Page 315 of 400 FirstFirst ... 215265305313314315316317325365 ... LastLast
Results 3,141 to 3,150 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3141
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்பழையபடி மய்யம் இணையதளத்திற்கு வருகை தரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் இங்கு எங்களுக்கு இன்னும் சரியாகவில்லை. விரைவில் இது சரியாகி விடும் என நம்புகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3142
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதவன் ரவிதங்களைப் பாராட்ட வேண்டும். ஆனால் எப்படி.. மொழி தெரியாமல், வார்த்தை கிடைக்காமல் தவிக்கிறேன். மிக அருமை. நிகழ்ச்சியின் தொகுப்புரையா அல்லது சுவாரஸ்யமான இலக்கியமா எவ்வாறு பாராட்டுவது..ஒரே வார்த்தை. அருமை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3143
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மோட்டார் சுந்தரம் பிள்ளை- 26/01/1966.

    ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.

    வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.

    ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.

    பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
    நாளும் வருகிறது.

    சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.

    மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.


    நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.

    குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.

    supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.

    நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).

    சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.

    மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy liked this post
  6. #3144
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜா-26/01/1972.

    சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.

    வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.

    சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....

    இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.

    பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.

    என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.

    இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.

    உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....

    பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.

    அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.

    இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.


    முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.

    ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.

    நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.

    பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.

    குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.

    ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.

    அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.

    பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.

    தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.

    சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?

    இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.

    தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)

    இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.

    இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.

    இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
    அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).

    இதை பற்றி குறிப்பிடாத விமரிசனங்களே வெளி வந்ததில்லையே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Harrietlgy liked this post
  8. #3145
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ஞாயிறன்று நடந்த விழாவில், "பராசக்தி"யை முதல் நாள்,முதல் காட்சியில் தரிசித்த பெருமைக்குரிய, நீண்ட காலமாக நான் சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்த பெரியவர் அய்யா திரு. நடராஜன் அவர்களைச் சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன்.

    அவரும், நானும் அய்யா சி. வி. ஆர் அவர்களுடன்
    இணைந்து நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்
    கொண்டோம்.

    இன்னும் ஒரு புகைப்படம் வேண்டும் போல் தோன்றிற்று எனக்கு. அய்யா சி. வி. ஆரிடம்
    " சார்... இன்னும் ஒரே ஒரு போட்டோ சார்!?" என்றேன். " சார்.. எடுத்துக்குவோம் சார்!" என்று என் தொனியிலேயே புன்னகையுடன் சம்மதம்
    சொன்னவர், அருகில் நின்ற எனது தோளின் மீது
    தன் கையைத் தவழ விட்டுக் கொண்டார்.

    அந்த ஸ்பரிசம் தந்த புல்லரிப்பில் ஒரு
    உண்மையையும் சந்தோஷமாக உணர்ந்தேன்...
    "அய்யன் நடிகர் திலகத்தின் திருக்கரம் பற்றிய
    சாதனைக் கரமல்லவா இது !?"

  9. Likes Harrietlgy liked this post
  10. #3146
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3147
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes Harrietlgy liked this post
  13. #3148
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Harrietlgy liked this post
  15. #3149
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. #3150
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •