Page 375 of 400 FirstFirst ... 275325365373374375376377385 ... LastLast
Results 3,741 to 3,750 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3741
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3742
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3743
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3744
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3745
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3746
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கடவுள் என் வாழ்வில் "கடன்காரன்",,,, கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்,,,, ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீகூட "குடிகாரன்",,,, கடவுளை கடன் காரன் என்றும் குடிகாரன் என்றும் மற்ற நடிகர்கள் பாடினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? சிவாஜி நடித்தால் ஏற்றுக் கொள்வார்கள்,,,, காரணம் "லார்டு ஷிவா" முதற்கொண்டு பெரும்பாலான கடவுள்களாக கண்களுக்கு காட்சி தந்தவர் என்பதை மக்கள் அறிவர்,,, அது சிவாஜியின் பெருமை,,,,
    சிவாஜியை கமர்ஷியல் ஹீரோவாக்கி காசு பார்க்கிறார் பாலாஜி என்று அப்போது சொல்பவர்களும் உண்டு,,, ரீ மேக் படங்களாக எடுத்து ஹிட் அடிக்கிறார்,, சொந்த சரக்கு இல்லையா என்று குற்றம் சாட்டியவர்களும் உண்டு,,, இரண்டுக்கும் ஒரே பதில் கமர்ஷியலாக ஒரு படம் கல்லாவை நிரப்பினால்தான் அடுத்தடுத்து படம் எடுக்கும் ஆர்வம் தயாரிப்பாளர்களுக்கு வரும்,,, சிவாஜிக்காக வெகுஜன மக்களை சென்றடைந்த மாற்று மொழி படங்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து அவரது நடிப்புக்கு படையல் செய்தவர் பாலாஜி என்றால் மிகையாகாது,,, அப்படித்தான் ராஜேஷ் கன்னா நடித்த துஷ்மன் படத்தை நீதி என்று பெயரிட்டு தமிழுக்கு கொண்டு வந்தார்,,,,
    "ஹீரோ 72".... என்றால் சிவாஜியைக் குறிக்கும்,,, 1972ல் அந்த ஹீரோவுடைய படங்களில் ஓப்பனிங் ம் சரி ஃபினிஷிங் கும் சரி பாலாஜி படங்கள்தான்,,, கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆமாங்க அந்த வருஷம் ரெண்டு லட்டு தின்னுபுட்டாருங்க பாலாஜி,,,,
    மாப்பிள்ளையை பார்த்துகோடி மைனாக்குட்டின்னு ஓப்பனிங் ஸாங்ல சகுந்தலாவோடு ஒரு செம்ம ஆட்டம் போட்டு விட்டுத்தான் கதைக்குள்ளே நுழைவார் சிவாஜி,,, 80களில் ரீரிலீஸ் செய்யும் போது இந்தப் பாடலுக்கு ஒன்ஸ் மோர் கேட்டு கலாட்டா செய்தவர்கள் நாங்கள்,,, அந்த வீரதீர பராக்கிரமங்களை கமெண்ட்ஸ்ல பார்க்கலாம்,,, லாரி டிரைவர் என்றால்,,, அதுவும் எந்த வித ஐடியாலஜியும இல்லாத ஒருவர் எப்படி இருப்பார்? இந்தப்படத்தில் கண்முன் பார்க்கலாம்,,, சும்மா ஒப்புக்கு ஒருசீன்ல டிரைவர் யூனிஃபாம்ல வந்துட்டுட்டு கனவுக்காட்சிக்கு போய் விதவிதமாக காஸ்ட்யூம் அணிந்து கதைக்கு மேட்ச்லெஸ் ஆக வருபர் அல்ல சிவாஜி,,, கதை என்ன கேட்கிறதோ கதாபாத்திரத்திற்கு என்ன காஸ்ட்யூமோ அதில் மட்டுமே வந்திருக்கிறார்,,, ஜெயலலிதாவை புக் பண்ணியாச்சே என்று ஒரு டூயட் ஸாங்கிற்குகூட டிமாண்ட் பண்ணாதவர் சிவாஜி,,, ஒரே ஒரு காட்சியை தவிர படம் முழுதும் ஒரே காஸ்ட்யூமில் வந்து அந்த கதாபாத்திரத்தை உண்மைக்கு நெருக்கமாக செய்ததில் சிவாஜி அவர்கள் பங்கு அதிகம்,,, அதுவும் ஹீரோ 72ல்,,,,,
    பெருங்குடிகாரனாக சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு லாரி ஓட்டும் லாவகம்,,, விபத்து நடந்து ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்வாதாரமான ஒரு இளைஞனையும் ஒரு பசுவையும் கொன்றுவிட்டு கோர்ட் படியேறும் அலட்சியம் தண்டனையே அந்த குடும்ப பராமரிப்புதான் என்று தீர்ப்பு வரும் போது அடிக்கும் கமெண்ட்ம் போலீஸ் அதிகாரி பாலாஜியுடன் அந்த கிராமத்திற்குள் வரும் அசால்ட்நெஸ்,,, அந்த குடும்ப உறுப்பினர்கள் வெறுப்புக்கு ஆளாகும் போது காட்டும் துடிப்பு,,, பழக்கமில்லாத விவசாயத் தொழிலை அவர்களுக்காக ஏற்கத் தொடங்கும் மனநிலை,,, ஒவ்வொறுவரின் கருணைப் பார்வைக்காக ஏங்கும் ஏக்கம்,,, கடைசிவரை சௌகார் ஜானகி தன்னை மன்னிக்க தயாரிலலை எனும் போது ஏற்படும் விரக்தி,,, கிளைமேக்ஸில் அவரை காப்பாற்றி மொத்த குடும்பத்தையும் வசப்படுத்தும் மனநிறைவு,, தண்டனைக்காலம் முடிந்து பாலாஜியுடன் செல்ல மறுத்து தான் அந்த குடும்பத்தில் ஆயுட்சிறைவாசி ஆக இருக்க விரும்பும் செய்தியை நெகிழ்வுடன் கூறிச் செல்வது வரை ஒரு பக்குவப்பட்ட நடிப்பை நமக்கு வழங்கி இருக்கிறார்,, கெட்டவன் சந்தர்ப்பவசத்தில் கெட்டுப் போனவன் வாழ்வு முழுவதும் கெட்டவன் ஆகவே இருப்பதில்லை,,, வாய்ப்பும் சந்தப்பர்களும்தான் ஒரு மனிதனின் குணாதியங்களை நிர்ணயிக்கிறது என்பதை நடிகர் திலகத்தை வைத்து சொல்வதற்கு இந்த கதையை அவசியப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி,,, அதுவும் உண்மைதான்,,,
    சிவாஜி - சௌகார் இருவரும் ஒரு படத்தில் ஜோடியாகவோ வெவ்வேறு கதாபாத்திரங்களாகவோ கமிட் ஆகிறார்கள் என்றால் அந்தப் படங்களை நாம் அவசியம் பார்த்தாக வேண்டும் என்பது முக்கிய விதி,,, அவர்களது ப்ளாஷ் பேக்கை பார்த்தோமே ஆனால சில விஷயங்களை பரிந்து கொள்ள முடியும்,, அழுத்தமான கதாபாத்திரங்கள் அல்லது நல்ல கதையம்சங்கள் இருவருக்கும் நடிப்பில் சவால் விடும் கதாபாத்திரங்கள்,,, இவை மூன்றுமோ அல்லது ஓரிரண்டு விஷயங்களோ அவசியம் இருககும்,,, படிக்காத மேதை, புதிய பறவை, பார் மகளே பார், பாலும் பழமும், உயர்ந்த மனிதன் என்று ஜோடி சேர்ந்த பல படங்களும் எங்கள் தங்க ராஜா நீதி பட்டாகத்தி பைரவன் உட்பட பிற படங்களும் குறிப்பிடத்தக்கவை,,, அந்த அளவுக்கு இருவருக்குமான மேட்ச் சுவாரஸ்யமாக இருக்கும்,,,,
    திருடன், கொலைகாரன், கைதி, குடிகாரன், பெண் பித்தன், ரௌடி,,,, இது போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களை சிவாஜி செய்வதற்கும் மற்ற நடிகர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது,,, சிவாஜி செய்யும் போது மட்டும் அந்த வெறுப்புணர்வு ஆடியன்ஸ்க்கு வராததற்கு காரணம் அந்தந்த நெகடிவ் பாத்திரங்களை அவர் ஹேண்டில் பண்ணும் முறை,,, அதாவது பார்வையாளர்களுக்கு இப்படி மோசமானவராக போய் விட்டாரே யார் இவருக்கு என்ன கேடு செய்தார்கள் என்று மனதுக்குள் கேள்வி கேட்பார்கள்,,, அல்லது இந்த சமுதாயம் இந்த மனிதனை ஏன் கெட்டவனாக்கியது என்று சமுதாயத்தின் மீது பழி போடுகிறவர்களும் உண்டு,,, காரணம் இவரது நெகடிவ் ரோல் நடிப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க இயல்பாக அமைவதுதான் காரணம்,, இந்த சிறப்புகளை பிற நடிகர்களிடம் காண முடியாது,,, இந்த யுக்தியை மோப்பம் பிடித்துத்தான பாலாஜி தனது பெரும்பாலான படங்களில் சிவாஜியை பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார்,,, இந்த நீதி படமும் அந்த வகையைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம்தான்,,,
    இப்படி நுணுக்கமான எத்தனையோ விஷயங்கள் அந்த மனிதனின் நடிப்புப் பெட்டகத்தினுள் புதைந்து கிடந்திருக்கிறது,,, அவர் காலத்தில் அவரோடு பயணித்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவருள் இருந்து பாதி புதையலைக்கூட கொண்டு விரவில்லை,, சராசரி மனித ஆயுளைத்தானே இறைவன் அவருக்கு கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டார்,,, ஸோ அந்த மனிதர் கடவுளை கடன்காரன் என்று திட்டியது தப்பில்லை தானே!!!





    (முகநூல் ஜாகிர் hussain -நடிகர் திலகம் fans கிளப்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. Likes Harrietlgy liked this post
  9. #3747
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3748
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மயக்கும் மெலடி
    மெலடி மெட்டுக்கள்,தத்துவம்,மென்மையான தாலாட்டு ..இதையெல்லாம் தாண்டி இன்று ஒரு பதிவு.இந்தப் பாடல் ஒரு ஜாலி பாடல்.....பாடியவர் ஏழிசை வேந்தன் அவரைப் பற்றி எவ்வளவு கூறுவது....என்ன கவி பாடினாலும் கவியரசரைப் போல வருமா ?பாடல் வரிகள் கண்ணதாசன்...இசை மெல்லிசை மன்னர்.....படம் தங்கை 1967.....பாடல் கேட்டவரெல்லாம் பாடலாம்.....காட்சியில் நடிகர் திலகம்.....நடிகர் திலகம்...நடிகர் திலகம்....அப்படி ஒரு ஆட்டம்...உடல் மொழி,கண் அசைவு...கை அசைவு......கூட புன்னகை அரசி, பாலாஜி ......
    ஒரு பார்ட்டி.....அதில் மைக்கைப் பிடித்துக் கொண்டு பாடி ஆடி மகிழ்விக்கும் காட்சி.....புகுந்து விளையாடி இருப்பார்....டி எம் எஸ்ஸின் குரல் ஒன்றும் அவருக்குப் புதிதல்ல...ஆனால் அந்தப் பாடல் காட்சியில் இவரைத் தவிர வேறு யார் மேலும் கண் வைக்க முடியாத ஒரு ஆளுமை....பாடல் காட்சியில் எப்படி நடிப்பது என்று ஒரு பள்ளி வைத்தால் அதில் இந்தப் பாடல் கண்டிப்பாக முக்கிய பாடமாக இருக்கும்...பின்னு...பின்னு...பின்னுதான்..
    பாடலின் வரிகள் தவிர ஸ்பெஷல் எபெக்ட் வேற பாடலில்...மெல்லிசை மன்னரின் வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பை மறக்க முடியாத பாடல்....
    பாடல் ஆரம்பம் க்ளாப்சுடன் ....தக் தக் தக் ஜ ஜும் ஜும் ......காதில் கையைத் தடவிக்கொண்டே.ஹோ ஹோ ஹோ ..ஸ்டைலாக வாத்தியக் கலைஞர்களுக்கு சமிக்கை செய்யும் அழகென்ன....
    "கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
    பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும்
    மனமும் குளிரும் முகமும் மலரும் ஹோ ஹோ ஹோ ஹோஹோ....."
    பாட்டுக்கு தாளம் போடலாம்......தாளம் அமைத்திருக்கும் சிறப்பை சொல்லுவதா...அதை டி .எம்.எஸ் பாடி இருக்கும் லயத்தை பாராட்டுவதா...அந்த தாளம் போடுவதில் கூட ஒரு நளி னத்தைக் காட்டும் நம்மவரை சொல்வதா ?மொத்தத்தில் கேட்பவரை எல்லாம் தாளம் போட வைத்து விடும் காம்போசிஷன் ........புன்னகை அரசியின் முகமும் மலரும்....ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஹோ.....பாடலைத் தொடரும் பாங்கோஸ்....கிடார்....குழல்.......ஆஹா ஆஹா ஆஹா....
    கிடாரின் மெ ட்டைத் தொடரும் ஹுக்கும் ஹுக்கும் ......
    "சீட்டுக் கட்டு ராணி மாப்பிள்ளைத் தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில்..
    கூட்டத்தோடு நானும் பார்த்துக் கொண்டு நின்றேன் கூட வந்த தோழி என்னைப் பார்த்தாள் "
    இனி வரும் வரிகள் டோலக்குடன்..
    கண்ணாலே ஜாடை செய்து கையேடு என்னைக் கொண்டு போனாள் தோழியின் வயது அறுபதுக்கு மேலே"
    இதற்கு ஒரு உடல் அசைவு...கண்ணசைவு பாருங்கள்.....அசத்தி விடுவார் அசத்தி....
    "ஸ் வீட் சிக்ஸ்டி "என்று சொல்லி விஜயாவைப் பார்த்து ஒரு கண்ணடி..........
    அரங்கம் முழுக்க சிரிப்பொலி...தொடரும் கேட்டவரெல்லாம்.....
    "அடுத்த சரணம் விஜயாவிடம்...
    "அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன் அச்சத்தோடு நின்றாள் அழகோடு "....நின்றா..ள் இங்கே ஒரு சங்கதி....அதிலே இருக்கு ஆயிரம் சங்கதி...."அழகோடு...அழகோடு..."...அழகில் மயங்கி ஒரு கோடு.....அப்படி போடு...!
    'அள்ளி வைத்த கூந்தல் துள்ளி விளையாட கள்ள நகை செய்தாள் கனிவோடு"
    அது போதும் போதுமென்று பலகாலம் வாழ்க வென்று இசை பாட நானும் வந்தேன் சுவையோடு...."அந்த நிறைவை கண்ணாலே காட்டி வாழ்த்தும் நடிகர் திலகம்....இசை பாட நானும் வந்தேன்....இங்கே டி எம்.எஸ்.....அப்பப்பா....புல்லரிப்புதான் .....
    நான் ஒரு தீவிர நடிகர் திலகம் ரசிகை,மெல்லிசை மன்னர் வெறியள் ,கவியரசரின் அடிமை...டி எம்.எஸ்ஸின் விசிறி.........அதனால் இத்தனை பில்ட் அப் என்று யாராவது நினைப்பீர்களானால் பாடல் காட்சியைப் பாருங்கள்........பிறகு சொல்லுங்கள்....
    மறுபடியும் கேட்டவரெல்லாம் பாடலாம் பல்லவி ,அதன் முடிவில் ஒரு மெல்லிய நடன அசைவு....விஜயாவும் இணைந்து கொள்ள...."பப்பரப் பப்பர பர பாப்பா பா ட ட ட ட டடடா ....கையை மேலே தூக் குவதென்ன விஜயாவின் நடனத்திற்கு தொடையில் தாளம் போட்டுக் கொண்டே ஆடும்ஸ்டைல் என்ன......ஸ்டைல் ஸ்டைல் என்று இனிமேல் வாயத் திறந்து சொல்ல முடியாத ஒரு ஸ்டைல்......ஸ்டைல் சக்ரவர்த்தி...
    ஒரு அல்டிமேட் பொழுதுபோக்குப் பாடல்.......இசையமைப்பு...அதன் கம்பீரம்.....ஒரு டீம் ஒர்க் பாடல்.....உங்களுடன்


    Kettavarellam-Thangai.

    (முகநூல் விசாலி ஶ்ரீராம் -நடிகர் திலகம் fans கிளப்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Harrietlgy liked this post
  12. #3749
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வளர்த்த கடா முட்ட வந்தா வெச்ச செடி முள் ஆனா " "இன்னும் நன்மை செய்து துன்பம் தாங்கும் உள்ளம் கேட்பேன்"
    இந்தப் பாடல் வரிகள் எல்லாம் படத்திற்க்காக மட்டுமே அமைந்தவை என்று நினத்து இருந்த எனக்கு இந்த வார செல்லுலாய்ட் சோழன் தொடர் பாடல்களின் தனித்துவத்தை உணர்த்துகிறது,
    ... நடிகர் திலகத்தின் வரலாற்றை புரட்டுவோமானால் அடிக்கடி துரோகிகள், நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்ற செய்திகளை படிக்காமல் இருக்க முடியாது, நான் கூட கொஞ்சம் யோசித்து இருக்கிறேன் ஏன் என் போன்ற வயது ரசிகர்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை, நடிகர் திலகத்திற்கு அப்படி என்ன நம்பிக்கை துரோகம் செய்து இருக்க முடியும், நான் தெரிந்து கொண்ட வரை அரசியலில் 1988 கால கட்டத்தில் தனிக் கட்சி த.மு.மு தொடங்கிய போது அவர் யாரையெல்லாம் நம்பி இருந்தாரோ யாருக்கெல்லாம் உதவிகள் செய்து இருந்தாரோ அவர்கள் எல்லாம் துனை நிற்க வில்லை, துரோகம் இழைத்தார்கள் என்று அறிந்து வைத்திருந்தேன், திரையுலகில் யாரையெல்லாம் தூக்கி விட்டாரோ, யாருக்கெல்லாம் நடிக்க வாய்ப்புகள் கொடுத்தாரோ அவர்கள் எல்லாம் அரசியல் மேடைகளில் நடிகர் திலகத்தை தூற்றினார்கள் அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் கடுமையாக பேசியவர் என தெரிந்து வைத்து இருக்கிறேன்,
    ஆனால் இந்த வார " செல்லுலாய்ட் சோழனின் 158 வது தொடரில் உள்ள செய்திகள் நமக்கு துரோகம் எது என்பதையும் நம்பிக்கை துரோகிகள் என்றால் யார் என்பதையும தொடரை படித்தோமானால் மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
    எத்தனை பெரிய செய்திகள் இது,
    நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிடவும் அன்றைய நாட்களில் அந்தத் துறைக்காக வேண்டி எத்தனை மேடை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி இருக்கிறார், எத்தனையோ துணை நடிகர்களின் வாழ்விற்கு சரியான கதை இல்லை என்று தெறிந்தும் நடித்துக் கொடுத்து இருக்கிறார்,
    ஆனால் அந்த நடிகர் சங்கம் அவருக்கு செய்த துரோகம்,
    தேவர் மண்டபம் பற்றிய செய்தி என்னை கலங்க வைத்து விட்டது, அந்த சிறப்பு மிக்க தேவர் மண்டபம் உருவாக்க தேவையான அன்றைய மதிப்பின் ரூ1.40 லட்சத்தில் நடிகர் திலகம் மட்டுமே 50% மேலாக கொடுத்தும் மண்டப திறப்பு விழாவிற்கு நடிகர் திலகம் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட செய்தியை படிக்கும் போது நடிகர் திலகம் இதய நோயில் ஏன் அகப்பட்டார் என்பது விளங்குகிறது,
    அடுத்த செய்தி மூப்பனார் அவர்களை பற்றியது, இந்தச் செய்தியை பொறுத்த அளவில் தற்போது முகநூலில் அடிக்கடி படித்து வந்தாலுமே தொடரில் விவரமாக தெரிந்து கொள்ளும் போது 1996 ல் த.மா.கா. உருவான தருணத்தில் அதற்காக கிளை உருவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, கொடி ஏற்றுதல் என ஈடுபட்டதை நினைத்தால் வேதனை மிகுதியாகிறது. அப்போதைய எண்ணம் அதிமுக வை அகற்ற வேண்டிய அவசியம் என்பதனால் இருந்த வேகம் மட்டுமே,
    இதையெல்லாம் படிக்கும் போது இறைவன் நடிகர் திலகத்திற்கு அதிகம் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை கொடுத்திருந்தும் இதயத்தின் ஆயுளை குறைத்து இருக்கிறான் என்பது விளங்குகிறது...
    இனைப்பில் திரு எழுத்தாளர் இன்பா அவர்கள் எழுதி வரும் செல்லுலாய்ட் சோழன் தொடரின் 158 பாகம் ( தமிழக அரசியல் இதழில்)



    (முகநூல் சேகர் பரசுராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #3750
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •