Page 346 of 400 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3451
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார் ஆதிராம் சாரின் நினைவுகளுடன் கலந்த என்
    நினைவுகள்


    1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு


    பிங்க் கலர் பைஜாமா வேட்டியில்
    ***************************************


    அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
    தலைவன் அடிபட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது.அந்த நாளிலேதான் சிவாஜியின்மறவர்படை பீளமேட்டிலிருந்து சூளுர் வரை எதிர்முகாமை சேர்ந்தவர்களின் போர்டுகள் மன்றங்கள் ஒன்று விடாமல் சூறையாடப்பட்டன என்பது எங்களுக்கு கிடைத்த செய்தி.மிகப்பெரிய பரபப்பை உண்டு செய்த சம்பவம் அது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3452
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    .Facebook ல்
    வந்த சில சுவராஸ்யமான பதிவுகள்



    சமீபத்தில் நண்பர் திரு Singaravelu Balasubramaniyan அவர்கள் முகநூலில் பதிவிட்ட நடிகர்திலகத்தின் அறிய புகைப்படம்,
    தங்கப் பதக்கம் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு இடையில் எடுக்கப்பட்டது,
    இதில் நாம் உணர வேண்டியது
    நடிகர்திலகம் அவரது கதாப் பாத்திரம் SP, ஆகும்
    திரு இயக்குநர் விஜயன் அவர்களது கதாப்பாத்திரம் DGP , படத்தில் சேர்க்கப்படாத சாதாரணமாக
    எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட ஒரு DGP யின் தன்மை குறைந்து விடக்கூடாது என்பதற்காக SP அந்தஸ்தில் இருக்கும் நடிகர்திலகம் தள்ளி ஓரத்தில் நின்று கொண்டு தனது கரங்களை பின் புறம் கொண்டு ஒரு SP உயரதிகாரி முன் காட்டும் பணிவுடனும் DGP யாக இருப்பவர் புகைப்படமாக இருந்தாலும் கூட அவர் தான் முக்கியத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற மேன்மையான சிந்தனை பொருந்திய வெளிப்பாடு இந்தப் புகைப்படம்
    அதனால் தான் நடிகர்திலகம் "கலைத்தாயின் மூத்த மகன் ",
    இத்தனை ஈடுபாட்டுடன் நடித்து வெளியானதால் தான். " தங்கப்பதக்கம் " காவியமாகி முக்கிய பெரு நகரங்களில் வெள்ளி விழாவையும் இதர முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேலும் சிறிய ஊர்களில் கூட 50 நாட்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்ததோடு காவல் துறைக்கு ஒரு மக்களிடையே பெரும் நன் மதிப்பை பெற்றுக் கொடுத்தது.

  4. #3453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Facebook ல் சேகர்பரசுராம் வித்தியாசமான நல்ல பதிவுகளை இட்டு வருகிறார்.
    பெரியவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



  5. #3454
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3455
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3457
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3458
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  10. #3459
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 164– சுதாங்கன்.



    அகில உலகிலும் புகழ் பெற்ற அந்த பிரபலமான இந்தி வி.ஐ.பி. யார் ?
    அவர்தான் இந்தியின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்!
    வழக்கமாக லதா மங்கேஷ்கர் மற்ற பாடகிகளின் குரலை ஊக்குவிக்க மாட்டார் என்று சொல்வார்கள்.
    `குட்டி’ என்கிற இந்திப்படத்தில்தான் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் பாடிய `போலுரே பப்பி’ என்ற பாடல் இந்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
    அவருடைய குரல் வட இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது.
    ஆனால் `வாணி ஜெயராமை பாட வைத்தால், அந்த சினிமா நிறுவனத்திற்கு நான் பாடமாட்டேன்’ என்று லதா மங்கேஷ்கர் சொன்னதாக அப்போது வட இந்திய பத்திரிகைகளில் செய்தி வந்தது. அப்படிப்பட்ட லதா மங்கேஷ்கர்தான் பி. சுசீலாவை பாராட்ட சென்னைக்கு வந்தார். ஆனால், உண்மையிலேயே சுசீலாவின் குரல் லதா மங்கேஷ்கருக்கு மிகவும் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
    `பாவமன்னிப்பு’ படத்தில் சுசீலா பாடிய `அத்தான் என்னத்தான்’ பாடலை லதா மங்கேஷ்கர் மிகவும் ரசித்ததாக அப்போதே செய்திகள் வந்தன. அடுத்து லதா மங்கேஷ்கர் இந்த விழாவிற்கு வந்ததற்கு இன்னொரு காரணம், ஏவி.எம்.நிறுவனம்.
    அதைவிட முக்கியமானது, லதா மங்கேஷ்கர் சிவாஜி குடும்பத்தின் மிகவும் நெருக்கமான நண்பர். சிவாஜி கணேசனும், லதா மங்கேஷ்கரை தன் சகோதரி என்றுதான் எப்போதும் குறிப்பிடுவார்.
    அந்த லதா மங்கேஷ்கர்தான் 'உயர்ந்த மனித'னில் சுசீலா பாடிய பாடலை பாராட்ட சென்னை வந்திருந்தார். அதே சமயம் `உயர்ந்த மனிதன்’ படம் வெளியாகி 125 நாட்கள் ஓடியபிறகுதான் ஏவி.எம். நிறுவனம் 100வது நாள் விழாவை கொண்டாடியது.
    இந்த நூறாவது நாள் விழா ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டிப் பேசி பரிசுகளை வழங்கினார்.
    `உயர்ந்த மனிதன்’ தயாரிப்பில் இருந்தபோது இன்னொரு சுவையான சம்பவமும் நடந்தது. நடிகர்
    எஸ்.வி. சுப்பையா அப்போது `காவல் தெய்வம்’ என்றொரு படத்தை எடுத்துக்கொண்டிருந்தார்.
    ஏவி.எம். சரவணனோடு மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பழகும் இரண்டு கலைஞர்கள் எஸ்.ஏ. அசோகனும், எஸ்.வி. சுப்பையாவும்தான். தனது
    `காவல் தெய்வம்’ படத்திற்கு சுப்பையாவுக்கு சிவாஜியின் கால்ஷீட் நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது.
    `நான் எவ்வளவு கேட்டும் சிவாஜி தரமாடேன்ங்கிறார். நீங்க கேட்டு வாங்கித் தரணும்’ என்று ஏவி.எம். சரவணனிடம் எஸ்.வி. சுப்பையா கேட்டுக்கொண்டார்.
    அவருக்கு எப்படியும் அந்த படத்தை விரைவாக முடித்து திரையிட்டாக வேண்டும். ஏனென்றால், தயாரிப்புச் செலவுகள் ஏகமாகிக் கொண்டிருந்த நிலையில் எந்த தாமதமும் அவருக்கு வட்டிச் சுமையை மேலும் அதிகமாக்கும்.
    அப்போது சிவாஜிக்கும், எஸ்.வி. சுப்பையாவுக்குமிடையே கருத்து வேறுபாடு. சிவாஜி கால்ஷீட் தராமல் இருந்தது அதுவும் ஒரு காரணம்.
    சரவணன் சிவாஜியிடம் போய் கேட்டார்.`சுப்பையா கம்பெனியின் புரொடக்*ஷன் மானேஜர் நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ஹெல்ப் பண்ணினால் நல்லாயிருக்கும்.’
    `என்ன செய்யறது? எனக்கு, கொடுக்க டேட்ஸ் இல்லியே? எப்படி கால்ஷீட் கொடுக்கிறது?’’ என்றார் சிவாஜி.
    அப்போது `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    ``சரி! ஒண்ணு செய்யுங்க. `உயர்ந்த மனிதன்’ படத்துக்கு எங்களுக்கு டேட் கொடுத்திருக்கீங்க இல்லே…. அதில் நாலைஞ்சு நாட்கள் இந்த ஷெட்யூல்ல சுப்பையாவுக்கு கொடுங்க. அப்புறம் அடுத்த ஷெட்யூல்ல நீங்க எங்களுக்கு அதை சேர்த்துக் கொடுத்திட்டா ஓ.கே.’’ என்றேன்.
    சற்று நேரம் யோசித்த சிவாஜி, ``அப்படிக் கொடுத்தா பரவாயில்லையா?’ என்று கேட்டார்.
    "சுப்பையா என்கிற நண்பருக்காக நான் இந்த தியாகத்தைச் செய்ய தயாராக இருக்கேன்’’ என்று சரவணன் சிரித்துக்கொண்டே சொன்னார்.
    ஐந்து நாட்கள் சுப்பையாவுக்கு சிவாஜி நடித்துக்கொடுத்தார். அந்த ஐந்தே நாட்களில் அந்த ரோலை அற்புதமாக செய்து கொடுத்தார். அந்த படத்தில் ஒரு மரமேறியாக சிவாஜி வருவார். படம் முழுக்க வரும் ரோல் அது. அந்த சில நாட்களில், தனது போர்ஷன் முழுவதையும் கச்சிதமாக முடித்து கொடுத்துவிட்டார் நடிகர் திலகம்.
    அதன் பின்னர் ஒரு நாள் ஒரு டிபன் கேரியரை சிவாஜிக்கு கொடுத்தனுப்பினார் எஸ்.வி. சுப்பையா. அதில் சிவாஜி சாப்பிட டிபன் அனுப்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார்.
    சிவாஜி டிபன் பாக்ஸை திறந்தார். முதல் அடுக்கில் உண்மையிலேயே டிபன் இருந்தது. கீழே இருந்த கிண்ணத்தில் பதினையாயிரம் ரூபாய் இருந்தது. சிவாஜிக்கு கோபம் வந்து ஏவி.எம். சரவணனை கூப்பிட்டனுப்பினார்.
    சரவணனைப் பார்த்ததும், `உங்க ஆச்சாரி செய்த வேலையைப் பாத்தீங்களா?’ என்று வெடித்தார் சிவாஜி. சுப்பையாவை சிவாஜி எப்போதும் ஆச்சாரி என்றுதான் அழைப்பார். அந்த இடத்துக்கு சுப்பையா வரவழைக்கப்பட்டார். சரவணன் விசாரித்தார். `காவல் தெய்வம்’ படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு நான் அனுப்பிய சம்பளம்’ என்றார் சுப்பையா.
    `எனக்கு நீங்க சம்பளம் தர்றதாயிருந்தா எவ்வளவு தரணும் தெரியுமா? சரவணனைக் கேளுங்க. 'உயர்ந்த மனிதன்' படத்துக்கு எனக்கு தர்ற லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தரணும்’
    சுப்பையாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
    `நான் உங்களுக்கு தந்த கால்ஷீட் உங்களுக்காக தரலே. சரவணனுக்காகத்தான் கொடுத்தேன்’ என்றார் சிவாஜி.
    சற்று நேரம் இப்படியே போயிற்று. பிறகு தன்னுடைய செயலுக்கு சுப்பையா வருத்தம் தெரிவித்தார். சிவாஜியும் பிறகு சகஜமாகிவிட்டார். அந்தப் பணத்தை சிவாஜி கடைசி வரையில் வாங்கிக் கொள்ளவேயில்லை.அதை சுப்பையாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். சுப்பையா சரவணனிடம் கொண்டிருந்த அன்புக்கு அளவே இல்லை. அதே போல் சரவணனும், அவரிடம் அன்பு கொண்டிருந்தார். சுப்பையாவை பற்றி இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லியாக வேண்டும்.
    சிவாஜியுடன் நடித்தவர்களில் மிக முக்கியமான நடிகர்களில் சுப்பையாவும் ஒருவர். அவர் அப்போது ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்த காரனோடையில் பண்ணை வீடு ஒன்று கட்டியிருந்தார். அங்குதான் வசித்தார்.படப்பிடிப்புக்கு அங்கிருந்துதான் வருவார்.
    அருமையான இயற்கைச் சூழல் வாய்ந்த இடம் இது.
    காஞ்சி மகா பெரியவர் சுப்பையாவின் இடத்துக்கு வந்து தங்கியிருக்கிறார் என்றால் அந்த இடத்தை பற்றி வேறென்ன சொல்லவேண்டும்?
    `என் வீட்டுக்கு வரவேண்டும் ‘ என்று சுப்பையா ஒரு நாள் சரவணனை அழைத்தார்.
    அவரும் போனார். உள்ளே நுழைந்ததும் `டேய் சரவணா …. உனக்கு அறிவிருக்கா? புத்தியிருக்காடா? ஏண்டா இப்படி பண்றே? என்றார்.
    சுப்பையா ஏன் அப்படி சொன்னார் ?
    (தொடரும்)

  11. #3460
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Last edited by senthilvel; 20th February 2017 at 10:52 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •