Page 227 of 400 FirstFirst ... 127177217225226227228229237277327 ... LastLast
Results 2,261 to 2,270 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2261
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் சினிமாவில் , கடந்த வாரம் வெளியாகி, தினசரி 4 காட்சிகளில்
    வெற்றி நடை போட்ட , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " நேற்று இன்று நாளை "
    ஒரு வார வசூல் ரூ.95,000/-.



    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2262
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    மதுரை சென்ட்ரல் சினிமாவில் , கடந்த வாரம் வெளியாகி, தினசரி 4 காட்சிகளில்
    வெற்றி நடை போட்ட , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " நேற்று இன்று நாளை "
    ஒரு வார வசூல் ரூ.95,000/-.



    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.


    மதுரை அலங்காரில் சமீபத்தில் ரகசியபோலீஸ் 115 படத்தின் ஒரு வாரம் ஓடி முடிய மொத்த வசூல் ரூ. 1,60,000/-

    மதுரை சென்ட்ரலில் நேற்று இன்று ஒரு வாரம் நாளை ஓடி முடிய மொத்த வசூல் ரூ.95,000/-

    இரண்டு படங்களும் சேர்த்து மொத்தம் ரூ.2,55,000/-

    எங்கள் மண் மனக்கும் மதுரையில் ஒரு மாதத்துக்குள் மக்கள் திலகத்தின் 2 படங்கள் ரூ.2,55,000/- வசூல் சாதனை படைத்துள்ளன.

    எங்கள் மதுரை வசூல் சக்கரவர்த்தி புரட்சித் தலைவரின் அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மதுரையம்பதி மக்களுக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பில் கோடான கோடி நன்றி.

  4. #2263
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

    நன்றி.

  5. #2264
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2265
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like



    ஆனந்த ஜோதி பட ஷுட்டிங்கில் எம்.ஜி.ஆரின் கருணையை விளக்கும் ஒரு நிகழ்ச்சி(உடையலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து சொன்னது)

    இந்த படத்தில் வேலை செய்த சண்முகம் என்ற இளைஞன்,எம்.ஜி.ஆரின் பல படங்களில் வேலை செய்து பழக்கமானவன்.அன்று எப்போதும் போல் எம்.ஜி.ஆர் சண்முகத்திடமும் "என்னப்பா,சாப்பிட்டாச்சா?"என விசாரித்தார்.

    பதிலுக்கு சண்முகம் "ஆமாம்,வயிறு முட்ட வான் கோழி பிரியாணியா போட்டாங்க? ஏதோ சாப்பிட்டோம் உழைக்கிறோம்" என்று சொல்லி விட்டு போய் விட்டான்.'என்ன இப்படி சொல்லி விட்டானே' என எனக்கும் அதிர்ச்சிதான்.அவன் சொன்னது எம்.ஜி.ஆரை வாட்டமுற செய்து விட்டது என்பது அவர் முகத்தில் தெரிந்தது.

    மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. மதியவேளை வந்தது.பிரேக் விட்டார்கள்.சாப்பாடு வெகு நேரமாகியும் வரவில்லை.பி.எஸ்.வீரப்பா கம்பெனியில் சாப்பாட்டுக்கு எப்போதும் குறைவில்லைதான்.ஆனால் அன்றைக்கு பார்த்து தாமதமாகிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக சாப்பாடு வந்து சேர்ந்தபோதுதான் எல்லோருக்கும் காரணம் புரிந்தது.

    எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து வான்கோழி பிரியாணி வந்திருந்தது.சண்முகம் ஒரு ஆள் கேட்டதற்காக மொத்த யூனிட்டும் அன்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டது.ஆனால் அன்றைக்கு பிரியாணி சாப்பிடாத ஒரே ஒருவர் இருந்தார்.அவர் எம்ஜி.ஆர் தான்.அன்று வியாழக்கிழமை.அவர் விரதம் இருக்கும் நாள்.அசைவம் சாப்பிட மாட்டார்.

    "என்னண்ணே,அவன் கேட்டான்னு எல்லோருக்கும் பிரியாணி போட்டுட்டு நீங்க சாப்பிடலையே---இன்னொரு நாள் நீங்க சாப்பிடற நாளா பார்த்து கொடுத்திருக்கலாமே" என்றேன்.

    "நாம உழைக்கிறதே இந்த அரை சாண் வயித்துக்காகத்தான்,என்னமோ அவன் ஆசைப்பட்டு கேட்டுட்டான்.அவன் கேட்ட அன்னைக்கே கொடுக்கறதுதானே சரியாக இருக்கும்"புன்னகையோடு சொல்லி விட்டு போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் நினைப்பதையும், செய்வதையும் பல நேரங்களில் பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.செய்யவும் முடியாது.இதில் எம்.ஜி.ஆர் முதல் தரமானவர்.


    - வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முகநூல் பதிவில் இருந்து.

  7. #2266
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2267
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் காவியங்கள் மதுரையில் சமீபத்தில் நிகழ்த்திய சாதனை விபரங்களை பதிவிட்ட திருவாளர்கள் லோகநாதன் மற்றும் சுந்திரபாண்டியன் ஆகியோருக்கு நன்றி.
    Last edited by ravichandrran; 10th September 2016 at 09:52 PM.

  9. #2268
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கலைஞர்களை மேடையிலேயே கௌரவிப்பார், அதே போல் அவர்களிடம் அளவுகடந்த பாசமும் , அபரீதமான மரியாதையும் காட்டுவார்.ஒரு சில சமயங்களில் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பின்னால் தனியே அமர்ந்து ரசித்து விட்டு வருவதுமுண்டு. ஒரு முறை எழுத்தாளர் எல்லார்வின் வீட்டுக் கல்யாணத்திற்க்குப் போயிருந்தார்.அப்போது மணமேடையில் லால்குடி ஜெயராமன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தலைவர் பந்தலில் நுழைந்ததும் ஏற்பட்ட களேபரத்தில் கச்சேரியை கேட்கலாம் என ஆர்வத்தோடு வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அதன் பின் எழுந்து சென்று விட்டார். ஆனால் கச்சேரி முடிவதற்குள் மேடையில் வயலின் வாசித்தவருக்கு ஒரு கடித உறை வந்து சேர்ந்தது உங்களது நயமான இசையை ஒரு ரசிகனாக இருந்து கேட்க வந்தேன். என்னால் கச்சேரியே பாதிக்கப்பட்டுவிட்டது அதனால் குறுக்கிட நேர்ந்ததற்க்கு மிகவும் மனம் வருந்துகிறேன் என்று கூறி எழுதி அனுப்பியிருந்தார். தலைவருடைய இத்தகைய பண்பு எத்தனை பேருக்கு உண்டு செய்த தவறை கூட ஒத்துக் கொள்ள மறுக்கும் இந்த காலத்தில் தான் செய்யவே செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்றால் அவர் பத்தரை மாற்றுத் தங்கம் தானே. மனிதராய் வந்த தெய்வம் அவர்.
    தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து.

  10. #2269
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினிக்கூத்து - செப்டம்பர் 2016

  11. #2270
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •