Page 7 of 11 FirstFirst ... 56789 ... LastLast
Results 61 to 70 of 108

Thread: IRAIVI - A flim by Karthik Subbaraj

  1. #61
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கையை கட்டி மலக்கிடங்கில் போட்டதுபோல இருந்தது.. இறைவி பற்றி சாருநிவேதிதா

    சென்னை: பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'இறைவி' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதைக்காக பலரது பாராட்டை பெற்றுவருகிறது. ஒரு சில விமர்சகர்கள், சில வசனங்களை குறை கூறுகிறார்கள்.ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மிகவும் காட்டமாக தனது வெப்சைட்டில் இறைவி குறித்து கருத்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்". இவ்வாறு சாருநிவேதிதா தெரிவித்துள்ளார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இறைவி விமர்சனம்?
    June 5, 2016June 5, 2016 by Charu Nivedita


    இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல். இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல. தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம். ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும். அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.

    ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம். அந்த இதழில் சினிமா பற்றியும் எழுதச் சொன்னதால்தான் இறைவியை முதல் காட்சியே பார்த்தேன். இல்லாவிட்டால் பிரபு காளிதாஸ் போன்ற நண்பர்களைக் கேட்டு விட்டுத்தான் போவது வழக்கம். எனவே இறைவி விமர்சனம் முதலில் ஏஷியாநெட் மின்னிதழில்தான் வரும்.
    அதற்குப் பிறகுதான் சாருஆன்லைனில் வரும். பல நண்பர்களுக்கு இறைவி பிடித்திருக்கிறது. இறைவி பிடித்தது என்று சொல்பவர்களிடம் என் நட்பை முறித்துக் கொள்வது என்ற அளவுக்கு முடிவு செய்திருக்கிறேன். ஏனென்றால், இறைவி ஒரு மட்டமான படம் மட்டும் அல்ல; மட்டமான படம் எடுக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. நான் கூட ஒரு படம் இயக்கினால் அது மட்டமாகப் போக எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் இறைவி சமூக விரோதக் கருத்துக்களை முன்வைக்கிறது. அதிலும் heroic ஆக. கடைசி காட்சியில் தண்டனை கொடுத்து விட்டதாக இயக்குனர் சொல்லலாம். அது சரோஜாதேவி புத்தகங்களில் எல்லா போர்னோவையும் எழுதி விட்டு, எனவே சகோதரர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் கவனமாக இருங்கள், நான் செய்த தப்பை நீங்கள் செய்து விடாதீர்கள் என்று ஒரு வரி வரும். அது போலத்தான் இறைவியில் கடைசியில் வந்திருக்கலாம். இந்தப் படத்தை இளைஞர்கள் பார்த்தால் சமூகம் இப்போது இருப்பதை விட நூறு மடங்கு கிரிமினலாக மாறி விடும்.

    மோசமான படங்கள் எத்தனையோ வருகின்றன. ஆனால் நாங்கள் ஏதோ செய்தி சொல்லுகிறோம் என்று வரும் போதுதான் இறைவி போல் சமூக விரோதமாக ஆகி விடுகிறது. இந்தப் படத்தில் ஃபெமினிஸம் சொல்ல வந்து என்னென்னவோ ஆகி விட்டது. பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்தும் படம் இறைவி. அதனால்தான் இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்பவர்களோடு நான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
    ஏஷியாநெட்டில் பின்வரும் இணைப்பில் என் கட்டுரைகளைக் காணலாம்.

    http://newsable.asianetnews.tv/home-page/iraivi-charu-nivedita-review
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #63
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்’ கார்டா? உண்மை என்ன? வாட்ஸ் அப் ஆடியோ விளக்கங்கள்! - VIKATAN


    ’’இறைவி’ படத்தின் காட்சியில், தயாரிப்பாளர் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா முடித்த படத்தை ஒரு சில மனஸ்தாபத்தால் வெளியிடாமல் இழுத்தடித்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு , ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்யவும் முற்படுவார். படத்தின் இந்த பகுதிகள் சினிமா தயாரிப்பாளர்களை அவதூறாக சித்தரித்திருப்பதாகக் கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர்கள் பலரும் புகார் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ‘ரெட்’ கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இதற்கு வாட்ஸப் வாய்ஸ் மெஸேஜ் ஒன்றின் மூலம் அறிக்கை விடுத்துள்ளார்.
    அதில், ”அனைத்துத் தயாரிப்பாளர் நண்பர்களுக்கும் வணக்கம். அனைவரின் கருத்துகளும் கேட்டேன்.அனைத்துத் தயாரிப்பாளர்களின் கருத்
    துகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் 15, 20 வருடங்கள் துணை இயக்குநராக பணிபுரிந்து போராடி சினிமாவில் வாய்ப்புப் பெற்ற கஷ்டத்தைக் கூட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படவில்லை. வந்தார் ஆறே மாதங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சி.விகுமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்.
    இப்போதும் நல்ல படமாக ஒரு விருதுக்குரிய படமாக , மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்தை வைத்து, சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை(இறைவி) முடித்துள்ளார். இதற்கு முந்தையப் படத்தில்(ஜிகர்தண்டா) கதிரேசன் சார் என்ன அவஸ்தை பட்டாரோ அதைவிட இரண்டு மடங்கு அவஸ்தை இந்தப் படத்தில் சி.வி.குமாருக்கு இருந்திருக்கிறது.

    அதற்காக பட்ட கடனையும், பிரச்னைகளையும் தாங்கிக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்யவேண்டியக் கட்டாயத்தில் சி.வி.குமார் இருந்திருக்கிறார். அப்படியிருக்கும் சூழ்நிலையில், ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் கடனாக இருந்தால் கூட அத்துடன் முடிந்தது. அவர் மீண்டும் மதுரைக்கு தான் கிளம்ப வேண்டும். ஏதோ சின்னப் படங்கள் தயாரித்து தொடர்ந்து ஜெயித்து வருகிறார். ஏனெனில் அவர் பட்ஜெட்டே ஒன்றிரண்டு கோடி தான். அவருக்கு பதிமூன்றரைக் கோடி பட்ஜெட் அளவிற்கு இந்தப் படத்தின் பட்ஜெட்டைக் கொண்டுவந்து நிறுத்தியிருகிறார் சுப்புராஜ். சொன்ன பட்ஜெட் வேறு.

    இத்தனை பிரச்னைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தைப் பற்றி தவறாக ஏதோ ஒரு விஷயம் ரிலீஸுக்கு முன்பு வந்திருந்தால் அவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு சூழலில் படத்தைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்திருக்கிறார் சி.வி.குமார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும். சி.வி.குமாரின் வேதனை உங்கள் அனைவரையும் தாண்டிய வேதனை.

    அந்தப் படத்தை எப்படியேனும் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டிய இக்கட்டான சூழலில் தான் அவர் மாட்டியிருந்தாரேயன்றி இதைக் கண்டிக்காமல் இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. இதற்கு எல்லாரும் இணைந்து முடிவெடுப்போம். தயாரிப்பாளர்கள் எல்லாரும் இணைந்து எடுக்கும் முடிவில் உடன் நிற்போம் நன்றி’ என முடித்திருந்தார் ஞானவேல் ராஜா.

    இந்தப் பிரச்னைக் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பாபு கணேஷ் ஆடியோ மெஸேஜ் ஒன்றை வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார். அதில், “அப்படியெல்லாம் நினைத்தபடி தயாரிப்பாளர்கள் ரெட் கார்ட் கொடுக்க முடியாது. ஏனெனில் இதற்கெல்லாம் டெல்லியில் முறையான இயக்கம் இருக்கிறது. அதன்மூலம்தான் செய்ய முடியும். கார்த்திக் சுப்புராஜ் என்பவர் நல்ல இயக்குநர். அதை யாரும் மறுக்கவில்லை. அவர் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக அளவில் பட்ஜெட் ஆகியிருப்பது ஒன்றுதான் அவர்மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு தொழிலில் ஒரு பட்ஜெட் சொல்லி, அதை மீறி செலவாகி நஷ்டம் வரும்போது அதற்கு இயக்குநரே பொறுப்பு என்று ஒரு ஷரத்து அக்ரிமென்டில் இருக்கும். இதில் அந்த ஷரத்து இருக்கிறதா என்றே நமக்கெல்லாம் தெரியவில்லை. ஒரு குறும்பட இயக்குநராக இருந்து தற்போது ஒரு சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷம்.

    முன்பு வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்திலும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நஷ்டம் என பிரச்னை வந்திருக்கிறது. இப்போது ‘இறைவி’ படத்திலும் அதே பிரச்னைதான் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படமெடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டமடைகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நாமறிந்ததே. இதுதான் இப்போதைய பிரச்னை. அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம். உண்மை நிலவரம் வேண்டுமானால் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர் சிவா என பலரும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள். அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகள் வேண்டாம். கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் என்று எல்லாரும் நல்லாருக்கணும்” என ’ரெட் கார்ட்’ வதந்திகளுக்கு அந்த ஆடியோவில் கருத்து கூறியுள்ளார் பாபு கணேஷ்.
    இந்த வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முடிவே இல்லையா!
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #64
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    http://movieboxofficecollection.com

    Iraivi Box Office Collection for 1st Weekend i.e. Total 3 Days Income from 1st day to 3rd day concludes with good opening box office verdict in Chennai. Even 4th day profit stays decent as per early estimates.Iraivi Box Office Collection: 1st Weekend, Total 3 Days Income, Day 4

    The movie released on 3rd June 2016 completes 3 days at cinema counters. Made under the direction of Karthik Subbaraj, Vijay Sethupathi & S. J. Surya starrer movie opens on a good note in Chennai city.

    Iraivi total 1st weekend box office collection mints Rs. 78,47,498 from all over 204 screen counts. [1st, 2nd Day and 3rd day Income]

    Iraivi 4th day collection as per early estimates mints a profit of Rs 11 lakhs approx. in Chennai.

    Therefore, this Tamil “Iraivi” total 4 days income stands at Rs 79,47,498 lakhs.

    Note: These are official income shared by Behind Woods website the profit are only of Chennai city.

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #65
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Sj Suryah Request to Fans - Iraivi Movie

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #66
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Iraivi Red card controversy: Karthik Subbaraj Vs producer council

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #67
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Iraivi: A film about women who bear everything and put up with anything - www.thenewsminute.com

    I get excited when someone makes a film on women, women’s rights, feminism etc. After all, in most films, the only thing we ever get to know about the heroine is that she’s beautiful and has a heart just like the hero’s mother. I devoured Pizza and slurped up Jigarthanda, so I was sure that Iraivi would be a good watch. But I came away feeling disappointed. And bored. I’m yet to decide which of the two I felt more.

    Iraivi is about three men and the women in their lives. There’s Arul (SJ Surya), a director who has made a film that’s stuck in the cans because he had a tiff with the producer. Arul delivers lectures on films, how film-makers should behave, the greatness of Ilayaraja’s music and so on whenever he gets drunk. Which is all the time.

    There’s Arul’s brother, Jagan (Bobby Simha), who is a college student and part-time thug. Jagan hits people on the head, asks questions about Tamil epics to his professors and is generally a do-no-gooder. There’s Michael (Vijay Sethupathi), who is a full-time thug. Michael’s job is to be angry with anyone who makes Arul angry. So to sum up, we have three men who are very angry and not too bright.

    Arul is married to Yazhini (Kamalini Mukherjee), who works in an IT company and keeps threatening to leave him for his alcoholism. Michael is in a casual sex relationship with Malar (Pooja Devariya), an artist, but he ends up marrying Ponni (Anjali) because Malar doesn’t want to marry him. And oh, I almost forgot, there’s Arul and Jagan’s mother (Vadivukkarassi) who plays a coma patient for the entire film barring her opening scene.

    This galaxy of characters is connected through the friendship that the three men share. The men do (moronic) things that create a ripple effect. The women are engulfed by the waves. The women wait for things to get better. The men don’t oblige. This goes on ad infinitum. The women in Iraivi may slap their men once in a while when they lose their cool (they are also slapped in return – it’s all about equality) but they are incapable of exercising choice. They are the sort who put up with any amount of bullshit. They can best be described by what Arul says towards the end, ‘Woman: she who bears everything and puts up with anything.’

    Except, this is a horrid generalization that has done women no favours. In real life, now more than ever before, women across social classes are exercising choice, refusing to obey patriarchal social norms, and displaying their unwillingness to put up with anything and everything. And ironically, it is the idea that a woman is she who puts up with it all that’s thrown at her when she rebels.
    The bride who cancels the wedding because the groom demanded dowry, the rape survivor who refuses the judge’s offer that she marry her rapist, the pregnant wife who walks out of the marriage because the in-laws want a sex-selective abortion, the minor girl who is steadfast in her determination to go to school and not get married, the intern who sues her powerful boss for making sexual advances…we see none of this agency in the female characters who appear in Iraivi. They are like the stone goddesses who become pawns in the games that the men play in the film though they may shriek now and then.

    The problem is, Karthik Subbaraj has made a film that he thinks has revolutionary ideas but his notions of women’s liberation is still entrenched in patriarchal thought. Take, for instance, Malar – the artist who doesn’t want to marry Michael but just have sex with him. It is, perhaps, the first time in Tamil cinema that a woman has said ‘I just want to fuck’ but then, the narrative burdens her with a sob-story to make this seem acceptable. Malar is a widow who is still mentally devoted to her husband. She sleeps with another man for her physical needs but cannot marry him because she doesn’t want marriage again. She’s mentally Kannagi even if she may not be so physically. In OK Kanmani, Mani Ratnam gave Nithya Menen’s character a similar sob-story to justify why she wants to be in a live- in – her parents’ traumatic divorce.

    In real life, women get into casual sex relationships, hook-ups, and live-ins for exactly the same reasons as men: they don’t want the commitment, they don’t believe in the institution of marriage, they are taking it slow. This happens all over India, including Tamil Nadu. Why give unnecessary ‘emotional’ justifications for it? Why not show it the way it is? Plenty of characters in Indian films have already done so – Queen, Piku, Margarita with a Straw, Masaan, Phobia to mention a few. And to top it all, Malar weeps secretly when she breaks up with Michael for ‘his own good’! Sigh.Films like Marupadiyum (1993) and Sati Leelavathi (1995) have already questioned the importance that society places exclusively on women’s chastity, so it’s quite disappointing that more than two decades later, we’re still hesitant to push the envelope when it comes to women exploring love or sex independent of the institution of marriage.

    But my greatest problem with the film lies in how neatly it cleaves the masculine and the feminine. The men are angry, violent, insensitive, and incapable of change. We’re expected to understand why they are like this and even sympathize with it. The women are like characters from Waiting for Godot, hoping that someday, things will get better without taking charge of their own lives. This is a very simplistic depiction and does injustice to both genders. It is also unreal though we may be tricked into believing that it is completely realistic.

    Towards the end, Subbaraj does suggest that women ought to stop depending on men for their happiness but sadly, even then, none of his female characters MAKE that choice actively. The men do it on their behalf. More than anything else, I got bored despite the commendable performances of the cast. There are too many characters, too many stories, too much rain and too much alcohol. I felt close to falling into a coma myself. Sorry, Subbaraj, this goddess wasn’t pleased.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #68
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Ritika Singh comment on Iraivi

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #69
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Todays AD

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #70
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Kumudam Weekly : NANDRU
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 7 of 11 FirstFirst ... 56789 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •