Page 292 of 400 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2911
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2912
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    ( சிவாஜி பேரவை முகநூல்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Harrietlgy liked this post
  6. #2913
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2914
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2915
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Wishing Everyone And Their Families A Very

    Happy,

    Healthy,

    Wealthy And

    Prosperous New Year 2017!

    Regards

  9. #2916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
    செந்தில்வேல்

  10. #2917
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2918
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சவால்களை சமாளித்த 'மாணிக்க'மாய் ஒளி விட அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2920
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 158 – சுதாங்கன்.

    ஆறுமுகன் ஆனால் என்ன? ஆயிரம் முகம் படைத்தவன் ஆனால் என்ன ? இந்த சூரனை வெல்ல எவனும் பிறக்கவுமில்லை! இனி பிறக்கப் போவதுமில்லை!
    `உன்னை வெல்லவோ, கொல்லவோ குமரன் தேவையில்லை. நானே என் சொல்லினால் குத்திவிடுவேன். ஆனால் அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என மன்னித்தேன் போ!’
    `நீயா? என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும் ?’
    `என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் உன் குடலை! அனுப்புவேன் சுடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உம்மைத் தொடலை!’
    இப்போது சூரபத்மனின் மைந்தன் எழுந்திருப்பான். இந்த வேடத்தை நடிகர் பாலாஜி செய்திருப்பார்.
    `வீரபாகு, எங்கு வந்திருக்கிறாய்? எங்கிருந்து எதிர்வாதம் செய்கிறாய் என்பது தெரிகிறதா உனக்கு, அதை நினைவில் வைத்து பேசு!’
    `புரிகிறது! நான் இருப்பது வீரமகேந்திரபுரி! உங்களுக்கு ஏன் இந்த கோபவெறி? அமரர்களைக் கொண்டு போய் ஐயன் பாதத்தில் சேர்ப்பதே நல்ல நெறி! இல்லையேல் உங்கள் நாட்டையே பொசுக்கிவிடும் கந்தனின் தீப்பொறி!
    `அற்பனே! உயிரோடு இருக்க வேண்டுமானால் முதலில் மறுமொழி பேசாமல் நீ ஓடிவிடு!’
    `ஓடப்போவது நானல்ல! நன்மையை நாடப்போவது நீயுமல்ல ! முடிவாக முருகன் தூதனுப்பிய விவரத்தை சொல்கிறேன் கேள்! அடைத்து வைத்து கொடுமை செய்யும் அமரர்களை விடுதலை செய்து, ஆறுமுகன் பாதத்திலே விழுந்து ஆறுதல் அடை! இல்லை இந்த நாட்டுக்கு நீ தலைவனில்லை! இனி உனக்கு தலைமுறையுமில்லை! உன் தலையும் இல்லை!’
    `மதிகெட்டவனே! என் பலமறியாது பிதற்றுகிறாய்! ஒருவனாக வந்திருப்பதனால் நீ உயிர் தப்பினாய்! போய் உன் தலைவனிடம் சொல்! இந்த ஊருக்குள் வந்து போருக்கு வந்தது தவறு என்று உன் முருகனை என் காலில் விழச்சொல்! வேண்டுமென்றால் யாருக்கும் தெரியாமல் மன்னிப்பு அளிக்கிறேன்.
    `சூரனே! என்னே உனது தலைகனம்! வேண்டாம் இந்த அற்ப குணம்! நன்மையை நாடுவதே நல்ல இனம்! இதுவே தருணம்! ஐயன் பாதத்தை அடைந்துவிடு சரணம்! இல்லையேல் நாளை நிச்சயம் உனக்கு மரணம்! மரணம்! மரணம்!’
    ‘சரணமும், மரணமும் சூரனுக்கில்லை! என்று உன் சரவணனுக்குத்தான் என்று சொல் போ!’
    ‘அறிவில் நல்லவனாகி, நியாயத்தை நஞ்சாக்கி, நீதியை காற்றில் பறக்கவிட்ட சூரனே! நீயும் உன் பரம்பரையும் வேலவனின் வேலுக்கு இரை! அதுதான் முறை! இதுவே என் முடிவுரை! வருகிறேன்!’
    `என்ன சொன்னாய்?’ இப்போது சூரபத்மன் தன் உடைவாளை உருவுவான்!
    சற்று தள்ளி இருந்த வீரபாகு, இப்போது சூரபத்மனின் அருகில் வருவான், `கொல்லு! தூதாக வந்த என்னை கொல்வது உனக்கு பாவம்! அதை விட தூதாக வந்த நான், உன்னை கொல்வது எனக்கு பாவம்! களத்திலே சந்திப்போம்! வரட்டுமா?’
    ‘சிறுவனே! செத்து மடியாமல் வந்த வழியே சென்றுவிடு!’
    வீரபாகு கர்ஜனையோடு ஒரு மந்தகாச சிரிப்பு சிரித்தபடி, அங்கே சூரன் சபையிலேயே விஸ்வரூபம் எடுப்பான்! ` சூரபத்மா! என்னை சிறுவன் என்று அழைத்தாய்! இப்போது என் கண்களுக்கு நீதான் சிறுவனாக தென்படுகிறாய்! சிறுமதி படைத்தவனே! கட்டை அவிழ்த்துவிட்டு உன்னை கந்தன் பேயென்று முடிவு கட்டி! ஆடி ஆடி நீ உச்சக்கட்டத்திற்கு வந்ததும் அடக்கிவிடுவான், நீயும் அடங்கிவிடுவாய்! ஒடுக்கிய பின் ஓய்ந்துவிடும். அதற்குப்பின் காலம் மாறும், தர்மம் அன்று வெல்லும் இது என் கந்தன் வேலின் மீது ஆணை! இது நான் சொல்லும். வார்த்தை என்று எண்ண வேண்டாம், கரையற்ற தெய்வத்தின் வார்த்தை! இதை சாதித்து காட்டப்போகிறாள் அன்னை பராசக்திதேவி!’ சொல்லிவிட்டு மறைந்து விடுவான் வீரபாகு!
    வீரபாகுவான சிவாஜிக்கும், சூரபத்மனான அசோகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தின்போது தியேட்டரில் விசில் பறக்கும், கரகோஷம் கொட்டகையை அதிரச் செய்யும்!
    இந்த காட்சிக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்த ரசிகர்கள் உண்டு!
    பிறகு போர் நடக்கும்! போரில் முருகன் வெல்வான்! அமரர்களை விடுவித்ததற்கு பரிசாக இந்திரன் மகளான தெய்வயானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார்கள்.
    அங்கேதான் ஏ.பி.நாகராஜன் சிவாஜி மூலமாக ஒரு பெண் வீட்டார் செய்ய வேண்டிய சீதனங்களை வரிசைப்படுத்தி அசத்தியிருப்பார்! போர் முடிந்தது! ‘அமரர்களை விடுவித்த ஆறுமுகப் பெருமான் வாழ்க’ என்று கோஷமிட்டு முருகனின் தலையில் கீரிடத்தை சூட்டுவான் வீரபாகு!
    `சூரனை வதைத்து, அசுரர்களை அழித்து, இழந்த இந்திரப்பதவியை மீட்டுத் தந்த பெருமை எமது முருகவேலுக்கே உரியது! அமர உலகத் தலைவனே! வந்த வேலை தீர்ந்தது! இனி எந்த வேளையும் கந்தவேலையே நினைந்து வழிபடுங்கள்! நன்றி மறவாதீர்கள்!’
    இப்போது இந்திரன் சொல்வான், `வினை தீர்த்த வேலவனை பாராட்ட வார்த்தைகளே இல்லை!’
    இப்போது இந்திராணி ` ஆமாம்! தேவர் குலப்பெண்கள் அனைவரும் ஆறுமுகப் பெருமானுக்கு கடன்பட்டிருக்கிறோம்’ என்பாள்.
    `நல்லது!’ என்றபடி வீரபாகு சிறிது தூரம் நடந்தபின் சற்று நின்று, `ஜெயந்தா! உங்களிடம் சொன்னபடி நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால் எங்களிடம் சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!’
    `என்ன! வீரபாகு?’
    `சொன்னது நினைவில்லையோ? அசுரர் சிறையிலே அடைபட்டுக்கிடந்த போது, அமரர் வாழ்வை மீட்டுத்தந்தால் ஆறுமுகனுக்கு பரிசு ஒன்று அளிப்பதாக சொன்னீர்களே? அது…….!’
    `நன்றாக நினைவிருக்கிறது. நாங்களும் காத்திருக்கிறோம்!’
    ` பிறகு பெண்ணைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே?’
    இப்போது இந்திராணி பேசுவாள் `வீரபாகு, உரிமையோடு பெண்ணைக் கொடுக்க ஒவ்வொரு கனமும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுமுறையில் பிள்ளையைப் பெற்றவர்கள், பெண் வீடு தேடிவந்து திருமண பேச்சை நடத்துவதுதானே முறை!
    `ஓ! அதுவும் அப்படியோ?’
    மேல் நோக்கி கைகூப்பியபடி வீரபாகு, ` இறைவா’ என்பான்!
    சிவனும் பார்வதியும் அங்கே தோன்றுவார்கள்.
    `இந்திராணி கூறியது உண்மைதான் வீரபாகு! சடங்கு, சம்பிரதாயத்தை உருவாக்கிய நாமே அதை மறப்பதும் சரியல்ல! அதன்படி நடக்காமல் இருப்பதும் முறையல்ல! தேவி! திருமணப் பேச்சை நீயே தொடங்கலாம்’ – இப்படி சொல்வார் சிவபெருமானாக நடிக்கும் ஜெமினி கணேசன்! பார்வதியான சாவித்திரி துவங்குவார், `இந்திராணி! தேவேந்திரா! உங்கள் மகள் தெய்வயானையை, எங்கள் முருகனுக்கு பெண் கொடுக்க சம்மதம்தானே?’
    (தொடரும்)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •