Page 314 of 400 FirstFirst ... 214264304312313314315316324364 ... LastLast
Results 3,131 to 3,140 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் வாழ்த்து




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3132
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post




    வெளியே தெரியாமல் மறைந்துகிடந்த
    பல சாதனைகளின் பொக்கிஷ பதிவுகள்
    நன்றி செந்தில்வேல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3133
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


  5. Likes adiram liked this post
  6. #3134
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 160– சுதாங்கன்.





    தயாரிப்பாளர், நடிகர் கே. பாலாஜி எடுத்த `தங்கை’ படம்தான் சிவாஜி, பாலாஜி இணைப்பில் உருவான முதல் படம்!
    சிவாஜியும், கே.ஆர். விஜயாவும் ஜோடி! படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்!
    பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன்!
    வழக்கம் போல் பாடல்களும் படத்தின் பெயரை சொன்னது!
    படமும் சென்னையில் அப்போதிருந்த சித்ரா தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
    1968ல் வந்த சிவாஜியின் படங்கள் ‘திருமால் பெருமை’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘என் தம்பி’, ‘தில்லானா மோகமாம்பாள்’, ‘எங்க ஊரு ராஜா’, ‘லட்சுமி கல்யாணம்’, ‘உயர்ந்த மனிதன்’.
    தன் புராணப் படங்களில் சைவத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஏ.பி. நாகராஜன் என்ற குற்றச்சாட்டை மறைக்க வைணவத்திற்காக அவர் எடுத்த படம் தான் திருமால் பெருமை!
    திருமாலின் பெருமைகளையும், குறிப்பாக ஆழ்வார்களின் பெருமைகளை சொன்ன படம் இது!
    சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பைப்பற்றி பலர் சொல்லியிருக்கிறார்கள்.
    இந்த படத்தில் திருமாலாக வந்த நடிகர் சிவகுமார் சிவாஜியின் ஈடுபாட்டை தன்னுடைய `இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தில் பதிவு செய்திருப்பார்.
    இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு பாத்திரம் திருமங்கை ஆழ்வார்!
    அரங்கனுக்கு கோயில் கட்ட தன் செல்வத்தை எல்லாம் செலவழிப்பான் திருமங்கை மன்னன்!
    பொருள் குறைந்த போது அரங்கனுக்காக கொள்ளையடிக்கவும் திருமங்கை மன்னன் தயங்கவில்லை.
    திருமங்கை மன்னனை நல்வழிப்படுத்த திருமால் ஒரு திருமண கோலத்தில் வருவார், ஒரு எளிய மனிதனாக, மாப்பிள்ளையாக!
    அந்த திருமண கோஷ்டியை வழிமறித்து கொள்ளையடிப்பான் திருமங்கை மன்னன்! அவர்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் கொள்ளை யடிப்பான்! ஆனால் மாப்பிள்ளை காலில் போட்டிருந்த மெட்டியை மட்டும் கழற்ற வராது.
    மாப்பிள்ளையாக வந்திருந்த திருமால், முடிந்தால் நீயே கழற்றி எடுத்துக்கொள் என்பார்.
    கையால் கழற்ற முடியாதபோது அந்த மாப்பிள்ளையின் காலைத் தான் வாயில் வைத்து தன் பல்லால் அந்த மெட்டியை கழற்ற முயல்வான் திருமங்கை மன்னன்!
    இந்த காட்சியை சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலைப்பகுதியில் படமாக்கினார் ஏ.பி.என்.
    அசுத்தமான வெட்டவெளி பகுதியில் படப்பிடிப்பு! சிவகுமார் தன்னைவிட வயதில் மிகவும் இளைய நடிகர்! அந்தக் காட்சியை டூப் போட்டு கூட எடுத்திருக்கலாம். ஆனால் சிவாஜி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.
    வெறுங்காலோடு அந்த அசுத்தமான வெட்டவெளியில் நடந்து வந்த சிவகுமாரின் காலை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டு இயல்பாக கடிக்க ஆரம்பித்தாராம் சிவாஜி கணேசன்!
    சிவாஜி தன் காலை தொட வருகிறார் என்றதும் சிவகுமார் பதறிப்போனாராம்.
    `டேய்! இது நடிப்புடா! அப்படி நடிச்சாத்தான் இயல்பா இருக்கும்’ என்று தைரியம் சொன்னாராம் சிவாஜி!
    சைனா யுத்த நிதிக்காக நட்சத்திர இரவு நடத்தி நிதி வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக சிவாஜி, ஸ்ரீதரை அணுகினார்கள்.
    `நிகழ்ச்சி என்ன?’ என்பதைப் பற்றி சிவாஜியும், ஸ்ரீதரும் பேசினார்கள்.
    சிவாஜி, ஜெமினி, ஏவி.எம். ராஜன், முத்துராமன், வி.கே.ஆர், நாகேஷ், கே.ஆர். விஜயா, சவுகார் ஜானகி, ஜெயலலிதா, சாவித்திரி, மணிமாலா, மனோரமா, சந்தியா என்று ஒரு பெரிய பட்டியல்.
    இவர்கள் எல்லோரும் பங்குபெறும் ஒரு மணி நேர நாடகம் வேண்டும். பத்மினி நடனம். எம்.எஸ். விஸ்வநாதன் இன்னிசைக் கச்சேரி. ஜெமினி, சாவித்திரி பங்குபெறும் ஓர் இருபது நிமிட நாடகம்.
    இப்படி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
    ஸ்ரீதர் தன் உதவியாளர் கோபுவை அழைத்தார். `நீ இன்னும், இரண்டு மூன்று நாட்கள் இந்த பக்கம் தலை காட்டக்கூடாது. இந்த எல்லா நடிகர்களையும் வைத்து ஒரு மணி நேரத்தில் நகைச்சுவை நாடகம் எழுதிக் கொண்டு வா. அப்படியே ஜெமினி, சாவித்திரிக்கு ஒரு சின்ன நாடகம் தயார் செய்து கொண்டு வந்து கொடு’ என்றார்.
    உடனே கோபு திருவல்லிக்கேணியில் இருந்த தன் மாமனார் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து நாடகம் எழுத ஆரம்பித்தார்.
    ஒரு தகப்பனுக்கு நான்கு பெண்கள். இரண்டாவது பெண்ணை அவள் காதலன் (கதாநாயகன்) பெண் கேட்டு வர, மற்ற பெண்களுக்கும் வரம் தேடி வந்தால்தான் அவர்களது கல்யாணம் நடக்கும் என்று உறுதியுடன் கூறுவார் பெண்ணைப் பெற்றவர்.
    காரணம் நாகு பெண்களுக்கும் ஒன்றாக ஒரே பந்தலில் கல்யாணத்தை நடத்துவதாக திருப்பதி பெருமாளிடம் வேண்டிக் கொண்டதாகக் கூறுகிறார். நான்கு பெண்கள், அவர்களின் அப்பா, அம்மா, நான்கு மாப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து பத்து நடிகர்களுக்கு பாத்திரங்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஒரே மூச்சில் எழுதினார் கோபு!
    `கலாட்டா கல்யாணம்’ நாடகம் முழுமையாக அமைந்துவிட்டது.
    ஜெமினி, சாவித்திரிக்கு நவீன ‘துஷ்யந்தன் சாகுந்தலை’ நாடகம் எழுதி எடுத்துக்கொண்டு சிவாஜி, ஸ்ரீதரிடம் படித்துக் காண்பித்தார் கோபு.
    சிவாஜி நன்றாக ரசித்தார். அவருக்கு நாடக அனுபவம் அதிகம் என்பதால், எல்லா நடிகர், நடிகைகளையும் நன்கு வேலை வாங்கி ஒத்திகையில் நன்றாக நடிக்க வைத்தார். நட்சத்திர இரவு ஊர் ஊராக நடக்க ஆரம்பித்தது.
    முதலில் `கலாட்டா கல்யாணம்’ நாடகத்துக்கு பெரிய கைதட்டல்!
    திருச்சியில் அதைவிட அதிகம்!
    சேலத்தில் பட்டையை கிளப்பி விட்டார்கள்! அவ்வளவு அப்ளாஸ்!
    சேலத்தில் அந்த நாடக இடைவேளையின்போது சிவாஜி, கோபுவிடம், ‘இந்த நாடகத்தை என் சொந்த கம்பெனி மூலமாக திரைப்படமாக எடுக்கப்போகிறேன். கதை உரிமையை யாருக்கும் கொடுத்து விடாதே’ என்றார்.
    நட்சத்திர இரவு இப்படி இனிதே முடிந்த பிறகு, சிவாஜியின் தம்பி சண்முகம் `கலாட்டா கல்யாணம்’ படப்பேச்சை கோபுவிடம் எடுத்தார்.
    `பி.மாதவனை டைரக்ட் செய்ய சொல்கிறேன். திரைக்கதைக்கு தகுந்த மாதிரி கதையை தயார் செய்து கொள்’ என்றார்.
    கோபு சண்முகத்திடம், `மாதவனும் என் நண்பர்தான். இருந்தாலும் நானும் சி.வி. ராஜேந்திரனும் இரண்டு படங்கள் ஒன்றாகச் செய்திருக்கிறோம். நீங்கள் தைரியமாக ராஜேந்திரனையே டைரக்ட் செய்ய சொல்லுங்கள். நகைச்சுவை கெடாமல் படம் எடுத்துத் தருவார்’என்றார்.
    சிவாஜியும் ` அந்த பயகிட்ட எனக்கும் நம்பிக்கை இருக்கு’ என்றார்.
    `கலாட்டா கல்யாணம்’ சிவாஜி பிலிம்ஸ் கண்காணிப்பில், ராம்குமார் பிலிம்ஸ் தயாரித்து சிவாஜி, நாகேஷ், ஏவி.எம்.ராஜன், கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதா, தங்கவேலு, சுந்தரிபாய், சோ, வி.எஸ்.ராகவன், சீதாலட்சுமி என்றொரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் நடித்தது.
    இந்த படத்தில்தான் சிவாஜியும், ஜெயலலிதாவும் முதல் முறையாக ஜோடியாக நடித்தார்கள்.
    (தொடரும்)

  7. #3135
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3136
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள செந்தில்வேல் சார்,

    சங்கிலி, ரிஷிமூலம், திரிசூலம் மற்றும் நடிகர்திலகத்தின் திரைப் படங்களின் விளம்பர வரிசை செம அட்டகாசம். அதிலும் ரிஷிமூலம் விளம்பரமெல்லாம் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்தவை. நம் திரியில் இதுவரை அறவே இடம் பெறாதவை. பதித்தமைக்கு மிக்க நன்றி.

    இதுபோலவே நம் திரி அறவே கண்டிராத விளமபரம் 1975 துவக்கத்தில் வெளியான 'மனிதனும் தெய்வமாகலாம்' மற்றும் 1977 -ல் வெளியான 'நாம் பிறந்த மண்'. இவை உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக பதிவிடவும்.

    மிக்க நன்றிகளுடன்
    ஆதி.

  9. #3137
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    நாங்கள் அரங்கம் சென்று ஆர்ப்பாட்டத்துடன் காண விரும்பிய அய்யனின் காவியங்களை
    அரங்கமைத்துக் காண வைக்கிற
    "நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு"க்கு அதன் ஆறாம் பிறந்தநாளில்
    அன்பான நன்றி.

    "அய்யா நடிகர் திலகத்தை
    இல்லத்தில் படமாக வைத்திருக்கிறோம்.
    உள்ளத்தில் பாடமாக வைத்திருக்கிறோம்."
    - என்று நான் வெள்ளைத் தாளில் எழுதியதை
    உள்ளத் தாளில் நிரந்தரமாய் எழுதிக் கொண்ட
    எமது வழிகாட்டிகள்...
    அய்யா திரு. ஒய். ஜி. மகேந்திரா,
    அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ்,
    அய்யா திரு. ராகவேந்திரா...
    ஆகியோர் உள்ளிட்ட அய்யனின் பக்தர்களுக்கு
    நன்றி.

    அருமையான விழாவை அய்யனுக்கு அர்ப்பணித்த
    சிவாஜி பக்தன் அண்ணன் குரு அவர்களுக்கு
    நன்றி.

    தந்தை சொல் மந்திரமென,
    அய்யனை நினைந்துருகும் நாமே அன்புச் சொந்தங்களென...
    உயர்வு வாழ்க்கை வாழும் தங்கத் தளபதி அண்ணன் ராம்குமார் அவர்களுக்கு நன்றி.

    பொன்விழாப் பூரிப்பில் புனிதர் நடிகர் திலகத்தை நினைந்துருகிய அய்யா சி. வி. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.
    *****

    சந்தர்ப்பவசத்தால் குடித்து விட்டுப் பாடுவதாய்
    ஒரு காலத்தில் வெண் திரைகள் காட்டிய கதாநாயகர்களில் நல்லவர்களைத் தேடினோம்.

    "அந்த ஊரில் பிறந்தேன், இந்த ஊரில் வளர்ந்தேன்" என்றொரு கதாநாயகர் பாடினார்.
    'இதற்கு மேல் நடிப்பை யாரும் இம்சை செய்ய முடியாது' என்று நம்மை எண்ண வைக்கும் அந்த
    வாயசைப்பையும் சகித்து, அவர்தான் நல்லவரென்று நினைத்திருந்தோம்.


    பிறகொரு கதாநாயகரை வெண்திரை காட்டியது.
    போலியோ சொட்டு மருந்து போல் இரண்டு சொட்டு மதுத் திரவம் குடித்து, அது உள்ளே போய்
    உறங்கும் மனசாட்சியை எழுப்பி விட, எழும்பிய
    மனசாட்சி ஏழெட்டு உருவமாய்ப் பிரிந்து...
    "குடிக்கலாமா.. நீயெல்லாம் மனுஷனா..? இது தகுமா? உருப்படுவியா?" என்று வண்ண வண்ணமாய்க் கேள்வி கேட்க..

    வாழ்வின் தளங்களில் இயல்பாய் இயங்குகிற
    மனிதனுக்கும், தனக்கும் சந்திரமண்டல தூரம்
    இடைவெளி வைத்திருந்த அந்த கதாநாயகரே
    நல்லவரென்று நினைத்துக் கொண்டோம்.


    ஒரு இயக்குநர் வந்தார்.

    அனுதினமும் குடித்தாலும், விலை மாதுவோடு ஆட்டம் போட்டாலும், வாழ்வின் விரைவுப் போக்கோடு தன்னையும் இழைத்துக் கொண்டு
    ஒரு முரட்டு வாழ்க்கை வாழ்கிற "ராஜா" என்கிற
    மனுஷனுக்குள்ளிருக்கும் உன்னதமான மனசை,
    நல்லதையே சுட்டிக் காட்டும் அவன் மனசாட்சியை
    நமக்கெல்லாம் எடுத்துக் காட்டி, இவன்தான் நல்லவன் எனும் நீதி தந்தார்.

    ஆம். "நீதி" தந்தார்... திரு. சி. வி. ராஜந்திரன்.

    தன்னுள் 'சி'வாஜியை 'வி'தைத்துக் கொண்ட
    ராஜேந்திரன்.
    *****

    வெற்றி சிம்மாசனங்களுக்குப் பிரியப்பட்டு அதை அடைந்து ஆட்சி செய்த திறமை இயக்குநர்கள் உண்டு.

    அமர்ந்திருக்கும் நாற்காலியையே சிம்மாசனமாக்கிக் கொள்ளும் திறமை அய்யா
    சி. வி .ஆர் அவர்களைப் போன்ற சிலருக்கே உண்டு.
    *****

    அய்யனுக்கு ரசிகராயிருந்து, அவரது திறமை புரிந்து படம் தந்தவர்கள் பலருண்டு.

    ஆனால், அய்யனின் ரசிகராகயிருந்து அவரது
    ரசிகர்களுக்கெனவே படம் தர ஒரே ஒரு சி. வி. ஆர் மட்டுமே உண்டு.
    *****

    ஒரு அழகான இளம்பெண் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு படம் காட்டும் கருவியில் படம்
    காட்டிக் கொண்டு ஆடிப் பாடுகிறாள்.

    அய்யா சி. வி. ஆர் அசட்டையாய் அணுகியிருந்தால் அதில் தேவையற்ற குப்பையைக் காட்டியிருக்கலாம்.

    ஆனால், அவர் தேவையுள்ள தூய்மையைக் காட்டினார்.

    கர்மவீரர் காமராஜர் எனும் தூய்மையைக் காட்டினார்.

    "கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க" என்று
    நம் தலைவனைக் காட்டினார்.

    அழகு கூட்டினார்.
    *****

    "என் மகன்" வந்த பிறகு எத்தனையோ அரசியல் காட்சிகள் மாறி விட்டன.

    ஆனால், எல்லாக் காலங்களிலும், எல்லா மேடைகளிலும்...

    நல்லவர்களின் விரக்திக் கண்ணீர் துடைக்க வல்ல வெற்றி விரலாக...

    அரசியல் பொய்களையெல்லாம் பொசுக்க வந்த
    ஒரு நெருப்புக் குரலாக...

    "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ?" தான்.

    மாறவேயில்லை.
    *****

    "உனக்காக நான்" படத்தில் ஒரு கட்டம்.

    தானும், தன் நண்பனும் ஒரே மாதிரியான உடை
    அணிந்திருக்கும் ஆச்சரியத்தைத் தொடரும்
    உரையாடலில், அய்யா நடிகர் திலகம் கைக்கடிகாரத்தின் முட்களை உதாரணம் காட்டி
    ஒரு அருமையான தத்துவம் சொல்வார்.

    நண்பரான ஜெமினி கிண்டலாகக் கேட்பார்.. "இதை நீயா சொல்றியா.. இல்ல.. யாருகிட்ட இருந்தாவது காப்பியடிச்சியா?"

    ஒரு குறும்பான கோப விழி உருட்டலோடு அய்யா
    நடிகர் திலகம் சொல்வார்... "யாரு.. நானா?.. போடா.. நான் எந்தப் பயலையும் காப்பியடிக்க மாட்டேன்".

    " நான் எந்தப் பயலையும் காப்பியடிக்க மாட்டேன்"
    என்று எங்களய்யன் உச்சரிக்கும் தொனியில்
    " எல்லாப் பலரும் என்னைத்தான் காப்பியடிக்கிறான்" என்பது ஒளிந்திருக்கும்.

    அய்யா சி. வி. ஆருக்கும், நமக்கும் மட்டுமே
    அது புரிந்திருக்கும்.
    *****

    அய்யா சி. வி. ஆருக்கும், அவரது ஐம்பதாண்டுத்
    திறமைக்கும் நன்றி.

    அய்யனோடு அவர் கொண்ட சிநேகிதத்துக்கு
    நன்றி.

    அய்யனின் ரசிகனென்று வெளிப்படுத்தத் தயங்காத அந்த வெள்ளை மனசுக்கு நன்றி.

    எல்லாக் காலங்களிலும் எங்கள் உற்சாகத்திற்கும்,
    உத்வேகத்திற்கும், மன நிறைவுக்கும் காரணமாய்த் திகழும் எங்கள் நடிகர் திலகத்திற்கு
    நன்றி.

  10. Likes Harrietlgy, adiram liked this post
  11. #3138
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #3139
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது மய்யம் இப்போது பழையபடி நேரிடையாக ஓப்பன் ஆகிறது. நம் நண்பர்கள் பலர் நேரிடையாக வர இயலாததால் மய்யம் சற்று பொலிவிழந்து காணப்பட்டது. இப்போது நிலைமை சரியாகிவிட்டது போல் தெரிகிறது. வழக்கம் போல பழையபடியே நேராக மய்யத்தில் இணையலாம்.

    அனைத்து நண்பர்களும் பழையபடி கலந்து கொண்டு நம் இறைவனின் புகழ் பாடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
    Last edited by vasudevan31355; 24th January 2017 at 08:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Harrietlgy liked this post
  14. #3140
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •