Page 372 of 400 FirstFirst ... 272322362370371372373374382 ... LastLast
Results 3,711 to 3,720 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3711
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இணைப்பில் உள்ள செய்தி:-
    முதல் படம் 30 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகத்தின் பேச்சைக் கேட்க ஈரோடு திடலில் கூடிய மக்கள் கடல்,
    இரண்டாவது படம் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் நகரி அருகே நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் கடல்







    முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3712
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Harrietlgy liked this post
  6. #3713
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #3714
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 173– சுதாங்கன்.






    ஒரு சிவாஜி ரசிகர் சொன்னார்,
    `எம்.ஜி.ஆரை விட எங்கள் சிவாஜிதான் வசூல் மன்னன். ஒரே நாளில் அவருடைய இரண்டு படங்கள் வந்து இரண்டுமே நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். அதனால் எம்.ஜி.ஆரை ஆறு மாதங்களாக திரையில் பார்க்காத ரசிகர்கள் அலைமோதி படத்திற்கு வசூலை குவிக்கும்’ என்றார்.
    ஒரு சிவாஜி ரசிகர் என்கிற முறையில் அவருடைய வாதம் சரியாக இருக்கலாம். சிவாஜி ஒரு கலைப் புதையல்.

    சிவாஜியை திரையோடு மட்டும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆரை சமூகத்தோடும் இணைத்தார்கள். சிவாஜியின் சினிமா சரித்திரத்தில் நீக்க முடியாத படங்கள் 'ராஜா', 'ஞான ஒளி', 'தவப்புதல்வன்', 'நீதி', 'பட்டிக்காடா பட்டணமா', 'வசந்த மாளிகை'.
    'ராஜா'வில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி, 'ஞான ஒளி'யில் பாசமுள்ள ஒரு முரட்டுத்தகப்பன், 'தவப்புதல்வ'னில் மாலைக்கண் நோயாளி, 'நீதி'யில் குடியினால் பாதிக்கப்பட்ட ஒரு கொலைகாரன், 'பட்டிக்காடா பட்டணமா'வில் ஒரு பணக்கார கிராமத்தான், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையான ஒரு ஜமீன் காதலன்.
    சிவாஜிக்கு தன் இமேஜை பற்றி கவலையேயில்லை. அவருக்குத் தேவை அவர் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதாபாத்திரங்கள். அது மாதிரி பாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிப்பார். நல்ல நாடகங்களைத் தேடிப் போய் பார்ப்பார். அப்படி அவருக்கு கிடைத்ததுதான் 'ஞான ஒளி'.
    'வசந்த மாளிகை' படத்தின் ஒவ்வொரு பாட்டும் சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் விருந்து. 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் வேடத்தில் பாலாஜி நடித்தார்.

    அந்த கதாபாத்திரத்தின் மேல் சிவாஜிக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதற்கு 'சினிமா பைத்தியம்' படத்தில் கிடைத்தது. சினிமா வெறியர்களின் முட்டாள்தனத்தை துகிலுரித்துக் காட்டிய படம். இந்த படத்தை ஏல்.எல்.எஸ்.புரொடக்*ஷன்ஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். இதில் சிவாஜிக்கு கவுரவ வேடம். அந்த கதாபாத்திரம்தான் வாஞ்சிநாதன். 'டாக்டர் சிவா'வில் தொழுநோயாளிகளை குணப்படுத்தும் ஒரு டாக்டர் வேடம் சிவாஜிக்கு! இந்த படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். சிவாஜிக்கு ஜோடி மஞ்சுளா. அந்த வருடம் முழுவதும் இந்தப்படத்தில் ஜேசுதாஸும், ஜானகியும் பாடிய 'மலரே குறிஞ்சி மலரே’ பாடல்தான் நம்பர் ஒன்னாக இருந்தது.

    கவுரிமனோகரி ராகத்தில் மெட்டமைத்திருந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். ரசிகர்களை சுண்டியிழுத்த பாட்டு இது. தனக்குள் இருக்கும் எல்லா திறமைகளும் திரையில் வெளிப்பட வேண்டும் என்று ஆசைப்படுபவர் சிவாஜி.
    `ஜனக் ஜனக் பாயல் பாஜே’ – இது பிரபல இந்தி இயக்குநர் சாந்தாராம் இயக்கிய படம். இது நாட்டியத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1955ல் வெளிவந்த படம் இது! இந்த படத்திற்கு வசந்த் தேசாய் இசையமைத்திருந்தார். ஒரு இளவரசனுக்கு ஒரு நாட்டிய தாரகை மேல் ஆசை. அவளுக்கோ நாட்டிய கலைஞன் மேல்தான் ஆசை. அதற்காகவே நாட்டியம் கற்றுக் கொள்வான் இளவரசன். இந்த படத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நாட்டியக்கலைஞர் கோபிகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 1955ல் இந்தி உலகை கலக்கியது.. சிவாஜி, எம்.ஜி.ஆர்., இருவருக்குமே இந்தி இயக்குநர் வி. சாந்தாராம் மீது ஓர் ஈர்ப்பும், மரியாதையும் உண்டு.

    அதனாலேயே அவர் இயக்கிய `தோ ஆங்கே பாரா ஹாத்’ படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் 'பல்லாண்டு வாழ்க' படமாக எடுக்க வைத்து நடித்தார்.
    சிவாஜி தேர்ந்தெடுத்த சாந்தாராம் கதைதான் ஜனக் ஜனக் பாயல் பாஜே. சிவாஜி கோபிகிருஷ்ணா வேடத்தில் நடித்தார். நாட்டிய தாரகையாக ஜெயலலிதா நடித்தார். அவரைக் காதலிப்பதற்காகவே நாட்டியம் தெரியாத பணக்காரர் நாட்டியம் கற்றுக் கொண்டு ஜெயலலிதா உடனேயே நடனப் போட்டியில் இறங்குவார்.
    சிவாஜிக்கு நாட்டிய பயிற்சி கொடுப்பதற்காகவே மும்பையில் இருந்து கோபிகிருஷ்ணாவின் சீடர் உதய்சங்கர் சென்னை வந்தார்.
    வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
    `தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை. 'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்
    `நமக்ஹராம்’. இந்த படத்தில் தர்மேந்திராவும், ராஜேஷ்கன்னாவும் இணைபிரியா நண்பர்களாக நடித்திருந்தனர். இதன் உரிமையை வாங்கினார் பாலாஜி. சிவாஜி-, ஜெமினி இருவரையும் வைத்து எடுத்த படம் 'உனக்காக நான்'.
    சிவாஜியை விட ஜெமினிக்கு ஒப்பனையை மீறிய வயோதிகம் முகத்தில் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். இதுவும் சிவாஜி ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம்தான். அடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு தீனி போட்ட படம் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் வி.பி. ராஜேந்திரபிரசாத் இயக்கத்தில் வந்த 'உத்தமன்'.
    கே.வி. மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்த படம் இது. அடுத்தடுத்து வந்த சிவாஜி படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் 'கிரஹப்பிரவேசம்'– இது யோகானந்த இயக்கத்தில் வந்த படம். தம்பிக்காக பாடுபடும் அண்ணனின் கதை இது. இதில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. தம்பியாக சிவகுமார் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு எந்த பெரிய நடிகர்களோடும் நடிப்பதில்லை என்று சிவகுமார் என்ன காரணத்தினாலோ முடிவெடுத்தார். 'சித்ரா பவுர்ணமி' வந்த சுவடு தெரியாமல் போன சிவாஜியின் படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா! இந்த படத்தை காஷ்மீரில் போய் எடுத்தார்கள். இந்த படத்திற்கு இயக்கம் பி. மாதவன். இந்த படத்தில் நடிக்க காஷ்மீருக்கு போகக்கூடாது என்று ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன. இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆர்., ஒரு முடிவு எடுத்தார்.
    (தொடரும்)

  9. #3715
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3716
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Last edited by sivaa; 1st May 2017 at 04:54 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3717
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    [QUOTE]வழக்கம்போல் விஸ்வநாதன் இசையில் பாட்டுக்கள் அத்தனையும் அருமை. படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவீஸிற்காக பி.மாதவன் தயாரித்து இயக்கியிருந்தார். வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார். சிவாஜி ரசிகர்களுக்கு முழு தீனி போடவில்லை என்பதுதான் உண்மை. 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
    `தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான்.[/QUOTE]

    மன்னவன் வந்தானடி தோல்வி படமாம் அதுவும் மிகப்பெரிய தோல்விபடமாம்
    இப்படித்தான் சிவாஜி கணேசனின் படங்கள் தோல்விப்படங்களாக சித்தரிக்ப்படுகிறது
    இந்த எழுத்தாளன் யாரது கைக்கூலியோ ?





    9. மதுரையில் முதன் முதலாக ஒரே காம்ப்ளெக்ஸ்- ல் இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் படம் - மன்னவன் வந்தானடி.

    அரங்குகள் - சினிப்ரியா, மினிப்ரியா

    நாள் - 02..08.1975

    10. மன்னவன் வந்தானடி மதுரையில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 125

    11. மன்னவன் வந்தானடி மதுரையில் ஓடிய நாட்கள் - 110.


    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் சுதாங்கன்
    என்பவர் பல தவறான தகவல்களை எழுதிவருகிறார்
    நண்பர் பரணியும் அதனை கவனிக்காமல் இங்கே கொண்டுவந்து பதிவிட்டுவிடுகிறார்

    சுதாங்கன் தெரியாமல் எழுதுகிறாரா? அல்லது தெரிந்தே எழுதுகிநாரா என்பது தெரியவில்லை
    எனவே நண்பர் பரணி
    செலுலாய்ட் சோழன் தொடரை இங்கு பதிவிடுவதை நிறுத்திவிடுங்கள்
    அத்துடன் முன்னைய பதிவுகளையும் பார்த்து நீக்கிவிடுவது நல்லது. இதனை கவனத்தில் எடுங்கள்.
    Last edited by sivaa; 1st May 2017 at 03:37 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  13. #3718
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like






    தன்னுடைய 150 வது படத்தை கொஞ்சம் வித்தியாசமாக பிரசண்ட் பண்ண நினைக்கிறார்,,, மல்லியம் ராஜகோபால் ஒரு வில்லேஜ் ஸ்கிரீன் ப்ளேயை வைத்துக் கொண்டு சிவாஜியை சந்திக்கிறார...்,, வழக்கமான வில்லேஜ் சப்ஜெக்ட் ஆக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கமர்ஷியலாகவும் இருக்கிறது,,, மல்லியம் தானே எழுதி தயாரித்து இயக்கும் முடிவில் இருக்கிறார்,, டைட்டில் சேலஞ்சிங்காக இருக்க வேண்டும் என்றவுடன் "சவாலே சமாளி" என்ற டைட்டிலை சொல்கிறார்,. படம் துவங்குகிறது,,
    ஆண்டான் அடிமை என்ற நிலைமை மாறிவரும் சூழ்நிலையில் அந்த மாற்றங்களை தன்னகத்தே விதைத்துக் கொண்ட ,,, துடிப்பான கிராமத்து இளைஞனாக நடிகர் திலகம்,,, ட்ரிம் ஆகவும் ஸ்மார்ட் ஆகவும் கோபம் வேகம் பாசம் அன்பு பணிவு காதல் என்று அத்தனை இமோஷன்களையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம்,,, பணக்காரன் ஏழை என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டும் குறிப்பிட வில்லை இந்தப்படம்,,, கூர்ந்து கவனித்தோமேயானால் அதையும் தாண்டி சாதீய சங்கிலிகளையும் உடைத்தெறிகிறது கதைக் களம்,,, மாணிக்கம என்ற பெயர்,,, அவரது பெற்றோர் தங்கை அவர்களது உடைகள்,,, அவர் வசிக்கும் குடிசை உண்ணும் உணவு விவசாய கூலி என்ற தொழில் ,,, இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஒரு தலித் இளைஞனாக உருவகப்படுத்திய
    தாக உணர்ந்து கொள்ள முடிகிறது,,, ஆனால் பளிச்சென்று இயக்குநர் சொல்லவில்லை,, ஆனால் பெரிய பண்ணையாரான பகவதியின் சாதி குறிப்பிடப்பட்ட
    ு இருக்கிறது,,, சவாலில் வென்று அவர் மகளை அடைகிறார் சிவாஜி,,, இதுதான் படத்தின் பாதிக்கதை,,, "ஆனைக்கொரு காலம வந்தால் பூனைக் கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ" என்ற பாடல் எதை கருத்தில் கொண்டு எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது,,,
    பண்ணையாரிடம் அளவுக்கு மீறிய விஸ்வாசியான தந்தை ராகவன்மேல் சிவாஜிக்கு ஏற்படும் நுனிமூக்கு கோபம் அதை அவர் வெளிப்படுத்தும் லாவகம்,, தங்கையை வாழாவெட்டி ஆக்கி விட்டு வைப்பாட்டியுடன் குடும்பம் நடத்தும் மச்சான் மீது ஏற்படும் கோபம் அதை வெளிப்படுத்தும் லாவகம்,,, இரண்டு கோபங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை காட்டும் முகபாவம்,, இவர் யாரோ ஒரு நடிகர் அல்ல,,, நடிகர் தலைவர் என்பதை நினைவு படுத்துவார்,,, பண்ணையாரின் மாடி வீடு அருகில் இவரது கையகல நிலம்,,, அது அவர்களுக்கு அவமானம் இவருக்கு தன்மானம்,,, இப்படி முரண்பட்ட முடிச்சு முதல் மூன்றாவது ரீலிலேயே விழுந்து விடுகிறது,, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவன்டா என்றதுபோல் தந்தையை வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமலும் காட்டும் சிவாஜி முகபாவங்கள் புதிது புதிதாக இருக்கும்,, அடுத்து பண்ணையார் மகள் என்ட்ரி அழுகுடைந்த உடைகளை கழுவிக்கொடு என்று சொல்லும் போது நான் என்ன உன் பருஷனா என்று கேட்கும் கோபம் நிஜமானது,,, பண்ணையார் மகன் எம் என் நம்பியார் சிவாஜி இருவருக்கும இடையிலான பிரச்னை கைகலப்பாகி அவரை அடித்து துவைக்கும் காட்சி,,, அந்த கோபம் இன்னொறு வித்தியாசமான கோபம,, இப்படி கோபம் என்ற ஒற்றை உணர்ச்சியையே இத்தனை விதமாக காட்டியிருப்பது சிவாஜி ஸ்பெஷல்
    பஞ்சாயத்து தேர்தல் சவால்,,, பகவதி தனது ஒரே பெண்ணை பந்தையம் வெக்கிற அளவுக்கு கொண்டுவந்து விட்டு விடுவார் நாகேஷ்,,, தருமி, வைத்தி, வரிசையில் இந்த சின்னப் பண்ணைக்கும் இடமுண்டு,,, பெரும்பாலான சிவாஜி சினிமாக்களில்தான் நாகேஷூக்கு இந்த மாதிரி ஸ்பேஸ் கிடைத்திருக்கிறது,,
    நாகேஷ் என்ற அற்புத கலைஞனை மோல்டு செய்ததில் பெரும் பங்கு சிவாஜிக்கு இருந்தது என்பதில் ஐயமில்லை,, தேர்தல் ரிசல்ட் வர வர தாலியை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கும் சிவாஜியின் முகபாவங்கள் பணத்திமிர் சாதிய பாகுபடு இரண்டையும் ஒழித்துக் கட்டப் போகிறேன் என்கிற ஃபயர் அவர் கண்களில் தெரியும்,,, அதையும் தாண்டி ஜெயலலிதா மீது பிறந்த காதலின் பவர்,,, அதுவும் தெரியும் அதன் நீட்சியாக நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்ற கவியரசர் பாடல் அத்தனை கதைகளையும் சொல்லும்,,,அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் அந்த பாடற் காட்சியில் சிவாஜியின் டாமினேஷன் இன்றும் பேசப்படுகிறது,,, அந்த பாடலில் ஒவ்வொறு வரிகளும் குறிப்பாக " புதியதல்லவே தீண்டாமை என்பது.. புதுமையல்லவே அதை நீயும் சொல்வது" இந்த வரிகளில் சிவாஜி 100%க்கு மேலேயே நடித்திருப்பார்,,, இரண்டாம் பாதிக் கதையில் மனைவியை தனக்கேற்றவளாக படிப்படியாக மாற்றுவது அழகிய சிறுகதை,,,, படத்தில் பல வசனங்கள் சிவாஜிக்காகவே மெனக்கெட்டு எழுதி இருப்பார் மல்லியம்,,, என்ன பாவத்துடன் அந்த டயலாக் டெலிவரி செய்வார் என்று ஒரு இயக்குநராக எதிர் பார்ப்பாரோ அதைவிட சிறப்பாக படம் முழுதும் பேசி இருப்பார்,,, ஒரு உழைப்பாளியின் தோழனாக விவசாயின் மகனாக இந்தப்படத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி இருப்பார்,,, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சாதிய குணாதியங்களை கண்டு குமுறும் இளைஞனாக வந்து நடிகர்திலகம் இந்தப் படத்தை நமக்கு பரிசளித்திருப்பதால் இதை மேதின பதிவாக பதிவிடுகிறேன்,,

    முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #3719
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #3720
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Barani View Post
    [B] செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 173– சுதாங்கன். 'மன்னவன் வந்தானடி', 'வைர நெஞ்சம்' இரண்டுமே சிவாஜிக்கு பொருத்தமில்லாத படங்கள்.
    `தெய்வத்தாய்’ படத்திலெல்லாம், சத்யா மூவீஸில் ஆர்.எம். வீரப்பனுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம். இவர்கள் தயாரித்து பி. மாதவன் இயக்கிய மிகப்பெரிய சிவாஜியின் தோல்வி படம் இது. இதிலும் ரசிகர்களை இழுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்தான். வழக்கம்போல் எம்.எஸ். விஸ்வநாதன் இசை. 'வைரநெஞ்சம்' ஸ்ரீதர் இயக்கம். இந்தியில் மிகப்பெரிய வெற்றிப் படம்
    ஐயா சுதாங்கன் அவர்களே,

    உங்களுக்கெல்லாம் தெரிந்ததை விட பல மடங்கு திரையுலக விவரங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்ற சவுகரியத்தால் உங்களுக்கு எழுத சுலபமாக வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் வாந்தி எடுத்து வைக்காதீர்கள். செல்லுலாயிட் சோழன் என்ற உங்கள் தொடரில் ஏகப்பட்ட தவறுகள் மலிந்து கிடக்கின்றன.

    தென்காசி சகோதரர்கள் சங்கரன் ஆறுமுகம் இருவரும் தெய்வத்தாய் படத்தில் பங்குதாரர்கள் என்பது மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் தனியாக தயாரித்த படங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியவில்லை.

    தனியாக 'ஜேயார் மூவீஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதலில் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரை வைத்து 'புதிய பூமி' படம் தயாரித்தது தெரியவில்லை.

    பின்னர் நடிகர்திலகத்தை வைத்து தொடர்ந்து...

    எங்க மாமா (1970 )
    ஞான ஒளி (1972 )
    மன்னவன் வந்தானடி (1975 )

    ஆகிய படங்களை தயாரித்தது தெரியவில்லை.

    "மூன்றுமே வெற்றிப்படங்கள் என்பது தெரியவில்லை"

    1976 ல் நடிகர்திலகத்தின் திரை வாழ்க்கையில் லேசான தேக்க நிலை கண்டு அணி மாறி ஓடிப்போன ஒருசில தயாரிப்பாளர்களில் இவர்களும் சேர்ந்து, மீண்டும் திரு எம்.ஜி.ஆரை வைத்து "அண்ணா நீ என் தெய்வம்" என்ற படத்தை தயாரிக்கத் துவங்கி அது பாதியில் நின்று போனது தெரியவில்லை.

    அதுவரை எடுக்கப்பட்ட அப்படத்தின் காட்ச்சிகளை (எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின்) கே.பாக்யராஜ் தனது "அவசர போலீஸ் 100 " என்ற படத்தில் இணைத்து வெளியிட்டதும் தெரியவில்லை.

    இப்படி எதுவுமே தெரியாமல் இருந்துகொண்டு, நூறு நாட்களுக்கு மேல் ஓடிய பெரும் வெற்றிப்படமான மன்னவன் வந்தனாடியை தோல்விப்படம் என்று எழுதமட்டும் தெரிகிறது. ஒழுங்காக தெரிந்தால் எழுதுங்கள். இல்லாவிட்டால் தொடர் எழுதுவதை நிறுத்துங்கள். நீங்களெல்லாம் எழுதித்தான் எங்கள் தலைவர் பரவ வேண்டுமென்று இல்லை.

    வைர நெஞ்சம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லைதான். அதற்காக அது நடிகர்திலகத்துக்கு பொருத்தமில்லாத ரோல் என்று எப்படி எழுதலாம். (எங்கள் மாற்று முகாமைசேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கூட அப்படி சொன்னதில்லை) அப்படத்துக்கு தேவையான இளமை, அழகு, துள்ளல், துடிப்பு, சண்டை என்று அனைத்தையும் அற்புதமாக செய்திருந்தார். இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா?. ( இதன் இந்திப்பதிப்பு மிகப்பெரிய வெற்றி என்ற பொய்யய்யும் அவிழ்த்து விட்டுள்ளீர்கள். Jitendra, அமிதாப், பிந்து நடித்த "கெஹ்ரி சால்" படமும் சராசரிக்கும் கீழேதான் ஓடியது).

    (நண்பர் திரு பரணி அவர்களுக்கு,
    நடிகர்திலகத்தைப்பற்றிய உண்மைக்கு மாறாக சிலர் வாந்தியெடுக்கும் பதிவுகளை இங்கே பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்)
    Last edited by adiram; 1st May 2017 at 01:10 PM.

  16. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •