Page 60 of 400 FirstFirst ... 1050585960616270110160 ... LastLast
Results 591 to 600 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #591
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #592
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுமதி பெற்ற வெகுமதி:-
    சரித்திர நாவலசிரியர் சாண்டில்யனின் கதை ஒன்றில் நடிக்க தலைவர் விருப்பம் இருந்தது. இதை தயாரிக்க ஜி.என். வேலுமணியும் விரும்பினார் .ஆகவே இருவரும் இது சம்பந்தமாக சாண்டில்யனை அழைத்துப் பேசி மதுமதி என்ற நாவலை படமாக்க விரும்பி அட்வான்ஸ் தொகையாக ரூ10,000/- கொடுத்து கதையின் உரிமையைப் பெற்றார்கள். கதையில் 3 தலைமுறை சம்பவங்கள் வரவே கதாநாயகனுக்கு (தலைவருக்கு) முக்கியத்துவம் குறையும் என்று g.n.வேலுமணிக்கு தோன்றியது தலைவருக்கும் செய்தி தெரிந்தது . சாண்டில்யனுக்கும் செய்தி எட்டியது. இதன் தொடர்பாக எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் எழுத்தாளர் சாண்டில்யன் எனது கதை படமாகவில்லை என்றால் நான் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவது தான் நியாயம் இந்நாருங்கள் எனக் கொடுக்க. அதை மறுத்த தலைவர் ஓரு எழுத்தாளர்க்கு கொடுத்த பணத்தை திருப்பி வாங்கும் பழக்கம் என்னிடமில்லை இதே போல் தான் ஜி.என்.வேலுமணி யின் உள்ளம் அமைந்திருக்கிறது
    தயவுசெய்து உங்கள் எழுத்துக்கு எங்கள் காணிக்கையாக இருக்கட்டும் அந்தத் தொகை எனக் கூறி வாங்க மறுத்து விட்டார் எம் .ஜி.ஆர். இதன் பிறகு எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். நேரில் கண்ட சொந்த அனுபவம் இது. என்று சொல்லி பூரித்துப் போனார்
    இதைவிடவா வேண்டும் நமது தெய்வம் சரித்திர புருஷர்.

  4. #593
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    தலைவர் : என்ன அம்மு என்னப் போலவே ஜெயிச்சிட்ட போல நம் மக்கள் எப்போதுமே நம்ம பக்கம் அது தான் நீருபணமாயிருக்கு இந்த தேர்தல் ல அப்படித்தானே!
    தலைவி : ஆமாம் வாத்தியாரே இந்த தேர்தலில் நான் என் மக்கள் முன்னால் வச்ச கோரிக்கையே "மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான்"
    தலைவர் : நீ ஓண்ணும் கவலைப் படாதே 98 M.L.A. இருக்காங்க என்று வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் தேவை தான் ஆனால் வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தான் தேவை. ஓ.கே
    தலைவி: "எல்லாம் எம்.ஜி.ஆர் மயம்" னு நான் வாழ்ந்திட்டுருக்கேன் . எனக்கு பயமா ? இரட்டை இலை இருக்கு நீங்க இருக்கீங்க அப்புறமென்ன!
    இருவருமே சிரிக்கிறார்கள் காட்சி முடிகிறது.
    ** சுபம் **


    courtesy whats up

  5. #594
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - facebook

  6. #595
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - fb

  7. #596
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதுவைத் தேர்தல்
    1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச் சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.

    அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து த்ததமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன். திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

    பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களிலும், பாண்டி நாடாளுமன்றத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுதென்றும், கோவை பாராளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் ஸ்தாபன காங்கிரஸ் போட்டியிடுவதென்றும் முடிவு செய்தார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் அதுவரை இருந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி, கோவை பாராளுமன்றத் தொகுதி விஷயமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனியாகப் போட்டியிட்டது.

    அ.தி.மு.க.வும் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்டன. அதன்படி பாண்டி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகள் கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதி ஆகியவை அ.தி.மு.க.வுக்கும்; இந்திய கம்யூனிஸட் கட்சிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் ஏழையும் விட்டுக்கொடுப்பதென்றும்; மற்றொரு கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிக்குப் பாண்டி சட்டமன்றத் தொகுதி ஒன்றை விட்டுக் கொடுப்பதென்றும் முடிவாயிற்று!.

    தி.மு.க. பாண்டி சட்டமன்றத் தொகுதிகள் 20லும், கோவை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டது. புதுவை சட்டமன்றத் தொகுதிகள் ஐந்திலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டது.

    தொண்டர்களே துணை!
    திண்டுக்கல் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் அண்ண தி.மு.க. கூட்டணி மத்திய, மாநில ஆளுங்கட்சிகளையும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டது. புதிதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. திண்டுக்கல்லில் தனித்தனியாகப் போட்டியிட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து ஒரே அணியாய் போட்டியிட்டன. பிரதமர் இந்திரா காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் பாண்டியிலும், காரைக்கால் மற்றும் கோவையிலும் ஒரே மேடையில் சேர்ந்து பேசினார்கள். மத்திய,மாநில அமைச்சர்கள் பெருமளவில் முகாமிட்டுப் பிராசாரமும் செய்தனர்.

    ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள் ஏழைத் தொண்டர்களின் துணையையும், மக்களின் ஆதவையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்தார். பாண்டியிலும் கோவையிலும் ஒரு தொகுதியைக்கூட விட்டு விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

    1974 – ஆம் ஆண்டு பிப்ரவரி 24 – ஆம் தேதியன்று புதுவையிலும் கோவையிலும் வாக்குப் பதிவு நடந்தது. 26 ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    கோவை பாராளுமன்றத் தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்வதி கிருஷ்ணனும், கோவை மேற்குச் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். அரங்கநாயகமும் வெற்றி பெற்றனர்.

    புதுவை பாராளுமன்றத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாலாபழனூர் வெற்றிப் பெற்றார். புதுவை சட்ட மன்றத் தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 12 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியிலும் வெற்றி பெற்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் காமிசெட்டி ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இரு காங்கிரஸ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டபோதிலும், அவ்விரண்டும் சேர்ந்து 12 தொகுதிகளில்தான் வெற்றிப்பெற்றன. அதற்கு முன்னர் புதுவைச் சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க.வும் (2 ஆவது இடம்) மார்க்சிஸ்ட் கட்சியும் (முதலிடம்) சேர்ந்து மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

    புரட்சித்தலைவரின் அண்ணா தி.மு.க. தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு புதுவையில் ஆட்சியில் அமர்ந்து, திண்டுக்கல் தேர்தலில் 6 மாதக் குழந்தையாக இருந்த அ.தி.மு.க. புதுவைத் தேர்லின்போது ஒன்றரை வயதுக் குழந்தையாகத்தான் இருந்தது. என்றாலும், மாநில ஆட்சியைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

    கவர்ச்சியா; அனுதாபமா, அரசியலா?
    திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி வெறும் சினிமாக் கவர்ச்சியாலும், எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் அனுதாபத்தாலும் கிட்டிய தற்காலிக வெற்றி என்று அரசியல் வித்தகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் புதுவை, கோவைத் தேர்தல் வெற்றிகளுக்கு என்ன காரணம் கூறுவது என்று அறியாமல் திகைத்தனர்.

    திண்டுக்கல் தேர்தல் வெற்றி, புதுவைத் தேர்தலுக்குக் கட்டியம் கூறிய முன்னோடி வெற்றியாகும். புதுவைத் தேர்தல் வெற்றி, தமிழக்த்தலி புரட்சித்தலைவர் படைக்கவிருக்கும் புதிய சரித்திரச் சாதனைக்குக்கட்டியம் கூறும் வெற்றியாகும் என்பதை அப்பொழுதும் பலர் புரிந்து கொள்ளவில்லை!

    1974 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று புதுவையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அரசு முதன் முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. புரட்சித்தலைவரின் ஆசியோடு எஸ்.ராமசாமி புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார்!

    நாடும் ஏடும் பாராட்டின!
    புதவை – கோவைத் தேர்தல்களில் புரட்சித்தலைவரின் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிகளைத் தமிழக மக்கள் மட்டுமன்றி அகில இந்திய மக்களும் வியந்து பாராட்டினார்கள். அகில இந்தியப் பத்திரிகைகளெல்லாம் புரட்சித்தலைவரின் அரசியல் சாதனையைப் போட்டியிட்டுக் கொண்டு பாராட்டின. அவற்றுள் சில வருமாறு!

    தற்காலிக வெற்றியல்ல!
    ”திண்டுக்கல்லில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி, ஏதோ எதிர்பாராத விதமாய்ப் பெற்ற தற்காலிக வெற்றி அல்ல என்பது புதுவையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது.

    இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான எம்.ஜி.ஆர். தாம் ஒரு மகத்தான மக்கள் செல்வாக்குப் பெற தலைவர் என்பதைத் தம் கட்சிக்குப்பெருமளவில் வாக்குகளைத் திரட்டியதன்மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார்!”

    – இந்து நாளேடு

    சாதாரணமாக எண்ணிவிட முடியாது!
    ”தேர்தலுக்கு முன்பு அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வலுவான ஓர் அரசியல் சக்தியாக்க் கருதப்படவில்லை, ஆனால், இனிமேல் அண்ணா தி.மு.கழகத்தைப் பற்றி யாரும் அவ்வளவு சாதாரணமாக எண்ணிவிட முடியாது!”

    – இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு

    பெருமிதப்படும் வெற்றி
    ”இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் பெருமிதம் கொள்ளலாம். மக்கள் ஆதரவு தனக்கே என்று அக்கட்சி கூறிக் கொண்டு வந்த கருத்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது என அது பெருமைப்படலாம். – இது அனைவரின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகும் என்பதில் சந்தேகம் இல்லை!”

    – ‘மெயில்’ நாளேடு

    உறுதிப்படுத்துகிறது!
    ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர்த் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி தெளிவுபடுத்தியது.

    இப்பொழுது புதுவை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வியடைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது!”

    – டைம்ஸ் ஆப் இந்தியா

    தேசிய விளைவுகள்
    ”புதுவை மாநிலத் தேர்தல் முடிவு பிராந்திய ரீதியில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது என்பதைத்தான் கோவை நாடாளுமன்றத் தேர்தலும் உறுதிப் படுத்துகின்றது!”

    – இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு

    மகத்தான வெற்றி
    ”புதுவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணு பெற்றுள்ள வெற்றி உண்மையிலேயே மகத்தானதாகும். மக்கள் சக்தி எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை ஆளுங்கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துவது ஆகும்!”

    -ஸ்டேட்ஸ்மேன்’ நாளேடு

    நல்ல சக்தி – புதிய தொடக்கம்!
    ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தி.மு.க. வின் இறுதிக கால கட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய தொரு தொடக்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நல்லதோர்அரசியல் சக்தியாகத் திகழும் என்பது இதிலிருந்து தெளிவாகப்புரிகிறது!”

    – ‘பேட்ரியட்’ நாளேடு

    நிலைத்து நிற்கும்!
    அண்ணா திரா விட முன்னேற்றக்கழகம் ஒருமாபெரும் அரசியல் கட்சி, தமிழகத்தில் சக்தி மிக்க அரசியல் கட்சி என்பதை அனைவரும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

    அண்ணா தி.மு.க. அடைந்துள்ள முன்னேற்றம், கண்டுள்ள விரைவான வளர்ச்சி, அது ஈட்டியுள்ள வெற்றிகள் ஆகியனவெல்லாம் ஏதோ திடீரென்று கிட்டியவை என்று இனியும் கருத முடியாது. அதன் நிலையான தன்மையைப் புறக்கணித்து விடவும் முடியாது!”

    -டெக்கான் ஹெரால்டு’ நாளேடு

    புதுவை காட்டும் உண்மை!
    ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்தில் தி.மு.க.வின் மீதுள்ள லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்களைக்கூறிப் பிரச்சாரம் செய்தது. அண்ணா தி.மு.க. மக்களிடம் பிடிப்பும் அபிமானமும் கொண்ட கட்சியாக விளங்குகிறது.

    புதுவை மாநிலத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. வின் மீது மக்கள் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதே புதுவை தேர்தலை முடிவுகள் காட்டும் உண்மையாகும்.!”

    – நேஷனல் ஹெரால்ட்’ நாளேடு

    இவ்வாறு சென்னை, பெங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ முதலிய நகரங்களிலிருந்து வெளிவரும் பெரிய தேசிய நாளேடுகளெல்லாம் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆரின் சாதனையை பாராட்டி வாழ்த்தின. ஆனால் அவரோ அப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். அடுத்த பணிகளிலேயே கவனத்தைச் செலுத்தினார்.


    courtesy net

  8. #597
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் போராட்டம்
    1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

    அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

    தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

    அதிக வாக்கு யாரால் கிட்டியது?
    அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

    ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

    தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

    தலைவரின் தவறான கணிப்பு!
    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

    ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்
    இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜ.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

    நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

    இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

    அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருசணாநிதி அறிவித்தார்.

    மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

    அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!
    இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

    ”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

    கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப்பணியாய் இருக்கும்.

    அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

    கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?
    எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

    உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் பலைவருக்குக் கட்டுபட்டவர்கள் தாம. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

    தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

    ”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

    அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

    ”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

    அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

    கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

    இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

    புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

    அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

    அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

    நெஞ்சில் எழுந்த நினைவலைகள்
    சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

    தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

    அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

    அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

    முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

    அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

    சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;

    இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது
    கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

    நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அருமை நண்பர்கள் எங்கே?
    வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

    என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

    ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

    தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடுகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
    நானகாம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

    அலை கடல் எழுந்ததோ?
    ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும் பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

    எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

    காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம்,கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

    ”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

    சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

    ”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

    உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

    ”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

    செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

    புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

    புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

    அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!
    அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

    ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

    ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

    அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

    எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

    எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

    தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

    ‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

    நாங்கள் உங்கள் பின் இருப்போம்!
    அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

    அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

    அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

    கருத்தறியும் சுற்றுப்பயணம்
    எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

    ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

    அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

    பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

    அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

    மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

    அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.

    காஞ்சியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்
    நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

    அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

    மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சம்மாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சித்தலைவர்.

    உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள்.

    காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கறார்கள் என்படை அறந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

    காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.

    காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.

    இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேளவியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயந்தான்.

    மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்.

    எம்.ஜி.ஆர் இல்லாமல் ஒரு கட்சியா?
    இதற்கிடையில் 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் தி.மு.க. செயற்குழு கூடியது. தலைவர் கருணாநிதியும், பொதுச்செயலாளர் நாவலரும் எம்.ஜி. ஆர். விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. அக்டோபர் 14 ஆம் தேதியன்று கூடிய தி.மு.க. பொதுக்கழு எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து நிரந்தரமாய் நீக்கிவிடுவது என்னும் தலைமையின் முடிவை ஆதரித்தது.

    எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்!

    திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கிய பெரியார் தலையிட்டு இரு தரப்பார்க்கும் இடையில் சமரசம் செய்து வைக்க முயன்றார். ஆனால், அவர் முயற்சி வெற்றி பெறவில்லை.

    எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாகவே நீக்கி விட்டார்கள் என்னும் செய்தி வெளிவந்ததும், ஏற்கெனவே கொதிப்புற்றிருந்த தொண்டர்கள் மேலும் ஆவேசத்தோடு போராடத்தொடங்கினார்கள். எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மதுரை மாநகர மக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். தி.மு.கழக்க் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. கழகச் சார்பு மன்றங்கள் கலைக்கப்பட்டன. தலைவர்கள் சிலரின் படங்கள் கொளுத்தப்பபட்டன. தி.மு.கழக்க் கொடிகள் தமிழக அரசின் செய்திப் படங்கள் திரையிடாமல் தடுக்கப்பட்டன.

    மேற்குறித்த போராட்டம் அக்டோபர் 15- ஆம் தேதியன்று நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை, சேலம் முதலிய நகரங்களுக்கும் பரவியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். பஸ்கள் ஓடவில்லை, ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தன.

    எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியதைக் கேள்விப் பட்டு இளைஞர்கள் பலர் தீக்குளித்தனர்.!

    அப்படித் தீக்குளித்து மாண்ட இளைஞர்களுள் ஒருவர், இஸ்மாயில்!

    அவர் அக்டோபர் 16 ஆம் தேதியன்று காலையில் ஒரு டின் மண்ணெண்ணெயைத் தம் உடலில் ஊற்றினார். அடுத்து அவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை அங்கிருந்தோர் அனுமானிக்கும் முன்பே ஒரு தீக்குச்சியைக் கிழித்து தம் மீது வைத்தார்!

    ”எம்.ஜி.ஆர். வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க!” என்னும் முழக்கம் அவரிடமிருந்து எழுந்தது.

    மற்றவர்கள் அவரை நெருங்கிச் சென்று தடுப்பதற்குள் தீ நாக்குகள் ஆளுயரத்திற்கு எழுந்தன. உட்கார்ந்த நிலையிலேயே இஸ்மாயில் தீக்கோளமானார்.

    அதைக்கண்டு சுற்றி நின்ற மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    மேற்சொன்ன தீக்குளிப்புச் செய்தி மறுநாள் தமிழகம் முழுவதும் பரவியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வந்தார்.

    தமிழகம் முழுவதிலும் போலீஸாரின் அடக்கு முறைக்கு ஆளாகும் தம் தொண்டர்களையும், மன்ற மறவர்களையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் அநாதைகளாகி விடக் கூடாது. அதற்காக புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த முடிவு.


    courtesy net

  9. #598
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு

    ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

    ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.


    courtesy junior vikatan

  10. #599
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #600
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •