Results 1 to 10 of 13

Thread: சந்தோஷமே வருக வருக..

Threaded View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    சந்தோஷமே வருக வருக..

    சந்தோஷமே வருக வருக ( இடரெல்லாம் போனால் சந்தோஷமாகத் தானே இருக்கும் வாழ்க்கை..எனில் இந்தப் பதிகம் படிக்கலாம்)

    *




    திருஞான சம்பந்தர் அருளிய

    இடர் களையும் பதிகம்..

    **

    எளியேனின் உரை முயற்சி
    *

    சின்னக் கண்ணன்

    **

    பாசமுடன் கொஞ்சம் பணிவையும் சேர்த்துனக்கு
    ஈசனே நன்மாலை இட்டிடுவேன் நேசமிகு
    பிள்ளையிடம் சொல்லியிப் பேதையை ஆட்கொண்டு..
    அள்ளித் தரச்சொல் அருள்..

    பிந்தினேன் உமது பாட்டின்
    பிழையிலா உரையை நெய்ய
    நிந்தனை செய்தார் நண்பர்
    .. நின் தழல் ஒற்றிக் கண்ணில்
    வந்தனஞ் சொல்வாய் கண்ணா
    வார்த்தைகள் வந்து வீழும்
    கந்தனின் தந்தை நன்றாய்க்
    காட்டுவான் வழியை என்றார்..

    கடற்கரை மாலை சென்றால்
    காட்சிகள் கண்ணுள் சென்றே
    திடமென இன்பஞ் செய்யும்
    தீர்க்கமாய்க் காற்றும் மோத
    புடமிடும் பொன்னைப் போலே
    பொலிந்திடும் கற்ப னையில்
    இடர்களை பாக்க ளுக்கு
    இங்குரை எழுத வந்தேன்..


    **
    (என்னடா வந்தே பாட்டா எழுதிக்கிட்டிருக்க..

    ஹப்பாடி..வந்துட்டயா மனசாட்சி எப்படி ஆரம்பிக்கறதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன்..

    ஆமா..மத்தவங்களும் அப்படியே தான் இருக்காங்க!..ஆமா வந்தே என்ன எழுதப்போற.. இடர்களைப் பாக்களா..அப்படின்னா..துன்பங்கள் கொண்ட பாடல்களா..

    :அசட்டு மன்ச்சு..சந்தி முக்கியம்..! இடர்களை பாக்கள்.. அஃதாவது இடர் களையும் பாடல்கள்.. இடர் களையும் பதிகம் என நம்ம ஞானம் எழுதியிருக்காப்பல

    என்ன திடீர்னு மதுரைபாஷை வருது..ஞானம்னா உன்னோட காலேஜ் மேட் ஞான சுந்தரா..

    ச்சு..அவர் வேற..இது ஞான சம்பந்தர்.. செல்லப்பிள்ளையோன்னோ..செல்லமா சொல்லிப் பார்த்தேன்..

    அந்த இடர்களையும் பதிகம் எந்தக் கோவிலுக்கு எழுதியிருக்கார்..

    அப்படிக்கேளு..மன்ச்சு.. திரு நெடுங்களம்னு ஒரு இடம்.. அதாவது சமவெளியில் அமைந்த பெரிய ஊர்னு அர்த்தம்..பிற்காலத்துல திரு நெடுங்குளமா மருவி.. திரு நெட்டாங்குளமாய் இப்போ வழங்கப் படுது..அதுவும் திருச்சில துவாக்குடிக்கு வடக்கில் செல்லவேண்டுமாக்கும்..இப்ப தான் லேடஸ்டா கும்பாபிஷேகமெல்லாம் பண்ணியிருக்காங்க.

    மூலவர்:திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர்.
    இறைவி:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.. ஈசன் சுயம்புலிங்கமாய் அருள் பாலிக்கிறார்..அவர் இருக்கற இடத்துலேயே மிஸஸ் ஈசனும் இருக்கறதா ஐதீகம்..தட் ஈஸ்.. இந்தத் தலத்துல தன்னோட இடப்பாகத்தை உமாக்கு ஷிவா கொடுத்துடறதால தேவி உமை அரூபமா இருக்கறதால..அந்த சந்திதிக்கு மட்டும் இரண்டு விமானங்கள் உண்டு..இதுவும் ஒரு விசேஷம் கோவில்ல..

    குட்..சமர்த்துப் பையன் நீ..ஆமா என்னவாக்கும் ஸ்தல புராணம்..|

    வா..மன்ச்சு..எழுதிப் பார்க்கலாம்!

    **

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •