Page 21 of 93 FirstFirst ... 1119202122233171 ... LastLast
Results 201 to 210 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    38.ராஜா நீ வாழ்க
    10.01 86



    இளையதிலகம் பிரபு,அம்பிகா நடித்தது.
    இயக்கம்.C.V.ராஜேந்திரன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    39.சாதனை
    10.01.86

    நடிகர்திலகம்
    இளையதிலகம்
    கேஆர்.விஜயா,நளினி,வினு சக்கரவர்த்தி.புவனி(அறிமுகம்)
    இசை.இளையராஜா
    இயக்கம்.A.Sபிரகாசம்.

    கதை:
    சினிமா இயக்குனராக நடிகர்திலகம்.அனார்கலி-சலீம் கதையை சிறந்த படமாக உருவாக்க வேண்டும் என்பது அவருடைய லட்சியம்.அனார்கலி பாத்திரத்திற்காக அவரின் தேடல் சாத்தியப்படாமல் இழுத்துக்கொண்டே செல்கின்றது.ஒரு நாள் நளினியை பார்க்கிறார்.அவள் ஒரு பிச்சைக்காரி.முகமும்,தோற்றமும் தன் கனவான அனார்கலியை நிஜப்படுத்துவது போல் தோன்ற,
    அவளை கதா நாயகியாய் கொண்டு பல படங்கள் உருவாக்குகிறார்.அனார்கலி சலீம் கதையை உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்குகிறார்.

    நடிகர்திலகத்தின் மனைவியாக வரும் கே.ஆர்.விஜயாவுக்கு இருவரின் உறவில் சந்தேகம் எழுகிறது.நளினி இதை அறிந்து வாழ்வு கொடுத்தவரின் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படாதிருக்கும் பொருட்டு தான் ஒரு திருமணம் செய்து கொண்டுதிரைத்துறையிலிருந்தும்,
    அவரின் பாதையிலிருந்தும் விலகிச் சென்று விடுகிறாள்.
    ஆனாலு அனார்கலி சலீமை அவர் விடுவதாயில்லை.அது மேலும் தீவிரமே ஆகிறது.
    காலங்கள் கழிகின்றன...
    அவருடைய தேடலில் சிக்குகிறாள் ஒரு பெண்.அவளே அனார்கலி என்று முடிவெடுக்கிறார்.தன் மகனையே சலீமாக்குகிறார்.
    படப்பிடிப்பு தொடர்கிறது.அனார்கலி சலீமாக நடிப்பவர்கள் உண்மையிலேயே காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.அப்போதுதான் விஷயம் தெரிய வருகின்றது.அனார்கலியாக நடிப்பவள் நளினியின் மகள் என்று.ஆனால் நளினியின் கணவனாக வரும் வினு சக்கரவர்த்தி காதலை எதிர்க்கிறார்.படத்தில் நடிப்பதையும் தடை செய்கிறார்.சமரச முயற்சிக்கு பின் படத்தில் நடிக்க மட்டும் ஒப்புக் கொள்கிறார்.
    இறுதியில் என்ன?

    அனார்கலி சலீம் காவிய ஜோடி நிஜத்தில் இறப்பதைப் போலவே இருவரும் இறந்து போகின்றனர்.

    பாடல்களில்,
    அத்தி மரப்பூவிது,
    ஓ வானம்பாடி
    எங்கே நான் கண்டேன் அனார்கலி
    இனிமையானவை.
    ஓ வானம்பாடி பாடலுக்கு நடிகர்திலகம் எப்படி நடிப்பது என்று பிரபுவுக்குநடித்துக் காட்டுவதும்,பிரபு அதைப் பார்த்து நடிப்பதும் ரசிக்கத் தகுந்த காட்சிகள்.

    பிரபு விவேகானந்தர் தோற்றத்தில்வருவது அழகு.
    சாதனை 100 நாள் வெற்றிப்படம்.

    SATHANAI FULL HD MOVIE SIVAJI SUPER HIT MOVIE:
    Last edited by senthilvel; 28th September 2016 at 04:58 PM.

  4. #203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சாதனை பட பூஜை விளம்பரம்




    Last edited by senthilvel; 29th September 2016 at 11:03 AM.

  5. #204
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    40.நம்பினோர் கெடுவதில்லை
    23.05.87



    பிரபு,நம்பியார்,மனோரமா,வி.கே.ராமசாமி,ஜெய்கணேஷ்,வடி வுக்கரசி,
    சுதாசந்திரன்,ஜெய்ஸ்ரீ,,ராஜீவ்.

    இசை.M.S.விஸ்வநாதன்.
    இயக்கம்.சங்கர்.



    சுவாமிஐயப்பன் மகிமைகளை சொல்வதாக வந்த படம்.பிரபுவுக்கு இதில் வில்லத்தனம் கொண்ட கதாநாயகன் வேடம்.வித்தியாசமான வேறு பிரபுவை இதில் காணலாம்.அலட்டிக்கொள்ளாத வில்லத்தனமான நடிப்பை அமைதியாக செய்திருப்பார்.விஜயகாந்த் கௌரவ வேடத்தில் வநதாலும் இருவரும் இணைந்து வருவது போல் காட்சி இல்லை.

    Nambinar Keduvathillai:



    41.நாளெல்லாம் பவுர்ணமி.
    15.01.86

    படத்தின் சிறப்பு பாடல்களும்,பிரபுவின் நடிப்பும்.
    என்னடி கண்ணு நீ எந்த ஊரு பொண்ணு
    அம்மாடி உன் பேச்சை எப்ப கேட்பேன்
    ஆகிய இரண்டு பாடல்கள் பிரபுவுக்கு.
    முதல் பாடல் குத்துப்பாடல்.மலேசியா வாசுதேவன் பாடியது.
    இரண்டாவது சோக ராகம்.SPB பாடியது.
    இசை. கங்கை அமரன்.
    Last edited by senthilvel; 1st October 2016 at 01:56 PM.

  6. #205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம்பினோர் கெடுவதில்லை

    நடிகர்திலகத்தின் மகனாகவே திரையுலகில் வலம் வந்த இளையதிலகத்தின் தனித்த விஸ்வரூபம் இந்த படத்திற்கு பின் தான் இரண்டாவது இன்னிங்சாக ஆரம்பமானது.

  7. #206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை


    சிவாஜி புரொடொக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும்
    42.அறுவடை நாள்.
    ரிலீஸ்:01.11.86

    தளபதி ராம்குமார்
    இளையதிலகம் பிரபு

    பல்லவி (அறிமுகம்)..ஆர்.பி. விஸ்வம்,வடிவுக்கரசி..ராசி.

    ராம்குமாரின் நடிப்பை பார்த்த பின் அன்னை இல்லத்திலிருந்து இன்னும் ஒரு வித்தியாசமான நடிப்பை காலம் காலமாய் ரசிக்கலாம் என்று நினைக்க வைத்தது.(அவருடைய எண்ணம் வேறு விதமாய் அமைந்தது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம்தான் இன்று வரை)என்ன ஒரு அலட்டிக் கொள்ளாத ஆர்ப்பாட்டம் இல்லாத பண்பட்ட நடிப்பு.பல படங்களில் நடித்தது போல் முதல் படத்திலேயே.

    பிரபு:
    இந்த ஒரு படத்திலேயே இதற்கு முன் வந்த 40படங்களின் நடிப்பை மறக்கடிக்கச் செய்திருப்பார்.நாம் பிரபுவையா பார்க்கிறோம் என்று எண்ணும்படியான நடிப்பு இதில்.

    பல்லவியிடம் செய்யும் காதல்குறும்புகள்,தந்தையில்லாத நேரத்தில் தாயிடம் பேசும் வீராப்புகள்,
    தெரியாமல் கட்டிய தாலியால் ஏற்படும் சோகத்தை முகத்தில் காட்டும் பாவனைகள்,இறுதியில் கொள்ளும் ரௌத்திரம் என சகலத்திலும் பின்னியிருப்பார்.

    பாடல்கள் அருமை.பிண்ணணி இசையும் படத்திற்கு பலம்.கறுப்பு வெள்ளையில் ஆரம்பிக்கும் முதல் காட்சி கலராய் மாறும் உத்தி ,பாடல் காட்சிகள்,கவிதையான காமிரா,மென்மையான அதே சமயம் மிரட்டலானவிஸ்வத்தின்
    வில்லத்தனம், பிரபுவின் குறும்புகள்
    என படமே கலக்கலாக இருக்கும்.

    அறிமுகங்கள்:
    கதாநாயகி.பல்லவி.
    இயக்கம். GM.குமார்

    வில்லனைப்பற்றிய நடிகர்திலகம் சொன்ன கருத்து:
    "ஆள் யாருய்யா புதுசா, கருநாகம் மாதிரி இருக்கான்."

    பாடல்கள்:
    நாங்க செய்யறதெல்லாம் நீங்க பொறுத்துக்கனும்
    ஓலை குருத்தோலை காத்துல ஆட
    சின்னப்பொண்ணு சின்னப் பொண்ணு
    தேவனின் கோவிலில்
    பாடல்கள் மிகவும் இனிமை.

    அதிர வைக்கும் யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

    இந்தப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம்.ஆனால் இன்னும் பெரும் வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம்.

    முழுப்படம் காண:
    Aruvadai Naal:
    Last edited by senthilvel; 30th September 2016 at 05:34 PM.

  8. #207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் முன்னுரையுடன் வெளியிடப்பட்ட அறுவடைநாள் கேஸட்


  9. #208
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சில காட்சிகள்
    அறுவடைநாள் படத்திலிருந்து
    Last edited by senthilvel; 29th September 2016 at 11:14 AM.

  10. #209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #210
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 21 of 93 FirstFirst ... 1119202122233171 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •