Page 58 of 93 FirstFirst ... 848565758596068 ... LastLast
Results 571 to 580 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடைசி மூச்சு உள்ள வரை நடிக்க வேண்டும்: பிரபு-200 சிறப்பு பேட்டி

    பதிவு செய்த நாள்: மே 31,2016
    நடிகர் திலகத்தின் இளைய மகன் பிரபு. 1982ம் ஆண்டு சங்கிலி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது வெளிவர இருக்கும் மீன் குழம்பும் மண்பானையும் அவரது 200வது படம். 34 ஆண்டுகளில் 200 படங்களில் நடித்து இப்போதும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார், இளையதிலகம் பிரபு, தமது இனிமையான மலரும் நினைவுகளோடு அளித்த சிறப்பு பேட்டி: சினிமாவுக்கு வந்தது எப்படி?அப்பா சினிமாவுக்கு வந்தது எப்படி என்று கேட்டிருந்தால் அதற்கு பெரிய சரித்திரம் இருக்கிறது. எனக்கு என்ன இருக்கு. நான் தடுக்கி விழுந்து சினிமாவுக்கு வந்தவன். சிவாஜி பையன்ங்ற ஒரே தகுதிதான் சினிமாவுக்கு கொண்டு வந்தது. தன் பிள்ளையாக இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் உள்ளவன் தான் நடிக்க வர வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். விருப்பம் இல்லாமல் இருந்த எங்களை அவர் கண்டுகொள்ளவில்லை. அப்பாவை வைத்து நிறைய படங்கள் எடுத்த சி.வி.ராஜேந்திரன் அண்ணன்தான் என்னை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டு சங்கிலி படத்தில் நடிக்க வைத்தார். அரை மனதுடன் தான் அப்பாவும் நடிக்க சம்மதித்தார்.சங்கிலி படத்துக்கு பிறகுதான் அப்பாவுக்கும் என் மீது நம்பிக்கை வந்தது. அதன் பிறகு அப்பாவுடன் மட்டும் 17 படங்கள் வரை நடித்தேன். சிவாஜி என்ற பின்னணி இல்லாவிட்டால் சினிமாவில் ஜெயித்திருக்க முடியுமா?சிவாஜி புள்ளைங்றதாலதான் சினிமாவுல அறிமுகம் கிடைச்சது. அவர் பெயரைச் சொல்லி முதல் 4 வருடங்கள் மளமளன்னு நடிச்சேன். பெயர்கூட அப்போது சிவாஜி பிரபுதான். திடீர்னு நான் நடிச்ச படங்கள் பிளாஃப் ஆச்சு. பெரிய கேப் எடுத்துக்கிட்டேன். இனி சிவாஜி பெயரைச் சொல்லி ஏமாற்ற முடியாது, நமக்குன்னு ஒரு தனிப் பாணி வச்சிக்கிட்டு நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். கதைகள் கேட்டு அதில் நல்ல கதைகளை தேர்வு பண்ணி நடிக்க ஆரம்பிச்சேன். இதோ 200வது படம் வரைக்கும் வந்தாச்சு. 200 படங்கள் நடித்த பிறகும் ஒரு நடிகராக திருப்தியாக இருக்கீங்களா?நடிகனுக்கு எதுலேயுமே திருப்தி வராது. இன்னும் நிறைய நடிக்கணும், நிறைய கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசை இருக்கு. இப்பல்லாம் சின்ன சின்ன பசங்க ரொம்ப திறமையோடு வர்றாங்க. அவுங்களோட ஒர்க் பண்றது சந்தோஷமா இருக்கு. இரண்டு ஆசைகள்தான் எனக்கு அப்பா பெயரை கடைசி வரைக்கும் காப்பாத்தணும், கடைசி மூச்சு உள்ளவரைக்கும் நடிக்கணும். இப்போது ரீமேக் சீசன் சிவாஜியின் எந்த படத்தை ரீமேக் பண்ணி நடிப்பீங்க?அப்பாவோடெல்லாம் என்னை கம்பேர் பண்ணாதீங்க. அவர் படத்தை ரீமேக் பண்ணி அவர் பெயரை யாரும் கெடுக்க வேண்டாம். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. என்னால அவர் நடிச்ச எந்த கேரக்டர்லேயும் நடிக்க முடியும்னு கற்பனைகூட பண்ண முடியாது. உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?நான் நடிச்சு தோல்வி அடைஞ்ச படங்கள்கூட எனக்கு பிடிக்கும். எல்லா படங்களுமே என்னோட குழந்தை மாதிரிதான். கடைசியா நடிச்ச வெற்றிவேல்கூட பிடிச்ச படம்தான். இப்போ நடிச்சிட்டிருக்கிற மீன்குழம்பும் மண்பானையும் பிடிச்ச படம்தான். இதுல எதை குறிப்பிட்டு சொல்வது. ஏன் வில்லனாக நடிக்கவில்லை?எனக்கு வில்லனாக நடிக்க ரொம்ப ஆசைதான். சில படங்கள்ல முயற்சி பண்ணியும் பார்த்தேன். நீங்க போயி அப்படி பண்ணலாமா?ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நம்ம முகம் வேற அப்பாவி முகமா இருக்கா இயக்குனருங்ககூட நெகட்டிவ் ரோல் தரவே பயப்படுறாங்க. சரி நாமளும் கடைசிவரை நல்லவனாகவே நடிச்சிட்டு போயிடலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்.



    உங்கள் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்களே?அன்னை இல்லத்திருந்து நடிக்க வர்றதுல ஆச்சர்யப்படுறதுக்கு எதுவும் இல்லையே. என் மகன் நடிக்கிறார். அண்ணன் மகன் தயாரிப்பாளராகியிருக்கார். விக்ரம் பிரபுவுடன் எப்போது நடிப்பீர்கள்?நானா மாட்டேங்றேன். இயக்குனர்கள் நல்ல கதையுடன் வரட்டும். அது பொருத்தமா இருந்தா நடிச்சிட்டு போறேன். இப்போதும் அதே பளீர் சிரிப்புடன் பேசுகிறார் பிரபு. 500 படங்கள் நடிக்க வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Friday, January 9, 2009

    அதிக ஹிட் கொடுத்த முன்னணி ஹீரோ யார்?
    ****************************************

    கடந்த நாலு வருடங்களில் அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர் யார் தெரியுமா? சரி, ஒவ்வொருத்தவங்களா பார்ப்போம்.

    ரஜினி. 2004 இருந்து நடித்து வெளிவந்த படங்கள், சந்திரமுகி, சிவாஜி, குசேலன். இதில், குசேலன் தவிர மற்ற இரண்டும் வெற்றி படங்கள். ஓகே, வரிசையில் வச்சிக்கலாம்.

    கடந்த நாலு வருடங்களில் கமல் நடித்த படங்கள், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம். மும்பை எக்ஸ்பிரஸ் மட்டும் தான் பிளாப். ஸோ, அவரையும் ஆட்டத்துல சேர்த்துக்குவோம்.

    அடுத்து, யாரை பார்க்கலாம். விஜயகாந்தா? விஜயா? சீனியாரிட்டிப்படி கேப்டன பார்ப்போம். கேப்டன் நடிச்ச படங்கள், கஜேந்திரா, நெறஞ்ச மனசு, பேரரசு, சுதேசி, தர்மபுரி, சபரி, அரசாங்கம். இதுல எது ஹிட்'ன்னு யாராச்சும் சொல்லுங்க?

    விஜயின் நடித்த (என்னது! விஜய் நடிச்சாரான்னு கேட்க கூடாது ) படங்களின் எண்ணிக்கை, பதினொன்னு. இதுல நாலு படங்கள் ஹிட்டுன்னு சொல்லலாம். இப்போதைக்கு, இவர்தான் அதிக ஹிட் கொடுத்தது. அடுத்தவங்கள பார்ப்போம்.

    பத்து படங்கள் பண்ணியிருக்காரு, அஜித். வரலாறு, பில்லா மட்டும் தான் அவர் கொடுத்த இரு வெற்றி படங்கள். நெக்ஸ்ட்.

    நாலு வருஷத்துல நிறைய படங்கள் நடித்தது சத்யராஜ்தான். இருபது படங்கள். ஆனா பாருங்க, இதுல ஒண்ணு கூட பெரிய வெற்றி படம் இல்லை. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு எல்லாம் வெற்றி படங்களா?

    கார்த்திக்க பார்த்து ரொம்ப நாளாச்சி. இந்த டைம்ல விக்ரம் கொடுத்த ஒரே ஹிட், அந்நியன். சூர்யாவோடது, கஜினியும், வேலும்(???).

    இளையதிலகம் பிரபு நடிச்சது ஒன்பது படங்கள். அதுல மூணு படங்களை தவிர மத்தது எல்லாம் ஹிட். எல்லாம் ஓரளவுக்கு ஹிட் ஆன படங்கள். வசூல் ராஜா, சந்திரமுகி, சம்திங் சம்திங், தாமிரபரணி, பில்லா, சிலம்பாட்டம். இந்த படங்கள்ல இவரு மெயின் ஹீரோ இல்லன்னாலும், இப்படங்களின் ஹீரோக்களின் முந்தைய படங்கள் அனைத்தும் பிளாப்கள். இவங்களுக்கெல்லாம் பிரேக் கொடுத்தது, இவர் கூட நடிச்ச படங்கள் தான். இப்பலாம், தமிழ் சினிமாவில் கனமான வேடங்களை ஏற்க இவர விட்ட ஆளு இல்லை.

    அதனால, அதிக ஹிட் கொடுத்த முன்னணி தமிழ் நடிகர், பிரபுதான்.

  4. #573
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #574
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #575
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    83.சத்தியவாக்கு
    19.12.90



    இளையதிலகம் இரு வேடங்களில் நடித்த மற்றுமொரு படம்.
    பூஜை போட்ட போதே பெரும் ஆவலை தூண்டிய படம்.சில பிரச்சினைகளால் நீண்ட நாளைய தயாரிப்பாகஇப்படம்
    அமைந்துவிட்டது.தவிர,ரிலிசான சமயத்தில் விளம்பரங்களும் சரியாக செய்யப்படவில்லை.அதனால் படம் பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை.
    இப்படத்தின் திரைக்கதை-வசனம் படம் தயாராகிக் கொண்டு இருக்கும்போதே வண்ணத்திரை இதழில் பட ஸ்டில்களுடன் தொடராக வந்தது.

    நடிப்பு:
    இளையதிலகம் பிரபு
    ஷோபனா,வினுசக்கரவர்த்தி,
    மனோரமா,கிட்டி...

    இசை.கியான்வர்மா
    இயக்கம். R.அரவிந்தராஜ்.

  7. #576
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #577
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Last edited by senthilvel; 27th December 2016 at 07:44 PM.

  9. #578
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு படக் காட்சிகள்
    "மைடியர் மார்த்தாண்டன்"

  10. #579
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #580
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 58 of 93 FirstFirst ... 848565758596068 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •