Page 335 of 401 FirstFirst ... 235285325333334335336337345385 ... LastLast
Results 3,341 to 3,350 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #3341
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த சனியன்று (05/08/2017) சென்னை காமராஜர் அரங்கில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி மற்றும் இதயக்கனி மாத இதழ் சார்பாக நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய செய்தி தொகுப்பு.
    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    சென்னை காமராஜர் அரங்கில் கடந்த சனியன்று (05/08/17) மனித நேய இலவச ஐ.ஏ.எஸ்.அறக்கட்டளை சார்பில்,முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமிதலைமையில் மற்றும் இதயக்கனி மாத இதழ் ஒத்துழைப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ,பக்தர்கள் படை சூழ கொண்டாடப்பட்டது .

    காலை 9 மணிக்கு நாதஸ்வரம் ,மங்கள வாத்தியம் முழங்க நிகழ்ச்சி துவங்கியது .

    காலை 10 மணியளவில் மேடையில் யோகா உடற்பயிற்சி நடைபெற்றது .

    காலை 10.30 மணி முதல் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்.அறக்கட்டளையின் தலைவர் திரு.சைதை துரைசாமி தலைமையில் பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசைப்பாட்டு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் அடங்கிய பாடலாக அமைந்தது .

    முன்னதாக அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கின் வாயிலில்
    மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை, மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்
    சார்பாக பேனர்கள், பதாகைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வாயிலின் வலதுபுறம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட் அவுட் விளக்கொளி அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஒளிர்ந்தது . வாயிலின் முன்பு இருந்து தோரணங்கள், வாழை மரங்கள் நடுவே ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுகளை போற்றிடும் வகையில் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை, தத்துவ பாடல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடல் வரிகள் , அச்சிடப்பட்ட பதாகைகள் , பேனர்கள்,அவரது சாதனைகளின் சரித்திரக் குறிப்புகள் ,பத்திரிகைகளில் வெளியான செய்தித்துளிகள் ,முதல்வர் காலத்து ஆட்சியின் சிறப்புகள், சாதனைகள்,அரிய ஒளிப்படங்கள் , முன்னாள் பிரதமர்கள்,ஜனாதிபதிகள்,கவர்னர்கள், பிற மாநில முதல்வர்கள்,பல கட்சி தலைவர்கள் ஆகியோருடன் உள்ள புகைப்படங்கள் என்று அரங்க வளாகம் முழுவதும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றிய தகவல்கள், கொட்டி கிடந்ததை ,வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து பரவசம் அடைந்தனர் .


    வில்லிசைப்பாடல்களின் நடுவில் சிறப்பு அம்சமாக ,சென்னை நகரில் செயல்பட்டு வரும் பல்வேறு பொதுநல சங்க அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
    தி.மு.க.வில் இருந்து 1972ல் எம்.ஜி.ஆர். அவர்கள் நீக்கப்பட்டு, அ தி.மு.க.வை தொடங்கியபோது ,கட்சிக்காக உயிர்நீத்த தொண்டர்களின் குடும்பத்தினர் ,, கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்ட தியாகிகள்,பச்சைக்குத்தி கொண்டவர்கள் ,எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கி பழகிய, பணிபுரிந்த முன்னாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்,
    பாதுகாப்பு அதிகாரிகள் ,உடல்நலம் காத்த மருத்துவர்கள் , முன்னாள் செய்தியாளர்கள் ராமாவரம் இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் , திரையுலகில் உடன் நடித்த நடிக -நடிகைகள் ,ஸ்டண்ட் நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் ,ஒப்பனையாளர்கள்,உடைஅலங்கார நிபுணர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வசனகர்தாக்கள் ,என்று பல்வேறு சிறப்பு விருந்தினர்களையும் , 1972 முதல் 1987 வரை அ தி.மு.க.வின் உயிர்நாடியாக விளங்கிய சிலரையும் அடையாளம் கண்டு மேடையில் சிறப்பிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .

    பிற்பகல் 2மணிக்கு இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன், சேலம் திரு.ஜெயபிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்த பாடல்கள்,சண்டை காட்சிகள், வசன காட்சிகள்
    அடங்கிய தொகுப்பு பக்தர்களுக்காக கீழ்கண்டவாறு திரையிட்டு காண்பிக்கப்பட்டது

    1. இதயக்கனி - நீங்க நல்லா இருக்கோணும் -பாடல்
    2.ஆயிரத்தில் ஒருவன் - எம்.ஜி.ஆர். -மனோகர் முதல் சந்திப்பு வசனம்
    3.தெய்வத்தாய் - மூன்றெழுத்தில் பாடல் .பின்னர் முதல்வர் எம்.ஜி.ஆர்.பற்றிய புகைப்படங்கள் /வீடியோ காட்சிகள் .
    4.பாசம் - உலகம் பிறந்தது எனக்காக -பாடல்
    5..எங்கள் தங்கம் -சிறு சேமிப்பு தலைவர் எம்.ஜி.ஆர்.-தங்கம் சந்திப்பு காட்சிகள்
    6.தர்மம் தலை காக்கும் -தர்மம் தலை காக்கும் பாடல் .
    7..அரசிளங்குமரி - எம்.ஜி.ஆர். -தேவர் சண்டை காட்சிகள் .
    8.அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் பாடல் .
    9.எங்கள் தங்கம் - கதா காலட்சேபம்
    10.மன்னாதி மன்னன் - அச்சம் என்பது மடமையடா பாடல்
    11.எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு குறிப்பு .
    12.அரசிளங்குமரி - சின்ன பயலே பாடல் .
    13.கன்னித்தாய் - கேளம்மா சின்னப்பொண்ணு

    திரை தொகுப்பு முடிந்ததும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு நடிப்பு சரித்திரம் .
    எங்கள் தங்கம் படத்தில் கதா காலட்சேபம் காட்சியில் நடித்துவிட்டு விக்கை கழட்டும்போது தலையில் இருந்து நீர் கொட்டும் ..அதே போல வேட்டைக்காரன் படத்தில் உடலை இறுக்கியது போல உடைகள் அணிந்து இருப்பார் நடித்துவிட்டு அதை கழற்றும்போது உடலில் வேர்க்குரு , மற்றும் தோல் அரிப்புகள் ஏற்பட்டு
    மிகவும் துன்பப்பட்டார்.. உடைஅலங்கார நிபுணர் திரு.முத்து அதை கண்டு மனம் வருந்துவார் .உடனே எம்.ஜி.ஆர். இந்த தோற்றத்தில், உடைகளில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களுக்காக இந்த கஷ்டங்களை தாங்கி கொள்கிறேன் .பரவாயில்லை என்பாராம் .-இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் சொன்னது .


    பிற்பகலில் 3 மணிக்கு மேல் தொடர்ந்து லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினர் அவர்களின் இன்னிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கொள்கை, தத்துவ,காதல்கள் பாடல்கள்கீழ்கண்ட வரிசையில் இசைக்கப்பட்டு ரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினர்

    1.ஆனந்த ஜோதி- ஒரு தாய் மக்கள்
    2.நான் ஆணையிட்டால்- தாய் மேல் ஆணை.
    3.இன்று போல் என்றும் வாழ்க - அன்புக்கு நான் அடிமை
    4.பாசம் - உலகம் பிறந்தது எனக்காக
    5.அடிமைப்பெண் - ஆயிரம் நிலவே வா
    6.வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால்
    7.உலகம் சுற்றும் வாலிபன் - நிலவு ஒரு பெண்ணாகி
    8.மகாதேவி - குறுக்கு வழியில்
    9.நாளை நமதே - நாளை நமதே
    10.இதயவீணை - பொன்னந்தி மாலை பொழுது
    11.விவசாயி - கடவுள் எனும் முதலாளி
    12.அரசிளங்குமரி - சின்ன பயலே
    13.சந்திரோதயம் - சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
    14.நினைத்ததை முடிப்பவன் - பூ மழை தூவி
    15.படகோட்டி - தரைமேல் பிறக்க வைத்தான்
    16.எங்கள் தங்கம் - தங்க பதக்கத்தின் மேலே
    17.நல்ல நேரம் - ஓடி ஓடி உழைக்கணும்
    18.உரிமைக்குரல் - விழியே கதை எழுது
    19.அன்பே வா - நான் பார்த்ததிலே -(பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வருகை )
    20.எங்க வீட்டு பிள்ளை -குமரி பெண்ணின் உள்ளத்திலே

    இசை குழுவினருக்கு சற்று ஓய்வளித்து மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
    அழைக்கப்பட்டு ,பொன்னாடை,அணிவித்து நூல்கள் (புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
    வெளியிட்ட அண்ணாயிசம் , இதயக்கனி வெளியிட்ட எம்.ஜி.ஆர். கதை, மணவை பொன்மாணிக்கம் எழுதிய எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகம் ) ஆகியன அனைவருக்கும்
    முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களால் வழங்கப்பட்டது .

    விழாவில் பங்கேற்ற முக்கிய மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் :
    1.திரு.திருநாவுக்கரசு (காங்கிரஸ் மாநில தலைவர் )
    2. திரு.தா. பாண்டியன் (வலது கம்யூனிஸ்ட் )
    3திரு..கற்பூர சுந்தரபாண்டியன் ஐ.ஏ.எஸ்.
    4.திரு.ஜவஹர்பாபு , ஐ.ஏ. எஸ்.
    5.திரு.ஹண்டே (முன்னாள் சுகாதார அமைச்சர் )
    6.திரு.வி .வி.சுவாமிநாதன் (முன்னாள் அமைச்சர் )
    7.திருமதி கோமதி ஸ்ரீநிவாசன் (முன்னாள் அமைச்சர் )
    8.திரு.ஜி.விஸ்வநாதன் (வி.ஐ.டி .பல்கலை கழக வேந்தர் )
    9.திரு. ஐசரி கணேஷ் ( வேல்ஸ் பல்கலை கழக வேந்தர் )
    10.திரு.எஸ். மாதவன்(முன்னாள் அமைச்சர் )
    11.திரு.எஸ்.ஆர்.ராதா (முன்னாள் அமைச்சர் )
    12.திரு.ஜி .பழனி பெரியசாமி (தொழிலதிபர் )
    13.டாக்டர் முத்துசாமி ,
    14.திரு.ராஜாமணி (வர்மக்கலை நிபுணர் )
    15.டாக்டர் பொன்ராஜ் (முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமின் தனி ஆலோசகர் )
    16.திரு.விவேகானந்த ராஜ் (விசுவாசமிக்க பாதுகாப்பு அதிகாரி )
    17.திரு.மாணிக்கம் (தனி உதவியாளர் )
    17.திரு. சம்பத் ஐ.ஏ.எஸ்.
    18. திரு.சங்கரசுப்பு .ஐ.ஏ.எஸ்.
    19.திரு.மகாலிங்கம் (தனி உதவியாளர் )
    20..திரு.ஆரூர்தாஸ் (வசனகர்த்தா
    21. திரு.ஆர்.கே.சண்முகம் அவர்களின் மனைவி (வசனகர்த்தா )
    22.திரு.முத்துலிங்கம் (கவிஞர் )
    23.திரு.வி.ஜி.சந்தோசம் (தொழிலதிபர் - மலேசியாவில் தன் சொந்த செலவில் எம்.ஜி.ஆர். சிலை அடுத்த மாதம் நிறுவ இருப்பவர் )
    24.இயக்குனர் திரு.பி.வாசு
    25..நடிகை பி.சரோஜாதேவி ,
    26.நடிகை ராஜஸ்ரீ
    27.நடிகை லதா
    28.நடிகை சச்சு
    29.நடிகர் விஜயகுமார் (பச்சை குத்தி கொண்டவர் )
    30..திரு.எம்.எஸ்.வி.ஹரி (மறைந்த இசை அமைப்பாளர் திரு.விஸ்வநாதன் மகன்)
    31.நடிகர் வின்சென்ட் (மறைந்த நடிகர் அசோகனின் மகன் )
    32.திருமதி அமுதா பொன்னுசாமி (மறைந்த இயக்குனர் திரு என்.எஸ்.ராமதாஸின் மகள் )
    33.திருமதி ஜெயந்தி கண்ணப்பன் (ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ் )
    34.நடிகர் மயில்சாமி
    35.திரு.கிருஷ்ணராஜ் (முன்னாள் அ தி.மு.க. கர்நாடக மாநில செயலாளர் )
    36.திரு.எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் (தினமலர் )
    37.திரு.ரமேஷ் (துக்ளக் )
    38.தினத்தந்தி முன்னாள் நிருபர்
    39.சத்யாலயா திரு.ராமகிருஷ்ணன்
    40. திரு.நவநீத கிருஷ்ணன் (முன்னாள் மதுரை துணை மேயர் )
    41.திரு.மேகலா சித்ரவேல் (எழுத்தாளர் )
    42.திரு.சிரஞ்சீவி அனீஸ் (தின இதழ் )
    43.திரு.துரை கருணா (புதிய தலைமுறை )
    44.திரு.முருகு பத்மநாபன் ( பிரான்சில் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பினார் )
    45.திரு.தீரன் மற்றும் சிவலிங்கம் (மும்பை )
    46.திரு.வத்தலகுண்டு ஆறுமுகம் குடும்பத்தினர் (அ.தி.மு.க.கட்சிக்காக உயிர்நீத்த முதல் தியாகி )
    47.திரு.அனகாபுத்தூர் ராமலிங்கம் குடும்பத்தினர் (அ தி.மு.க. கட்சி துவங்க காரணமாக இருந்தவர் )
    48.மறைந்த நடிகர் திருப்பதிசாமி மகன்
    49.திருமதி லதா ராஜேந்திரன் (ராமாவரம் எம்.ஜி.ஆர். வாய் பேசாத ,காது கேளாதோர் பள்ளி நிறுவனர் ),
    50.திருமதி ஜானகி சிவராமன் (ராமாவரம் தோட்டம் )
    51.நடிகர் ஜூனியர் பாலையா
    52.திரு.கலீல் பாட்சா (திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் )
    53.திரு.சோமா வேலாண்டி (எம்.ஜி.ஆர். பக்தர் )
    54.திரு.ஆழ்வை ராஜப்பா (எம்.ஜி.ஆர்.பக்தர் -தூத்துக்குடி )
    55.திரு.ராஜ்குமார் (எம்.ஜி.ஆரால் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் )
    56.திரு.குருவி கோவிந்தசாமி (எம்.ஜி.ஆர். மாலை அணிந்து கோயில் செல்பவர் )
    57.திரு.தேவநாதன் (விண் டிவி )
    58.திரு,இஸ்மாயில் (மூத்த பத்திரிகையாளர் )
    59..திரு.எம்.ஜி.ஆர். வாசன்
    60.திரு.ஜெயபிரகாஷ் (எம்.ஜி.ஆர். பக்தர் ,சேலம் )
    61.திரு.குப்புசாமி (எம்.ஜி.ஆர். பக்தர் , சேலம் )
    62.மறைந்த திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் மகன் டைமண்ட் பாபு
    63.திரு.எம்.ஏ.முத்து (உடைஅலங்கார நிபுணர் )
    64.திரு.மணி (ராமாவரம் தோட்டத்து சமையல்காரர் )
    65.திரு.சிட்கோ சீனு (எம்.ஜி.ஆர்.பக்தர் ,வில்லிவாக்கம் )
    66. இயக்குனர் திரு.வி சி..குகநாதன்
    67. நடிகர் பயில்வான் ரங்கநாதன்
    68. எம்.ஜி.ஆர்.நினைவு இல்லம் பொறுப்பாளர் திரு.முத்து அவர்களின் மகன்

    மற்றும் பலர் .

    கௌரவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் , மீண்டும் லக்ஷ்மண் ஸ்ருதி இசை குழுவினர் மேற்கொண்டு பாடல்கள் கீழ்கண்டவாறு இசைத்து ரசிகர்களை கவர்ந்தனர் .
    21.மலைக்கள்ளன் - எத்தனை காலம்தான்
    22.திருடாதே - திருடாதே பாப்பா
    23.எங்க வீட்டு பிள்ளை _நான் ஆணையிட்டால்
    24.குடியிருந்த கோயில் -துள்ளுவதோ இளமை
    25.நான் ஏன் பிறந்தேன் - நான் ஏன் பிறந்தேன் (நடிகர் ஜூனியர் பாலையா பாடினார் )
    26.நாடோடி மன்னன் - தூங்காதே தம்பி தூங்காதே
    27.அடிமைப்பெண் -காலத்தை வென்றவன்
    28..உலகம் சுற்றும் வாலிபன் -பச்சைக்கிளி முத்துச்சரம்
    29.குடியிருந்த கோயில் -ஆடலுடன் பாடலை கேட்டு
    30.மன்னாதி மன்னன் - அச்சம் என்பது மடமையடா
    31.படகோட்டி - கொடுத்ததெல்லாம்
    32.இதயக்கனி - நீங்க நல்லா இருக்கோணும்
    33.படகோட்டி - கல்யாண பொண்ணு
    34.இதயக்கனி - இன்பமே உந்தன் பேர்
    35.ஒளிவிளக்கு -நாங்க புதுசா கட்டிகிட்ட
    37.என் அண்ணன் -நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
    38.காவல்காரன் -நினைத்தேன் வந்தாய் 100 வயது
    39.பணம் படைத்தவன் - கண்போன போக்கிலே
    40.தெய்வத்தாய் - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இறுதி பாடல் )



    தொடரும்.....................................!!!!!! !
    Last edited by puratchi nadigar mgr; 12th August 2017 at 12:02 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3342
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -12/08/17
    மூதறிஞர் ராஜாஜியுடன் எம்.ஜி.ஆர்.

  4. #3343
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3344
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3345
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -12/08/17

  7. #3346
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நக்கீரன் வார இதழ்


  8. #3347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கேப்டன் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .


  9. #3348
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 05/08/17 சனியன்று சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நடத்திய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய செய்தி தொகுப்பு தொடர்ச்சி .....
    -----------------------------------------------------------------------------------------------------------------------------




    .1974ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அ தி.மு.க.வின் "அண்ணாயிசம் " என்கிற நூலை மறுபதிப்பு செய்ய திரு.சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார் .
    அதை முன்னாள் மந்திரிகள் திரு.எச் .வி. ஹண்டே, திரு.எஸ். ஆர்.ராதா ஆகியோர் வெளியிட திரு.ஜி.விஸ்வநாதன், திரு.வி.வி.சுவாமிநாதன் ,திரு.எஸ். மாதவன் ,
    திருமதி கோமதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .

    திரு.சைதை துரைசாமி அவர்கள் சென்னை மேயர் ஆனதும்,முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ,தாங்கள் வழக்கமாக மேயர்கள் அணியும் சங்கிலியை அணிய வேண்டாம் என்று, 126 பவுன் புதிய தங்க சங்கிலி தயார் செய்து உத்தரவிட்டதன் பேரில் தயார் நிலையில் உள்ள இந்த தங்க சங்கிலியை விரைவில் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாக மேடையில் காண்பித்து அறிவித்தார் .

    திரு.சைதை துரைசாமி சிறப்புரை :
    ----------------------------------------------------

    அனைவருக்கும் காலை வணக்கம் . நன்றி மறவா கடமைகளில் ஒன்றாக இந்த
    மனிதநேய மாணிக்கம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது .வேர்களுக்கு வெளிச்சம் தருவதுதான் இந்த விழாவின் சிறப்பு அம்சம் .சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு நூற்றாண்டு அல்ல .பல நூற்றாண்டு காலம் மக்கள் இதயங்களில் நிச்சயம் வாழ்வார் .
    சிறு வயதில் தந்தையை இழந்தாலும், தன்மானத்தை இழந்திடாத தாயின் அரவணைப்பில் சிங்கமென வாழ்ந்தவர் . சிறு வயதில் நாடக துறையில் நுழைந்து
    படிப்படியாக அனுபவம் பெற்று, மிகவும் கடினமான அப்போதைய சூழ்நிலையில்
    திரைத்துறையில் அடியெடுத்து வைத்து ,பல்வேறு சோதனைகளுக்கு இடையே
    பல கலைகளை,தொழில்நுடபங்களை கற்று , கதாநாயகன் அந்தஸ்தை அடைந்து
    ஈடு இணையில்லா வசூல் சக்கரவர்த்தி என்கிற பெருமையை தனது திரையுலக
    ஆட்சி காலத்தில் நிரந்தரமாக தக்க வைத்து பல அரிய, உயரிய சாதனைகளை
    புரிந்த மன்னாதி மன்னன் .

    தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டு , அ.தி.மு.க. கட்சியை தொடங்கிய பின் ஆளும்கட்சியின் அடக்கு முறைகளை மீறி, மக்கள், சக்தி, மற்றும் செல்வாக்குடன்
    எதிர்கட்சிகளை புறம் தள்ளி ஆட்சி கட்டிலில் அமர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல்
    நல்லாட்சி புரிந்து, பல மக்கள் நல திட்டங்களை தீட்டி மகத்தான சாதனை புரிந்து
    நடிகன் நாடாள முடியும் என்று நிரூபித்த மகான் .

    எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிகளை தொடவோ, தொடரவோ யாராலும் முடியவில்லை என்பது வரலாறு . எம்.ஜி.ஆர். அவர்களின் புகழை உலகம் முழுவதும் வியாபிக்க செய்திருக்கிற தொண்டர்கள், பக்தர்கள், ரசிகர்கள் ,விசுவாசிகள், அபிமானிகள்தான் வேர்கள். அந்த வேர்களுக்கு வெளிச்சம் தருவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் . எம்.ஜி.ஆர். அவர்களுக்காக
    பல்வேறு வகைகளில் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி செலுத்துவதுதான்
    இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள் .

    தனிமனித சரித்திரத்தை மாற்றி , சமூக மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறார் என்றால் அது எம்.ஜி.ஆர். மட்டும்தான் .அந்த வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது . நடிகர், முதல்வர் என்கிற அடையாளங்களை தாண்டி மனித நேயர் எனும் அடையாளத்துடன் மக்களால் போற்றப்படுபவர் எம்.ஜி.ஆர்.
    எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் மக்கள் சக்தி .நிகரில்லாத செல்வாக்கு மிக்க தலைவர் .
    எம்.ஜி.ஆருக்கு விழா எடுப்பதென்றால், எடுப்பவர்க்குதான் பெருமை .எம்.ஜி.ஆர். புகழ் தானாக நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் , ஆண்டுக்கு ஆண்டு வளருகிறதே தவிர ,யாரும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை .எம்.ஜி.ஆர். என்கிற இமேஜ் ஒரு உலக அதிசயம் .நேர்மை, தூய்மை, சேவை, மக்கள் நலன் ஆகியவையே தலைவர் எம்.ஜி.ஆரிடம் நாங்கள் கற்ற பண்புகள் .என்னை போன்றவர்கள் நாளும் இதை கடைபிடித்து வருகிறோம் , வருவோம் .

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கும், பெருமைக்கும், வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் ,சாதனைகளுக்கும் வேர்களாக இருந்து ,தியாக மனப்பான்மையுடன் ,பாடுபட்ட அவரது தொண்டர்கள், பக்தர்கள், ரசிகர்கள், விசுவாசிகள், அபிமானிகள் அவரை முன்மாதிரியாக ஏற்று , அவருடன் பழகியும் , பணிபுரிந்தும் , வந்த பலர் இன்று சமுதாயத்தில் பல நிலைகளில் ,பல மட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள் .அப்படிப்பட்டவர்களின் அனுபவங்களைத் தக்க ஒளிப்பட
    ஆதாரங்களுடன் ஒழுங்குபடுத்தி ,வேர்களுக்கு வெளிச்சம் என்கிற தலைப்பில் ஒளிப்பட ஆவண தொகுப்பாக உருவாக்கும் திட்டத்தையும் திரு.சைதை துரைசாமி தொடங்கி வைத்தார் . மனிதநேய இலவச ஐ.ஏ. எஸ். அறக்கட்டளை சார்பில் 7 சேவைகள் அறிவிக்கப்பட்டன . அவை, எம்.ஜி.ஆர். அன்னம் அறக்கட்டளை மூலம் தேவைப்படும் ஏழைகளுக்கு உணவளித்தல் , எம்.ஜி.ஆர். இலவச திருமண மண்டபம் ,எம்.ஜி.ஆர்.இலவச சட்ட உதவி மையம் ,எம்.ஜி.ஆர். ரத்த வங்கி
    தமிழ்நாடு முழுவதும் பனைமர விதைக்கன்றுகள், வேப்ப மர விதைக்கன்றுகள்
    நடும் திட்டம் .வேப்ப மர விதைகளை , பிரதான சாலை, மாநில சாலை, நெடுஞ்சாலை , கோயில் தரிசு நிலங்கள் ஆகிய இடங்களில் நடும் திட்டம் .
    பனை மரம்,வேப்ப மரம் ஆகிய இரண்டிற்கும் பராமரிப்பு வேலை தேவையில்லை .
    ஆனால் இவற்றை நிறைவேற்றுவதற்கு, எம்.ஜி.ஆர். தொண்டர்கள், பக்தர்கள் , ரசிகர்கள் ,அபிமானிகள், விசுவாசிகள் ஆகியோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிக மிக அவசியம் . இந்த திட்டங்களை வரும் நூற்றாண்டு நிறைவு நாள் ஜனவரி 2018க்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அனைவரும் ஆதரவு தருக . வாழ்க, ஓங்குக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்.
    நன்றி, வணக்கம் . (பலத்த கரவொலி )


    திரு.ஜி.விஸ்வநாதன் (வி.ஐ.டி. பல்கலை கழக வேந்தர் )
    ---------------------------------------------------------------------------------------
    :அனைவருக்கும் வணக்கம் .நான் இந்த நிலையில் இன்று இருக்கிறேன் என்றால் அதற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் முழு காரணம் .என்னுடைய புகழ் அனைத்தும் எம்.ஜி.ஆர். அவர்களையே சாரும் .கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் . அபரிமிதமில்லாத , நிகரில்லாத மக்கள் சக்தியும், செல்வாக்கும் பெற்று , சினிமா, அரசியல் ,பொதுவாழ்வு என்கிற மூன்று துறைகளிலும் எம்.ஜி.ஆர்.தான் ஹீரோவாக திகழ்ந்தார் .மற்றவர்கள் யாவரும் அவருடன் இருந்தவரையில் நிகரில்லை. ஜீரோதான் . அவருக்கு நிகர் அவரே. வாழ்க வளர்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் .

    நடிகை பி.சரோஜாதேவி :
    --------------------------------------
    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். பெங்களூரில் இருந்து வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
    ஏனென்றால் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதருக்கு விழா எடுப்பதுதான் . எம்.ஜி.ஆர்.
    என்கிற வார்த்தையை உச்சரித்தாலே சந்தோசம் .எம்.ஜி.ஆர். எப்போதும் சிரித்த முகத்துடன் தான் காட்சியளிப்பார் .சினிமாவில் சிரித்து நடித்த காட்சிகள் அதிகம் .
    பெரும்பாலும் அழுது நடிக்கும் காட்சிகள் குறைவு..நீதிக்கு பின் பாசம் படத்தில்
    முதலில் என்னை மணப்பதாக வாக்களித்துவிட்டு பின் முறைப்பெண்ணை மணக்க வேண்டிய சூழ்நிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியின்போது நிறைய அழுது நடிக்க வேண்டி இருந்தது . போனாளே என்கிற பாடலில் சோகமாக நடித்து இருப்பார் .ரசிகர்களையும்,மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலும், சந்தோசம் அடைய செய்யும் வகையிலும், மக்களுக்கு நல்ல சமூக, சீர்திருத்த கருத்துக்கள்
    சென்றடையும் வகையிலும் காட்சிகள் அமைக்க வேண்டுவதே அவர் விருப்பம் .
    எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை.பார்வையாளர்களை பார்த்து மறைந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார் .பார்வையாளர்கள் ஒருமித்த கருத்தில் இல்லை என்றதும் , ஆம் , அவர் மறையவில்லை.இங்கே மேடையில் பாருங்கள். இந்த பக்கம் தெய்வத்தாய் எம்.ஜி.ஆர். அந்த பக்கம் பெற்றால்தான் பிள்ளையா எம்.ஜி.ஆர். அவர் என்னுடனும் இருக்கிறார். உங்களுடனும் இருக்கிறார் .அவர் மறையவுமில்லை. அவர் புகழும் மறையவில்லை .அரங்க வாயிலில் இருந்து இந்த அரங்கம் முழுவதும் எம்.ஜி.ஆர்.
    பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள், புகைப்படங்கள் மூலம் வியாபித்திருக்கிறார்.லக்ஷ்மண் சுருதி இன்னிசையில் பாடும் பாடல்கள் மூலம் நம் நினைவில் இருக்கிறார் .

    எனக்கு நெருக்கடியான காலங்களில், பல சமயங்களில் தொலைபேசி மூலமும் ,
    நேரிலும் ஆலோசனைகள், கருத்துக்கள் தெரிவித்து உதவி இருக்கிறார் .
    எனக்கு துன்பமான நேரங்களில், மன அழுத்தம் தரும் சமயங்களில் தொலைக்காட்சிகளில் வரும் எம்.ஜி.ஆர். பாடல்கள் கண்டு உற்சாகம் அடைந்து
    மனதை தேற்றிக் கொள்வேன். பாருங்கள். அவர் மறைந்தும், மறைமுகமாக எனக்கு மட்டுமின்றி பலருக்கும் இப்படி உதவிகள் செய்து வருகிறார் என்று பலரும் சொல்ல இன்னும் நான் கேள்விப்பட்டு வருகிறேன் .நாடோடி மன்னன் சொந்த படம் தயாரிப்பின்போது எம்.ஜி.ஆர். என்னை ஒப்பந்தம் செய்ய உள்ளதை அறிவித்ததும்,எனக்கு நல்ல நேரம் மேலும் சில படங்கள் ஒப்பந்தம் ஆகின. நாடோடி மன்னன் வெளிவந்து வெற்றிச்செய்தி வெளியானதும் எனக்கு கிட்டத்தட்ட 30 படங்கள் ஒப்பந்தம் ஆகும் நிலையில் நான் பிஸியாகிவிட்டேன் .அதற்கு நான் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தேன் இதை பல மேடைகளில் நான் கூறியுள்ளேன் . ஒரு சமயம் எனக்கு அன்பளிப்பாக ரேடியோ ஒன்றை பரிசளித்தார் .அவர் நினைவாக அதை போற்றி பாதுகாத்து வருகிறேன் .

    ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேசாத பள்ளி ஒன்றை அதன் நிறுவனர் திருமதி லதா ராஜேந்திரன் திறம்பட நடத்தி வருகிறார்.
    ஒருமுறை அந்த பள்ளிக்கு விஜயம் செய்தேன் .ராமாவரம் இல்லமான எம்.ஜி.ஆர். வீட்டிற்கும் சென்றேன் . எம்.ஜி.ஆர். அமர்ந்திருந்த அறையில், அவர் இருக்கையில் அமர்ந்து சில நிமிடங்கள் அவரைப் பற்றிய நினைவில் ஆழ்ந்தேன். ஏனென்றால்
    அந்த இருக்கையில் அமர்ந்தபடிதான் சினிமாவில் இருந்தபோதும், அரசியலில் நுழைந்தபோதும், பல முக்கிய முடிவுகளை எடுத்தார். அ.தி..மு.க. கட்சியை ஆரம்பித்தார் பல உத்தரவுகளை பிறப்பித்தார் . பல நல்ல மக்கள் திட்டங்களை அறிவித்தார் .

    எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வரும்போது , நான் அந்த இடத்தில் வரும்போது என் கைப்பை திருடு போய்விடும்
    அதை தெரிந்து கொண்டு திருடனை விரட்டி சென்று அடித்து , அந்த கைப்பையை
    மீண்டும் என்னிடம் ஒப்படைக்கும் காட்சி -அந்த காட்சி முடிவடையாததால் மறுநாள் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருந்தது .அன்று இரவு வாகினியின் 8 வது ப்ளோரில் இருந்து நள்ளிரவில் புகை வந்து தீப்பிடித்து கொண்டது .ஊழியர்கள் பதட்டத்துடன் தீயணைக்க முற்பட்டார்கள் .எப்படியோ எம்.ஜி.ஆர். விஷயம் அறிந்து நள்ளிரவு நேரத்தில் நேரில் வந்து ஊழியர்களுடன் இணைந்து தீயணைக்க
    வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு , மறுநாள் படப்பிடிப்பு நடக்க வேண்டிய வகையில் புதிய அரங்கங்களை நிர்மாணிக்கும் வேலைகளையும் கவனித்துவிட்டு
    அதிகாலையில் வீடு திரும்பினார் . பின்னர் வழக்கமான நேரத்தில் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .காலையில் ஸ்டூடியோ வந்திருந்த திரு.நாகிரெட்டிக்கு அப்போதுதான் நள்ளிரவில் தீப்பிடித்து ,எம்.ஜி.ஆர். நேரில் வந்து தீயணைக்கும் ஏற்பாடுகளையும் , புதிய அரங்கத்தை நிர்மாணித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியதையும் , உரிய நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதையும் ஊழியர்கள் தெரிவித்தனர் . தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டி ஓடிவந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். உடனே, என்ன முதலாளி, இதற்கு எதற்கு நன்றி. இது என் கடமை என்று சொன்னார் .
    இந்த மாதிரி செயல்களில்தான் எம்.ஜி.ஆர். நிற்கிறார். வாழ்கிறார்.புகழடைகிறார் .
    படத்தின் கதாநாயகன் என்கிற வகையில் எம்.ஜி.ஆருக்கு இது தேவையில்லாத விஷயம் .தயாரிப்பாளர் பார்த்துக் கொள்ள வேண்டியது என்று கருதாமல்,நட்பின் அடையாளமாக இதை செய்துள்ளார் .எம்.ஜி.ஆரும் ,நாகிரெட்டியும் நல்ல நண்பர்கள்தான் இருந்தாலும் .எத்தனை பேருக்கு இந்தமாதிரி உதவிகள் செய்ய
    மனம் வரும் .அதனால்தான் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்
    என்று பலரும் சொல்கிறார்கள். (பலத்த கைதட்டல் )

    உண்மையில் சொல்ல போனால் நானும் , எம்.ஜி..ஆரும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. எனவே தீப்பிடித்துக் கொண்டதால் ஒருநாள் ஒய்வு கிடைக்கும் . குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம் . காலையில்; தொலைபேசியில் ப்ளோர் மேனேஜர் அழைத்து
    காட்சிகள் ரெடி. படப்பிடிப்பு தயார் நிலையில் உள்ளது என்றதும் அதிர்ந்து போனேன் . இப்படி எம்.ஜி.ஆர் நடந்து கொண்ட , சம்பந்தப்பட்ட சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. ஆனால் எல்லாவற்றையும் பேசுவதற்கு கால நேரம் போதாது எம்.ஜி.ஆர். ஒரு தனிப்பிறவி மட்டுமல்ல. அவர் கடவுளின் மகன் .
    அதனால்தான் இன்றும் கிராமங்களில் அவரது படங்களை வைத்து மக்கள் பூஜிக்கின்றனர் .என்னை பொறுத்த வரையில் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் , அவரும் அந்த ஜென்மத்தில் பிறந்திருந்தால் , அவருடன் மீண்டும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை .

    மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாக்கள் உலகில் எங்கு நடந்தாலும் , என்னை அழைத்தால் கலந்து கொள்ள தயாராக உள்ளேன் .எம்.ஜி.ஆர். படங்களை தியேட்டர்களில் ,பார்க்கிறீர்கள். பாடல்களை
    இசைக்குழு மூலம் கேட்டு ரசிக்கிறீர்கள் . தொலைக்காட்சிகளில் அன்றாடம் எம்.ஜி.ஆரை கண்டு மகிழ்கிறீர்கள் .அவரது படங்களை பார்ப்பதோடு, பாடல்களை கேட்பதோடு நிற்காமல், அவர் என்ன சொன்னாரோ, அந்த நல்லவற்றை முடிந்தவரையில் ,அவரது, சிந்தனைகள், சமூக சீர்திருத்த கருத்துக்கள் ,கொள்கைகள், இலட்சியங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்து செல்வதோடு, அதன்படி நடக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் .
    வாழ்க,வளர்க, எம்.ஜி.ஆரின் புகழ், நன்றி வணக்கம் .(பலத்த கரகோஷம் )

    விழாவில் பங்கேற்றவர்களுக்கு , காலை சிற்றுண்டியாக இயற்கை மருத்துவ உணவுகள் வழங்கப்பட்டன .பிற்பகல் ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம் , பிரண்டை சட்னி, வாழைத்தண்டு பொரியல், கீரை கூட்டு, இஞ்சி மோர் அடங்கிய மூலிகை உணவும் , இரவு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் , புதினா சட்னி ,ஊறுகாய் ஆகியனவும் வழங்கப்பட்டன .அத்துடன் அரங்கத்தின் வெளியே, அவ்வப்போது ,பச்சை கடலை, சுண்டல், இனிப்பு வகைகள், சுக்கு தேனீர் மற்றும் சில பானங்கள் பார்வையாளர்களுக்கு தந்த வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன .

    அரங்கத்தின் உள்வாயிலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பல தலைவர்களுடன் சந்திப்பு , முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சி கால படங்கள் என்று பல்வேறு புகைப்படங்கள், செய்தி துணுக்குகள், விளம்பரங்கள் ஆகியன புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன .ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை பார்த்து மகிழ்ந்தனர்


    அரங்கத்திற்கு வெளியே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் அமோகமாக விற்பனை ஆயின.தமிழ் இந்து நாளேடு வெளியிட்ட எம்.ஜி.ஆர். 100 என்கிற நூலும் கணிசமான அளவில் விற்பனை ஆனது .

    நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் இனிதே நிறைவுற்றது .

  10. #3349
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3350
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •