Page 391 of 400 FirstFirst ... 291341381389390391392393 ... LastLast
Results 3,901 to 3,910 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3902
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3903
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜிக்கு போட்டி சிவாஜி தான்
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 1952 முதல் 2017 வரை சிவாஜி அவர்களுக்கு வேறு யாரும் போட்டியாக இருக்கவில்லை நமது தலைவருக்கு போட்டி...யாக நமது தலைவரே தான் இருந்துள்ளார்.
    ஒரே நாளில் இரண்டு படங்கள் பல முறை வெளியிட்டு இரண்டு முறை 100 நாள் ஓடிய வரலாறு வேறு யாருக்கும் இல்லை.
    அடுத்தடுத்த நாள் படங்களை தைரியமாக வெளியிட்டு ஒரே கலைஞன் நமது நடிகர்திலகமே.
    ஒரு வார இடைவெளியில் படங்களை வெளியிட்டவரும் நமது கலைக்குரிசிலே.
    ஒரே வருடத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட ஒரே நடிகரும் நமது தேசியதிலகமே.
    ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களைத் தந்தவரும் நமது சரித்திரநாயகனே.
    ஒரு படம் 50 நாளைத் தாண்டி 100வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நமது நடிகர்திலகத்தின் வேறு படம் வெளிவந்து போட்டியாக அமைந்து பல படங்கள் 100 நாளை தொடாமல் போயிருக்கிறது.
    இப்போது சிவாஜி அவர்கள் இல்லை இனியாவது வேறு யாராவது போட்டிக்கு வருவார்களா என்று எதிர்பார்த்தால் மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு படங்களை வெளியிட்டு அதுவும் 100 நாளை நெருங்க முடியாத இந்த தருணத்தில்
    மதுரையில் மே 19ல் ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவந்து தற்போது 26 முதல் தொடர்ச்சியாக மதுரை அலங்கார் திரையரங்கில் இரண்டாவது வாரத்தை தொடர்கிறது.
    அதே நேரத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மே 26 முதல் ஊட்டி வரை உறவு திரைப்படம் வெளிவருகிறது.
    இரண்டு தியேட்டருக்கும் அதிகபட்ச துாரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருக்கும்.
    இப்போது உச்சத்தில் உள்ள நடிகர்களாலும் இந்த சாதனையை செய்யமுடியாது என சவால் விடலாம்.
    ராஜபாரட் ரங்கதுரைக்கு போட்டியாக ஊட்டி வரை உறவா அல்லது ஊட்டி வரை உறவுக்கு போட்டியாக ராஜபாரட் ரங்கதுரையா
    எதுவாயினும் நமது மக்கள்தலைவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் அவர் படங்களுக்கு அவர் படமே தான் போட்டியாக உள்ளது ரசிகர்களாகி நமக்கு பெருமை தானே இதயங்களே....
    மதுரையில் நகரெங்கும் ராஜபாரட் ரங்கதுரை மற்றும் ஊட்டி வரை உறவு திரைப்படத்தின் போஸ்டர்கள் அருகே அருகே ஒட்டப்பட்டிருப்பதால் அனைவரும் வியப்போடு பார்த்துச் செல்கின்றனர்.
    படத்தின் போஸ்டர் புகைப்படங்கள் நமது இதயங்களின் பார்வைக்கு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3904
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3905
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    *** திகைக்க வைக்கும் நடிகர் திலகம் திரைப்பட சாதனைகள்,
    நடிகர் திலகம் அறிமுகம் ஆன பராசக்தி வெளிவந்த வருடம் 1952 முதல் 1962 வரையிலான பத்து ஆண்டுகளில் வெளிவந்த ஒட்டுமொத்த நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 432 ஆகும்,
    அந்த 432 படங்களில் வெற்றிப் பெற்ற படங்களின் எண்ணிக்கை என பார்த்தோம் என்றால் அது 101 படங்கள் மட்டுமே,
    (வெற்றிப் பெற்ற தமிழ் சினிமாக்கள் என்ற பல்வேறு நூல்களில் இருந்து இத்தகவலை பெற முடிகிறது,)
    அந்த வெற்றிப் பெற்ற 101 படங்களில் நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்கள் மட்டுமே 53 திரைப்படங்கள் ஆகும்,
    அதாவது நடிகர் திலகம் பத்து ஆண்டுகளில் நேரடி தமிழ்ப் படங்கள் நடித்தது 78 படங்கள் ஆகும்( பிற மொழிகளில் 5 படங்களில் நடித்தார்)
    அடுத்து முக்கிய நடிகராக விளங்கிய
    .................................................. ...........................

    ஏனைய ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 31 படங்கள் மட்டுமே,
    நடிகர் திலகம் நடிப்பில் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற படங்களின் பட்டியல்,
    *** நூறு நாட்களுக்கும் மேல் ஓடியவை
    1) பராசக்தி
    2) திரும்பிப் பார்
    3) மனோகரா
    4) எதிர்பாராதது
    5) காவேரி
    6) மங்கையர் திலகம்
    7) நான் பெற்ற செல்வம்
    8) பெண்ணின் பெருமை
    9) அமரதீபம்
    10) வணங்காமுடி
    11) புதையல்
    12) உத்தம புத்திரன்
    13) பதிபக்தி
    14) சம்பூர்ண ராமாயணம்
    15) அன்னையின் ஆணை
    16) சபாஷ் மீனா
    17) வீரபாண்டிய கட்டபொம்மன்
    18) மரகதம்
    19) பாகப்பிரிவினை
    20) இரும்புத்திரை
    21)தெய்வப்பிறவி
    22) படிக்காத மேதை
    23) விடிவெள்ளி
    24) பாவ மன்னிப்பு
    25) பாச மலர்
    26)ஸ்ரீவள்ளி
    27) மருத நாட்டு வீரன்
    28) பாலும் பழமும்
    29) பார்த்தால் பசி தீரும்
    30) படித்தால் மட்டும் போதுமா
    31) ஆலயமணி
    ** 75 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலைப் பெற்று தந்த படங்கள்
    32) பணம்
    33) இல்லற ஜோதி
    34) அந்த நாள்
    35) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
    36) தூக்கு தூக்கி
    37) கள்வனின் காதலி
    38) தெனாலிராமன்
    39) ராஜா ராணி
    40) ரங்கோன் ராதா
    41) மக்களை பெற்ற மகராசி
    42) தங்க மலை ரகசியம்
    43) அம்பிகாபதி
    44) பாக்கியவதி
    45) சாரங்கதாரா
    46) காத்தவராயன்
    47) தங்கப் பதுமை
    48) பாவை விளக்கு
    49) புனர் ஜென்மம்
    50) நிச்சய தாம்பூலம்
    51) பலே பாண்டியா
    52) வடிவுக்கு வளைகாப்பு
    53) பந்த பாசம்

    .......................................

    ** ஏனைய அனைத்து நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்கள், 30
    1)ஔவையார்
    2) தேவதாஸ்
    3) ரத்தக்கண்ணீர்
    4) கணவனே கண் கண்ட தெய்வம்
    5) மிஸ்ஸியம்மா
    6) நல்லத் தங்காள்
    7) டவுன் பஸ்
    8) குல தெய்வம்
    9) பாச வலை
    10) ரம்பையின் காதல்
    11) சதாரம்
    12) எங்க வீட்டு மகாலட்சுமி
    13) மாயா பஜார்
    14) முதலாளி
    15) நீல மலைத் திருடன்
    16) பூலோக ரம்பை
    17) மாலையிட்ட மங்கை
    18) வஞ்சிக் கோட்டை வாலிபன்
    19) கல்யாணப்பரிசு
    20) மணி மேகலை
    21) மின்னல் வீரன்
    22) வண்ணக்கிளி
    23) எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
    24) கைதி கண்ணாயிரம்
    25) களத்தூர் கண்ணம்மா
    26) பாக்யலட்சுமி
    27) குமுதம்
    28) தேன் நிலவு
    29) நெஞ்சில் ஓர் ஆலயம்
    30) சாரதா
    31) காலம் மாறி போச்சு
    இப்போது. தெரிந்து கொள்ளலாம் நடிகர் திலகத்தின் இமாலய சாதனையை
    பத்து ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் ( 83/432) 20% பங்களிப்பை நடிகர் திலகம் அளித்தது போன்று உலகில் எவரும் கொடுத்ததில்லை, அப்படியே நடித்து இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களை கொடுத்து இருக்க முடியாது ( 53/101)
    பதிவைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்..

    ----------------------------------------------------------------------------------------------
    சில பின்னூட்டங்கள்

    E நடிகர் திலகம் ஒரு சாதனை நாயகன்.அவரது படத்தின் வெற்றியை அவரது மற்றொரு படம்தான் முறியடித்து இருக்கிறது

    (ஆமாம் சார், நீங்கள் சொல்லும் அடிப்படையில் எத்தனையோ படங்கள் வெள்ளி விழா வாய்ப்பை இழந்தன, குறிப்பாக உத்தம புத்திரன் 23 வாரங்கள் ஓடிய நிலையில் நடிகர் திலகத்தின் அடுத்த படத்திற்காக மாற்றிய சூழ்நிலை)
    ............
    சிவாஜி சினிமாக்கள்,,, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதையல்கள்,,, நடிகர் திலகத்தின் சம்பளம் ஆரம்பம் முதலே அவரது உழைப்புக்குத் தகுந்ததை விட வெகு குறைவு,,, தன்னை நம்பி படம் எடுக்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்,,, படத் தயாரிப்பு செலவுகளையும் அநாவசியமாக இழுத்து விட மாட்டார்,,, பெரிய பேனர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஒரே மாதிரித் தான் நினைப்பார்,,, ஆகவே அவரது படங்கள் குறைந்த பட்சம் 50 நாட்கள் ஓடினாலே தயாரிப்பாளர்கள் போட்ட முதலை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்,,, ",,, சிவாஜியை நம்பி ரிஸ்க் ஆன சபஜெக்ட் செய்தாலும் கூட முதலுக்கு மோசம் வராது,,, ஆகவே மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் நல்ல வருமானம் ஈட்டியவை,,, அடுத்தடுத்து சிவாஜியை வைத்து படங்கள் பண்ணவே எல்லா தயாரிப்பாளர்களும் விரும்புவர்,,, ஏனெனில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான்,,, கொசுறு தகவல் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100 நாட்கள் ஓடிய படம் என்று நினைக்கிறேன்,,,

    ( சார், அருமையாக புரியுமாறு நடிகர்திலகத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த உறவு முறையை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள், தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்த காரணத்தால் தான் குறுகிய காலத்தில் நடிகர்திலகம் அத்தனை எண்ணிக்கையிலான படங்களை கொடுத்து இருக்கிறார்,)

    ( நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலை பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் தொடர்பான புத்தகங்கள் தந்திருக்கும் விவரங்கள் மட்டுமே, அதையே தான் nadigar Thilagam. Com லிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது,
    எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடுதான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நூறு நாட்கள் ஓடிய படம் என்று)
    .................................................. ...........

    தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் சிவாஜியை சுற்றிதான் சினிமா வியாபாரம் இருந்தது என்று எழுதினார் .அதை நீங்களும் படித்திருக்கலாம்

    .........................................

    அண்ணாச்சி இதில் கள்வணின் காதலி 100நாள் படம் தானே படம் நன்றாக ஓடியது என்று எனது சித்தப்பா என் சின்ன வயதில் சாென்ன ஞாபகம்

    .................................................. ...

    மக்களைப் பெற்ற மகராசி முதல் வட்டாரத் தமிழ் பேசி வெளிவந்த வெற்றிப்படம் அதாவது இதில் காெங்குத் தமிழ் பேசி நமது தலைவா் அசத்தியிருப்பாா் படத்தை தயாாித்தவா் வி கே ராமசாமி அவா்கள் வி கே அவா்களை தயாாிப்பாளராக உயா்த்தியவா் நமது தலைவா்தான்

    ( உண்மை வி.கே.ஆர் அவர்களை தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம், சிறந்த நடிகர் என சினிமா ரசிகர்கள் மூலம் நடிகர் திலகத்திவிற்கு பட்டம் வழங்கப்பட்டது)

    (வி.கே.ஆர் அவர்களிடம் எந்த வித முன் பணமோ, சம்பளமோ பெற்றுக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம், படம் பெரும் வசூலைக் குவித்தது,)

    .................................................. .........
    தங்கமலை ரகசியமும் 100நாள் படம் என என் சித்தப்பா சாெல்லியிருக்கிறாா் அப்போது டாா்ஜான் என்று நமது தலைவரை சாென்னாா்களாம்

    ( அறியப்பட்ட செய்திதான், எனக்கும் இது போன்ற ஆதங்கம் இருக்கிறது, நடிகர் திலகத்தின் வெற்றி பெற்ற 100 படங்கள் ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்று,
    இந்த பதிவின் மூலம் நண்பர்கள் யாராவது ஆதாரம் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம்)

    ......................................
    நான் கேள்விப்பட்டதை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.நடிகர்திலகம் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கமாட்டர் என்பதற்கு ஒர் உதாரணம். தங்கபதக்கம் படத்தில் ஒர் காட்சியில் நடிகர்திலகம் அவர்கள் சாப்பிட்டு விட்டு டைனிங் டேபிளிலிருந்து எழுந்து வருவது pol ஓர் காட்சி. அதற்கு திரு மகேந்திரன் அவர்கள் டின்னர் ஏற்பாடு செய்வதாக கூறினார்.அதற்கு நமது நடிகர்திலகம் அவர்கள் அதெல்லாம் தேவையில்லை என கூறிவிட்டு அந்த காட்சியில் சாப்பிட்டு விட்டு வருவது pol பல்லை துருத்திக்கொண்டு வருவார். அந்த காட்சி படத்தில் மிகவும் தத்ரூபமாக வந்ததை கண்டு திரு மகேந்திரன் அவர்கள் நெகிழ்ந்து போனார்.
    (சரியான தருணத்தில் தேர்ந்த உதாரணம் சார்,
    மிக்க நன்றி)

    .................................................. ..............
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #3906
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பலேபாண்டியாவுக்கு இன்று 55 வயது









    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #3907
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Harrietlgy liked this post
  12. #3908
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஒரு சின்ன அரசியல் விவாதம், உடனே அரசியல் நமக்கு வேண்டாமே என்று சொல்லி விடாதீர்கள் பணி புரியும் அலுவலகத்தில் உள்ளவர்கள் மத்தியில் நடந்தது
    இன்றைய அரசியல் நிலைமை குறித்து ஆளுக்கு ஆள் ஒரு கருத்து அவரவர்கள் தான் சார்ந்த கட்சிகளை விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக விவாதித்தனர், அதாவது ஒரு குரூப் திமுக சார்பு அவர்களுக்கு எதிர் குரூப் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், இன்னும் பிற கட்சிகளின் சார்பு ஆதரவாளர்கள்,
    சில நிமிடங்கள் விவாதித்தவர்கள் இறுதியாக என்னைக் கிளறினார்கள் அதாவது அ...வர்களின் கேள்வி "யாருக்கு தகுதி இருக்கிறது இந்த நாட்டை ஆள்வதற்கு"
    அதற்கு சாதாரணமாகத்தான் கூறினேன இப்போதும் சரி அல்லது பெருந்தலைவருக்குப் பின ஆணடவர்களும் சரி யார் தான் நேர்மையின் வழி வந்தவர்கள் இருக்கிறார்கள், அல்லது இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறது என கூறுவதற்கு என் நான் சொன்ன மாத்திரம் ஒரு நண்பர் ஆவேசப்பட்டுவிட்டார், அட என்ன சார் உங்களுடைய எண்ணம் அந்த தகுதி சிவாஜிக்கு மட்டுந்தான் இருக்குதுன்னு சொல்ல வருவீங்க " என்னமோ சிவாஜியின் அப்பா என்ன சுதந்திர போராட்ட தியாகி போல "
    ஒரு கனம் நம்மால் உடனடியாக எதுவுமே பதில் பேச முடியவில்லை,
    "அடப் பாவிகளா சிவாஜியின் அப்பா சுதந்திர போராட்ட தியாகிதானே, சிவாஜி இந்த உலகிற்கு பிறந்த போது அவரது தந்தை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதனால் 7 ஆண்டுகள் சிறையில் வாடினாரே" ,
    இந்த வரலாற்று செய்திகள் எல்லாம் வரும் தலைமுறைக்கு எப்படி தெரிய படுத்தப் போகிறோம்?
    சிவாஜியின் வரலாறு தெரியாமல் போனதால் தானே சிலர் சிலை விஷயத்திலும் மணி மண்டபம் தொடர்பாகவும் கூட எதிர் கருத்து தொடுக்கும் நிலை இருக்கிறது..



    ( from face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Harrietlgy liked this post
  14. #3909
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாகர்கோவில் வசந்தம் பேலஸ் தினரி 4. காட்சிகளக வெற்றி வாகை சூடுகிறார் ரங்கதுரை

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #3910
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    புதிய படங்களை ஒரம் கட்டும் தலைவரின் சாதனை

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •