Page 92 of 93 FirstFirst ... 428290919293 LastLast
Results 911 to 920 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #913
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    111.
    பரம்பரை








  7. #916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    112.சிறைச்சாலை

    பாராட்டப்பட வேண்டிய படம்.










  8. #917
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    113.

    சிவ
    சக்தி

  9. #918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    114.பாஞ்சாலங்குறிச்சி.

    நல்ல., சிறந்த படம்.








    சீமானை பாராட்டலாம்.

  10. #919
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தியாகம்

    ஜமீன்தாரின் பேரன் ராஜா.படித்தவர்.ஏழைகளுக்கு உதவும் கர்ணன்.டாக்டரின் தங்கை ராதா.இருவரும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் காதலர்கள்.வசந்த மாளிகை போல் இருக்கும் அந்த ஜமீன் வீட்டு கணக்குப்பிள்ளையின் சதியால் ராஜா சிறைக்கு செல்லும்படி ஆகிறது.எதிர்பாராதது நடந்து விட்ட இந்த விஷயங்களால் ராதாவின் நட்பும் இழந்த காதல் ஆகி விடுகிறது.சிறைதண்டனை க்கு பின் ராஜா தன்னுடைய வாழ்க்கை முறைகளை முறைகளை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ராதாவைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தன் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார் த்து ஆறுதல் பட்டுக் கொள்வார்.
    அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவின் நடவடிக்கைகளை பார்த்து அவருடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து ராஜாவிடம் உனக்காக நான் என்றுநட்பு கொள்கிறார்.
    நேர்மையான இன்ஸ்பெக்டர் என்று ராஜாவும் உணர்ந்து இன்ஸ்பெக்டருக்கு முதல் மரியாதை அளிக்கிறார்.
    கணக்குப்பிள்ளையின் சதிகள் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என சில சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.
    நெஞ்சங்கள் பாரந்தாங்கிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதாவுக்கும் ராஜாவின் உண்மையான அன்பு புரிகிறது.
    பிறகென்ன அனைத்தும் சுபமாக முடிகிறது.

    கதைநாயகனைப் பற்றி..
    ராஜாவாக நடிப்புச்சிங்கம் சிவாஜி.அது என்ன நடிப்புச்சிங்கம்?
    காட்டுக்கு ராஜா சிங்கம்.நடிப்புக்கு ராஜா நடிகர்திலகம்.படத்திலும் பெயர் ராஜா.எல்லாமே பொருந்திப் போவதால் நடிப்புச்சிங்கம்.

    அமர்க்களமாக ஆரம்பிக்கும்ஆரம்பக்காட்சியில் தோளில் மீன்கூடையை சுமந்து கொண்டு அப்படியே சிகரெட் பிடிச்சுகிட்டுநடந்து வரும் அழகு இருக்கின்றதே.ஆயிரம் கண் போதாது அப்படின்னு அவருடையபாடலைத்தான் உவமையாக சொல்ல வேண்டும்.யானையின் நடையழகுபார்ப்பதற்கு அழகாக இருக்கும.்ஒரு பெரிய யானை அப்படியே மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் அழகை பார்த்திருக்கிறீர்களா?இது அதுக்கும் மேலே.அந்த நடையையே ஒரு 3மணி நேரத்திற்கு காண்பித்தாலும் சலிக்காது என்பது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி.

    கலர் கலரா பொடிகள் பறக்க .பக்க வாத்தியங்கள் பட்டைய கிளப்ப ஒரு சூறாவளிக்காற்று சுழன்று அடிச்சா எப்படி இருக்குமோஅப்படி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டே கோவிலுக்குள் நுழையும் காட்சி இருக்கின்றதே.அதிர வைக்கும் காட்சி அமைப்பு.தேங்காய் வந்து கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும்போது ஆடி வந்த வேகத்துடன் நின்று மூச்சு வாங்கிக்கொண்டேமுகத்தில் வேர்வை வழிய நாவால் உதட்டைலேசா தடவிக்கொண்டேஒரு பார்வை பார்ப்பார்.அந்த ஒரு கடினமான காட்சியிலும் சர்வ சாதாரணமாக கம்பீரமான முக பாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.

    *****எச்சில் இலை மேலே பறந்தாலும் எச்சில் இலைதான்
    கோபுரம் கீழே சாய்ஞ்சாலும்கோபுரம்தான்*****







    இந்த இரண்டு வரி வசனத்தில் இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு தொனியுடன்,ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான முகபாவத்தைக் காட்டி பேசியிருப்பார்.அந்த காட்சி ஆரம்பிக்கும் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.தேவையில்லை இன்ஸ்பெக்டர்.,நானே வந்துட்டேன் னு சொல்லி ஸ்டேசன் வாசலில் வந்து நின்று கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்.அவர் அப்படி வந்து நிற்பதுக்கும் நம் உடம்பின் ரோமங்கள் சிலிர்ப்பதுக்கும் என்ன சம்பந்தம்?அதுதான்உன்னதமான நடிப்பும் உண்மையான ரசிப்பும் இணைந்த பிணைப்பு.இது போகபோக வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
    அந்த ஸ்டேசன் காட்சிகள்பசுமரத்தாணி காட்சிகள்.

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் காட்சியில்நின்று கொண்டே அவர்பாடும் ஸ்டைல்,ஸ்டைல் என்று ஒன்றும் செய்யாமலேயே மிகப்பெரிய ஸ்டைலாக அமைந்த காட்சி.மனிதனம்மா மயங்குகிறேன்என்று அவர் பாடும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.அந்த பிரேமை ஸ்லோமோஷனில் வைத்து ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது நிறுத்தி நிறுத்தி பார்த்தால் அவர் வெளிப்படுத்திய அந்த பாவனைகள்வியப்பின் உச்சம்.
    ம எழுத்துக்கு ஒரு பாவம்,அடுத்த எழுத்து*
    னி எழுத்துக்கு ஒரு பாவம் இப்படி எழுத்துகளை உச்சரிப்பதுக்கு கூ ட முகபாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்நடிப்புச்சிங்கம்.
    இந்தப் படத்தை ஷாட் பை ஷாட்டாக*
    ரசித்துக்கொண்டே இருக்கலாம்.முகபாவனைகளையும்,அங்க அசைவைகளையும் கொண்டே அற்புத ங்களை நிகழ்த்திய படம்.
    மேலும்,

    இன்ஸ்க்டரிடமே சிகரெட் எடுத்து அதை பற்ற வைப்பது,அப்படியே இன்னொரு சிகரெட்டை எடுத்து காதில் வைப்பது,

    உங்க தங்கச்சிக்கு இதயம் இருக்கான்னு முதல்ல செக் பண்ணுங்க டாக்டர் னு மேஜரிடம் சொல்வது

    வி கே ஆரிடம் சவால் விடுவது, அவரை கிண்டல் செய்து பாடும் பாடல் காட்சிகள்

    மீன் மார்க்கெட் சண்டைக்காட்சிகள்,
    சைக்கிள் போட்டி,
    என்று படம் முழுவதும்அமர்க்களமான காட்சி அமைப்புகளைகொண்டிருக்கும்.

    கர்ணன்.,கட்டபொம்மன்.,கப்பலோட்டிய தமிழன் காவியப்படங்கள்.கமர்ஷியல் படங்களில்காவியப்படம் தியாகம்.
    மற்றவர்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கொண்டுவர முடியாத முக பாவனைகளையும்,அங்க அசைவுகளையும் சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் வெளிப்படுத்திய படங்களில் ஒன்றுதான்

    தி
    யா

    ம்
    ****-**-************** **** **-*********
    இனியதிலகம் பிரபு
    என்னும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட
    இத்திரி இப்பகுதியுடன் முடித்து வைக்கப்படுகின்றது.


    நன்றி

  11. #920
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு செந்தில்வேல் சார்,

    சொன்ன சொல் தவறாமல் 100 படங்களுக்குப்பின் இளைய திலகத்தின் 100 நாட்கள் பட வரிசையைத் தந்து அசத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

    இளைய திலகத்தின் திரைப்பட ஆவண வரிசை நிறைவு பெற்றது சற்று வருத்தம் அளித்தாலும் இதுவரை நீங்கள் தந்து அசத்திய விளம்பரங்கள் யாவும் அந்த வருத்தத்தை மறக்கடித்தன. நிறுத்தியதும் ஒருவகையில் சரிதான். இதன்பிறகு இளைய திலகம் நடித்த படங்கள் யாவும் இரட்டை ஹீரோ அல்லது துணைப் பாத்திரங்களே.

    தங்கள் அயராத உழைப்புக்கு பாராட்டுக்கள்.

    மீண்டும் அதே வருத்தம், வலி. தங்கள் உழைப்பு நடிகர்திலகம் / இளையதிலகம் ரசிகர்களால் கொண்டாடப் படவில்லையென்பதே.

    நன்றி.

Page 92 of 93 FirstFirst ... 428290919293 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •