Page 288 of 400 FirstFirst ... 188238278286287288289290298338388 ... LastLast
Results 2,871 to 2,880 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2871
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2872
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2873
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2874
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2875
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2876
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2877
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #2878
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 157 – சுதாங்கன்.





    1967ம் வருடம் சிவாஜி நடித்த படங்கள் எட்டு! ‘கந்தன் கருணை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘பேசும் தெய்வம்’, ‘தங்கை’, ‘பாலாடை’ ‘திருவருட்செல்வர்’, ‘இரு மலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’. இதில் ‘கந்தன் கருணை’ படத்தை கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல் சீனிவாசன் தயாரித்து, திரைக்கதை வசனம் இயக்கம் ஏ.பி. நாகராஜன்.
    உண்மையில் பார்த்தால் சிவாஜி இந்த படத்தில் கவுரவ வேடம் என்றே சொல்லலாம். ஆனால் சிவாஜியை வைத்துத்தான் இந்த படத்தையே நினைத்துப் பார்ப்பார்கள். முருகப்பெருமானின் அருமைகளை சொல்லும் படம். அதில் முக்கியமாக சூரசம்ஹார சம்பவமும், தெய்வானை– வள்ளி திருமணமும் தான் முக்கியமாக இருந்தன. இந்த படத்தின் மூலமாகத்தான் நடிகர் சிவகுமாருக்கு அறிமுகம் கிடைத்தது. படத்தில் அவர்தான் கந்தன்.
    பல நூறு பேருக்கு ஒப்பனை செய்து பார்த்து முருகன் வேடத்திற்கு பொருத்தமான முகம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன். அப்போது ஒரு திருமணத்தில் ஏவி.எம். செட்டியாரை சந்தித்தார் ஏ.பி.நாகராஜன். அப்போது முருகன் கிடைக்காமல் படும் அவஸ்தையை அவரிடம் சொன்னார்
    ஏ.பி.என். உடனே செட்டியார் `நம்ம ‘காக்கும் கரங்கள்’ படத்திலே ஒரு புதுப்பையனை அறிமுகப்படுத்தியிருக்கோம். அவன் பெயர் சிவகுமார். வேணும்னா மேக்கப் போட்டு பாருங்களேன்’ என்றார்.
    அப்படி அந்த கந்தன் வேடத்திற்கு தேர்வானவர்தான் நடிகர் சிவகுமார். இதில் வள்ளி – தெய்வானையாக ஜெயலலிதாவும், கே.ஆர்.விஜயாவும் நடித்திருப்பார்கள். இதில் எல்லா பாடல்களுமே அருமை. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சியில் திருமுருகாற்றுப்படையை சுருக்கி, அறுபடை வீடுகளை பெருமையை ஒரே பாட்டில் நக்கீரர் பாடுவதாக எழுதியிருந்தார் கண்ணதாசன்.
    அந்த நாட்களில் கோயில் திருவிழாக்களில் `அறுபடை வீடு கொண்ட திருமுருகா ‘ என்று சீர்காழி குரலில் ஒலித்த இந்த பாடலை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் இருக்காது. இந்த படத்தில் சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜிக்கு.
    போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், சிவாஜி பாடும் `வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார். படம் வெளியான சித்ரா தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த நடையைப் பற்றி ஒரு முறை சிவாஜியிடம் கேட்டேன். ` அது ஆங்கில நடிகர் யூல் பிரின்னரைப் பார்த்து செய்தது’ என்று அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் ஒரு காட்சி!
    போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார்.
    சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்பான்?’ என்று சபையில் உரக்க கேட்டுக்கொண்டிருப்பான். அப்போது தூதனாக வீரபாகு அவனது சபையில் தோன்றுவான். வீரபாகுவான சிவாஜி பேசுவார் –`அவனையா யார் என்று கேட்கிறாய்? உன்னை ஒழிப்பதற்கென்றே உலகில் தோன்றியவன்! வேலோடு வந்திருப்பவன்! உன்னால் வேதனைப்படும் அமரர்களை விடுவிக்கப் போகிறவன்! வேலன்! வேதத்திற்கு சீலன்! பார்வைக்கு பாலன்! பகைவருக்கு காலன்!’ என்பான் வீரபாகு!
    `எத்தனை பெயர்கள் அவனுக்கு ?’ இது சூரபத்மன்.
    `கந்தனென்பார், கடம்பனென்பார், கார்த்திகேயனென்பார்! முருகனென்பார், குகனென்பார், சண்முகனென்பார்! உன்னையும் வதைத்த பின் சூரனையும் வதைத்த சூரன் என்பார்.’
    `போதும் நிறுத்து, வார்த்தையிலே அழகு கூட்டி, வர்ணனையில் ஜாலம் காட்டி,சொல் அலங்காரத்துடன் என்னைப் பேட்டி காண வந்திருப்பவனே! யார் நீ?’
    `சொல்லுக்கும் பொருளுக்கும், முத்தமிழுக்கும், தமிழின் இனிமைக்கும்,ஆயகலை அறுபத்தி நான்கிற்கும், ஆறு சாஸ்திரத்திற்கும், நான்கு வேதத்திற்கும், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் தலைவன் அவன்! அவனே வேலவன்! அவன் அனுப்பிய தூதுவன்! வீரபாகு தேவன்!’
    `ஓ! வேலவன் அனுப்பிய தூதுவனோ?’
    `தூதுவன் மட்டுமல்ல நன்மையை எடுத்து ஓதுபவனும் கூட !’
    அப்போது சூரபத்மனிடம் தம்பிமார்கள் சீற்றமாக எழுந்து `வீரபாகு’ என்று கத்துவார்கள்.
    `ஏய்! சூரன் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் வாயடக்கி இருக்கட்டும். இருக்கையில் அமரட்டும்’ – இது வீரபாகு!
    `சற்றுப்பொருங்கள். இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பான் சூரபத்மன்!
    `நீ பார்த்துக் கொள்வாய்! நான் பார்த்துக் கொல்வேன்.’
    `ம்! எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்? வந்த விஷயத்தைக் கூறு! சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடு!’
    `படிப்பையெல்லாம் கற்றாயே தவிர, பண்பை கற்க மறந்துவிட்டாய்! நீ என்ன செய்வாய் பாவம்! என்று உன் தங்கை அகமுகி அடிபட்டு வந்தாளே அன்றே உன் அறிவு மங்கிவிட்டது! தூதாக வந்தவனை கவுரவித்து, ஆசனமளித்து, அமரச் செய்து பிறகு வந்த நல்ல விஷயத்தை கேட்பதை விடுத்து, நிற்க வைத்துக் கொண்டே பேசுகிறாயே! இதுதான் நீ கற்ற கலையோ?’
    `ஹா! ஹா! ஹா! ஆசனமா? உனக்கு நான் கொடுக்கவா ? பைத்தியக்காரா! அசுர குலத்தவர் அமரும் அரசவையிலே மாற்றான் எவனுக்கும் ஆசனமில்லை என்று அன்றே ஆணையிட்டுவிட்டேன். தேவையென்றால் நின்று சொல்! அல்லது ஓடிவிடு!’
    ` நீ என்ன எனக்கு ஆசனம் தருவது? சரவணப் பெருமான் அருளால் உனக்கு சமமான ஓர் ஆசனத்தை நானே ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து பதில் சொல்வேனேயல்லாமல் நானாவது நின்றாவது பதில் சொல்வதாவது! பேசுவதாவது!’
    `முருகா’ என்பான் வீரபாகு, சூரனுக்கு சமமான ஆசனம் வரும். அதில் அமர்ந்து கொள்வான் வீரபாகு!
    `இப்போது உனக்கும் சிம்மாசனம்! எனக்கும் சிம்மாசனம்! அங்கே பணிப்பெண்கள்! இங்கேயும் பணிப்பெண்கள்! நீ சூரன்! நான் வீரன்! சரிதானா?’ என்றபடி வாய்விட்டு சிம்ம கர்ஜனையோடு சிரிப்பார் வீரபாகுவாக தோன்றும் சிவாஜி!
    `வீரபாகு! இந்த மாதிரி மந்திரஜால வித்தைகளை கண்டு பயந்துவிடுவேன் என்று எண்ணிவிடாதே! மாயை என்ற பெண்தான் என்னைப்பெற்றெடுத்த தாய்! தெரியுமா உனக்கு?’
    `அந்த மாயையை படைத்த பரமன்தான் வந்திருக்கும் வேலவனின் தந்தை. புரியுமா உனக்கு?’
    `அவன் தந்தை ஈசனிடம்தான் உலகில் எந்த சக்தியாலும் என்னை வெல்லக்கூடாது என்கிற வரத்தை பெற்றிருக்கிறேன். அதை அறிந்தாயா நீ?’
    `வரத்தை பெற்றபின் நடக்கும் தரத்தில் தாழ்ந்துவிட்டாய் என்றுதான் உன் சிரத்தை அறுக்க இரண்டு கரத்தோடு, ஆறுமுகத்தோடு ஆறுமுகனை படைத்திருக்கிறார் பரமன். அதை உணர்ந்தாயா நீ?’
    (தொடரும்)

  11. #2879
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2880
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •