Page 197 of 401 FirstFirst ... 97147187195196197198199207247297 ... LastLast
Results 1,961 to 1,970 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1961
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.

    அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். ………. மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம்.

    ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

    இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
    நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

    பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

    இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் (ZEN).


    அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

    எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

    கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

    அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன்.

    ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.


    - டாக்டர் ஆர்.கே.ருத்ரன் பதிவிலிருந்து .



    நன்றி : முகநூல்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1962
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    1973 ஆம் ஆண்டு மே 22. இதே நாளில்தான் புரட்சித்தலைவரின் அண்ணா திமுக கட்சி ஆரம்பித்து ஆறே மாத்ததில் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் 1,42,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தினம் இன்று. பதிவான வாக்குகளில் 52% சதவீதம் பெற்றது. இரண்டாவதாக பழைய காங்கிரஸ், 3 வது இடத்தில் திமுக வந்தது. மற்ற அனைவரும் இந்திரா காங்கிரஸ் உட்பட டிபாசிட் இழந்தனர்.


  4. #1963
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    போன வியாழக்கிழமை அன்று சர்வாதிகாரி படம் சன் லைப் டிவியில் பார்த்துவிட்டு கத்தி சண்டை காட்சி பற்றி சொல்லிருந்தேன். அந்தப் படத்தில் வாள் சண்டைக் காட்சியிலே மக்கள் திலகத்தின் நீண்ட கத்தி நம்பியார் அய்யாவின் விரலை ஊடுருவி விட்டது என்பதை அவரே பேட்டியில் சொல்லியிருந்ததையும் நான் ஒருமுறை அவரை நேரில் பார்த்தபோது விரலில் உள்ள தழும்பை காட்டினார் என்றும் சொல்லியிருந்தேன்.

    கத்தி சண்டை காட்சிகளில் மக்கள் திலகத்துடன் மோதுபவர்கள் கையிலும் நம்பியாரோ, வீரப்பாவோ, மனோகரோ,அசோகனோ யாரா இருந்தாலும், அவர்கள் கையிலும் உண்மையான கத்தியுடனே மோதுவார்கள். இதனால் மக்கள் திலகத்துக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

    சர்வாதிகாரி படத்தில் மக்கள் திலகத்தின் வாள் நம்பியாரின் கையை பதம் பார்த்தது மாதிரி, நம்பியாரின் வாளும் மக்கள் திலகத்தை காயப்படுத்தி இருக்கிறது. தன் விரலில் காயம் பட்டதை சொல்லும்போதெல்லாம், நம்பியார் இதையும் சேர்த்தே சொல்லுவார். அரசிளங்குமரி படத்தில் சண்டைக் காட்சியில் நம்பியாரின் வாள் மக்கள் திலகத்தின் இடது புருவத்தை கிழித்து விட்டது.கொஞ்சம் கீழே கத்தி பட்டிருந்தால் மக்கள் திலகத்தின் கண்ணே போய் இருக்கும். எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்று நினைத்தால் மயிர்கூச்செறிகிறது.

    மேக்அப் இ்ல்லாமல் சாதாரணமாக வழக்கமான தொப்பி கூலிங்கிளாசுடன் புரட்சித் தலைவர் இருக்கும்போது அந்த காயத்தின் தழும்பு புரட்சித் தலைவரின் இடது புருவத்தில் இருப்பது சில போட்டோக்களில் தெரியும். பெரும்பாலான போட்டோக்களில் கூலிங்கிளாஸ் ஃபிரேம் புருவத்தை மறைத்துவிடுவதால் தழும்பு இருப்பது தெரியாது.

    இதோ கீழே உள்ள படத்தில் தெரியும். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் புரட்சித் தலைவரை புகைப்படக்காரர் நின்று கொண்டு கொஞ்சம் உயரமான ஆங்கிலில் எடுத்திருக்கின்றார் என்பது போட்டோவை பார்த்தால் தெரிகிறது. அதனால், அபூர்வமாக இந்தப் படத்தில், நம்பியாரின் கத்தியால் ஏற்பட்ட காயத் தழும்பு புரட்சித் தலைவரின் இடது புருவத்தில் தெரிவதைக் காணலாம்.


  5. #1964
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1965
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1966
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    நீதிக்குப் பின் பாசம் படப்பிடிப்பு. நடுவில் சரோஜாதேவியின் தாய் ருத்ரம்மா.

  8. #1967
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    சரண்சிங்குடன் புரட்சித் தலைவர்.

  9. #1968
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1969
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1970
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •