Page 350 of 400 FirstFirst ... 250300340348349350351352360 ... LastLast
Results 3,491 to 3,500 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3491
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3493
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திராவிட இயக்கங்கள் (முக்கியமாக தி.க.,தி.மு.க )சமூக நீதி கொள்கையில் சாதித்தாலும், பொதுவாக பகுத்தறிவு கொள்கையில் சமூகத்தை பின் தங்க வைத்து தனி நபர் துதிக்கு தள்ளி விட்டது. பேச்சு திறமை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி அதன் செயல்தன்மையை,உண்மை தன்மையை நிலை நிறுத்தாமல், ஆராய தலைப்படாமல், தலைவர்களின் சிலைகளை,சமாதிகளை சந்நிதிகளாக்கி ,பக்கதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவும்,விஞ்ஞானமும் கூட இந்த பகுத்தறிவாளர்களை அண்டாமல் காத்து பலனடைகிறது.

    மாற்று முகாமை குறி வைத்து பொய்களை பரப்புதல் (முக்கிய குறி காமராஜ்,சிவாஜி போன்ற திறமை வாய்ந்த நேர்மையாளர்கள், சொன்னதை செய்து செய்வதை சொல்பவர்கள்), தங்கள் தலைவர்களை பற்றி இல்லாத கட்டுக்கதைகளை பரப்பி மக்களை போதையில் வைத்திருத்தல் இப்படியாகவே செயல்பாடுகள்.

    உண்மைகளை சொல்லட்டும் .நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் மிகையான , லாஜிக் மீறிய பொய்கள்?

    உதாரணம். சமீபத்தில். இதில் குறிப்பிட படும் நபர் மறைந்து 29 வருடங்கள் முடிந்து விட்டதால் பெயரை தவிர்க்கிறோம். ஒரு கட்சியின் நிறுவனர். ஆனாலும் குறிப்புகளை வைத்து யூகிக்கலாம்.

    சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.

    ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.

    மலைக்கள்ளன் பிறந்தது- 1955.

    மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)

    மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)

    சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.

    சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.

    கலை வேந்தன் கொடுத்த டிப்ஸ் போல.

    உண்மையே உன் விலை என்ன?
    Last edited by Gopal.s; 27th February 2017 at 10:16 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy, sivaa liked this post
  6. #3494
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் மரியாதை
    முழுப்பதிவு.

    வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
    ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
    இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
    அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
    கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
    மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
    ஒத்துக்கிறாரு.
    கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
    ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.

    மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.

    மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
    ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
    அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
    மலைச்சாமி சொல்றாரு.
    " உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".
    **
    மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.
    **

    வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
    மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.

    குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
    நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
    முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
    "டேய் செங்கோடா "
    பெருசு கூப்பிடுது.
    தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
    "அய்யா " .இது செங்கோடன்.
    " கால்ல முள்ளு தச்சுருச்சு ."
    கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
    பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
    அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
    "உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
    அவன் கேக்குறான்
    "ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
    பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
    கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
    ***

    ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
    பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.

    பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
    "ஆம்பளக்கு ஒரு வேல
    பொம்பளக்கு நூறு வேல"
    அப்படிம்பாங்க.
    குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
    இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
    ***

    பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
    வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
    கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
    இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.

    அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
    பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
    வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்படித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
    "எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
    வயசான ஆளு சொல்றான்,
    " அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
    பெரிசு கெக்குது,
    " இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா "
    பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
    அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த "மலைச்சாமி "யால
    பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.

    ***

    வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
    அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
    களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் மலைச்சாமிக்கு புடிச்சுப்போச்சு.
    ***
    அவிக சிநேகிதம் அப்பிடியே வளந்துட்டு வருது.
    பெருச அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டு பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
    அப்பிடித்தான் ஒரு நா,
    பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
    அதுக்கு அவ
    பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
    பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.

    இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
    என்ன ஆச்சு பெரிசுக்கு?
    ******

    பெரிசுக்கு என்ன ஆச்சு?

    அந்த வருஷம் நல்ல வெள்ளாம.மழை மண்ணுன்னு விளச்சலுக்கு பல விஷயம் இருந்தாலும் மனுஷனோட உழைப்பு நல்ல படியா இருந்தாத்தேன் அதிக போகம் பாக்க முடியும்.அந்த விளச்சலுக்கு காரணமானவங்க கூலிக்காரங்க.அவங்க உழைப்புக்கு
    மரியாத செய்ய வேண்டி,
    விளஞ்ச நெல்லுல கொஞ்சத்த கூலிக்கு மேல நீங்க அளந்து வச்சிக்கங்கன்னு மலச்சாமி சொல்ல, கூலிக்காரங்களும் சந்தோசமா நெல்ல பங்கு போட்டுக்கிட்டு இருக்காக.அங்க வரா பொன்னாத்தா .என்னன்னு கேட்டு விஷயம் தெரிஞ்சுக்கறா.
    அந்தாளு எனக்கு வாக்கப்பட்டு வந்ததே நாலு வெள்ளாட்டோட மட்டுந்தா, வேட்டி கட்டி இருக்கிறதே எங்கப்பன் காசுலதே, யாரோட காச யாரு தூக்கி கொடுக்கிறதுங்கற அர்த்தத்துல கேவலப்படுத்துறா.
    ஊருக்கே நாட்டாம, பெரியமனுஷன்னு பாக்காம கூலிக்காரங்க அம்புட்டு பேரு முன்னாலே அவ ஏசியத யாரால தாங்கிக்க முடியும்? கோபம் தள்ளுது.ரெண்டு சாத்து சாத்தலாம்னு பொங்குது மனசு.மாமனோட கெஞ்சல் மனசுல வந்து நிக்குது.ச்சீ போ ன்னு மன பாரத்தோட போறாரு.
    வேற ஏதாவது கஷ்டம்னா நாலு பேருகிட்ட பேசி ஆறுதல் தேடிக்கலாம். இவ கேவலத்த யாரு கிட்ட சொல்ல முடியும்? அது குடும்ப கௌரவத்துக்கே கேவலமாகிப் போயிடுமே. இப்படியே தா அந்த மனுஷனுக்கு பாறாங்கல்லு மாதிரி மன பாரம் அசயாம தங்கிட்டே இருக்கு.
    மனசுல இருக்கற பாரத்த அப்பப்போ பாட்டுப்பாடி ஆறுதல் படுத்திக்குவாரு.
    அவுரு தன் சோகத்த தாங்க தாய்மடி ஏதாவது கிடைக்குமாங்குற அர்த்தத்துல பாடறாரு.அந்தக் கொடியும் படர ஏதாவது தேரு கிடைக்குமான்னு அலையுது.
    "ராசாவே வருத்தமா
    ஆகாயம் சுருங்குமா?
    ஏங்காதே
    கனவுலகம் தாங்காதே "ன்னு
    அப்படின்னு அப்பத்தேன் ஒரு குரலு காத்துல வருது.
    தண்ணியில்லாம தவிச்ச செடிக்கு மழத்தூறலா தண்ணி கிடச்சா எப்படி இருக்கும்.சோகமான மனசு கொஞ்சம் சொக்குது.
    "உள்ள அழுகறேன்
    வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் "ன்னு
    அடுத்த அடி போட,
    "இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    உன்ன மீறவும் ஊருக்குள்
    ஆளில்ல "ல்னு
    ஞாயத்த, பதில் குரல் சொல்ல,
    இது மாதிரியான ஆறுதலத்தான இத்தன நாளா தேடுனேன் ?ன்னு
    ஆச்சரியமும் சந்தோசமுமா சுத்தி முத்தி ஆள தேடி தேடி யாரையும் காணோமேன்னு
    "பூங்குயில் யாரது "ன்னு பெருசு
    கேள்வி கேக்குறாப்புல ' பாடுது.
    இனியும் இந்த மனுசனுக்கு தன் முகத்த காட்டாம இருக்க முடியாதுன்னு சொல்லி ஒருத்தி வந்து நிக்குறா.
    பிரமிச்சு நிக்குது பெருசு.
    அது
    குயிலு.
    உனக்குள்ளயா இவ்வளவு சங்கதி ன்னு விழி விரிஞ்சு பாக்குறாரு மனுசன்.
    கவலய எல்லாம் காத்துல பறக்க விடு, மன பாரத்த தூக்கி எறிங்கற மாதிரி அவ பேச்சு பெருசுக்கு ஆச்சர்யமாச்சு.
    அவள எட போட்டது தப்பாப் போச்சேங்கறது அவரு முகத்தில தெரியுது.
    "பேச்சு விவரமாத்தான் இருக்கு, பெரிய அஞ்ஞானமெல்லாம் பேசுறியே " அப்படிங்குது பெரிசு.
    "அப்படி பேசுலேன்னா அல்லல குத்தி விளயாடும் இந்தக் கால இளவட்டம்"அப்படிங்கறா குயிலு.
    இளவட்டம்ங்கற வார்த்த பெரிசுக்கு ஆர்வமாச்சு.
    உடனே,
    "இளவட்டம்ங்கற மரியாதய எனக்குத் தர்றியா "ன்னு கேட்கறாரு.
    அவளுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யத்த கொடுத்திருக்கும் போல.
    "விட்டா கட்டிக்கிறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்கு "ன்னு அவ கேட்க,
    "வந்தா என்ன? "ன்னு இவரு கேட்க
    அப்பத்தா அவ,
    ஆச கிழவனுக்குன்னு ஒரு வார்த்தய விட்டுப்புட்டா.

    அறுபது வயசு மனுசந்தேன்.அது அந்த வயசுக்கு அதுக்கேத்த மாதிரி வாழலியே.மனசுல அதுக்கு என்ன வெல்லாம் ஆச இருந்திருக்கும். அது நொறுங்கி பல வருஷம் ஆச்சே.நாளாக நாளாக அந்த மன பாரம் நீங்க அதுவும் ஒரு வடிகால் தேடுமில்லையா.அந்த நேரத்தில அவ குணமும் பேச்சும் கொஞ்சம் சந்தோசம்னு நினக்கையிலே பாவி புள்ள கிழவன்னுட்டாளேங்கற கோபம் உடனே என்னையா கிழவங்கற, உன் குடிசய எல்லாம் காலிபண்ணி புடுவேன்னு தன் அதிகாரத்த காட்டுது.அதிகாரத்தோட பலவீனம் இந்த மாதிரி சமயங்களில்தா தெரிஞ்சுக்க முடியுது.
    அந்த வார்த்தா அவள குத்திருது.
    அதிகாரத்த சாய்க்கனும்னா பலமான வார்த்தைய சொல்லியாகனும்.அதனால,
    "நீ குமரன்னு நான் ஒத்துக்கனும்னா இந்தக்கல்ல தூக்குய்யா பாக்கலாம்.அப்பிடி நீ தூக்கிப்பிட்டின்னா உன்ன குமரன்னா ஒத்துக்கிடர்றேன் "னு சவால் விடுறா.
    அதுக்கு பெரிசு, "நீ குமரன்னு ஒத்துகிட்டா பத்தாது. என்ன கட்டிக்கிடறயா, தூக்கறேன் "ன்னு ஒரு கொக்கிய வீசுது.
    அதுல எல்லாமே அடங்கிப் போயிருமேங்கற சாமார்த்தியந்தான் அந்தக் கேள்வி.
    தனக்குத்தா ஜெயிப்புன்னு நினச்சுத்தா மனுசங்க பந்தயத்தில இறங்கறாங்க.அதுக்கு அவளும் விலக்கல்ல. ஒத்துக்கிடறா, அப்ப விட்டாப் போதும்னு ஒரு சமாதானத்துக்கு.
    இந்தக் கூத்துதான் பெரிசு அந்த பாறய தூக்கிப் பாக்றதும் , முடியாம வக்கிறதுக்கும் உண்டான காரணம்.

    ****
    ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே அங்க விக்கறதும் வாங்கறதும் நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
    சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
    போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
    ***
    நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
    மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.

    அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
    ஆரம்பிச்சு வச்சிடறான்.
    புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
    எடுக்கிறா சீமாத்த.
    விளாசறா குயில.
    தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
    ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
    இத ஒண்ணத் தவிர.

    இது வரைக்கும் குயில மனசுல என்ன இருந்துச்சோ. தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
    "ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
    ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
    இது இப்ப அவ நிலம.

    ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.

    அப்புறமென்ன?

    பஞ்சாயத்து.
    பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
    உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
    கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
    ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
    ...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
    கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.

    "எல்லாரும் கேட்டுக்கங்க.
    ஆமா!
    அவள நான் வச்சிருக்கேன் ".

    அல அடிச்சி ஓஞ்சாச்சி
    புயல் வீசி அடங்கிருச்சி.

    இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
    ***
    ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
    ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
    அங்கன வராரு பெருசு.
    பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
    "உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
    நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."


    குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
    வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
    ***
    ஜெயில் :

    நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
    -இது மலைச்சாமி.

    நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
    -இது குயிலு.

    மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
    இப்ப சொல்றா குயிலு...

    எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
    கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
    அதான்...
    பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.

    கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
    அதயே அவகிட்டவும் சொல்றாரு.
    இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
    "ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
    குயிலு!
    நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
    நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.

    ***

    பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
    அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
    ***
    பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
    குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
    "மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
    பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
    அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.

    கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
    குயில் பாட்டு நின்னுடுச்சு.

    *********************************************
    ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
    -வைரமுத்து.

    முதல் மரியாதை..
    முற்றும்.
    Last edited by senthilvel; 27th February 2017 at 06:15 PM.

  7. Likes Harrietlgy, Gopal.s liked this post
  8. #3495
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.

    ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.

    மலைக்கள்ளன் பிறந்தது- 1955.

    மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)

    மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)

    சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.

    சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.
    உண்மையே உன் விலை என்ன?
    கோபால் சார் நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள்

    என்.டி.ஆர். பதவியேற்றது 1983 -ல்.
    பதவியேற்ற மறுநாளே மருத்துவ சீட் கொடுத்திருந்தாலும் மலைக்கள்ளன் மருத்துவர் ஆகியிருப்பது 1983 +5 +1 +2 = 1991 -ல்
    மருத்துவர் ஆன மறுநாளே அமெரிக்கா போயிருந்தால் கூட 1991 -ல் தான் போயிருக்க முடியும்.
    சீட் வாங்கி கொடுத்தவர் அமெரிக்காவில் சிகிக்சை பெற்றது 1984 (அசைக்க முடியாத ஆதாரம் 84 தேர்தல்)

    கரு பழனியப்பன் கொஞ்சம் கால்குலேட் பண்ணி கதை விடுதல் நல்லது.

  9. Thanks Gopal.s thanked for this post
  10. #3496
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இன்றைய தொலைக்காட்சி சேனல்களில்,
    காலை 11 மணிக்கு சன் லைப்பில்
    *நிச்சய தாம்பூலம்'
    பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
    " ஊரும் உறவும் "...
    மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
    " கந்தன் கருணை "
    இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
    * உத்தம புத்திரன்
    இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
    " ஜெனரல் சக்ரவர்த்தி "
    இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
    * ஆலயமணி
    அப்போது திரையரங்குகளில்,
    இப்போது சின்னத்திரைகளில்
    எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்

    " ஊரும் உறவும் "...
    மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
    " கந்தன் கருணை "
    இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
    * உத்தம புத்திரன்
    இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
    " ஜெனரல் சக்ரவர்த்தி "
    இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
    * ஆலயமணி
    அப்போது திரையரங்குகளில்,
    இப்போது சின்னத்திரைகளில்
    எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்

    See more















    (முகநூல் நண்பர் சேகர் பரசுராம் )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks Gopal.s thanked for this post
  12. #3497
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #3498
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. Likes Harrietlgy liked this post
  15. #3499
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  16. Likes Harrietlgy liked this post
  17. #3500
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  18. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •