Page 10 of 93 FirstFirst ... 891011122060 ... LastLast
Results 91 to 100 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #91
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தனயனின் படத்திற்கு தந்தை கிளாப் அடிக்கும் காட்சி
    முடிசூடா மன்னனுக்காக

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    13.சூரக்கோட்டை சிங்கக்குட்டி
    ரிலீஸ்:09.09.83


    நடிப்பு
    இளையதிலகம்.. ஜெமினி கணேசன,விஜயகுமாரி, பிரமீளா,ராதாரவி,சில்க் ஸ்மிதா
    இசை:இளையராஜா
    தயாரிப்பு :ஏவிஎம்
    டைரக்சன்:ராமநாராயணன்



    படம் வருவதற்கு முன்னரே பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டது.காரணம் பட டைட்டில் மற்றும் ஏவிஎம் தயாரிப்பு.
    விளம்பரங்களால் இப்படம் பிரபலப்படுத்தப்பட்டது.

    இப்படத்தில் இடம்பெற்ற
    காளிதாசன் கண்ணதாசன்
    பாடல் சூப்பர்ஹிட்.
    Soorakottai Singakutti - Police arrests Prameela:
    Last edited by senthilvel; 18th August 2016 at 12:03 PM.

  4. #93
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    14.ராகங்கள் மாறுவதில்லை
    ரிலீஸ்:23.09.83
    நடிப்பு
    இளையதிலகம்,அம்பிகா,வினு சக்கரவர்த்தி
    இசை. இளையராஜா
    இயக்கம்.சிறுமுகை ரவி.

    இப்படத்தில் பிரபுவின் நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது.நல்லபடம் என்றும்பரவலாக பேசப்பட்டது.
    Tamil Movie Song Raagangal Maaruvathillai The:

  5. #94
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    15.மிருதங்க சக்கரவர்த்தி
    ரிலீஸ்.24.09.83

    நடிகர்திலகம்,இளையதிலகம்,கே.ஆர்.விஜயா,நம்பியார்,தேங ்காய்சீனிவாசன்,சுலக்சனா,மகேந்திரன்,மற்றும் பலர்.
    இசை. M.S.விஸ்வநாதன்
    இயக்கம் சங்கர்.

    உச்சப்புகழுடன் மிருதங்க வித்வானாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சுசீந்திரம் சுப்பையா பிள்ளை (நடிகர்திலகம்) ஒரு தன்மானப்பிரச்சினையால் மிருதங்கத்தை தொடமாட்டேன் என்று சூளுரைக்கிறார்.அவ்வண்ணமே தன் குலக் கொழுந்தையும் (வாரிசு) அதன் வாசமே படக்கூடாது என்று முடிவெடுத்து வாரிசை வெளியூருக்கு படிக்க அனுப்பி வைக்கிறார்.பிள்ளைவாள் ஒன்று நினைக்க காலம் வேறு விதமாய் விளையாடுகிறது.எதை தொடக்கூடாது என்று சுப்பையா நினைத்தாரோ அதையே தன் மூச்சுக்காற்று போல் சுவாசித்து வருகிறார் அவரின் வம்ச விளக்கு.
    காலம் ஓடஓட ,செல்வமும் கரைய கரைய வாரிசும்
    அடைகிறதுவாலிபத்தை.

    ஒரு நாள்...
    எல்லாம் தெரிகிறது சுப்பையா பிள்ளைக்கு.நெஞ்சு கொதிக்க கோபம் மறைக்க வாரிசை அடிக்கிறார்.வாரிசு வெளியேறுகிறது வீட்டை விட்டு.

    இறுதியில்...
    மிருதங்க வித்வான்கள் கலந்து கொள்ளும்இசை போட்டி ஆரம்பமாகிறது.
    வித்வான்கள் சுப்பையாவை போட்டியில் கலந்து கொள்ள சம்மதிக்க வைக்கான்றனர்.தவறு தன்மேல் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்ததால் சுப்பையாவும் போட்டியில் கலந்து கொள்கிறார்.
    சுப்பையாவின் மிருதங்க வாசிப்புக்கு போட்டியாக வாரிசே களமிறங்குகிறது.சுப்பையா பிள்ளையவர்களின் வாசிப்புக்கு எதிர் போட்டியாக வாசிக்க யாரால் இயலும்.அவரின் வாசிப்பில் அரங்கமேஅதிர மயக்கும் மதுர வாசிப்பில் தன்னையே மறக்கிறான், தனயன்.எழுந்து வந்து பாதம் சேர்கிறான்.
    சுப்பையா சுப்பையாதான்.

    சுப்பையாக வாழ்ந்திருக்கும் நடிகர்திலகற்கு மகனாக பிரபு.அந்தப்பாத்திரம் அலட்டல் இல்லாதது.எளிமையானது.இசையையே மூச்சாகக் கொண்ட பாத்திரம்.அதில் தன்னை பொருத்திக், காட்டிதன் நடிப்பின் ஆழத்தை உணர்த்தியிருப்பார் பிரபு.இளையதிலகத்திற்கு பெருமை சேர்க்கும் படங்களில் ஒன்று இந்தப்படம்.
    நூறு நாள் வெற்றிப்படமும் கூட.

    Miruthanga Chakravarthy:

    .
    Last edited by senthilvel; 21st September 2016 at 01:42 PM.

  6. #95
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இளையதிலகத்தின் பட வரிசை

    16.வெள்ளை ரோஜா
    ரிலீஸ்:04.11.83

    நடிகர்திலகம்,பிரபு,
    அம்பிகா.,ராதா,மனோரமாY.G..மகேந்திரன்,சிவச்சந்திரன், பண்டரிபாய்,தேங்காய் சீனிவாசன்,கல்கத்தா விஸ்வநாதன்...

    இசை :இளையராஜா
    இயக்கம் :A.ஜெகன்நாதன்

    பீட்டர் கேரக்டர்:
    தான் ஏழ்மையில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் குணம் எல்லாம் இல்லை.தனக்கு தன் சுய மரியாதை தான் பெரியது.எவனுக்கும் பயப்படும் குணம் கிடையாது.யார் ரவுடித்தனம் செய்தாலும் அந்த இடத்திலேயே முதலில் மிரட்டலானஎச்சரிக்கை. அதற்கு மசியவில்லை என்றால் அடி உதைதான்.அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி.எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி.முரட்டுத்தனம் முரடர்களிடம் மட்டும்தான்.அதே சமயம் நல்ல மனிதர்களிடமும்,ஏழை.,இல்லாதவர்களிடமும் அப்படியொரு குணம் இருப்பதே தெரியாது.இதுதான் பீட்டர்.
    பீட்டர்
    "பஞ்சுக்கு பஞ்சு
    நெருப்புக்கு நெருப்பு"
    இந்தக் கேரக்டரின் குணம் இயற்கையாகவேஅவரிடம் அமைந்திருக்கிறதாஎன்பது போல் அவர் நடிப்பு இதில். பேச்சு,ஸ்டைல்,அசைவுகள்,வேகம் எல்லாமே இயற்கையாகவே அமைந்தது போல் படத்தில் இருக்கும்.

    படத்தல் அவர் ஆரம்பமாகும் அந்தஅறிமுக காட்சியே அட்டகாசமாக இருக்கும்.அம்பிகாவின் வீட்டை காலி செய்யும் சிவச்சந்திரனின் ஆட்கள் வீசி எறியும் பாத்திரம் தரையில் உருண்டு வரும்.உருண்டு வரும் பாத்திரத்தை ஒரு கால் நிறுத்தும்.காமிரா மேலே போகஸ் ஆகும். பிரபு நிற்பார்.வில்லனின் ஆட்கள் பிரபுவை பார்த்ததும் அதிர்ச்சியாவர்.பிரபு ஒன்றும் பேசமாட்டார்.விரல்களை சொடுக்கி அழைப்பார்.எடுத்தையெல்லாம் எல்லாம் எடுத்து வைக்க சொல்வார்.டயலாக் எல்லாம் கிடையாது.எல்லாமே விரல் சமிக்ஞை தான்.அப்பவே அந்தக் கேரக்டரோடபலம் என்னவென்று நமக்குதெரிந்துவிடும்.பின்னர் சிவச்சந்திரனை புரட்டி எடுக்கும் அந்த ஆவேச சண்டைஅதிரடியாக இருக்கும்.அடி ஒவ்வொன்றும் இடி போல் இருக்கும்.

    பின்,
    தன் தங்கை ராதாவின் மரணத்திற்கு காரணம் பாதர்தான் என்று முடிவெடுத்து அவரை சர்ச்சுக்குள்ளேயே சென்று அடிக்க செய்யும் காட்சிகளில் எல்லாம் என்ன ஒரு ஆவேச வெளிப்பாடுகள்.

    பின்,
    போலீஸ் துரத்த கை விலங்குடன் போடும் சண்டைகளும்.தப்பிக்க முயற்சி செய்யும் உத்திகளிலும்பிரபு அபாரமாகச் செயல்பட்டிருப்பார்.

    பின்,
    டி.எஸ்.பி.அருளிடம் உரையாடும் காட்சிகள் ரசிப்பு மிக்கதாக இருக்கும்.அவர் துப்பாக்கியையே எடுத்து அவரை மிரட்டுவதும்,அவர் சாதாரணமானவரில்லை என்று தெரிந்து வியப்பதும்,ஒரு எச்சரிக்கைக்காக துப்பாக்கி குண்டுகளை உருவி விடுவதிலும் போன்ற காட்சிகளிலும் பிரபு கொடி நாட்டுகிறார்.

    பிரபுவின் நடிப்பு பாணிமற்ற நாயகர்களிடம் இருந்து ஒரு வித்தியாசமமானது.

    Vellai Roja Full Movie HD Quality Video Part 2:


    Vellai Roja Full Movie HD Quality Video Part 1:
    சில குறிப்புகள்:


    போஸ்ட்மார்ட்டம் என்ற மலையாள படத்தின் தழுவல் தான் இந்த வெள்ளை ரோஜா.

    படம் வெளியான சமயத்தில் கோவை அர்ச்சனாவில் படம் பார்த்த ஒரு பெண் அதிர்ச்சியில் இறந்து விட்டதாக வேகமான தகவல் பரவியது இன்றும் வந்து போகும் ஒரு நினைவு.

    தூங்காதே தம்பி தூங்காதே,தங்கமகன்,தங்கைக்கோர் கீதம் போன்ற படங்களும் ஒன்றாக ரிலீஸாகி வெற்றிபெற்றும்அதையும் மீறி சென்னையில் ஆறு தியேட்டர்களில்100 நாட்களும்,கோவை அர்ச்சனாவில்100 நாட்களுக்கு மேலும் நகராட்சியான பொள்ளாச்சியில் 55 நாட்களுக்கு மேலும் ஓடி வசூலில் மாபெரும் சாதனை புரிந்த படம்.கோவை அர்ச்சனாவில் வசூலான தொகை 13 லட்சத்திற்கும் மேல்.ஆண்டு 1983 தீபாவளி.


    Last edited by senthilvel; 9th October 2016 at 07:28 AM.

  7. #96
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளை ரோஜா தொடர்ச்சியாக சில விளம்பர கட்டிங்ஸ்


  8. #97
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #98
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #99
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #100
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ]

Page 10 of 93 FirstFirst ... 891011122060 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •