Results 1 to 1 of 1

Thread: Historical Study of Kalahasthi Temple of early Tamil Nadu & subsequent Andhra Prades2

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    314
    Post Thanks / Like

    Historical Study of Kalahasthi Temple of early Tamil Nadu & subsequent Andhra Prades2

    Historical Study of Kalahasthi Temple of early Tamil Nadu & subsequent Andhra Pradesh - Part 2

    The legend of Kannappa Naayanaar attached to Kaalaththi temple of then Tamil Nadu

    93. மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற 0742-1
    உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் 0742-2
    சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து 0742-3
    வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார் 0742-4

    94. என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே 0743-1
    நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் 0743-2
    நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட 0743-3
    குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் 0743-4

    95. பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே 0744-1
    இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் 0744-2
    அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார் 0744-3
    செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை 0744-4

    96. நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன் 0745-1
    காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச் 0745-2
    சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே 0745-3
    கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் 0745-4

    97. ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம் 0746-1
    போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல் 0746-2
    மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும் 0746-3
    தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம் 0746-4

    98. உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து 0747-1
    கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் 0747-2
    வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் 0747-3
    திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார் 0747-4

    99 ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு 0748-1
    வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி 0748-2
    ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு 0748-3
    நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் 0748-4

    100 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் 0749-1
    தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம் 0749-2
    களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு 0749-3
    குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார் 0749-4

    101 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி 0750-1
    அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட 0750-2
    இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து 0750-3
    மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான் 0750-4

    102. முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன 0751-1
    அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி 0751-2
    மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி 0751-3
    என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும் 0751-4

    103. நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும் 0752-1
    பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி 0752-2
    ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர் 0752-3
    நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில் 0752-4

    104. திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே 0753-1
    அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத் 0753-2
    தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப் 0753-3
    பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார் 0753-4

    105. மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள 0754-1
    ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் 0754-2
    வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் 0754-3
    மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார் 0754-4

    106. நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் 0755-1
    வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய 0755-2
    அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று 0755-3
    படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற 0755-4

    107. வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் 0756-1
    கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில் 0756-2
    உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன் 0756-3
    இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் 0756-4

    108. கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப் 0757-1
    பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து 0757-2
    மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற 0757-3
    அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான் 0757-4

    109. வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக் 0758-1
    குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி 0758-2
    ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான் 0758-3
    அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் 0758-4

    110. உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில் 0759-1
    திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை 0759-2
    எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ் 0759-3
    அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட 0759-4

    111 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே 0760-1
    இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை 0760-2
    இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால 0760-3
    இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று 0760-4

    112. போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர் 0761-1
    காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர் 0761-2
    நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே 0761-3
    கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் 0761-4

    113. ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் 0762-1
    நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று 0762-2
    சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி 0762-3
    வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார் 0762-4

    114. முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் 0763-1
    பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி 0763-2
    அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் 0763-3
    பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார் 0763-4

    115. காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன் 0764-1
    கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் 0764-2
    மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று 0764-3
    நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் 0764-4

    116. அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு 0765-1
    வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான் 0765-2
    இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான் 0765-3
    நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் 0765-4

    117. என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் 0766-1
    முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் 0766-2
    வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க 0766-3
    இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு 0766-4

    118. கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ 0767-1
    வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் 0767-2
    சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை 0767-3
    ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார் 0767-4

    119. மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே 0768-1
    அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் 0768-2
    பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு 0768-3
    தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான் 0768-4

    120. தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல் 0769-1
    ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு 0769-2
    மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில் 0769-3
    ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார் 0769-4

    121 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் 0770-1
    ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி 0770-2
    மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த 0770-3
    தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார் 0770-4

    122 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் 0771-1
    புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி 0771-2
    இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி 0771-3
    நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம் 0771-4

    123. இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின் 0772-1
    முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் 0772-2
    வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை 0772-3
    விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார் 0772-4

    124. தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி 0773-1
    மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச் 0773-2
    சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை 0773-3
    இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து 0773-4

    125. கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு 0774-1
    அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் 0774-2
    பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால 0774-3
    அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் 0774-4

    126. அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் 0775-1
    மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் 0775-2
    இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு 0775-3
    பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான் 0775-4

    127. அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் 0776-1
    வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச் 0776-2
    செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி 0776-3
    மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார் 0776-4

    128. சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் 0777-1
    கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை 0777-2
    ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே 0777-3
    நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் 0777-4

    129. கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க 0778-1
    முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத் 0778-2
    தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் 0778-3
    குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும் 0778-4

    130. விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க 0779-1
    மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி 0779-2
    பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும் 0779-3
    இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும் 0779-4

    131 செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் 0780-1
    மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் 0780-2
    ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் 0780-3
    எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை 0780-4

    132. வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று 0781-1
    சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக் 0781-2
    கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் 0781-3
    அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி 0781-4

    13.3 ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும் 0782-1
    வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே 0782-2
    ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின் 0782-3
    மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார் 0782-4

    134. மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி 0783-1
    மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை 0783-2
    எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக் 0783-3
    கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில் 0783-4

    135. எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் 0784-1
    கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் 0784-2
    மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு 0784-3
    செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார் 0784-4

    136. வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு 0785-1
    சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு 0785-2
    வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி 0785-3
    இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் 0785-4

    137. மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் 0786-1
    தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து 0786-2
    போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் 0786-3
    ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார் 0786-4

    138. பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் 0787-1
    இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும் 0787-2
    செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் 0787-3
    விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் 0787-4

    139. பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து 0788-1
    தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி 0788-2
    வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை 0788-3
    முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் 0788-4

    140. பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் 0789-1
    துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள் 0789-2
    அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு 0789-3
    தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார் 0789-4

    141 இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் 0790-1
    மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார் 0790-2
    கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச் 0790-3
    செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன 0790-4

    142. திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் 0791-1
    பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து 0791-2
    வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று 0791-3
    ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி 0791-4

    143. பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும் 0792-1
    அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் 0792-2
    துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து 0792-3
    வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார் 0792-4

    144. பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் 0793-1
    இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி 0793-2
    வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால் 0793-3
    வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் 0793-4

    145. இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் 0794-1
    வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் 0794-2
    கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து 0794-3
    வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து 0794-4

    146. வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் 0795-1
    ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு 0795-2
    காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி 0795-3
    தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார் 0795-4

    147. எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் 0796-1
    வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி 0796-2
    அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத் 0796-3
    திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது 0796-4

    148. நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி 0797-1
    கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு 0797-2
    வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும் 0797-3
    ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் 0797-4

    149. வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள் 0798-1
    தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி 0798-2
    அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் 0798-3
    முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் 0798-4

    150. ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால் 0799-1
    ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் 0799-2
    ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் 0799-3
    தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார் 0799-4

    151. இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய 0800-1
    ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார் 0800-2
    எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி 0800-3
    அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார் 0800-4

    152. மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர் 0801-1
    தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித் 0801-2
    தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் 0801-3
    ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால் 0801-4

    153. நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் 0802-1
    ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு 0802-2
    பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் 0802-3
    காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார் 0802-4

    154. முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் 0803-1
    இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் 0803-2
    தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற 0803-3
    அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ? 0803-4

    155 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப 0804-1
    மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு 0804-2
    என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன் 0804-3
    உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என 0804-4

    156. அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே 0805-1
    மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி 0805-2
    வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் 0805-3
    நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று 0805-4

    157. அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் 0806-1
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும் 0806-2
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் 0806-3
    அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார் 0806-4

    158. பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
    அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
    விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
    செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.

    159. உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
    பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
    ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
    பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.

    160. இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
    மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
    செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
    எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா

    161. வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
    நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
    செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
    எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.

    162. மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
    இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
    முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
    அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.

    163. உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் 0807-1
    எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் 0807-2
    மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து 0807-3
    புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார் 0807-4

    164. கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப் 0808-1
    புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார் 0808-2
    மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித் 0808-3
    துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற 0808-4

    165. முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப் 0809-1
    பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து 0809-2
    மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல் 0809-3
    பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார் 0809-4

    166 கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம் 0810-1
    வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை 0810-2
    அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித் 0810-3
    தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி 0810-4

    167. மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி 0811-1
    ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு 0811-2
    தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி 0811-3
    ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார் 0811-4

    168. இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் 0812-1
    மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய 0812-2
    இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும் 0812-3
    அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் 0812-4

    169. அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு 0813-1
    திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று 0813-2
    துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ் 0813-3
    வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் 0813-4

    170. வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் 0814-1
    சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் 0814-2
    கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் 0814-3
    பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார் 0814-4

    17.1 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது 0815-1
    ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள 0815-2
    அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா 0815-3
    எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் 0815-4

    172. வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா 0816-1
    மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி 0816-2
    ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று 0816-3
    நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார் 0816-4

    173. வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் 0817-1
    நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து 0817-2
    நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி 0817-3
    மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார 0817-4

    174. பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ? 0818-1
    ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ? 0818-2
    மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ? 0818-3
    ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் 0818-4

    175. என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு 0819-1
    முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும் 0819-2
    மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப் 0819-3
    பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார் 0819-4

    176. நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் 0820-1
    இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப் 0820-2
    புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த 0820-3
    மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் 0820-4

    177 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் 0821-1
    கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும் 0821-2
    இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார் 0821-3
    உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார் 0821-4

    178. இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் 0822-1
    அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று 0822-2
    மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண் 0822-3
    முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப 0822-4

    179. நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார் 0823-1
    குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி 0823-2
    நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற 0823-3
    ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார் 0823-4

    180. வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் 0824-1
    நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் 0824-2
    உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் 0824-3
    குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் 0824-4

    181 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று 0825-1
    புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி 0825-2
    மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் 0825-3
    உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று 0825-4

    182. கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு 0826-1
    எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி 0826-2
    உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு 0826-3
    திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர் 0826-4

    183. செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட 0827-1
    அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர் 0827-2
    தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக 0827-3
    கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற 0827-4

    184. கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும் 0828-1
    ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் 0828-2
    ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள 0828-3
    வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப 0828-4

    185. பேறினி இதன் மேல் உண்டோ? பிரான் திருக் கண்ணில் வந்த 0829-1
    ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை 0829-2
    ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில் 0829-3
    மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார் 0829-4

    186. மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர் 0830-1
    தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே 0830-2
    கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் 0830-3
    பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன் 0830-4
    Last edited by virarajendra; 11th August 2016 at 09:39 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •