Page 246 of 400 FirstFirst ... 146196236244245246247248256296346 ... LastLast
Results 2,451 to 2,460 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2451
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    எளிமை:::

    எம்ஜிஆர் இருக்கிறார்(21):::

    தலைவர் எப்போதும் எளிமையையே விரும்புபவர். தாேட்டத்தில் லிஃப்டே அவர் உடல்நலம் சீர்கெட்ட பிறகே பாெருத்த அனுமதித்தார்.

    இரவில் பழைய சாேறு உண்பதும், தரையில் படுத்து உறங்குவதுமே அவரது விருப்பமாக இருந்தது. 1964,65களில் ஓயாதபடப்பிடிப்பின் காரணத்தால் ஒரு வாரம் மஞ்சள் காமாலை நாேயால் தாேட்டத்தில் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது.

    தலைவரின் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்யும் ஸ்ரீசந்த் என்னும் மார்வாடி பைனான்சியரும், இயக்குநர் தாதாமிராசியும் தலைவரை காண தாேட்டம் வந்தவர்கள், படுக்கை அறையில் சாதாரண கட்டிலில் வெறும் பாயை விரித்து படுத்திருந்த எம்ஜிஆரை பார்த்து அசந்து பாேயினர். ஆற்றமாட்டாதவராக ஸ்ரீசந்த் "மிஸ்டர் எம்ஜிஆர், நீங்கள் ஹம்சதூளிகா மஞ்சத்திலே உறங்க வேண்டியவர். எங்கள் மார்வாடி இனத்தில் ஏழையின் படுக்கை அறைக்கூட மெத்தை, திண்டுகளோடே இருக்கும். உடனடியாக உங்கள் படுக்கை அறையை மாற்ற வேண்டும்" என்றார்.

    எம்ஜிஆர் சிரித்தவாறே "அய்யா, நான் உறங்குவதே நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே. படுத்ததும் உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லை என்றால்தானே சொகுசு தேவை?" என்றார்.

    அதைப்பாேலவே தலைவர் நாடாேடிமன்னன் காலத்திலிருந்து முதல்அமைச்சர் ஆகி மரணிக்கும்வரை இந்திய அம்பாசிடர் காரிலேயே பயணித்தார். 84யில் உடல்நலம் கெட்டதும் அமைச்சர்கள் வெளிநாட்டு சொகுசுகார் வாங்கிக்காெள்ள சொல்லி தலைவரை நச்சரித்தார்கள்.

    அவர்களுக்கு தலைவர் சாென்னார், "அமெரிக்க தூதர் நம்மை பார்க்க வரும் போது அவர்கள் நாட்டு சாெகுசு காரில் வருவார். நமதுநாட்டு தூதர்கள் அயல்நாடுகளில், நமது நாட்டு அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார்கள். முடிந்தவரை பதவியில் இருக்கும் நாம், நமது நாட்டு பாெருட்களையே பயன்படுத்த வேண்டும்" என்று சாெல்லி இறுதி வரை அம்பாசிடரையே பயன்படுத்தினார் அந்த ஏழை பங்காளன்.


    நன்றி - அரிமா எம். சந்திரசேகரன் அவர்கள் முகநூல் பக்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2452
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    மிகவும் சுருக்கில் நூறு தரமான பதிவுகளை போட்டுள்ள நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  4. #2453
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2454
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2455
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post


    மிகவும் சுருக்கில் நூறு தரமான பதிவுகளை போட்டுள்ள நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றி ஐயா.

  7. #2456
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    இன்று பன்முக கலைஞன் திரு. நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்..... நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ நபர்களில் மிகச் சிலரே முக்கியமானவர்களாக நம் இதயத்தில் இடம் பிடிப்பர்... அப்படி நான் சந்தித்த முக்கியமானவர்களில் மிக முக்கியமானவர் இந்த அற்புத கலைஞன்..... மிக முக்கியமானவர் - அற்புத கலைஞன். ஏன் என்கிறீர்களா......? தொடர்ந்து படியுங்கள்..... தெரியும்.......

    எம்.ஜி.ஆர். அண்ணனை பத்தி சொல்லனும்ணா .... இந்த புக்கை பேசாம ஸ்பெஷல் புக்கா போட்டுடுங்களேன்..... எம்.ஜி.ஆர். - நாகேஷ் சிறப்பிதழ் னு....

    கண்ணா ... அவரால தான் நான் இன்னக்கி இங்கே உக்காந்து உனக்கு பேட்டி குடுத்துட்டு இருக்கேன்....

    உனக்கு தெரியுமா..... நான் அந்த மனுஷன்கிட்டே எவ்ளோ அடி வாங்கி இருக்கேன்னு..... அவ்ளோ ப்ரியம் என் மேல.... அவருக்கு.... இப்போ சத்யராஜ் எப்படி நக்கலா பேசுறாரோ.... அப்படித்தான் நான் நார்மலாவே......

    தம் அடிக்காதேன்னு சொல்லுவாரு.... குடிக்காதேன்னு சொல்லுவாரு..... நான் ரெண்டையும் கேக்க மாட்டேன்.... செமத்தையா வாங்குவேன்.....

    ஆயிரத்தில் ஒருவன் பட ஷூட்டிங்ல கப்பல்ல ஒரு பைட் ஸீன்... நான் லாங் ஷாட் தானேனு நினச்சு கொஞ்சமா குடிச்சுட்டேன்.... அவரோட துள்ளலை தான் உனக்கே தெரியுமே.....அப்படி இப்படின்னு ஜம்ப் பண்ணி என் பக்கத்துல வந்துட்டார்..... வாடை அடிச்சு.... ஒரு மொற மொறச்சு ஷாட் ஓகே ஆனதும் ... அதுல ஹீரோயின் இருக்குறது போல ஒரு சின்ன காபின் வரும்ல அதுல கூட்டிட்டு போய் நல்லா நாலு அர உட்டாறு..... நான் கோபத்துல போயிட்டேன்.... நான் இல்லாத ஷாட்சா நாலு நாள் ஷூட் போச்சு.....

    அப்புறமா நான் போய் மன்னிப்பு கேட்டேன்......

    அன்பே வா படத்துல போன் பண்ணுவாரு எம்.ஜி.ஆர். அண்ணன் சிம்லாவுக்கு வந்தவுடனே... அவர்தான் முதலாளின்னு தெரியாம நான் ரொம்ப லோக்கலா பேசணும்.....

    எதார்த்தமா பேசுறேன்னு நான் டப்பிங் அப்போ .... முன்ன பின்ன போன் பேசி இருக்கியா ...? காட்டான்.... நு சொல்லிடுவேன்..... காட்சி யதார்த்தமா வரணும்னு நானா பேசின வசனம் அது..... அதை ரொம்பவே அப்ரிசிஏட் பண்ணினாரு....

    படம் வந்த உடனே அந்த ஸீனுக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோனு நான் ரொம்பவே பயந்தேன்.... அவரை போலவே அவரோட ரசிகர்களும் ரொம்பவே பரந்த மனசு காரங்க.... அதை கதையோட போக்கிலேயே ஜோக்காவே எடுத்துட்டாங்க..... இன்னைக்கி நான் உடல் ரீதியா நிறைய பிரச்சனைய சந்திக்கிறேன்..... அண்ணன் சொன்னது போல இருந்திருந்தா நான் ஆரோக்கியமா இருந்து இருப்பேன்.... இப்போ கவலைப்பட்டு ஒன்னும் ஆயிடபோரதில்லை .... ஆமா உனக்கு பழக்கம் இருக்கா.....என்றார்..... தம் அடிப்பது போல கையை வைத்து கண்ணையும் அடித்தபடி......???!!!

    தனது வீர பராக்கிரமங்களை மட்டுமே நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களுக்கு மத்தியில்..... தான் அடி வாங்கியதையும் - கெட்ட பழக்கம் உள்ளதையும் அதை நினைத்து கவலையும் படும் நாகேஷ்..... ஒரு முக்கியமான அற்புத கலைஞன் தானே.....???!!!


    நன்றி - மயில்ராஜ் முகநூல் பக்கம்

  8. #2457
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று உலக சுற்றுலா தினம்

    எல்லா உலகிலும் நின் அரசாட்சி
    என்றைக்கும் உனக்கே என் தலை தாழ்ச்சி




    நன்றி - சைலேஸ் பாசு அவர்கள் முகநூல் பக்கம்

  9. #2458
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித்தலைவரின் "ரிக்க்ஷாக்காரன்" இந்த வெள்ளி வெள்ளித்திரைக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தில் வருகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு தான் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பாரத் [ உண்மையில் இதன் பெயர் பரத், என்றால் முழுமையான அல்லது பூர்த்தி என்று பொருள்] வழங்கப்பட்டது.

    இதை சென்னையில் ஒரு உணவகத்தில் [ வூட்லன்ட்ஸ்என்று நினைவு] வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழா ஏற்பாடு உயர்திரு. "மதி ஒளி" ஷண்முகம் அவர்கள். இந்த நிகழ்ச்சியில் தலைவர் பேசியது அனைவருக்கும் தெரியும். இந்த ஒலிநாடாவின் உரிமை இன்றும் எனது இனிய நண்பர் [35 ஆண்டுகளாக] திரு சண்முகத்தின் மகன் "மதி ஒளி" ஹேமந்த் குமார் அவரிடம் தான் இருக்கிறது.

    அனைவரும் கேட்கவேண்டிய பேச்சு.

    மேலும், தலைவருக்கு பட்டம் கிடைத்தவுடன் சிலர் சில புரளிகளை கிளப்பி விட்டார்கள். நமது தலைவர் விருதை திருப்பி கொடுத்திவிட்டார், "எந்த பேச்சும் இல்லை". பிறகு நாவலர் அவர்கள் நாங்கள் ஒன்றும் அப்படி சொல்லவே இல்லை என்று அறிக்கை விட்டார் அதற்கு ஆதாரம் உள்ளது.

    தலைவரை போல "மானஸ்தனாக" இருப்பது என்பது பலர் கற்கவேண்டிய பாடம்.

    நன்றி - சைலேஸ் பாசு முகநூல் பக்கம்


    1973 ஆம் ஆண்டு மாலைமுரசு நாளிதழில் அப்போது திமுக அரசில் அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அறிக்கை வெளியானது.


  10. #2459
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like




  11. #2460
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •