Page 63 of 93 FirstFirst ... 1353616263646573 ... LastLast
Results 621 to 630 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #621
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #622
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #623
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #624
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    85.கும்பக்கரை தங்கய்யா
    26.01.90



    இப்படத்தின்சிறப்புக்களில் முதலிடம் பாடல்களுக்கே.
    1.பாட்டு உன்னை இழுக்குதா
    2.பூத்து பூத்து குலுங்குதடி பூவு
    3.கும்பம் கரை சேர்த்த தங்கய்யா
    4.கூடலூறு குண்டு மல்லி
    5.தென்றல் காத்தே தென்றல் காத்தே
    6.டைட்டில் பாடல் " என்னை ஒருவன் பாடச் சொன்னான்"
    இப்பாடல் வரிகள் இளையராஜா கங்கை அமரனை குறித்து பாடும் பாடலாக அமைந்த பாடல்.

  6. #625
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    87.வெற்றிக்கரங்கள்
    01.03.91

    குரோதம் படத்தில் நடித்தபிரேம் தயாரித்த படம்.இளையதிலகத்துடன் இவரும் இணைந்து நடித்த படம் இது.

    பாடல்களில்
    வானவீதியில் நூறு வெண்ணிலா,
    நள்ளிரவு மெல்ல மெல்ல,
    இரண்டும் குறிப்பிடத்தக்கவை.



  7. #626
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னதம்பி
    14.04 91.

    இந்தநாள் தமிழ் திரையுலகம் அதுவரை செய்த சாதனைகள் முறியடிக்கப்பட்ட நாள்.இப்படியொரு சாதனையை இப்படம் செய்யும் என்று என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
    படமும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டதல்ல.பெரிய விளம்பரங்களும் செய்யப்பட்டதல்ல.ஆயினும்
    46 வருட தமிழ் திரையுலக சாதனைகளை இப்படம்தான் முறியடித்தது.


    200 நாட்கள் கடந்த அரங்குகள் 5
    175 நாட்கள் கண்ட அரங்குககள்12
    20 வாரங்களை கடந்த திரைகள் 19
    46 திரையரங்குகளில் 100 நாட்கள்.
    112 திரைகளில்50நாட்கள்.
    தமிழில் திரையிட்ட அனைத்து
    பிரதிகளும் 75 நாட்கள் ஓடி சாதனை செய்த முதல் படம்.
    இரண்டாவது வெளியீட்டில் 7திரைகளில் 100 நாட்கள் கண்ட முதல் படம்.
    பம்பாய்(மும்பை) தாராவியில் ஒரு வீடியோ தியேட்டரில் 175 நாட்கள் ஓடிய முதல் படம்.
    மும்பை அரோராவில்
    அண்டை மாநிலங்களான கேரளா.கர்நாடகத்தில் தலா 3தியேட்டர்களில் 100நாட்கள் ஓடிய படம்.
    இப்படி இப்படம் செய்த சாதனைகள் ஏராளம்.

  8. #627
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னதம்பி

    தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த பிள்ளை.கல்யாணம் கச்சேரி பார்க்காமல் வளர்த்த பிள்ளை.ஒரு நல்லது கெட்டது தெரியாமல் வளர்ந்து விட்டான். நல்ல குரல் வளம்.அதனால பாட்டு பாடுவதில் ஆள் ரொம்ப பிரபலம்.இப்படி இருக்கும் ஒருவனை ஒரு பெரும் பணக்கார பெண் விரும்பி அவனை தாலி கட்ட வைத்து விடுகிறாள்.தாலி என்பதற்கு என்ன அர்த்தம் என்றே தெரியாமல் அந்த காரியத்தை அவன் செய்து விடுகிறான். என்னதான் வெகுளி என்றாலும் உலக அறிவை கற்றுக் கொள்ளாதவனாக இருந்தாலும் தாலி என்றால் அர்த்தம் தெரியாமலா இருப்பான் என்று எத்தனையோ பேர் கேள்வி கேட்ட கதைதான்.
    ஆனால் எடுக்கற மாதிரி எடுத்தாலும்,நடிக்கற மாதிரி நடித்தாலும் படத்தை உயரத்திற்கு கொண்டு சேர்த்து விடலாம் என்பதற்கு உதாரணம் இந்த
    சி
    ன்


    ம்
    பி.
    லாங் ஷாட்டில் காட்சிகளை படம் பிடித்து பிரேம்களுக்கு அழகு சேர்ப்பதாக எடுக்கப்பட்ட ஏனைய திரைப்பட பாடல் காட்சிகளுக்கு மத்தியில் தூளியிலே பாடலில் காண்பிக்கப்பட்ட பிரபுவின் க்ளோசப் காட்சிகள் திரைகளை வெகுவாக அலங்கரித்தது.சிறு சிறு முக அசைவுகள்.உடல் மொழிகள்.அலட்டிக் கொய் ளாத நடன அசைவுகளில் பிரபுவின் தனிப்பாணி நடிப்பு பெரிதும் வியக்க வைத்தது.
    ஒவ்வொரு காட்சிகளிலும் பிரபுவின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது.சிதறும் தேங்காயின் ஒரு துண்டு அம்மாவின் தலையை பதம் பார்த்த மறு கணமே மாறும் அவரின் முக பாவமும் அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டை காட்சிகளிலும் அனல் பறக்கும்.அருமையான சண்டைக் காட்சி அது.
    ஆட்களை அடித்த காரணத்தை ராதாரவியிடம் சொல்லும் பதிலில் வெகு நேர்த்தியான. நடிப்பைகாட்டியிருப்பார்.அந்த வெகுளி கேரக்டரை மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியான நடிப்பு.
    குஷ்பூ தன்னை நேசிப்பதை உணராமல் அதற்கு பதிலாய் அவர் பேசும் பேச்சுக்கள் மக்களை வெகுவாய் ரசிக்க வைத்தன.குபீர் சிரிப்பலைகள் அரங்குககளை அதிர வைத்தன.
    பஞ்சாலையில் நடக்கும் சண்டைஇன்னொரு அதிரடியான சண்டைக் காட்சி.
    உச்சந்தலை உச்சியிலே பாடல் படம் பிடித்த விதம் தான் எத்தனை அழகு.
    எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவது போல்தான் காட்சி.ஆனால் அதில் ஆடும் நடனம் , செய்யும் குறும்புகள் ,ரசிக்கத் தகுந்த சிறு சிறு ஷாட்கள் ,என்று ஏராள ரசனைப் பதிவுகள்.பொருட் செலவே இல்லாமல் சிறப்பாக எடுக்கப்பட்ட பாடல் காட்சி.
    குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு பாடலில் பிரபுவின் உருக்கமான நடிப்பு படத்தின் அஸ்திவாரத்திற்கு பலம் சேர்த்த பாடல்.

    சின்னத்தம்பி பிரபுவின் திரைப்பாதையில் ஒரு மைல்கல்.அதுவே தமிழ் சினிமாவுக்கும்.

  9. #628
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by senthilvel; 5th December 2016 at 12:40 PM.

  10. #629
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #630
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 63 of 93 FirstFirst ... 1353616263646573 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •