Page 72 of 93 FirstFirst ... 2262707172737482 ... LastLast
Results 711 to 720 of 921

Thread: இனியதிலகம் பிரபு

 1. #711
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  வணக்கம்

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #712
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,154
  Post Thanks / Like  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (27.12.2016)


  Last edited by sivaa; 25th December 2016 at 07:51 PM.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #713
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  27.12.2016
  இந்த வருடம் மணிவிழா காணும் நாயகன் இளையதிலகம் ...

  இனியதிலகம் பிரபு எனும் தலைப்பில் வளர்ந்து வரும் இத்திரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

  இளையதிலகத்தின் மணிவிழா நிகழ்ச்சிகளின் தொடர்பாக ரசிகர்கள் வெளியிடும் வாழ்த்து பேனர்கள், நிகழ்ச்சிகள்,பிறந்த நாள் விழா தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது பதிவிடப்படும்.

  இன்று அன்னை இல்லத்தில் கொண்டாடப்பட்ட விழாவின் சில புகைப்படங்கள்.


  இத்திரியில் இளையதிலகத்தின் பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்து பதிவிட்ட சிவா சாருக்கு இத்திரியின் சார்பாக நன்றிகள்.

 5. #714
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  வாழ்த்து தெரிவித்த கமல்

 6. #715
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  வாழ்த்து தெரிவித்த ரஜினி

 7. #716
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  இளையதிலகத்தின் பட வரிசை.

  93.சின்னவர்.
  24.04.92
  மீனவராக பிரபு நடித்த படம்.
  மீனவக் குப்பம்,
  இரு நண்பர்கள்,
  நட்பு,
  நண்பனின் தங்கை காதலி,
  மீனவர் களின் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்,
  கந்து வட்டி கொடுமை,
  நட்பை பிரிக்கும் வில்லனின் சூழ்ச்சி, நண்பர்களின் பிரிவு,
  காதலுக்காக எதையும் செய்ய துணியும் காதலி,
  பாசமான நட்புக்காக எதையும் மனதில் நினைகாத நண்பன், வில்லனின் சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வருதல்,
  தவறை உணரும் நண்பன்,
  மீண்டும் இணை சேரும் நட்பு,
  என்ற கதைப்பின்னலில் எடுக்கப்பட்ட படம் சின்னவர்.
  பிரபு+ கங்கை அமரன் கூட்டணியில் மீண்டுமொரு வெற்றிப்படம் இது.

  எதார்த்தமான அலட்டிக் கொள்ளாத நடிப்பு , நடனம் ,சண்டைகளை பிரபு செய்தவிதம் கச்சிதம்.
  படத்தின் சிறப்புக்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் உண்டு.படம் வெளிவரும் முன்னரே பாடல்கள் ஹிட்டாகி விட்டது.
  "அந்தியிலே வானம் "படத்தின் முக்கியமான ஹிட் பாடல் மட்டுமல்ல.அந்த வருடத்தின் சிறந்த ஹிட் பாடல்களில் ஒன்றாகவும் அமைந்தது.
  கொட்டுக்களி கொட்டும்
  படகோட்டும் பட்டம்மா
  பாடல்களும் நன்றாக இருந்தன.

  100 நாள் வெற்றிப்படம்.

 8. #717
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like

 9. #718
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like

 10. #719
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like  Last edited by senthilvel; 27th December 2016 at 04:44 PM.

 11. #720
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  இளையதிலகத்தின் பட வரிசை.

  94 .நாளையசெய்தி
  14.08.92  பத்திரிக்கை நிருபராக இளையதிலகம் நடித்த முதல் படம்.
  விறுவிறுப்பான திரைக்கதை, மெய் சிலிர்க்கும் சண்டை காட்சிகள், வித்தியாசமான பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தன.

  படத்தில் பிரபு அறிமுகமாகும் அந்த ஆரம்ப சண்டைக்காட்சிக்கு இயக்குனர் சொல்லியும் கேட்காமல் டூப்பே போடாமல் 120அடி உயரத்தில் இருந்து பிரபு குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது.எடிட்டிங்கில் பார்த்த போது அந்த காட்சி அதிகம் தெளிவில்லாமல் இருந்தது.பிரபுவின் உடல்வாகுக்கு அது பெரிய விஷயம்.
  இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்த அந்த காட்சியின் தெளிவின்மையால் எடிட்டர் லெனின் சற்று வருத்தப்பட்டு அதை ஓரளவு சரி செய்து ஸ்லோமோஷனில் காட்டி திருப்தி செய்திருப்பார்.இதை அவரே நக்கீரன் தொடரில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது போன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கூறினால் மட்டுமே நாம் அறிய இயலும்.
  திரும்பி திரும்பி காமிராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டே அதுவும் குதிரையில் வேகமாக சென்று கொண்டே பிரபு செய்யும் ஆக்ஷன் காட்சிகள் அபாரமாயிருக்கும்.

  தமிழ் சினிமாவில் பத்திரிக்கை நிருபர்கள் வேடமேற்று முண்ணணி கதாநாயகர்கள் செய்த படங்கள் அதிகம் இல்லை.இதில் நிருபர் வேடம் செய்ததுடன் அதை புதுமையாகவும் செய்திருப்பார் பிரபு.மேலை நாடுகளில் துப்பறிவதுடன் உயிரையும் பணயம் வைத்து செய்திகளை வெளியிடுவார்கள் பத்திரிக்கை நிருபர்கள்.அது போன்ற ஒரு வேடத்தைதான் இதில் செய்திருப்பார் பிரபு.

  இடைவேளை சமயத்தில்,
  ஓடும் பஸ்ஸில் செய்யும் சண்டையும் பிரபுவின் திறமையான சண்டைக்காட்சிகளுக்கு சான்று. சண்டையை தொடர்ந்து வரும் காட்சிகள் ஆங்கில பட பாணியில் படம்பிடிக்கப்பட்டவிதம்அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது.

  ஜிம்கானா பாடல் காட்சியும்,
  கதர் வேட்டி சட்டை அணிந்து பிரபு சட்டசபைக்குள் வருவது போன்ற காட்சியும்,
  பொன்னம்பலத்துடன் மோதும் சண்டை காட்சியும்,
  க்ளைமாக்ஸ ராட்சத பலூன் காட்சிகளும் படத்தில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தன.

  நீண்ட இடை வெளிக்கு பின் P. B. சீனிவாஸ் இதில் ஒரு பாடல் பாடியிருப்பார்.பாடல் நன்றாக இருந்தது.ஆனால் படத்தில் இடம் பெறாதது ஆச்சர்யம்.

  இன்னொரு ஆச்சரியம். ஜெய்சங்கர்.வில்லனாக நடித்த படம்.வில்லனாக நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இதில் அவர் செய்த அரசியல்வாதி வேடம் வித்தியாசமானது. கடைசி வரை யூகிக்க முடியாத வில்லனாக அவர் நடித்திருப்பார்.


  இசை :ஆதித்யன்.
  பிரபுவின் படத்திற்கு இசையமைப்பது இது முதல் முறை.
  இயக்குனர் :G.B.விஜய்
  பாராட்டப்படவேண்டியவர்.அவருக்கு இது முதல் படமுமம் கூட.

  நடிப்பு:
  இளையதிலகம்,
  குஷ்பூ, ஜெய்சங்கர்,ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ்.,கவுண்டமணி, செந்தில்,ராக்கி மற்றும் பலர்

Page 72 of 93 FirstFirst ... 2262707172737482 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •