Page 374 of 400 FirstFirst ... 274324364372373374375376384 ... LastLast
Results 3,731 to 3,740 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3731
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    "சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்.. உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலைப...்பொக்கிசம்... இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட, திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை (நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...
    ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை, உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
    தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..
    இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
    நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
    அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
    வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
    ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்.... ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும் அந்த ரசிகர் கூட்டம்... மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full... சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல... சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
    படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
    இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும் அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
    அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
    திறமை என்னதான் வலிமை என்றாலும் இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்... ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...
    மேலே உள்ள கருத்துகள் ஒரு நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட ஒரு ரசிகரின் உள்ளத்தின் எண்ண ஓட்டங்கள்.
    அதனை படித்தபோது அந்த திரைப்படம் குறித்த எனது முந்தைய பதிவு ஒன்று நினைவில் நிழலாடியது. உங்களுடன் பகிர்கின்றேன்.
    சமீபத்தில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தினை காணும்
    ஒரு வாய்ப்பு கிட்டியது. மிகவும்நடிகர் திலகத்துக்காகவே அமைக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதை. அந்த கால கட்டத்தில் பொருத்தமான ஒரு நடிகையாக இருந்த வாணிஸ்ரீ ஒரு கதாநாயகியாகவும் மற்றொரு நாயகியாக நடிகை லதா நடித்திருந்தனர்.
    அருமையான பாடல்களை உள்ளடக்கிய
    அழகான ஒரு பொழுதுபோக்கு படம். நடிகை லதா நடிகர் திலகத்துடன் நடித்த ஒரே படம் இதுதானோ..? கதை என்று கூறினால், விமான பைலட் ஆக பணிபுரியும் அசோக் சிவகாமியை காதலிக்கிறார், அவர்களின் உறவால் சிவகாமி கர்ப்பமுற, வந்து மணமுடிப்பேன் என செல்லும் அசோக் ஒரு விபத்தில் மரணமடைகிறார்.
    சிவகாமி உண்மை நிலையினை தனது தந்தையிடம் கூற அவர் அதிர்ச்சியில் மரணமுறசிவகாமி கஷ்டத்துக்கிடையே ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறார். குழந்தையை வளர்க்க சிரமபடுவதால் ஒரு பணக்கார குடும்பத்திடம் குழந்தையினை ஒப்படைத்து விட்டு, அங்கேயே வேலைக்காரியாக சேர்ந்து
    பணிபுரிகிறார், அந்த குடும்பத்தின் தலைவருக்கு இவளை பற்றிய உண்மைகள் தெரியும், ஆனாலும் வேறு யாருக்கும் தெரியவேண்டாம் என்று சிவகாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க...அவரும் அவர் மனைவியிடமும் உண்மையை கூறவில்லை. இதற்கிடையில் வீட்டுக்கார அம்மாவின் தம்பி ஆர்.எஸ் மனோகர் சிவகாமியை தன காம இச்சைக்கு பலியாக்க முயல அதுகண்ட சிவகாமியின் மகன் கத்தியால் மனோகரை குத்திவிட்டு கத்தியுடன் தப்பி ஓடிவிடுகிறான்.குற்றத்தை, தான் ஏற்றுக்கொண்டு சிவகாமி சிறைக்கு செல்கிறார். இதற்கிடையில் நடந்த உண்மைகளை அறிந்த வீட்டுக்கார அம்மா, தன் கணவரிடம் கூறி,சிவகாமியை விடுவிக்க ஏற்பாடு செய்கிறார். இருபதாண்டு சிறை வாசத்துக்கு பின் வெளியான சிவகாமி அந்த வீட்டுக்கு வருகிறார். அங்கிருக்கும் லதாவுடன் அன்புடன் பழக இருவருக்கும் நல்ல பாசம் ஏற்படுகிறது.
    தனது வருங்கால காதலனை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லும் லதா, சிவகாமியையும் துணைக்கு அழைத்து செல்ல...
    அவளின் காதலனாக அங்கே வந்திருப்பதோ...சிவகாமியின் மகன்...
    அச்சு அசலாக தன் கணவனை உருவத்தை ஒத்து வந்திருக்கும் அவனை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் சிவகாமி.
    ஆயினும் மகனுக்கு தன் தாயை சிறுவயதிலேயே பிரிந்ததால் அடையாளம் தெரியவில்லை,
    ஒருமுறை சிவகாமியின் டயரியை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதில் இருந்த தன்னுடைய இளம் பருவ புகைப்படத்தில் உடன் இருக்கும் அம்மா சிவகாமி என்பதனை அறிகின்றான். உண்மையினை உணர்ந்து...தனது தாயினை தனக்கு விருது அளிக்கும் விழாவுக்கு அழைக்கிறான். தன் அப்பாவின் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு உண்மையை உணர்கிறான்.
    ஆங்கே விருது தன் தாயின் கைகளால் விருதை பெறுகிறான்.
    படத்தின் வெற்றிக்கு பக்க துணையாக இருப்பது.. நடிகர் திலகம்...நடிகை வாணிஸ்ரீ மற்றும் தேனாய் இனிக்கும் பாடல்கள்..ஆகா..கேட்க கேட்க..காதுக்குள் தேனை பாய்ச்சுகிறார்மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள். ஏற்கனவே ஹிந்தியில் ஆராதனா என்று வெளியாகிஇருந்த மாபெரும் வெற்றிப்படத்தின் ரீமேக் என்றாலும் அந்தப்படத்தின் பாடல்களும் மிகவும் பிரபலமானது என்றாலும்...அதனை தொடாமல் M.S.விஸ்வநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அருமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
    வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில், என் ராஜாவின் ரோஜா முகம், ஆடிக்குப்பின்னே ஆவணி, போன்ற பாடல்களை கம்பீரக்குரலோன் டி.எம்.சௌந்தர ராஜன் அவர்கள் தேனிசைக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி.சுசீலா மற்றும் தனித்துவமான கவர்ச்சிக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி. ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து பாட மற்றும் எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..என்ற பாடலை அரிதாக தனது குரலை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தும் எம்.எஸ்.வீ அய்யா அவர்கள் பாடியுள்ளார்கள்..
    கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் கைவண்ணத்தில் ' எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது ' என்ற S.P. பாலசுப்பிரமணியம் அவர்களின் கவர்ச்சிக்குரலில் ஒரு பாடலும், உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்... என்ற எக்ஸ்பிரஸ் வேகப்பாடல் மற்றும் இனியவளே என்று பாடி வந்தேன்...போன்ற பாடல்களை காந்தர்வக்குரலோன் சௌந்தரராஜன் அவர்கள் கானக்குயில் சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார்கள். இதே இணை, மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக..வருக என்று பெண் பார்க்க வந்தேனடி... என்ற பாடலையும் கவியரசர். கண்ணதாசனின் கைவண்ணத்தில் பாடியுள்ளனர்.
    பாடல்களை கேட்கும்போது...தேனாற்றில் நீராடும் உணர்வு ஏற்பட்டது...
    அவ்வளவு இனிமை...இசையின் மேன்மை சொல்லி மாளாது.... ஆஹா...அற்புதம்... இரண்டு வேடங்களில் தனது பிரத்தியேக பாணியில் கலைக்குரிசில் கலக்கிய மற்றொரு அருமையான படம்...
    அவருக்கே உரித்தான குறும்புத்தனம், காதல் செய்யும் நேர்த்தி..என தனது பங்களிப்பினை முறையாக செம்மையாக செய்துள்ளார் செவாலியே அவர்கள்.
    இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்...உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்...
    பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில்செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.
    ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.
    அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க,அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.
    இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால்,இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.
    உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
    மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே
    ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!
    பெண்மை என்னும் தென்றல் ஒன்று
    என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே
    ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!
    காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு
    கண்களில் மையெழுதி!
    கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்
    கோடியில் ஓரழகி!
    தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
    இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!
    குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!
    நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்
    நெஞ்சினில் ஓர் கனவு!
    வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்
    வார்த்தைகள் தேன்மழையோ!
    செல்லக் கன்னம் வெல்லம் என
    மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!
    கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!
    தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.
    ஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
    அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார்.பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.
    இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும்,திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே.
    காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.
    படத்தினில் பங்கேற்றோர் அனைவருமே தனது பாத்திரங்களுக்கு உயிரூட்டி இருந்தனர்.. குறிப்பாக பழம்பெரும் நடிகர். S.V. ரங்காராவ் அவர்கள் தனது பாத்திரத்தினை மிக நேர்த்தியாக செய்திருப்பார்கள் . நடிகர் திலகத்தின் பல ஜனரஞ்சகப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் அவர்கள் விறுவிறுப்பாக படத்தினை இயக்கி உள்ளார்கள். உற்சாகமூட்டிய சிறப்பான காதல் இசை விருந்து என்றே கூறலாம்.
    (முகநூல் சிங்காரவேலு பாலசுப்ரமணியன்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3732
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3733
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பாகுபலி திரைப்படம் பார்த்தேன்,
    படம் பார்க்கையில் அக்கம் பக்கம் முன்னாடி பின்னாடி என யார் நடிகர் திலகம் பற்றி பேசினாலும் நம் கவனத்தை ஈர்க்கும் என்பது ஒன்றும் புதிதல்ல, இப்படி இந்தப் படத்தை பார்க்கும் போது பாகுபலி படத்தின் பிரமாண்ட உருவாக்கம் பற்றி பேசிக் கொள்பவர்கள் அவர்களுக்குள் நடத்தும் விவாதம் ருசிகரமாகவே இருக்கச் செய்கிறது, குறிப்பாக பேசிக்கொள்வது என்னவெனில் பெரியவர்கள் என்றால் இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் இதை பிரமாண்டமான உருவாக்கம் என்று எடுத்த...ுக் கொண்டால் தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத 55 ஆண்டுகளுக்கு முன் வெளியான "கர்ணன்" காவியத்தை என்னவென்று அழைப்பது?
    சிறியவர்கள் என்று பார்த்தோமானால் எடுத்த எடுப்பிலேயே "ஹேய் இந்தப் படம் கர்ணன் படம் மாதிரியே இருக்குதுல்ல" என்று குஷியாக பேசிக் கொள்வது நமக்கும் குஷியாக இருக்கவே செய்கின்றன,
    தாய்மார்கள் அப்படியே நடிகர் திலகத்தின் கண்களை ஒப்பீடு செய்து கொள்கிறார்கள், ( பாகுபலி இறக்கும் காட்சியில் சத்யராஜ் மற்றும் பிரபாத் ஆகியோர் நடிகர் திலகம் கண்களை போல நடித்துக் காட்ட முயற்சி செய்கிறார்கள் என முனுமுனுக்கின்றனர்)
    எப்படியோ ஒரு வரலாற்று படம் போன்று உருவாக்கிய படக் குழுவினரை எல்லோரையும் போல நாமும் பாராட்டியே ஆக வேண்டும் என்பது எனது கருத்தும் கூட

    (from seker f book )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3734
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3735
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நான் ஏழாம் வகுப்பு ( "அ" பிரிவு ) படித்த போது பார்த்த படம் " நான் வாழ வைப்பேன்".
    முழுசாய் முப்பத்தாறு வருடங்கள் கடந்த பின்னும்
    நினைவில் ஒரு கீறல், கசங்கல் இல்லாமல், மெருகு குறையாத புத்தம் புது வடிவமாக " நான்
    வாழ வைப்பேன்" ஓடிக் கொண்டே இருக்கிறது.
    "நான் வாழ வைப்பேன்" எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனதற்கு இந்தக் காட்சி மிக முக்கிய
    காரணம்.
    அன்றைய என் சின்ன வயசிற்குப் புரிய வாய்ப்பில்லாத மரண பயம் போன்ற பெரிய விஷயங்கள் அன்றே எனக்குப் புரிந்ததென்றால்..
    அது, நடிகர் திலகமெடுத்த பாடத்தினால்தான்.
    அந்த மகா கலைஞனின் மீதான என் பெரு வியப்பை எடுத்துரைக்க அந்தப் பழைய நாளில்
    சரியான வார்த்தைகள் இல்லை. ( இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா? )
    இயன்ற வரை வார்த்தைகள் தேடி, முடிந்த மட்டும்
    சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்ட திருப்தி
    காண முப்பத்தாறு வருஷங்களாகியிருக்கின்றன.
    தன்னிரகற்ற நடிப்புத் திறமையினால் மட்டுமல்ல... தன்னை மிக நேசிக்கும் ஒரு ரசிகன், தன்னை
    வியந்தெழுத வருஷக் கணக்கிலானாலும், அன்று தன் மீது அந்த ரசிகன் வைத்த பேரன்பை அதிகமாக்கிக் கொண்டே போகும் ஆச்சரியத்
    திறமையினாலும் நடிகர் திலகம் வென்றார். வெல்வார்.
    *****
    இத்துடன் நான் இணைத்திருக்கிற இந்தப் பதினான்கு நிமிடக் காணொளியின் எந்தவொரு அசைவும் அவசியமானதுதான் என்றாலும், நான்
    வியந்து குறிப்பிட விரும்புவது, நடிகர் திலகம்,
    மருத்துவர் பூர்ணம் விஸ்வநாதனைச் சந்தித்துப்
    பேசும் அந்த ஐந்து நிமிடப் பகுதியே.
    தன்னையே நம்பியிருக்கிற குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள படித்த, அழகான, பண்புள்ள வாலிபன் ஒருவன், தன்னைக் கொஞ்ச
    காலமாக வாட்டி வதைக்கும் தலைவலிக்கு சிகிச்சை பெறும் பொருட்டு மருத்துவமனை செல்கிறான். அவனது மூளை படம் பிடிக்கப்பட்டு
    ஆராய்ச்சி செய்யப்படவிருக்கிறது.
    அவனது தலைவலியைக் குறித்து மருத்துவர், மருத்துவ ரீதியாக எழுப்பும் கேள்விகளுக்கு, தனக்கு என்னவாயிற்று என்பதைத் தெரிந்து
    கொள்ள விரும்புகிற ஒரு நோயாளியின் பயம் கலந்த ஆர்வத்தோடு பதில் சொல்லும் அற்புதத்தை இதன் முந்தைய காட்சியிலேயே
    காட்டியிருப்பார்.
    'இப்படி இப்படியெல்லாம் பேச வேண்டும்' என்று
    மனசுக்குள் தீர்மானித்திருப்போம். ஆனால், பேச
    வேண்டிய சமயத்தில் பேச்சின் திசை மாறி நீர்த்து
    விடுவது எல்லோருக்குமே அனுபவம்.
    இதை நடிப்பில் கொண்டு வரும் அதிசயத்தை நடிகர் திலகம் நிகழ்த்துகிறார். " டாக்டர்.. இந்தத்
    தலைவலி வரும்போது என்னால மூச்சு விட முடியறதில்லே.. ஒன்னும் செய்ய முடியறதில்ல.."
    என்பார். மூச்சு விடமுடியாமைக்கும், ஒன்றும் செய்ய முடியாததற்கும் ஊடே நிறைய வார்த்தைகளை விட்டு விட்டதாகவே அவரது பேச்சின் த்வனி இருப்பதைக் கவனியுங்கள்.
    ஆய்வு என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள அன்று மாலையே அவனை மருத்துவர் வரச் சொல்கிறார்.
    கிளம்பிச் செல்பவனின் கவலையில் இறுகிய முக
    பாவங்கள் நீடிப்பதைப் பாருங்கள். பிறர் சொல்லும்
    நகைச்சுவைக்குச் சிரித்தாலும், சிரிக்கச் சிரிக்கத்
    தானே நகைச்சுவை செய்தாலும் அந்த இறுகிய முகபாவம் மாறாது.
    மாலையில் மீண்டும் மருத்துவமனை விஜயம்.
    தனது தலையின் எகஸ்ரே படத்தைப் பார்த்து தானே செய்யும் கிண்டல். அந்தக் கிண்டலில்
    ' தனக்கு ஒன்றுமில்லை' என்பதான அழுத்தமான
    நம்பிக்கை.
    அவனுக்கு உண்டாகியிருக்கிற மிகப் பெரிய பாதிப்பை அவன் புரிந்து கொள்ளும் பொருட்டு
    மருத்துவர் விளக்கம் தரும் போது கொள்கிற எரிச்சல். அந்த எரிச்சலில் ' ஒரு தலைவலிக்கு ஏன்
    இத்தனை பேசுகிறார்?' என்றொரு சலிப்பு.
    தனது பிரம்மாண்ட தலைவலிக்குக் காரணம்
    " மூளைக்கட்டி" என்கிற அதிர்ச்சித் தகவலை அறிகிற போது, அந்த கசப்பு நிஜத்தை ஏற்க மறுக்கிற பாசாங்கற்ற ஓர் மனித உள்ளத்தை
    நடிப்பால் காட்சிப்படுத்த நடிகர் திலகத்தால்
    மட்டுமே இயலும்.
    ' மூளைக்கட்டி' என்றறியும் நொடியிலிருந்து முகத்தில் தொற்றிக் கொள்கிற மரண பயம்.
    அந்த பயத்தின் பின்னே ஒளிந்திருக்கிற அவனது
    குடும்பம். படித்தவனென்பதால் பயத்தில் "அய்யய்யோ" என வீறிடாமல், நாகரீகமாக வெளிப்படுத்தும் அழகு.
    தனக்கு விரைவில் மரணமெனும் அந்த மருத்துவ அறிக்கை தன்னுடையதாயிருக்காது என்று மருத்துவரிடம் வாதிடும் குழந்தைத்தனம். அந்த
    குழந்தைத்தனமான செய்கையில் கூட மருத்துவரின் மனம் புண்பட்டு விடக் கூடாது என்றெண்ணும் பெரிய மனுஷத்தனம்.
    மருத்துவர் " உங்களை எனக்கு நல்லாத் தெரியும்"
    என்று சொல்ல, " என்னைத் தெரியும். என் குடும்பத்தைத் தெரியாது" என்று தன் கதை சொல்ல முற்படும் புத்திசாலித்தனம் கதாசிரியரால் மட்டுமே விளைந்ததன்று. நடிகர் திலகத்தின் புரிதல் மிகுந்த நடிப்புத் திறனாலும்
    விளைந்தது.
    தனக்கு கொடிய வியாதியென்று மருத்துவர் சொன்னதும், அந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள
    மாட்டாமல், அது பொய்யென்று அவரே சொல்லி
    விட மாட்டாரா என்று எதிர்பார்க்கும் சராசரி மனித
    மனோபாவம்... ஒரு கட்டத்தில் 'எதுவாயினும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?' என்கிற பக்குவப்பட்ட மனசோடு வாழ்க்கையை அணுகுகிற முதிர்ச்சி...
    இவற்றையெல்லாம் ஒரு ஐந்து நிமிட சினிமாக்
    காட்சி வழியே விளக்க நமக்கொரு நடிகர் திலகம்
    கிடைத்தார் எனும் மகிழ்ச்சி ஒரு பக்கம். இந்த மகிழ்ச்சிக்குக் கொடுத்து வைக்காமல், " நான் வாழ
    வைப்பேன்" பார்க்காமலிருக்கிறவர்கள் குறித்த
    கவலை ஒரு பக்கம்.
    எது எப்படியோ.. நாம் என்றும் நடிகர் திலகம் பக்கம்.
    *****
    ஒரு முதிர்ச்சியான மனோ நிலையில் இந்தக் காட்சியில் நடிகர் திலகம் ஒரு இடத்தில் சொல்வார்... " சாகிறதுக்காக நான் பயப்படலை
    டாக்டர்.. அரை குறையா எப்படி சாகிறது?"
    "அரை குறை" என்கிற மிகச் சாதாரண வார்த்தைக்குக் கூட முழுமையாய் அர்த்தம்
    உணர்த்திய எங்கள் நடிகர் திலகத்தை ஆழ்ந்து,
    ரசித்து அனுபவிக்காமல் அரை குறையாய்ச் செத்துப் போய் விட மாட்டான் சிவாஜி ரசிகன்.

    ( முகநூல் சிவாஜி பக்கம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3736
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தற்போதைய முனுமுனுக்கும் செய்தி என்னவெனில் " பாகுபலி" படத்தை பற்றியது தான், ஒரு வேலை நான் பணி செய்யும் இடம் சுற்றியுள்ள சூழ்நிலை யாக இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் நேற்று நடந்த வணிகர்கள் தினத்தையொட்டி சென்னையின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கூட வணிகர்களின் பாகுபலி என விக்கிரமராஜா அவர்களை பாகுபலியைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டிருந்தன,
    டாப் நியூஸ் என்னவென்று பார்க்க போனால் முதல் நியூஸாக பாகுபலி பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்பதுதான், அப்படி என்ன வசூல் செய்து...விட்டது என்று விபரத்தை திரட்டினால் உண்மையில் தலை சுற்றுகிறது அதாவது முதல் வார வசூல் 790 கோடியாம்,
    சரி நமக்கு எதற்கு இந்தச் செய்தி என்று நண்பர்கள் சொல்வதற்கு முன் நம்முடைய செய்திக்கு வந்து விடுவோம்,
    நம்முடைய செய்தி என்றால் அது நடிகர் திலகம் செய்திதானே,
    அதாவது தற்போது வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வசூல் மற்றும் படத்தை பற்றிய செய்திகளை அனைத்து டிவி சேனல்கள், செய்தி நாளேடுகள் என இடம்பெற செய்து படத்தின் வெற்றியை உறுதி செய்து கொள்ள முடிகிறது, மேலும் வேறு எந்த புதிய படமும் ரிலீஸ் ஆக விடாமல் செய்து ஊரில் உள்ள எல்லா தியேட்டர் களிலும் ஒரே படத்தை ஓட வைக்கும் போது வெற்றி அடையத் தானே செய்யும்,
    பாகுபலி படத்தின் முதல் வார வசூல் 790 கோடி இவ்வளவு பெரிய தொகை வசூலிக்க காரணம் படம் திரையிடப்பட்ட திரைகளின் எண்ணிக்கை உலகம் முழுக்க சுமார் 9000 க்கும் மேல்,
    ஏறக்குறைய ஹாலிவுட் படங்களைப் போலவே
    சரி 9000 திரைகளில் 790 கோடி வசூலை சராசரியாக ஒரு தியேட்டருக்கான வசூல் எவ்வளவு என்று பார்த்தோமானால் அது 8.3 லட்சம் என தெரிந்து கொள்ளலாம்,
    இந்த 8.3 லட்சம் வசூல் தொகை என்பது 1964 ஆம் ஆண்டில் நடிகர் திலகத்தின் பிரமாண்டமான நடிப்பில் வெளியான "கர்ணன் " வசூலித்த தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கும் செய்தியே, அதாவது அப்போது ரிலீஸான கர்ணன் ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான 2250 இருக்கைகள் கொண்ட மதுரை "தங்கம்" தியேட்டரில் முதல் வார வசூல் என வசூலித்த தொகை ரூபாய் 46,773.00 ஆகும், இது வெறும் 23 காட்சிகளில் மட்டுமே,
    இந்தத் தொகை இன்றைய டிக்கெட் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் வசூல் தொகை 93.5 லட்சம் வருவதை உணரலாம். அப்போதைய டிக்கெட் கட்டனம் வெறும் 75 பைசா, 90 பைசா மட்டுமே,
    அத்தொகை வசூலிக்க காரணமான பார்வையாளர்களின் எண்ணிக்கை 51950 பேர்கள் ஆகும்,
    நடிகர் திலகத்தின் படங்கள் செய்யும் வசூலை இரட்டடிப்பு செய்வதற்கு என்றே அப்போதெல்லாம் சில ஊடகங்கள் முதற் பணியாய் செய்து வந்தன, அப்படித்தான் கர்ணன் பெற்ற வெற்றி வசூலையும் இரட்டடிப்பு செய்தன,
    இப்போதும் கூட சில அறிவீளிகள் முகநூல் பதிவுகளில் கர்ணன் வெற்றியை குறைத்து மதிப்பிடுதல் தொடர்ந்து செய்து வருவதை பார்க்க முடிகிறது,
    1964 ல் பெற்ற கர்ணனின் வெற்றியை ஏற்க மறுத்த மூடர்களுக்கு என்றே 2012 லும் அவதரித்த கர்ணன் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தினார்,
    நன்றி:- 1964 ல் கர்ணன் வசூல் விவரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்த திரு பம்மலார் அவர்களுக்கு,
    நன்றி:- கர்ணனை டிஜிட்டல் ஆர்ட் ஓவியத்தில் தந்த திரு கௌசிகன் அவர்களுக்கு,

    (முகநூல் சேகர் பரசுராம்)
    Last edited by sivaa; 6th May 2017 at 10:30 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3737
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post

    superb Siva. மார் தட்டிக்கொள்ளும் சாதனை. 50 நாட்கள் ஓடிய (மற்றவர்கள் போல் ஓட்டப்பட்ட சாதனை அல்ல ) தியேட்டர் எண்ணிக்கையை பாரீர். எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத சாதனை. கர்ணன் எதிரிகளையும் வாழ வைத்தார், வாழ வைப்பார்.

    நடிகர் திலகம் மட்டுமே என்றும் நடிப்பு சக்கரவர்த்தி - வசூல் சக்கரவர்த்தி. NT புகழ் வாழ்க.

    thanks for your wonderful service Siva.

    endrum NT rasigar.

  9. #3738
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3739

  11. #3740
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று இரவு 7:30 க்கு முரசு டிவியில்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •