Page 329 of 400 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3281
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3282
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முதற்கண் என் நன்றிகளை திரி நண்பர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
    (ராகவேந்திரா சார்
    முரளி சீனிவாஸ் சார்
    வாசு சார்
    கோபால் சார்
    சிவா சார்
    ஆதிராம் சார் .
    ஆதவன் ரவி சார் )

    வாசு சார்
    80 களின் சரித்திரத்தையே சில மணிகளில் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.இது அனைவருக்கும் சந்தோசத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும். தொடர்ந்து இது போல் வருகை தாருங்கள்.

    அலைபேசியில் அழைத்து வாழ்த்திய முரளி சீனிவாஸ் அவர்களின் ஒரு புதிய பதிவை அனைவரும் எதிர்பார்க்கிறோம்..

  4. #3283
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள செந்தில்வேல் சார்,

    என்ன சொல்வது, எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆவணப் பதிவுகளால் திணறடித்து வருகிறீர்கள். எப்படி பாராட்டுவது எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

    1976 - 1985 காலகட்டங்களில் வந்த விளம்பர பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவை மங்காத பொலிவுடன் திரியில் வலம் வருவது மிகுந்த மகிழ்சசியளிக்கிறது.

    ஒரு ஆவணம் நூறு பதிவுகளுக்கு சமம் என்பார்கள். நீங்களோ நூற்றுக் கணக்கான ஆவணங்களை தந்து அசத்தி வருகிறீர்கள்.

    சாதனைக் காவியம் திரிசூலத்தின் முழுமையான ஆவண வரிசை இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அத்துடன் திரியில் இதுவரை இடம்பெறாத ரிஷிமூலம், கவரிமான், மாடிவீட்டு ஏழை, நாம் பிறந்த மண், ஜெனரல் சக்கரவர்த்தி, சத்திய சுந்தரம், தியாகி உட்பட பல திரைக் காவியங்களின் விளம்பர ஆவண வரிசை அற்புதம், அட்டகாசம் இன்னும் அதுக்கும் மேலே.

    தங்கள் தொய்வில்லாத உழைப்புக்கு எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  5. #3284
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு சார்,

    நண்பர் செந்தில்வேல் அவர்களின் ஆவண வரிசையைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் கடலூர் நகரில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடிய விவரங்களை சுவையாக தொகுத்துள்ளீர்கள். சரியாக போகாத படங்களையும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுதானே நம் ரசிகர்களின் கண்ணியம். அதனால்தானே சிவாஜி ரசிகன் எதை சொன்னாலும் அது சரியாகவே இருக்கும் என்று உலகம் ஏற்கிறது.

    கோபால் அவர்களின் ராஜா மீள்பதிவை தொடர்ந்து உங்கள் அசைபோடல்கள் செம்மை. உங்களைத்தான் கொஞ்சம் தூண்டி விட்டால் போதுமே சதிராட்டம் ஆடிவிடுவீர்களே.

    'கல்யாண பொண்ணு' பாடலுக்கு தலைவர் ஆட்டம் தூள். ஆனால் அதைத் தொடரவிடாமல் இரண்டாவது சரணத்தில் படகில் ஏற்றிவிட்டு அவர்து ஆட்டத்தை கட்டுப்படுத்தி விட்டார் சி.வி.ஆர். இதுபோல ரொம்ப சின்ன சின்ன குறைகளும் உண்டு. உதாரணமாக ஆரம்பத்தில் சிறையிலிருந்து தப்பித்த பின் விஸ்வத்தை ராஜா சந்திக்கவில்லை. கமிஷனர் பிரசாத் லைட்டர் கேமராவை ராஜாவிடம் கொடுத்தபின் கிளைமாக்சில்தான் ராஜா விஸ்வத்தை பார்ப்பார். ஆனால் லைட்டர் கேமராவில் எடுத்ததாக பிரசாத்திடம் ராஜா கொடுக்கும் போட்டோக்களில் விஸ்வம் போட்டோவும் இருக்கும். (இதெல்லாம் 'ராஜாவை நாங்க எவ்வளவு துல்லியமா பார்த்திருக்கோம்' என்று பெருமைப் பட்டுக்கொள்வதற்காக்கும்.. ஹி.. ஹி )

    ஜமாய்ங்க தலைவரே.
    உங்கள் ஆதி.

  6. #3285
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ரசிக்கத்தக்க நல்ல பாடல்கள், அழகான குழந்தைகளைப் போல.

    எந்தக் குழந்தையும் "என்னைக் கொஞ்சு" என்று
    விளம்பரப் பலகை வைத்துக் கொண்டு கெஞ்சுவதில்லை.

    கொஞ்சத் தூண்டும் அதன் அழகே, 'வேறு வழியில்லை.. கொஞ்சியே ஆக வேண்டும்' என்கிற அந்த அழகின் கர்வமிகு நிலைப்பே நாம்
    கொஞ்சுவதற்கான அழைப்பாகிறது.

    இந்தப் பாடலும் ஓர் அழகான குழந்தை. நம் நினைவு வாசல்களில் ஆர்ப்பரித்து விளையாடும்
    குழந்தை. குறும்பு மாறாத, துள்ளலும், வேகமும் மிகுந்த குழந்தை.

    "கொஞ்சாமல் போய் விடு.. பார்ப்போம்" என்று
    செல்லமாய் மிரட்டும் குழந்தை.
    *****

    "தன் நிழலையும்
    தள்ளாட வைக்கிறான்...
    குடிகாரன்"
    - முன்பு நானெழுதிய கவிதை.

    பெரிசாய் தாடி வளர்த்துக் கொண்டு, எந்நேரமும்
    சோகித்துக் கொண்டு, எதையோ பறிகொடுத்தாற்
    போல் எப்போதும் விட்டம் வெறித்துக் கொண்டு
    இருப்பதற்காகத்தான் குடிக்கிறார்கள் என்று நான்
    நினைத்திருந்தது இந்தப் பாடல் பார்த்து மாறியது.

    உறவென்று யாருமற்ற வேதனையை, நல்லதெது,
    கெட்டதெது என்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல்
    வளர்ந்த கொடுமையை, மதுப் புட்டி, லாரி, இரவு
    ராணிக்காக தியாகித்த இரவுகள் என்று தன்னைச்
    சுற்றி ஒரே மாதிரியாகச் சுழலும் உலகத்தினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதற்காக இனிமையாகத் தன்னை தண்டித்துக் கொள்ளவும் கூட குடிப்பார்கள் என்பது
    இந்தப் படம் பார்த்து புரிந்தது.
    *****

    "ஒரு இளைஞன் குடித்திருக்கிறான். அத்துடன்
    விடாமல் விலைமாது வீட்டுக்குப் போகிறான் .. ஆட்டம் போடுகிறான்" என்றொரு பாட்டுச் சூழலை
    ஒரு இயக்குநர் சொல்லி, பெண்கள் மிகுதியாகப்
    பார்க்கும் தன் படத்தில் அதை இடம் பெறச் செய்ய
    ஒத்துக் கொண்டு, கொஞ்சமும் விரசமின்றி அதை
    வெற்றியாக்கிச் சாதிக்க நடிகர் திலகமன்றி யார்
    இங்கே?
    *****

    இசைக்கேற்றாற் போல் ஆடுவதும், பாடல் வரிகளுக்குச் சரியாக வாயசைப்பதும் மட்டுமே
    போதும் என்று நாயகன் இருந்திருந்தால் இந்தப் பாடல் ஜெயித்திருக்காது.

    அந்த அழகியோடு அங்கே பாடி, ஆடுவது சும்மா
    ஒரு பொம்மையல்ல. உணர்வுகள் மிகுந்த ஒரு
    உயிர்ப்பான மனிதன். தன்னுடைய வாழ்வின்
    வெம்மைக்காக கவலை கொண்டு சோர்ந்து
    போகாத, தன்னை நோக்கி வரும் இன்ப நிமிஷங்களை வீணாக்கப் பிரியமில்லாத புத்திசாலி. வாழ்வின் கோர முகங்களையும் சந்தித்து வந்த அனுபவசாலி. இரவில் விழித்து
    ஆர்ப்பரிக்கும் ஒரு வீட்டுக்குள்ளிருந்து இந்த
    அவல உலகை விமர்சிக்கும் தைரியசாலி.

    சும்மா ஆடுகிற, பாடுகிற கதாநாயகன் இங்கே
    தேவைப்படமாட்டான்.

    அந்தப் பாடலில் நடிக்க ஒரு வேகம் வேண்டும்.

    வாழ்க்கை மீதும், சக மனிதர்கள் மீதும் பெரிய
    மரியாதை ஏதும் வைத்திராத ஒரு அலட்சியம்
    அந்த முகத்தில் தெரிய வேண்டும்.

    குடியும், காமமும் அப்படியொன்றும் தப்பில்லை
    என்று சொல்ல வருகிற துணிச்சலைக் காட்ட வேண்டும்.

    தனக்குப் பழக்கமான அவலமான வாழ்வை கிண்டலாகவும், கர்வமாகவும் ஆராயும் திறமை
    காட்ட வேண்டும்.

    ஒரு தேர்ந்த கஜல் பாடகனின் கையசைப்பு பாவனைகள்..

    வாழ்வின் மீது எவ்வித மரியாதையும் இல்லாததை
    உணர்த்தும் அந்தக் கர்வக் கண்கள்...

    தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து கவலைப்படாததைக் காட்டும் அந்த முகத்தின்
    அலட்சியங்கள்...

    துள்ளலான அந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தின் முழுமைத்
    தன்மை ...

    இவற்றை வைத்துக் கொண்டு நம்மை இந்தப்
    பாடல் வழி வசீகரிக்க ஒரே ஒரு நடிகர் திலகம்
    இருக்கிறாரே..?

    அந்த நாயகனின் ரசிகரென்கிற பெருமை நம் ஆயுசுக்கும் வேண்டும்.



  7. Likes Harrietlgy liked this post
  8. #3286
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3287
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3288
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு


  11. #3289
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #3290
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •