்தாத் திருடன்
    10..தர்மம் தலை காக்கும் (இலங்கையில் 100 நாட்கள் )
    11.பரிசு (சேலத்தில் 100 நாட்கள் )
    12.ரகசிய போலீஸ் 115
    13.சிரித்து வாழ வேண்டும்
    14.நாளை நமதே (இலங்கையில் 150 நாட்கள் )
    15.பல்லாண்டு வாழ்க

    1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், பல அரங்குகளில் இணைந்த 100 நாட்களாக ஓடியது என்பது தவறான செய்தி .

    200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் : எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் ஆகியன .

    20 வாரங்களுக்கு மேல் ஓடிய படங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன

    25 வாரங்கள் ஓடிய படங்கள் வரிசையில் தட்சயக்ஞம் , மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்கள் விடுபட்டுள்ளன .

    12 வாரங்களுக்கு மேலாக ஓடிய படங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன
    அவை 100 நாட்கள் நிறைவு பெறாவிட்டாலும் , நல்ல வசூலை பெற்று, மறுவெளியீட்டிலும் சாதனைகள் புரிந்துள்ளன .

    மறுவெளியீட்டில் , டிஜிட்டல் தயாரிப்பான "ஆயிரத்தில் ஒருவன் " அதிகபட்சம்
    சென்னையில் 190 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .



    மேற்கண்ட செய்திகளை தொகுத்து பதிவிட உதவிய நண்பர் திரு.சாதிக் பாட்சா ,
    அரகண்டநல்லூர் (திருக்கோவிலூர் ),விழுப்புரம் மாவட்டம் என்பவரிடம்
    கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறுகளை சுட்டி காட்டி பேசினேன் .
    அவரும் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர். தவறுகளுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் ,
    அச்சிடும்போது பிழைகள் நேர்ந்து, ஆசிரியர் தவறுதலாக பிரசுரம் செய்துள்ளதாகவும் அது குறித்து மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார் .
    Last edited by puratchi nadigar mgr; 24th May 2017 at 08:34 PM.

  11. #2000
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    தமிழ் சினிமா 1949ம் ஆண்டு
    -----------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போதைய பிரபல நடிகர் பி.யு.சின்னப்பாவுடன்
    நடித்த "ரத்னகுமார் " வெளிவந்த வருடம்.


    தமிழ் சினிமா 1950ம் ஆண்டு
    --------------------------------------------
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ,வி.என். ஜானகியுடன் ஜோடி சேர்ந்து நடித்த " மருத நாட்டு இளவரசி " மற்றும் மாடர்ன் தியேட்டர்சின் "மந்திரி குமாரி " படங்கள் வெளி வந்தன .


    தமிழ் சினிமா 1951 ம் ஆண்டு
    -------------------------------------------------
    அறிஞர் அண்ணா கதை எழுதிய , ஏ. வி.எம். நிறுவனம் தயாரித்த "ஓர் இரவு ",
    மக்கள் திலகம் கதாநாயகனாகவும், பன்ச் வசனங்கள் பேசியும் நடித்த , தமிழில்
    முதல் ஏ சான்றிதழ் பெற்ற "மர்மயோகி " மற்றும் எம்.ஜி.ஆர். நம்பியார். வாள் வீச்சு சண்டை அந்த காலத்தில் பேசப்பட்ட "சர்வாதிகாரி " படங்கள் வெளிவந்த வருடம் .

    தமிழ் சினிமா 1952ம் ஆண்டு
    -----------------------------------------------
    சமூக படத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சோக நடிப்பில் சோபித்த ,வெற்றி படமான "என் தங்கை " வெளி வந்தது .

    தமிழ் சினிமா 1953ம் ஆண்டு
    -----------------------------------------------------
    எம்.ஜி.ஆர். அவர்கள் தன் தாய்மொழியான மலையாளத்தில், ஜெனோவா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். தமிழில் ஜெனோவா என்கிற பெயரிலேயே வந்தது .
    எம்.ஜி.ஆர். கருணாநிதி, பி.எஸ். வீரப்பா , இயக்குனர் காசிலிங்கம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோர்களை பங்குதாரர்களாக கொண்ட மேகலா பிக்ச்சர்ஸ்
    என்கிற பட நிறுவனம் தயாரித்த " நாம் " படம் வெளிவந்தது

    தமிழ் சினிமா 1954ம் ஆண்டு
    -----------------------------------------------

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ,வசூல் சக்கரவர்த்தி, மற்றும் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்திய "மலைக்கள்ளன் " வெளிவந்தது .

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி வெளி வந்தது .

    தமிழ் சினிமா 1955ம் ஆண்டு
    ----------------------------------------------
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். புலியுடன் சண்டையிட்டு , அமோக வெற்றி பெற்ற "குலேபகாவலி " வெளிவந்த வருடம் .


    தொடரும் ,,,,,,,,,,,,,,,!!!!!!!!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •