Page 288 of 400 FirstFirst ... 188238278286287288289290298338388 ... LastLast
Results 2,871 to 2,880 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2871
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2872
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2873
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2874
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2875
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like





    விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடரும் .......!!!!

  7. #2876
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    26.10.1963
    இன்று மக்கள் திலகத்தின் ''காஞ்சித்தலைவன் '' 54 வது ஆண்டு தொடக்க தினம்

    27.10.1962

    மக்கள் திலகத்தின் ;;விக்கிரமாதித்தன் '' இன்று 54 ஆண்டுகள் நிறைவு தினம் .
    இரண்டு படங்களும் 1962 மற்றும் 1963 தீபாவளி தினத்தில் வெளிவந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

  8. #2877
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    The hindu tamil .

    திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: கி.வீரமணி, தா.பாண்டியன் பங்கேற்பு

    திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. விழாவில் ‘இதய ஒலி’ நூலாசிரியரும், தொழிலதிபருமான டாக்டர் பழநி ஜி.பெரியசாமி கவுரவிக்கப்பட்டார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன். படம்: ம.பிரபு
    திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. விழாவில் ‘இதய ஒலி’ நூலாசிரியரும், தொழிலதிபருமான டாக்டர் பழநி ஜி.பெரியசாமி கவுரவிக்கப்பட்டார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன். படம்: ம.பிரபு
    திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. ‘தந்தை பெரியாரும், எம்ஜிஆரும்’ என்ற நூலை வெளியிட்டு தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

    எம்ஜிஆருக்கு திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா நடத்துவதா என பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர். பெரியார் என்ற பள்ளியில் படித்து தேர்ந்தவர்.

    இதே பெரியார் திடலில் பெரி யார் விழாவில் பேசிய எம்ஜிஆர் தனது வளர்ச்சியில் பெரியாரின் பங்களிப்பை விவரித்தார். கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பெரியாரின் குடியரசு இதழை படிக்கச் சொன்னதையும், அது தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பெருமையாகச் சொன்னார். அதனால் அந்த உரையை மீண்டும் நூலாக வெளியிட்டுள்ளோம்.

    சமூக நீதியைக் காப்பாற்றியவர் எம்ஜிஆர். அவரது ஆட்சியில் இடஒதுக்கீடு பெற ரூ.9 ஆயிரம் வருமான உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது. எங்கள் கோரிக்கையை ஏற்று, அதை ரத்து செய்ததுடன், 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். இது தற்போது 69 சதவீதமாக உள்ளது. இதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் பாராட்டு விழா நடத்தினோம். சமூக நீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவுக்கு பட்டம் வழங்கினோம்.

    ஆனால், இப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எம்ஜிஆரை இந்து என்றும், இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றியவர், பரப்பியவர் என ஆர்எஸ்எஸ் பத்திரிகை எழுதியுள்ளது.

    திருவள்ளுவர், ராஜேந்திர சோழன் மூலம் இங்கே வளர நினைத்து தோல்வி அடைந்தவர்கள் எம்ஜிஆர் மூலம் வளர நினைக்கிறார்கள். எம்ஜிஆரை அபகரிக்கப் பார்க்கிறார்கள். இதை முறியடிப்பதற்காகவே திராவிடர் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற உதவிய தொழிலதிபர் பழநி ஜி.பெரியசாமி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  9. #2878
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டேவின் நினைவுகள்

    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளி னில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தவர் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 32 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு நடந்தது என்ன என்பது குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்ட நினைவுகள்:

    1984 அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவில் எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜானகி, பாதுகாவலர் ஆறுமுகம் ஆகியோர் அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அக்டோபர் 6-ம் தேதி நான், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சில அமைச் சர்கள் மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். எங்களிடம் சகஜமாகப் பேசி னார். அப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வந்தது. சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி னார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 13-ம் தேதி நள்ளிரவில் பக்கவாதம் ஏற்பட்டு அவர் நினைவிழந்தார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் மூர்த்தி எனக்கு தகவல் தெரிவிக்க, நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

    நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெகந்நாதனை வரவழைத்தேன். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோது எம்.ஜி.ஆருக்கு ரத்தத்தில் யூரியாவின் அளவு 88 மி.கி. ஆகவும், கிரியாட்டின் 8.2 மி.கி. ஆகவும் இருந்தது. இதனால் அவருக்கு ‘பெரிடோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட ரத்த இழப்பால் பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் மருத்துவர்களிடம் ஏற்பட்டது. அதனால் பெரிடோனியல் டயாலிசிஸ் செய்வது நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் எலய் ப்ரீட்மேன், டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக், டயாலிசிஸ் நிபுணர் டாக்டர் பாத ராவ், டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் ஆகியோரை வரவழைத்தோம். இவர்களை அழைத்துவர தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி உதவி செய்தார். இவர்களை விமானத்தில் அழைத்துவர பிரதமர் இந்திரா காந்தி தேவையான உதவிகளை செய்து வந்தார். அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் புதிய தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர்.

    17-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து நலம் விசா ரித்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட் டும் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்படாததால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது. எனவே ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கானுவை வரவழைத்தோம்.

    அமெரிக்காவில் இருந்த அவரை சிங்கப்பூர் வழியாக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சென்னைக்கு வரவழைத்தோம். இதற்கு இந்திரா காந்தியின் உத்தரவின்பேரில் அவரது தனிச்செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் உதவிகளை செய்தார். கிளிசரால் என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தும் தொழில்நுட்பம் டாக்டர் கானுவிடம் இருந்தது. வரும்போதே 10 டியூப் கிளிசராலை அவர் கொண்டுவந்தார். அதன் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

    அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவ மையத்துக்கு சிறப்பு விமானத்தில் எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லப்பட்டார். நானும் உடன் சென்றேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவாதம் குணமானது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். முழுமையாக குணமடைந்தார். 1985 பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை திரும்பினார்.

    இவ்வாறு டாக்டர் எச்.வி.ஹண்டே கூறினார்.
    Courtesy - the hindu tamil

  10. #2879
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர். – 2
    -துரை.கருணா

    திமுகவின் வசீகர சக்தியாகவும், அண்ணாவின் இதயக்கனியாகவும் எம்.ஜி.ஆர். தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த அதே 1963-ஆம் ஆண்டு திரையுலக வரலாற்றிலும் எம்.ஜி.ஆருக்கு மிக முக்கிய ஆண்டாகத் திகழ்ந்தது.

    அந்த ஒரே ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ’பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலையரசி, பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப்பின் பாசம், காஞ்சித்தலைவன், பரிசு’ ஆகிய ஒன்பது படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

    தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி எம்.ஜி.ஆர். சாதித்த சாதனைகள் பலப்பல உண்டு.

    இன்று ஒரு தமிழ்த்திரைப்படம் வெளியாகி மகத்தான 10-ஆவது நாள் என சுவரொட்டி ஒட்டும் நிலை உள்ளது. அடுத்த சுவரொட்டி ஒட்டுவதற்கு முன் அந்தப் படம் தியேட்டரை விட்டே சென்று விடும் அவல நிலைமையையும் காண்கிறோம். அத்திப்பூத்தாற்போல, ஏதோ ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்து விடுகிறது.

    ஆனால், எம்.ஜி.ஆரின் பல படங்கள் பல்வேறு ஊர்களில் நூறு நாட்களை கடந்தும், ஒரு சில படங்கள் வெள்ளிவிழா, 175 நாட்கள் தாண்டியும் ஓடி சாதனை படைத்துள்ளன.

  11. #2880
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைக்கும் எம்.ஜி.ஆர். என்றால் ஒரு மாஸ் தான். அவர் பெயர் சொல்லியே ஆட்சி கட்டிலில் இன்றும் அமர முடிகிறது. சினிமாவில், சின்ன வேடங்களில் ஆரம்பித்து பெரிய போராட்டத்திற்குப் பின் சினிமாவின் அசைக்கமுடியாத சக்தியாக உயர்ந்து, அரசியலி வளர்ந்து முதலமைச்சர் ஆனவர் . இவர் சினிமாவில் இருக்கும்போது சரி,முழுநேர அரசியல்வாதியான பின்னும் இவரை புகழ்ந்து, பாடல்கள் எழுதப்பட்டன.
    Courtesy - net

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •