Page 396 of 400 FirstFirst ... 296346386394395396397398 ... LastLast
Results 3,951 to 3,960 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3951
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3952
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரி 19 ஐ சிவா சார் தொடங்கி வைக்க வேண்டும். அவரின் ஆர்வமான பதிவுகள் திரியை மேலும் ரசிக்க வைக்கும்.
    சிவாஜி என்றபெயரின் முக்கால் பாகத்தை தன்னில் வைத்திருப்பர்.கடல் கடந்தாலும் இனத்தை மறக்காத மண்ணின் மைந்தர்.அவருக்கு என் வாழ்த்துக்கள்!

  4. #3953
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சிவா மற்றும் வினோத்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3954
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் மற்றும் செந்தில் இருவருடன் இணைந்து சிவாவை, நமது நடிகர் திலகம் திரியின் 19வது பாகத்தைத் துவக்கி வைக்க் அழைக்கிறேன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3955
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Today for Nadigar Thilagam special,
    டிவி தொலைக்காட்சிகளில இன்று ஒளிபரப்பாக இருக்கும் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்,
    காலை 11 மணிக்கு சன் லைப்பில் ...
    " மூன்று தெய்வங்கள் "
    பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்
    " கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி "
    பிற்பகல் 1:30 க்கு புதுயுகம் டிவியில்
    " நீதியின் நிழல் "
    பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில்
    " தவப்புதல்வன்"
    இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
    " கலாட்டா கல்யாணம் "
    இரவு 10 மணிக்கு ராஜ் டிவியில்
    " சாதனை"
    கண்டு மகிழ்வோம்!
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3956
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் அருமை பெருமைகளை சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் படங்கள் வெளியான காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்களை படித்தால் தெளிவாக உணரலாம், எதார்த்த மற்றும் நடைமுறை வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து நெறி முறைகள் கொண்டதாக இருக்கும், உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின்
    "முதல் தேதி"
    நடிகர் திலகத்தின் 21 வது படமாக 1955 ம் வருடம் வெளியானது, படம் வெளியான போது நடிகர்திலகத்தின் வயது 27 மட்டுமே, ஆனால் அந்த படத்தின் நடிப்பை பார்க்க வேண்டுமே...!
    அதை உளமார உணர வேண்டுமெனில் அந்த பத்திரிகை விமர்சனத்தை அப்படியே காணுவோம்.
    ' எங்கு நோக்கிலும் வேலை இல்லாத திண்டாட்டம், அதன் காரணமாக வறுமை
    முடிவு தற்கொலை' இம்மாதிரி செய்திகளை தினசரி படிக்கும் காலமாக இருக்கிறது இன்று,
    அப்படிப்பட்ட இக்காலத்திற்கு ஏற்ற படம்
    "முதல் தேதி" என்று கூறினால் அது மிகையாகாது
    தற்கொலை செய்து கொள்வது எத்தகைய மாபெரும் தவறு மனிதனுடைய கஷ்டம் அத்தோடு தீருவதற்கு பதில் அதிகரிக்கவே செய்கிறது, என்பதை " முதல் தேதி " அழகாகச் சித்தரிக்கிறது. அத்துடன் கூட பத்திரிகைகள் அனைத்தும் எழுதி வரும்
    "இன்றைய கல்வி பயனற்றது" என்ற உண்மையை ஆழப் பதிய வைக்கிறது முதல் தேதி.
    நடிப்பு என வரும்போது அதன் முதல் ஸ்தானத்தை சிவாஜி கணேசனுக்கா அல்லது அஞ்சலி தேவிக்கா யாருக்கு அளிப்பது என்பதும் பெரும் பிரச்சனைதான் அஞ்சலி தேவி தனியே தோன்றும் கட்டங்களை பார்க்கும் போது அவருக்கே அந்தப் புகழ் என்று சொல்லத் தோன்றுகி்றது,
    ஆனால் அடுத்து சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்க்கும் போது அவருக்குத் தான் அந்தப் புகழ் என்றுத் தோன்றுகிறது,
    சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் இதுவரை நடிக்காத புது மாதிரியான ஒரு பாத்திரத்தில் நடித்து இருக்கிறார், வயோதிகக் குடும்பத் தலைவனாக அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட அப்படியே மாறி விட்டார் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட பின் தன் மனைவி மக்களை அருகில் வைத்து கொண்டு பேசும் கட்டத்தில் அவரது நடிப்பு உள்ளத்தை உருக்குகிறது, அதுவும் தனது தமையனிடம் "இவளைப் போல ஒரு தாய் கிடைக்க மாட்டாள்" என்று கூறும் கட்டத்தில் கண்ணீர் விடச் செய்கிறார் சுருங்கக் கூறினால் " சபாஷ் சிவாஜி" என்று தான் சொல்லத் தோன்றுகிறது..
    எத்தனை அருமையான நடிப்பிற்கான விமர்சனம், பாருங்கள் அதனால் தான் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் " நடிகர் திலகம் " என உயர்ந்தார்..




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3957
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஜய் டிவியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிடி யின் சுவையான செய்தி,
    அரை இறுதி சுற்றில் பங்கேற்ற மோனிக்கா " மன்னவன் வந்தானடி" பாடலை பாடி அசத்தினார்,
    மோனிக்காவை பாராட்டிய டிடி பாடலைப் பற்றிய தனது தந்தையினுடனான பழைய நினைவுகளை கூறி எல்லோரையும் மகிழ்வித்தார்
    தந்தையுடன் டிவி பார்க்கும் போதெல்லாம் "மன்னவன் வந்தானடி" பாடல் காட்சி வரும் போது என்னுடைய முதுகில் தட்டிக் கொண்டே இருப்பார்
    " நடிகர் திலகத்தின் நடையழகைப் பார், நடையழகைப் பார்" எனப் பாடல் முடியும் ...வரை சொல்லிக் கொண்டே இருப்பார",
    மோனிக்கா பாடும் போது நடிகர் திலகம் நடையழகு முன்னே தெரிகிறது..





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3958
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நடித்து ஒரே தினத்தில் இரெண்டு படங்கள் திரையிடப்பட்டு இரண்டும் நூறு நாட்களை தாண்டி ஓடின.
    சொர்க்கம் – எங்கிருந்தோ வந்தாள்’ ; ‘ஊட்டி வரை உறவு – இரு மலர்கள்’ என வசூல் சாதனைப் படங்களும் அதில் அடங்கும்.
    நடிகர் திலகம் நடித்து ஒரே தினத்தில் இரெண்டு படங்கள் திரையிடப்பட்டு இரண்டும் நூறு நாட்களை தாண்டி ஓடின. 1967 தீபாவளி அன்று ஸ்ரீதர் இயக்கத்தில் ஊட்டி வரை உறவு, ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் இருமலர்கள். ஊட்டி வரை உறவு நடிகர்திலகத்தின் இளமை, ஸ்டைல், நகைச்சுவை நடிப்பு ...என பிச்சு உதறி இருப்பார். அதற்க்கு நேர் மாறாக இருமலர்கள். காதலியா ?மனைவியா ? ஆரம்பம் வெகு வேகமாக செல்லும். மாதவி பொன் மயிலால் தொகை விரித்தாள் பாடல் ஓன்று இடைவேளை வரை போதும். ஆனால் அப்போது நடிகர்திலகத்திற்கு ஈடாக நடிக்க பத்மினி இருந்தார் இடைவேளைக்கு பிறகு சோகநடிப்பில் கே ஆர் விஜயா ஈடு கொடுத்தார். ஆனால் கருப்புவெள்ளை படமான அதுவும் ஊட்டி வரை உறவு படத்துடன் போட்டி போட்டு ஓடியது என்றால் நடிப்பு என்ற ஒத்தை வார்த்தை தானே. அதுவும் அதே நாளில் எம் ஜி ஆர் நடித்த விவசாயி படமும் வெளியாகி இருந்தது. அப்பவே நாங்க அப்படி ? யார்கிட்ட ? ( இருமலர்கள் படத்தில் ஒரு மகாராஜா ஒரு மகாராணி பாடலை ரோஜாரமணிக்காக பாடியவர் ஷோபா சந்திரசேகரன் )
    1970 இல் எங்கிருந்தோ வந்தாள் படம் ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்திலும், சொர்க்கம் டி ஆர் ராமண்ணா இயக்கத்திலும் ஒரே நாளில் வெளிவந்து நூறு நாட்களை தாண்டி ஓடின. எங்கிருந்தோ வந்தாள் ஜெயலலிதா நடித்திருந்த படங்களில் ஒன்று. மற்ற படங்களில் ஒரே ஆட்டம் தானே. ஒரே பாடல் உன்னை அழைக்கும், நான் உன்னை அழைக்கவில்லை என இருதுருவ பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன். கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும் பாடும் போது அழாதவன் கமல் சொன்ன மாதிரி மனுசன் கிடையாதுல்ல? சொர்க்கம் படத்தில் பொன் மக்கள் வந்தாள் பாடல் என்ன ஒரு வித்தியாச கெட்டப், என்ன ஒரு நவரச நடை, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்த பாடலை ஆலங்குடி சோமு எழுதியிருந்தார். பூ மாலையில் ஓர் மல்லிகை பாடலை இன்றுவரை இரவு தூங்கும் முன் கேட்டு ரசித்துவிட்டு தான் படுக்கைக்கு செல்வேன். 1980 முன்னால் வந்த படங்கள் எல்லாமே முத்துக்கள். யாரால் முடியும் அவர் சாதனையை முறியடிக்க !





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Harrietlgy liked this post
  11. #3959
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே,
    YOU TUBE ல் SMILE SETTAI என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த சேனல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் இருவர் கண்ணைக் கட்டிக் கொள்ள ஒருவர் ஒரு படத்தை நமக்கு காட்டி அந்த படத்தைப் பற்றிய குறிப்புகளைச் சொல்வார். அந்தக் குறிப்புகளை வைத்து அது யார் என்பதைக் கண்ணைக் கட்டியுள்ள இருவரும் கண்டுபிடிக்க வேண்டும்.
    ஒரு படத்தின் குறிப்பைச் சொல்ல...ும் போது இருவரும் வேறு வேறு நபர்களின் பெயர்களைச் சொன்னார்கள்.
    நமது நடிகர்திலகத்தின் படத்தைக் காட்டி படத்தைப் பற்றி ஒரே ஒரு குறிப்பு தான் சொல்வார், அது என்னவென்றால் உண்மையான நடிகர்
    இதைக் கேட்டதும் இருவரும் ஒன்று சொன்னால் போல் சிவாஜி என்று கூறுவார்கள்.
    அன்பு இதயங்களே,
    இன்றைய இளையதலைமுறையினரும் உண்மையான நடிகர் என்று நமது நடிகர்திலகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, நாம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #3960
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அவசியம் படியுங்கள்.
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, ஊடகங்களும் சரி, மக்களும் சரி இப்போது தான் நமது தலைவர் சிவாஜி அவர்கள் தமிழக மக்களின் மீதும், தமிழ்நாட்டின் வ...ளர்ச்சி மீதும் அக்கறைக் கொண்டிருந்தார் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்.
    ஒரு தமிழனை, அரசியலில் உண்மையையும், நேர்மையையும் கொண்டு வர முயற்சி செய்தவருக்கு பொறுப்பை தராமல் கண்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்ததின் விளைவை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
    இந்த செய்தியை படியுங்கள்
    நாம் எப்படிப்பட்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்தோம் என்று....
    பகிரங்கமாக ஆண்டவர்களின் சரித்திரத்தை போட்டுடைத்து, மக்கள்தலைவரையும் பெருந்தலைவரையும் தோற்கடித்ததன் விளைவு தான் இது என மக்களை உணரச் செய்யும் வகையில் இதை எழுதி அனுப்பிய மதுரை மல்லிகை மன்னன் அவர்களுக்கும், அதை வெளியிட்ட தினமலருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றி.

    Last edited by sivaa; 31st May 2017 at 05:36 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •