Page 49 of 400 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #481
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் -

    திட்டப்படி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமையப்பெற்ற எம். எம். பிரிவியூ அரங்கில், நேற்று (29-05-16 - ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சரியாக 3.00 மணிக்கு துவங்கிய. மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிக்காவியம் "நாடோடி மன்னன்" மாலை 6.40 மணி வரை, துல்லியமாக ஒளிபரப்பப்பட்டது.





    160 இருக்கைகள் கொண்ட எம். எம். பிரிவியூ அரங்கம், மக்கள் திலகத்தின் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. சுமார் 200 பேர் வரை காவியத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்ததுதான்.


    இந்த நிகழ்ச்சியின் 15 நிமிடம் இடைவேளையில், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் :

    1. பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழாவினையொட்டி, வரும் 17-01-2017 அன்று முதல் இயங்கவிருக்கும் " பொன்மனம் பண்பலை வரிசை " யின் காரணகர்த்தாவும், புரட்ச்சித்தலைவர் காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்த்தின் வடசென்னை மாவட்ட மாணவர் அணி நிர்வாகியும், தொழிலதிபருமான திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்கள்,

    2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றிய போது, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவில் இடம் பெற்ற மருத்துவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,

    3. "இதயக்கனி" மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள்,

    4. "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை ஆசிரியர் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி திரு. பி. எஸ். ராஜு அவர்கள்,

    5. " தர்மம் தலை காக்கும்" இதழ் ஆசிரியர் திரு. மின்னல் பிரியன் அவர்கள்

    6. கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு. கே.ஈ. பாஸ்கரன் மற்றும் சிவபெருமாள் அவர்கள்,

    7. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற நிர்வாகி திரு. தேவ சகாயம் அவர்கள்,

    8. ஆயிரத்தில் ஒருவன் - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜன்

    ஆகியோர், பொன்னாடை அணிவிக்கப்பட்டு,. சிறப்பிக்கப்பட்டனர்.


    மேலும், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும், சுவையான இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தலைவர் திரு. எம். தம்பாச்சாரி அவர்கள், துணைத் தலைவர் திரு. எஸ். எம். மனோகரன், செயலாளர் பேராசிரியர் சௌ. செல்வகுமார், இணை செயலாளர் திரு. சந்திரசேகரன், சங்கப்பொருளாளர் திரு. கே. பாபு, மற்றும் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், உறுப்பினர்கள் சுரேந்திரன், ஏ.ஆர். ஹுசைன், கே. குபேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், அரங்கம் அளித்து உதவிய நிர்வாகத்தினருக்கும், சங்கத்துணைத்தலைவர் திரு. எஸ். எம். மனோகரன் அவர்கள் நன்றி கூறியபின், இந்த குடும்ப விழா இனிதே மாலை சுமார் 6.50 மணி அளவில் நிறைவு பெற்றது.
    Last edited by makkal thilagam mgr; 30th May 2016 at 01:07 PM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, oygateedat, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #482
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
    சென்னையில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ''நாடோடி மன்னன் '' படம் மூலம் அருமையான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நல வாழ்த்துக்கள் .

  5. Likes orodizli liked this post
  6. #483
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    திரு சுரேந்திர பாபு அவர்கள் இவ்விழாவைப் பற்றிக்குறிப்பிட்டு என்னை அன்புடன் அழைத்தார். திரு செல்வகுமாரும் அழைக்கச் சொன்னதாக தெரிவித்தார். தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் வர இயலவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தேன். என்றாலும் இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னேன்.

    அதையே இங்கும் கூறிக்கொள்கிறேன். இவ்வகையான திரையிடல்களைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அளவில் மட்டுமே முன்னேற்றம் கண்டு கருத்திலும் கதையிலும் கலாச்சாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள தற்போதைய பல தமிழ்த்திரைப்படங்களை விடஅந்நாளைய திரைப்படங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தன என்பதைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயனளிக்கக் கூடிய முயற்சியாகும். பழைய திரைப்படங்களின் திறனாய்வு அமைப்புகள் மேலும் பெருக வேண்டும். Vintage heritage, நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு வரிசையில் தங்களது அமைப்பும் சேர்ந்து அந்நாளைய தமிழ்த்திரைப்படங்களின் உன்னதங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துக்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks orodizli thanked for this post
  8. #484
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நண்பர்களே,
    திரு சுரேந்திர பாபு அவர்கள் இவ்விழாவைப் பற்றிக்குறிப்பிட்டு என்னை அன்புடன் அழைத்தார். திரு செல்வகுமாரும் அழைக்கச் சொன்னதாக தெரிவித்தார். தவிர்க்க இயலாத காரணத்தால் என்னால் வர இயலவில்லை என்பதை அவரிடம் தெரிவித்தேன். என்றாலும் இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னேன்.

    அதையே இங்கும் கூறிக்கொள்கிறேன். இவ்வகையான திரையிடல்களைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அளவில் மட்டுமே முன்னேற்றம் கண்டு கருத்திலும் கதையிலும் கலாச்சாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள தற்போதைய பல தமிழ்த்திரைப்படங்களை விடஅந்நாளைய திரைப்படங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தன என்பதைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயனளிக்கக் கூடிய முயற்சியாகும். பழைய திரைப்படங்களின் திறனாய்வு அமைப்புகள் மேலும் பெருக வேண்டும். Vintage heritage, நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு வரிசையில் தங்களது அமைப்பும் சேர்ந்து அந்நாளைய தமிழ்த்திரைப்படங்களின் உன்னதங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துக்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்.

    Thank you very much for your Wishes Sir. We shall continue such programmes.

  9. #485
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
    சென்னையில் முதல் முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ''நாடோடி மன்னன் '' படம் மூலம் அருமையான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நல வாழ்த்துக்கள் .
    Thank You Vinodh Sir. We planned to screen the next movie is 'ADIMAIPPEN'. We feel it as PROUD on participation of all MGR FANS' ASSOCIATION in the Yesterday's Programme and this will continue.

    At this point of time, I take the opportunity of thanking Mr. C.S. Kumar, who motivated our SANGAM to make effort and attempt in organizing such Programmes.


    Thanking you once again.
    Last edited by makkal thilagam mgr; 30th May 2016 at 04:00 PM.

  10. Likes orodizli liked this post
  11. #486
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #487
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  15. #488
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மதிப்புக்குரிய திரு செல்வகுமார் அவர்களுக்கு,

    தங்களின் சீரிய முயற்சியால் நேற்று சென்னையில் திரையிடப்பட்ட நாடோடி மன்னன் திரைக்காவியத்தை கண்டு மகிழ்ந்த நல் உள்ளங்கள் அனைவரின் நல் வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு உண்டு. தங்களுக்கு என் இதயபூர்வ நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    எஸ் ரவிச்சந்திரன்.

  16. Thanks orodizli thanked for this post
  17. #489
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    உயர்திரு.பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு,
    தங்களது பெருமுயற்சிக்கு முதலில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதைவிடவும் ஆச்சரியப்படச் செய்தது தங்களது எளிமை. தங்களது முயற்சிகள் பற்றி தாங்கள் எதுவும் குறிப்பிடவே இல்லையே.மக்கள் திலகத்தின் பண்புநலன்கள் அவரது ரசிகர்களிடத்திலும் தொடர்வது பாராட்டுக்குரியது. வாழ்க பல்லாண்டு. இது போன்ற பல்வேறு சாதனைகளை தொடர வேண்டும் அன்பன் ஜெய்சங்கர்.

  18. Thanks orodizli thanked for this post
  19. #490
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    பிரதீப் பாலு சார்,
    தங்களது வீடியோ பதிவு மிக அருமை. நேரமின்மையால் உடனடியாக பாராட்ட இயலவில்லை. தங்களது வள்ளலின் வரலாறு பற்றிய விவரம் அறிய ஆவலாக இருக்கிறேன். தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ளவும்.

  20. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •