Page 243 of 400 FirstFirst ... 143193233241242243244245253293343 ... LastLast
Results 2,421 to 2,430 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #2421
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித்தலைவர் படங்ககளின் சண்டைக்காட்சிகள் இன்றளவும், இனிமேலும் பேசப்படுவதன் காரணம்....ஒரு அலசல்..!!

    1. Fight scene க்கு முன் 'எப்படா வருவார்' என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது கரெக்டா தலைவர் Entry ஆகிவிடுவார். ரசிகர்கள் குரல்கள் கேட்டு அவர் வருவது போல ரொம்ப இயற்கையாக இருக்கும்.

    2. நேர்த்தி. ஒரு படத்தில் 4 சண்டை காட்சிகள் இருந்தால் அதில் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக அமைத்திருப்பார்.

    3. படங்களில் நிறைய ஆயுதங்களை வித்தியாசமாகவும் அற்புதமாகவும் கையாண்டிருப்பார் (சிலம்பம், வாள், மான்கொம்பு, ஈட்டி, சுருள் பட்டா Etc.).

    4. காட்சிகளில் வீரம் இருக்கும். வன்முறை இருக்காது.

    5. படத்துக்குப் படம் வித்தியாசம் மற்றும் தனக்கே உரித்தான* ஸ்டைல்...

    6. தலைவரின் உடல்வலிமை. கத்தியைப் போன்று தன் உடலை "கூராக" வைத்திருப்பது.

    7. சுமார் 40 வருடங்களுக்கு மேல் தன் உடலை உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பு..

    8. கேமராவே திணறும் அளவிற்கு தலைவரின் வேகம்.

    9. ரிலாக்ஸா பைட் பண்ணுவார். Bcz தலைவர் புரொபஷனல் ஃபைட்டர்.

    10. காட்சிகளில் எதிராளிக்கும் சமவாய்ப்பு. அப்பதான் களை கட்டும்.

    11. தன் உடல்வலிமைக்கு சற்றும் குறையாத அல்லது அதற்கும் மேலான வில்லனுடன் மோதுதல்.

    12. காட்சிகளை கேமராவில் அற்புதமாக கையாண்ட விதம்.

    13. ஒவ்வொரு சண்டையும் குறைந்தது 7 லிருந்து 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக.

    14. எதிராளியிடம் முதலில் தான் அடிவாங்குவார். நாம் Tension ஆகும் நேரத்தை தெரிந்து கொண்டு வாத்தியார் தன் பாடத்தை துவக்குவார்.

    15. கடைசியாக தலைவர் எதிராளியை வென்றபிறகு அவரை மன்னிக்கும் மாண்பு. சுத்தவீரனின் அடையாளம் இது.

    இதனால் தலைவர் "வாத்தியார்" ஆனாரோ.



    நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்.


    நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2422
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (25/09/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வித்தியாசமான பாத்திரங்களில் அசத்திய "நாளை நமதே "
    ஒளிபரப்பாகிறது .

  4. #2423
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -25/09/2016

  5. #2424
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 100 பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . முகநூலில் நண்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளின் ஆளுமைகள் குறித்து வர்ணித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது .உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .

  6. #2425
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத மக்கள் திலகம்
    -எம்.பி.உதயசூரியன்


    விசுவாச மனிதர், வியப்பான தலைவர், ஆச்சரிய ஆளுமை என பலமுகங்கள் காட்டும் எம்.ஜி.ஆர். பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

    ‘தம்பி, பார்த்தாயா? நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடுபட்ட தொண்டர்கள் எல்லாம் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள், என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்’ - எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வர் ஆனபோது கவிஞர் நா.காமராசனிடம் சொன்னது இது.

    எம்.ஜி.ஆர். பெற்ற பட்டம் ‘மக்கள் திலகம்’. அதற்கேற்ப உற்றார் உறவினர், சுற்றமும் நட்பும் என அந்த மக்கள் மட்டும்தான் அவரது உலகம். முடிசூடா மன்னனாக திரையுலகில் திகழ்ந்தபோதும், மூன்று முறை முதல்வராக கொடிகட்டிப் பறந்தபோதும் மக்களை மதிக்கிற மனம் படைத்தவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர். அதற்கு நன்றிக்கடனாகத்தான், அவர் அமரராகி 28 ஆண்டுகளாகியும் மக்களும் எம்.ஜி.ஆரை மறக்கவே இல்லை.

    விண்ணுக்கும் மண்ணுக்குமாக செல்வாக்கிலும் அதிகாரத்திலும் விசுவரூபம் எடுத்து நின்ற எம்.ஜி.ஆர். விசுவாச மனிதராகவும், வியப்பான தலைவராகவும், ஆச்சரிய ஆளுமையாகவும் பலமுகங்கள் காட்டி இன்றளவும் மக்களை ஆனந்தக் கண்ணீரில் விசும்ப வைக்கிறார். அதற்கான உதாரண சம்பவங்கள்தான் எத்தனை எத்தனை...

  7. #2426
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தைப் பற்றிச் சில வரிகள்...

    மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எனும் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர் பற்றியும் அவரின் பன்முகப் பரிமாணங்களைப் பற்றியும் அறியாதார் தமிழகத்தில் அநேகமாக யாருமில்லை என்றே கூறிவிடலாம். குறிப்பாகச் சென்ற தலைமுறையினரிடையே அவரின் திரைப்படங்களும் அதன் தொடர்ச்சியாக அவர் நிகழ்த்திய அரசியல் பிரவேசமும் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் தொடர்ந்துவருவது கண்கூடு. (அவரைப் பற்றிப் பேசினாலே தமிழகம் இன்றும்கூடச் சும்மா அதிருதில்ல!!!!) )

    ஒரு பிரபல தொலைக்காட்சியில் அவரின் பிறந்தநாளையொட்டி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் இன்றும் குறையாதிருக்கும் அவர் ஆளுமையின் வீச்சைக் கண்டு பிரமித்தேன். அவர் முன்பு நடத்திய ஒரு பத்திரிகையின் பழைய பிரதிகளை வாங்குவதற்காகத் தம் சொந்த உடைமைகளை விற்கவும், கையிருப்பைக் கரைக்கவும்...அவ்வளவு ஏன்? வியர்வை சிந்திக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பெற்ற தங்கப் பதக்கங்களைத் துறக்கவும்கூட அவரின் வெறித்தனமான ரசிகர்கள் (diehard fans) இன்றும்...அவர் இறந்து 27 ஆண்டுகள் கடந்தபின்னும் தயாராக இருக்கின்றனர் என்பதைக் கண்டபோது....I was really speechless! இந்த நூற்றாண்டில் அவரை விஞ்சிய ஈர்ப்பு விசை வேறெதுவும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

    அவரின் வள்ளன்மையை, தக்க காலமறிந்து பிறருக்கு உதவும் ஈகையின் சிறப்பை அவரால் உதவி பெற்று உயர்ந்தோர் கண்ணீர்மல்க உரைத்த காட்சி உண்மையிலேயே நெஞ்சை நெகிழ்த்தியது.

  8. #2427
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

    எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த .எம்.ஜி..ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும்
    மக்கள் திலகம்

  9. #2428
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    முக்கியமான குறிப்பு: துக்ளக் ஆசிரியர் சோ இப்போது நலமாகத்தான் இருக்கிறார். சென்ற ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 25, 2015) சோ உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தபோது மயில்ராஜ் தனது முகநூலில் போட்ட பதிவுதான் இது. இன்றும் அதே நாளில் அந்தப்பதிவு (பழைய பதிவு) முகநூலில் இன்று காலையில பதிவிடப்பட்டுள்ளது. எதற்காக? மக்கள் திலகத்தின் மாண்பு பற்றியும் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதைப் பற்றியும் சோ கூறியதைப் பற்றி விளக்குவதற்காகத்தான். மற்றபடி, சோவின் உடல் நிலை பற்றி யாரும் தயவு செய்து குழப்பியடித்துக்கொள்ள வேண்டாம்.

    ************************************************** ************************************************** ***












    துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும் - அரசியல் விமர்சகரும் - என்னை போன்ற எத்தனையோ ஆயிரம் பத்திரிக்கையாளர்களின் வழிகாட்டியுமான திருமிகு. சோ.இராமசாமி அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வருகிறது.....

    உண்மையில் அவரது தைரியம் யாருக்கும் வராது......? அரசியலிலும் சினிமாவிலும் உண்மை என்று தெரிந்தால் பகிரங்கமாக சொல்ல சோ வால் மட்டுமே முடியும்..... என்று நம் மக்கள் திலகத்தினால் புகழப்பட்டவர் திருமிகு. சோ.அவர்கள்.

    சிம்மசொப்பனமாய் விளங்கிய காலகட்டத்தில் கூட எம்.ஜி.ஆரின் படங்களை அவரை வைத்துக்கொண்டே நேரடி விமர்சனம் செய்யக்கூடிய தைரியம் உள்ளவர்.... பெருந்தன்மையாய் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுத்து கொண்டாலும் அவரது தைரியம்.... வேறு எவருக்கும் வராது.....

    தைரியம் தைரியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது....1998 -இல் திரு. சோ.அவர்களை சென்னையில் அவரது அலுவலகத்தில் சந்தித்த போது..... அவர் சொன்ன ஒரு அற்புத தகவல் நினைவுக்கு வருகிறது.....

    எம்.ஜி.ஆர். அவர்களின் 100 - ஆவது வெற்றி காவியமான ஒளிவிளக்கு பற்றியது அந்த அற்புத தகவல்......

    தமிழ் சினிமாவில் குடிப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ள காட்சிகள் இப்போதெல்லாம் ( 1998 இல் ?! ) அதிகமாக உள்ளதே..... இது பற்றி உங்கள் கருத்து....... ஒரு முன்னாள் நடிகர்......

    தம்பி நான் இப்போவும் நடிச்சுகிட்டு தான் இருக்கேன்..... காதலா காதலா நு ஒரு கமல் படம் அதுல ஒரு ரோல் நான் பண்றேன்....ஸோ... ஐ அம் நாட் எ எக்ஸ்.ஆர்டிஸ்ட். ஸ்டில் ஐ அம் அன் ஆர்டிஸ்ட்..... ஒகே.......?

    ஸாரி சார்..... ஸாரி.... ஒரு முன்னணி நடிகராக.......

    ஐயோ..... சமாளிச்சுட்டீயே...... குட்.... ஒகே.....கண்டிநியூ....

    ஒரு முன்னணி நடிகராக இந்த போக்கை எப்படி பாக்குறீங்க......?

    குரலை செருமிக்கொண்டார்....... தம்பி.... இப்போ உள்ள எந்த ஆர்டிஸ்டும் மாஸை தான் யோசிக்கிறாங்க..... அப்புறம் இது தான் மாஸ் னும் அவுங்களா ஒரு முடிவுக்கு வந்துடறாங்க...... இன்க்லூடிங் ரஜினி .... உண்மையா சொன்னா மாஸ் ஹீரோ னா அது என்ன பொறுத்த வரைக்கும் இப்போ இல்லை எந்த காலத்துலயும் அது திரு.எம்.ஜி.ஆர் தான்.... இப்போ அவர் இறந்து ஒரு பத்து பதினோறு வருஷமாயிடுச்சு......

    பட்.... ஸ்டில் ஹி இஸ் ஒன்லி தி மாஸ் ஹீரோ..... டூ யூ நோ ஹவ்....?

    வெயிட்...... மீண்டும் குரல் செருமல்........

    இன் 1967 ஆர் 1968 நு நினைக்கிறேன் ஒளிவிளக்குனு ஒரு படம்.... தட் மூவி வாஸ் ஹிஸ் 100 த் மூவி .... அதுல அவரோட ரோல் வந்து திருடன்.... அப்போ அந்த படத்தோட டைரக்டர் மிஸ்டர். சாணக்யா ஒரு நாள் நாங்க எல்லாரும் ஒரு கேப் ல உக்காந்து பேசிட்டு இருக்கோம்.... அப்போ டைரக்டர் எம்.ஜி.ஆர் கிட்டே..... சார்.... இந்த படத்துல நீங்க திருடனா வாரீங்க.... ஏதாவது வித்தியாசம் காட்டினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.... நு சொன்னார்.....

    ம்ம்ம் சரி... என்ன வித்தியாசம் சொல்லுங்க செஞ்சுடுவோம்...... னார் எம்.ஜி.ஆர்.

    நீங்க இதுவரை செய்யாத ஒரு ஸீன்.... இதுல நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணுற மாதிரி ..... என்று இழுத்தார்.......

    நானும் மனோகரும் சிரித்து விட்டோம்......

    உடனே எம்.ஜி.ஆர். எங்களை திரும்பி பார்த்து சிரித்து விட்டு ... ஏன் சிரிக்கிறீங்க......? என்றார்......

    எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல....... மனோகர் எந்திரிச்சு ஓடியே போய்ட்டார் ......

    உடனே எம்.ஜி.ஆர். சொன்னார்.... சரி ... சார்... உங்க இஷ்டம் பண்ணுங்க...... னார் .....

    சிரிப்பு மாறி ஒரே ஆச்சர்யமா போச்சு..... அதிர்ச்சியா போச்சு....

    டைரக்டர் செமையா குஷியாகி ஒகே சார்னு சொல்லீட்டு கிளம்ப போனார்..... அப்போ எம்.ஜி.ஆர் டைரக்டர் ஐ கூப்பிட்டு ....

    நான் குடிக்கிறேன்.... ஆனா அது ஒரு ஸீன் தான் வரணும்.... அதுவும் அந்த ஸீன்ல ஒரு பாட்டு வையுங்க.... அதுவும் குடிக்கிறதால வர்ற கேட்டதை எல்லாம் சொல்லணும் உடனே ஏற்பாடு பண்ணுங்க.... னார்.....

    எனக்கு புரியவே இல்லை.... அதை புரிஞ்சுகிட்ட எம்.ஜி.ஆர். என் தோளுல கைய போட்டு......

    இந்த பாட்டை பாக்குறவன் ஒரு 10 பேராவது குடிய நிறுத்தணும்... தான் குடிச்சாலும் நம்மள குடிக்க கூடாதுன்னு சொல்லுற நடிகன்னு நம்ம ரசிகர்கள் நம்மள பாக்கணும்..... னார்....

    அப்போ நூறாவது படத்தை நெருங்கிக்கிட்டு இருந்தார்.... இன்னொரு படமும் சூட் ல இருந்துச்சு..... எது 100 - ஆவது படமா வரும்னு தெரியாத சூழல்ல நான் சொன்னேன்.... இது தான் அனேகமா உங்க 100 - ஆவது படமா வரும்..... அதே போல 10 பேரு இல்ல 100 பேரு கண்டிப்பா திருந்துவான்.....நு சொன்னேன்......

    ரொம்பவே சந்தோசப்பட்டு.... சிரிச்சார்..... ஆனா.... ஆயிரகணக்கான பேரு அந்த பாட்டால திருந்துனாங்க..தைரியமாக சொல் நீ மனிதன்தானா...? ங்கற பாட்டு ... அது வேற கதை..... இப்போ சொல்லுங்க.... யாரு மாஸ் ஹீரோ.... அவர் தானே..... அந்த இமேஜ் ஐ கடைசி வரைக்கும் காப்பாத்திட்டார் .... அதுனால தான் ஹி இஸ் மக்கள் திலகம்...... என்றார்......

    திரு. சோ.இராமசாமி அவர்கள் பூரண நலம் பெற நாம் வேண்டுவோம்........

    மக்கள் திலகத்தின் மயில்ராஜ்.....

  10. #2429
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தினத்தந்தி -25/09/2016


    சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எந்த திரையரங்குகளில் மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன் வெளியாகிறது? முக்கியமாக புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகிறது? தகவல் தெரிந்த தோழர்கள் சொல்லுங்கள்.

  11. #2430
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 100 பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . முகநூலில் நண்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளின் ஆளுமைகள் குறித்து வர்ணித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது .உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .
    நன்றி.

    நண்பர் திரு.பாலசுப்பிரமணியன் தனது முகநூலில் போட்டிருந்ததை நான் இங்கே பதிவு மட்டும்தான் செய்தேன். மக்கள் திலகத்தின சண்டைக் காட்சிகள் பற்றி வர்ணித்த பெருமை அவரைத்தான் சேரும். உங்கள் பாராட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. 100 பதிவுக்காக என்னை பாராட்டியதற்கும் நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •