Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 45

Thread: காலத்தின் கைகளில் தேங்கி நிற்காத இசை

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜகுமாரன் படத்திலிருந்து..

    சின்னச் சின்ன சொல்லெடுத்து

    பொட்டுவச்சதாரு யாரு

    Last edited by venkkiram; 29th July 2016 at 07:28 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #12
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.
    என்னத்த சொல்ல... தோழரே.. செவ்வந்தியில் நவரத்தினங்களாக பலவித அற்புதமான மெட்டுக்களை வழங்கியிருக்கிறார். பட்டி தொட்டியெல்லாம் இன்று கூட ஒலிக்கக் கூடிய பாடல்கள். படங்களை குறிப்பிடுவதற்கு முன்பு நீங்க இனிமேலாவது ஒருமுறை பாடல்களை கேட்டுவிட்டு பதிவிடுங்கள்.

    புன்னை வன பூங்குயிலே

    செம்மீனே செம்மீனே

    அன்பே ஆருயிரே
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #13
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வியட்நாம் காலனி படத்தில்

    பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கைவீணையை ஏந்தும்

    மார்கழி மாசம்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #14
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1995

    கட்டுமரக்காரன்,
    மோகமுள்,
    சின்ன வாத்தியார்,
    முத்துக்காளை,
    அவதாரம்,
    ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,
    பாட்டு வாத்தியார்,
    நந்தவனத்தேரு,
    ராசய்யா,
    ராஜாவின் பார்வையிலே,
    பாட்டு பாடவா,
    கோலங்கள்,
    எல்லாமே என் ராசாதான்,
    சதி லீலாவதி

    1996

    காலாபானி,
    நாட்டுப்பறப்பாட்டு
    கருவேலம்பூக்கள்
    பூமணி
    பூவரசன்
    Last edited by venkkiram; 1st August 2016 at 01:00 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #15
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒப்புக் கொள்கிறேன். "கைவீணையை ஏந்தும் கலைவாணி" பாடல் "வியட்னாம் காலனி" படத்தில் வந்தது என்பதை மறந்து விட்டேன். அற்புதமான பாடல்தான். "மார்கழி மாசம்" பாடல் நினைவுள்ளது. நல்ல பாடல்தான். ஆனால் இது போல் பல பாடல்கள் வந்து விட்டன. ராஜாவின் முத்திரை இந்த பாடலில் ஆழமாக இல்லை என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரை ராஜாவின் 1991க்கு முந்தைய பாடல்களின் தரத்தில் இல்லை என்பது எனது கருத்து. இதனால் எனது ரசனை தரம் தாழ்ந்தது என்று நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

    ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகு குறைந்தது என்ற கருத்தை நானும் தான் ஏற்கவில்லை என்பதை மறுபடி நினைவு கூறுகிறேன். ஆனால் நீங்கள் கூறிய மற்ற பாடல்கள், "சாத்து நட சாத்து" உட்பட, நினைவில் உள்ளனவே தவிர ராஜாவின் திறமையை பறை சாற்றும் பாடல்கள் என்று நான் கருதவில்லை. கோபால் அவர்களின் கருத்தில் நான் எடுத்துக் கொண்டது இதுதான். ராஜா யார் என்று பின் வரும் சந்ததியினருக்கு விரைவாக எடுத்துரைக்க வேண்டும் என்றால், 1991க்கு முந்தைய அவரது படைப்புகளே வெகுவாக எடுத்துக்காட்டப்படும்.

  7. #16

    மறுபடியும் மொதலேர்ந்தா? யாருங்க 91 என்பதை மைல்கல்லாக வச்சது? யாருங்கிறேன்?

    முந்தையப் பதிவுகளில் 92, 93, 94, 95 ஆண்டுகளில் வெளிவந்த படங்களை தேர்வு செய்துள்ளேன். அதிலிருந்து நீங்கள் எவ்வளவு கடினமான சல்லடைகளை வைத்து சலித்தாலும் நீங்கள் அடைக்க முற்படுகிற 91-க்கு முந்தைய பாடல்களின் வரிசையில் கண்டிப்பாக சேரும். ஒருவித முன்முடிவுகளோடு ராஜாவை அணுகினால் அவர்கள் இதுபோன்ற விவாதங்களில் பலவிதமான சப்பைக்கட்டுகளைத்தான் கடைசி வரைக்கும் நம்பியிருக்கணும். வேறு வழியில்லை.

    இதெல்லாம் ராஜா-ரகுமான் இசைக்காலங்களை ஓவர்லாப்பிங் இல்லாமல் வைத்துக்கொள்ளும் அணுகுமுறை. கடைத்தெடுத்த ஹிப்போகிரசித்தனம். 'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து' ராஜா.

    அவரை எம்.எஸ்.வி, ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களோடு ஏணி வரிசையில் வைத்து நிறுவுவதும் ஒருவித பக்குவமில்லாமையே. ஏனென்றால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் இசைக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களிலிருந்து வேறெந்த இசையமைப்பாளரை ஒப்புமைக்காக கொண்டுவர முடியும்?

    மொதல்ல ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இசையமைக்கும் போக்கில் 76 முதல் 80/81 வரை, 82 முதல் 89 வரை, 90-98 வரை, 99 முதல் இன்றுவரை என ராஜா பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் முன்ன பின்ன வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ராஜா தொடர்ந்து பின்னணி இசைக்கோர்ப்புகளில் முடிந்தவரை தான் முன்பு வந்த பாதையையே முழுவதுமாக மாற்றி மாற்றி பயணித்துக் கொண்டு இருக்கிறார். ஒருவர் ராஜாவின் 80s பாடல்கள் மட்டுமே புடிக்கும் என்றால் அவர்களின் கேட்கும் அனுபவம் தேங்கிவிட்டது என பொருள். ராஜாவின் 90களின், 2000களின் பாடல்கள் தொடர்ந்து மக்களால் கேட்கப்படுகிறது என்பதே எல்லாரும் பிரமிக்கும் வகையிலான மகத்தான சாதனை.
    Last edited by venkkiram; 30th July 2016 at 02:54 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #17
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    1995-ல் வெளிவந்த முத்துக்காளை படத்தில் இடம்பெற்ற "புன்னை வனத்துக்கு குயிலே" பாடலை நல்லிசை விரும்பிகள் கண்டு, கேட்டு ரசித்து மயங்காமல் போகவே முடியாது. அதுபோன்ற மெலடிகளை சாதாரணமாக கடந்து செல்பவர்கள் நல்லிசை விரும்பிகளே அல்ல..

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #18
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யார் நல்லிசை விரும்பிகள் என்று முடிவு செய்வது யார்? நீங்களா? உங்களுக்கு யார் அந்த பதவியை அளித்தது? "முத்துக்காளை" படத்தில் வரும் "கஞ்சி கலயத்தை" மற்றும் "புன்னைவனத்து குயிலே" இரண்டுமே நானும் விரும்பி கேட்கும் பாடல்கள் என்பது வேறு விஷயம்.

    இந்தியாவை பொறுத்தவரை பின்னணி இசை என்றால் ராஜா, ராஜா என்றால் பின்னணி இசை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. என்னவோ எங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிய வைக்க முயற்சிப்பது போல் பாவலா காட்டுவது வேண்டாத ஒன்று. பின்னணி இசை என்று எடுத்துக் கொண்டாலும், இந்திய திரைப்படங்களில் வருகிற ஜானர்கள் மிக குறுகியவையே. இது ராஜாவின் குறை அல்ல. வேறு ஜானர்களிலும் ராஜா பிரமாதப்படுத்தியிருக்கலாம் என்றாலும் இது தான் உண்மை. மற்ற நாட்டு திரைப்படங்களில் வரும் சில குறிப்பிட்ட ஜானர்களுக்கு அவரது இசை எப்படி இருந்திருக்கும் என நாம் நினைத்துதான் பார்க்க முடியும். ஏதோ ஒரு கன்னட சை ஃபை படத்திற்கு அவர் அளித்த இசையை குறிப்பிட்டு அது போல் யாரால் செய்ய முடியும் என்று நீங்கள் சிலாகித்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதே நேரம் திகில் திரைப்படங்களில் அவர் அதிகம் வேலை செய்யவில்லை என்ற ஆதங்கமும் உள்ளது. 91 என்று நினைக்கிறேன். "உருவம்" என்ற திரைப்படம். படம் குப்பை என்றாலும் பின்னணி இசை மிரட்டியது.

    91 என்ற வரையறை இல்லை. ராஜா ஆரம்பத்தில் செய்த இசை ஜாலங்களை விட பிறகு வந்தவை பிரமாதம் இல்லை என்பது தான் எனது கருத்து. மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு ராஜாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் அவமதிக்கும் செயலை உங்களோடே வைத்துக் கொள்ளவும்.

  10. #19
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மறுபடியும் மொதலேர்ந்தா? யாருங்க 91 என்பதை மைல்கல்லாக வச்சது? யாருங்கிறேன்?

    அது தான் என் முதல் பதிவிலேயே சொன்னேனே. ராஜாவின் படைப்பு திறன் என்னை பொறுத்தவரை குறையவில்லைதான். ஆனால் அதற்கான வர்த்தக ரீதியான மதிப்பு குறைந்தது என்பது நிதர்சனமான உண்மை. இது ரஹ்மான் வந்ததால் இருக்கலாம். அல்லது பொதுவான இசை ரசனை மாறியதால் இருக்கலாம். அல்லது இரண்டுமே இருக்கலாம். ராஜாவின் ஆரம்பகால படைப்புகளில் இருந்து அவரது பிந்தைய படங்களின் இசை வெகுவாக மாறவில்லை. இதனால் அவரது படைப்புத்திறன் குறைந்தது என்று அர்த்தமில்லை. அவரே பல இடங்களில் வெகு ஜன ரசிகர்கள் கேட்கும் இசை இப்போது சரியில்லை என்று அங்கலாய்த்தார். ஆனால் வெகுஜன ரசனை மாற ஆரம்பித்தது. வெகு ஜன ரசனைக்கு ஏற்றவாறு தனது இசையமைப்பை மாற்றுவது தான் அறிந்த இசைக்கு செய்யும் அவமரியாதை என்று ராஜா கருதி இருக்கலாம். இது இரு தரப்பின் தவறும் இல்லை. ஆனால் இதனால் வெகு ஜன இசையை தாழ்த்தி பேசுவது கடைந்தெடுத்த திமிர்தனம். இதை ராஜா சொன்னால் பரவாயில்லை. ஏன் என்றால் அவர் ஒரு மேதை. ஆனால் அவரது ரசிகர் என்பதாலேயே தன்னையும் ஒரு அதிமேதாவி என்று நினைத்து கொள்பவர்கள் கூறுவது நல்ல வேடிக்கை. அவர்களது அகங்காரத்தையும் அறிவீனத்தையும் தான் இது வெளிப்படுத்துகிறது.

  11. #20

    மொதல்ல 91 என வரைமுறை படுத்த முயன்று அதைக் காப்பாற்ற எப்படியெல்லாம் அந்தர் பல்ட்டி அடிக்க வேண்டியிருக்கிறது.. படைப்புத்திறன் இல்லன்னு சொல்லவேண்டியது.. அப்புறம் படைப்புத்திறன் நல்லாத்தான் இருக்கு, ஆனால் முன்புள்ளது மாதிரி இல்லன்னு சொல்லவேண்டியது.. ஆனால் 91-க்கு பிறகு இசையருவி போல பல நல்ல மெட்டுக்களை வழங்கியிருக்கிறார்ன்னு ஒன்னொன்னா எடுத்துக்காட்டுனா, ஆமாம் ஆமாம் என தலையாட்ட வேண்டியது.. அப்புறம் வணிக ரீதியா தேக்கம் ஏற்பட்டிருக்குன்னு சொல்லவேண்டியது.. என்னமோ யாருக்கே தெரியாத ஒன்றை இவர்கள் இங்கே எல்லோருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள் போல.. சொல்லிக் காட்டவில்லை.. குத்திக் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களது இலைமறை காய், நேரிடையான தாக்குதல் எல்லாமே. இசையமைப்பாளர் என்றாலே எதோ மெட்டு போட்டு ஆல்பத்தை நிரப்பவேண்டியது மட்டுமே என குறுகிய நோக்குடன் இருக்கும் மக்களை என்ன செய்யமுடியும்?

    90, 2000, 2010 என ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் எப்பேற்பட்ட இசையாக்கங்களை வழங்கி இருக்கிறார், அவற்றை இசை தெரிந்த வல்லுநர்கள், விமர்சகர்கள் எப்படியெல்லாம் சிலாகித்து இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரியிலேயே தொடர்ச்சியாக கொடுக்கத்தான் போகிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •