Page 286 of 400 FirstFirst ... 186236276284285286287288296336386 ... LastLast
Results 2,851 to 2,860 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2851
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2852
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 156 – சுதாங்கன்.





    1965ம் வருடம் வந்த சிவாஜியின் படங்கள் ‘பழநி’, ‘அன்புக்கரங்கள்’, ‘சாந்தி’, ‘திருவிளையாடல்’, ‘நீலவானம்’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘பழநி’ படத்தை இயக்குநர் பீம்சிங் இயக்கியிருந்தார். கிராமிய சூழலில் சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள்.
    பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்! இதில் முதல் பாடலான `ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ பாடலை டி.எம்.ஸ்., சீர்காழி, பி.பி.எஸ். மூவருமே பாடியிருப்பார்கள். பாடல்கள் பிரபலமான அளவிற்கு படம் பிரபலமாகவில்லை! `அன்புக்கரங்கள்’ படத்தில் அவருக்கு ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரம்! இந்த படத்திற்கு ஆர். சுதர்ஸனம் இசையமைத்து, எல்லா பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். `ஒண்ணா இருக்க கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்’ பாடல் மிகவும் பிரபலம்! இந்த படமும் சுமாரான வெற்றியைத்தான் அடைந்தது.
    `சாந்தி’– இது சிவாஜியின் சொந்தப் படம்! படத்தின் கிளைமாக்ஸினால் ஒரு படம் தோல்வி அடைந்தது என்றால் தமிழில் இரண்டு பிரபலமான படங்களைச் சொல்லலாம். ஒன்று– சிவாஜி நடித்த ` சாந்தி.’ இன்னொன்று– எம்.ஜி.ஆர் நடித்த `பாசம்.’ `சாந்தி’ படத்தில் கிளைமாக்ஸில் எஸ்.எஸ். ஆர்.– விஜயகுமாரி ஜோடி தற்கொலை செய்து கொள்வதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல் `பாசம்’ படத்தில் எம்.ஜி.ஆர். இறப்பது மாதிரி காட்டியிருப்பார்கள். இதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
    இத்தனைக்கும் `சாந்தி,’ `பாசம்’ இரண்டு படங்களுக்கும் விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை. அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட்டாகின. `சாந்தி’ படத்தில் ‘செந்தூர் முருகன் கோவிலிலே,’ `யார் அந்த நிலவு,’ ‘ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்’ போன்ற பாடல்கள் மிகவும் பாப்புலர்.
    இந்த `சாந்தி’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. இந்த படத்தில் வரும் ` யாரந்த நிலவு’ பாடலை கம்போஸ் செய்ய எம்.எஸ். வி. 15 நாட்கள் எடுத்துக்கொண்டார். இந்த பாடலின் மெட்டைக் கேட்ட கண்ணதாசன் விஸ்வநாதனிடம் ` இது கரடுமுரடான டியூன். இதுக்கு நான் எப்படி பாட்டு எழுதறது?’ என்று சொல்லி பாட்டு எழுத 15 நாள் எடுத்துக் கொண்டார்.
    இந்த பாட்டை சிவாஜி கேட்டார். ஆனால் படப்பிடிப்பு 15 நாட்கள் கழித்தே தேதி கொடுத்தார். 15 நாட்கள் கழித்து நடித்துக் கொடுத்தபின், `ஏன் இவ்வளவு தாமதமாக டேட் கொடுத்தேன் தெரியுமா ? இந்த பாட்டை கம்போஸ் பண்ண விஸ்வநாதன் 15 நாட்கள் எடுத்துக்கிட்டாரு. கண்ணதாசன் பாட்டெழுத 15 நாள் எடுத்துக்கிட்டாரு. இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது. இந்த பாட்டுக்கு நான் எப்படி நடந்து வரணும்னு யோசிக்கவே எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டது’ என்றார்.
    இந்த பாடலில் நடந்து வரும்போது அவர் சிகரெட் புகைத்தபடியே பாடிக்கொண்டு வருவார். அதனால் படப்பிடிப்பின்போது தொடர்ச்சி கெடாமல் இருக்க பல சிகரெட்டுக்களை பல்வேறு சைஸ்களில் வெட்டி வைத்திருந்தார்கள். படம் வெளியானதும், இந்த கடுமையான பாடலை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்க்க கண்ணதாசன் சாந்தி தியேட்டருக்கு போயிருந்தார். படம் பார்த்துவிட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு போன் செய்தார் கண்ணதாசன். ` உன் டியூனும், என் பாட்டும் எடுபடலே. சிவாஜியின் நடிப்பு இரண்டையும் தூக்கி சாப்பிட்டுடுச்சு. மக்கள் சிவாஜி ஸ்டைலான நடைக்குத்தான் கை தட்டறாங்க’ என்றார்.
    `நீலவானம்’ சிவாஜி,- தேவிகா ஜோடியாக நடித்த படம்! படத்திற்கு வசனம் கே. பாலசந்தர். இந்த படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். `கை கொடுத்த தெய்வம்’ எப்படி சாவித்திரியின் படமோ அதே போல் `நீலவானம்’ தேவிகாவின் படம் என்றே சொல்லலாம்.
    ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய `திருவிளையாடல்’ புராணப்படம் என்றாலும் அதை நவீன முறையில் வழங்கினார். இதில் சிவாஜி சிவபெருமானாக நடித்தார். ஆனாலும், விதவிதமான தோற்றங்களில் தோன்றி, மாறுபட்ட நடிப்பை வழங்கினார். சிவாஜி புலவராகவும், நாகேஷ் தருமியாகவும் நடித்த காட்சி உயர்தரமான நகைச்சுவையை ரசிகர்களுக்குக் கொடுத்தது.
    படப்பிடிப்பு முடிவடைந்ததும் முதல் காப்பியை பார்த்த சிவாஜி, நாகேஷ் நடித்த காட்சியை மறுபடியும் போடச் சொன்னார்.
    பொதுவாக கதாநாயகர்கள், மற்ற நடிகர்கள் மிகச் சிறப்பாக நடிக்கும் காட்சி தன் படத்தில் இடம்பெறுவதை விரும்பமாட்டார்கள். `சிவாஜி இந்தக் காட்சியை குறைக்கச் சொல்லப்போகிறார்’ என்றுதான் நினைத்தார் நாகேஷ். ஆனால் அதற்கு மாறாக, நாகேஷ் நடிப்பை வெகுவாகப் பாராட்டி தட்டிக்கொடுத்தார் சிவாஜி. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் சென்னை சாந்தி தியேட்டரில் 200 நாட்களுக்கு மேலாக ஓடியது. நாத்திக பிரசாரம் தமிழகத்தில் தழைத்தோங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த புராணப்படம் இது.
    1966ம் வருடம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘மகாகவி காளிதாஸ்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘செல்வம்’ ‘தாயே உனக்காக’ ஆகிய படங்கள் வந்தன. ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கிய படம். இந்த படத்தில் ஜெயலலிதா, சிவாஜியின் மகளாக நடித்திருப்பார். சிவாஜிக்கு ஜோடி சவுகார் ஜானகி. இந்தப் படத்திற்கு இசை விஸ்வநாதன் -– ராமமூர்த்தி. இந்த படத்தில் சிவாஜிக்கு பாடலே கிடையாது.
    `மனமே முருகனின் மயில் வாகனம்,’ `துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனசு,’ ‘சிகு சிகு நான் இன்ஜின்,’ ` காத்திருந்த கண்களே’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
    `மகாகவி காளிதாஸ்’ படத்தில் சிவாஜியின் நடிப்பு மிகவும் அருமையான இருந்தது. ஆனால் சுவையான திரைக்கதை இல்லாததால் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
    ஏ.பி. நாகராஜனின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம் ‘சரஸ்வதி சபதம்’.
    இந்த படத்திற்கும் கே.வி. மகாதேவன்தான். அத்தனை பாடல்களும் மிக அருமை.
    இந்த படமும் சாந்தி தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
    கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எழுத்தில், இயக்கத்தில் வெளியான படம் ‘செல்வம்’
    மிக அருமையான கதையை தேர்ந்தெடுத்திருந்தார்.
    ஜோசியத்தை வெகுவாக நம்பும் பணக்கார தாயாரின் மகன் சிவாஜி.
    அவர் உயிருக்குயிராய் காதலித்த, ஏற்கனவே வீட்டில் நிச்சயித்த பெண்ணை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்லி தாயார் ஜோடிகளை பிரித்துவிடுவார்.
    அந்த ஜோடிகளில் உணர்ச்சி கொந்தளிப்புத்தான் படம். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. இந்த படத்தை நடிகர் வி.கே. ராமசாமி தயாரித்திருந்தார். படத்திற்கு இசை, கே.வி. மகாதேவன்.
    இந்த படத்தில் நாகேஷின் மிக நெருங்கிய நண்பரான தாராபுரம் சுந்தரராஜனை பாட வைத்திருப்பார் கே.வி. மகாதேவன்.
    (தொடரும்)

  4. #2853
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2854
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,



    இன்றைய தங்களின் 'நடிகர் திலக' குட் மார்னிங் நிஜமாகவே ஒரு 'தங்கச் சுரங்கம்' தான். அது பல சொல்லாத கதைகளை சொல்கிறது. பல்வேறு நினைவுகளைக் கிளறி விடுகிறது. ஓ.ஏ.கே.தேவரின் 'இன்ப நிலையம்' கோட்டைக்கு துணிச்சலுடன் நுழையும் வித்தியாச கெட்-அப் நடிகர் திலகம். கருப்பு நீள் கோட், வெள்ளை சூட், வெள்ளை கேப், ரெட் கிளவுஸ், வித்தியாச கண்ணாடி, குறுந்தாடி, பிளாக் ஷூ, கையில் ஸ்டிக் சகிதம் கருப்பு வண்ணம் பூசிய சிங்கம் எதிரியின் கோட்டையில் தன் கொடி நாட்ட கிளம்பும் காட்சி. மிக மிக புதிது. கம்பீரம் களை கட்டும் காட்சி.

    'வெல்கம் டு இன்ப நிலையம்' என்று அழகி (இந்த அழகிதான் 'பார்வை ஒன்றே போதுமே' 'யார் நீ' படப்பாடல் புகழ் குமாரி ராதா) வரவேற்க, அதை அற்புதமாய் ஏற்றுக் கொண்டு படுஸ்டைலாக உள்ளே நுழைந்து, அந்த பிரம்மாண்ட இன்ப நிலையத்தில் நோட்டம் விட்டவாறு ராஜன் நடக்கும் காட்சி கண்கொள்ளாதது. கோட் பட்டன்கள் அணியப்படாமல் கீழே விரிந்த நிலையில் புது பரிணாமத்துடன் ராஜன் மேனியில் உடைகள் ஜொலிக்கும்.

    மனோகரால் 'மிஸ்டர் ஸ்பை' அறிமுகப்படுத்தப்பட்டு அங்கே வருகையில் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக அவருக்கு வணக்கம் வைக்க. எல்லோரையும் தாண்டி வரும் ஸ்பை தன்னை நோக்கி நெருங்குகையில் ராஜன் உஷாராகி ஒன்றும் தெரியாதவர் போல 'தம்'மை வாயில் வைக்க, ஸ்பை அதை பற்ற வைக்க, தந்தையும் தனயனும் அதைத் தெரிந்து கொள்ளாமல் விரோதிகளாக சந்திக்கும் காட்சி தொடங்கும்.



    கொஞ்சமும் எதிர்பாராமல் ஸ்பை ராஜனின் கண்ணாடியை எடுத்து, குறுந்தாடியைப் பிடுங்கி, அது சி.பி.ஐ உளவாளி ராஜன் என்று கண்டுபிடித்து சொன்ன சாமர்த்தியத்தில் ராஜனான நடிகர் திலகம் காட்டும் திகைப்பும் வியப்பும், ஆச்சர்யமும் நம்மை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தியே தீரும்.

    ஸ்பையின் கண்டுபிடிப்பு சாமர்த்தியத்தை எதிரியாய் இருந்தாலும் மனதார பாராட்டும் ராஜனை அங்கிருக்கும் கூட்டத்தினருக்கு ஸ்பை அறிமுகப்படுத்தி வைக்க, ராஜனான நடிகர் திலகத்தின் கண்கள் அங்கும் இங்கும் சுழலும் விந்தைதான் என்ன! எதிரி தன்னை கண்டுபிடித்துவிட அதிர்ச்சி, அவன் சாமர்த்தியத்தைக் கண்டு வியப்பு, திகைப்பு, 'சே! மாட்டிக் கொண்டோமே என்ற வெளியே காட்டிக் கொள்ளாத அவமானம், கூட்டத்தினரிடையே தன்னை யாரென்று ஸ்பை வெட்ட வெளிச்சமாக காட்டிக் கொடுக்கிறானே என்ற இனம் காட்டாத கூனிக்குறுகல் என்று 'நடிப்பின் ராஜன்' பிரமாதப்படுத்தத் தொடங்கி விடுவார்.

    தான் யாரென்று தெரிந்த மாத்திரத்தில் காட்டும் சில வினாடி அதிர்ச்சிகள் மாயமாய் உடன் மறைந்து விட, எக்காளமும், தன்னம்பிக்கையும் கொப்பளித்துத் தாண்டவமாட, அலட்சியமான பார்வைகளில் சிரிப்புடன் சிகெரெட் புகைக்க ஆரம்பித்து ஸ்டைலுக்கான அத்தனை அர்த்தங்களும் அங்கே அணிவகுத்து நிற்க ஆர்ப்பாட்டங்களை பஞ்சமில்லாமல் வழங்கும் ராஜ(ன்) சிம்மம்.

    ஸ்பையிடம் கள்ளக் கடத்தல் தங்கம் புக் பண்ண வந்திருக்கும் பல்நாட்டின் சதிகாரர்கள் பெயரை மனோகர் ஒவ்வொருவராக ராஜனுக்கு அறிமுகப்படுத்த,



    'ஜனாப் அல்லாபஸ் ஃபிரம் சவூதி அரேபியா
    மிஸ்டர் மாபா ஃபிரம் பர்மா
    மேடம் கிஷாக்கோ ஃபிரம் ஜப்பான்
    மிஸ்டர் ஆண்டனி பெர்கின்ஸ் ஃபிரம் இங்கிலாண்ட்
    மிஸ்டர் ராபர்ட் ஸிரிஸிக் ஃபிரம் ஆப்பிரிக்கா
    மிஸ்டர் சம்பாலா ஃபிரம் பாம்பே
    ஜனாப் ஸலாமத் ஃபிரம் பாகிஸ்தான்
    மிஸ்டர் சவுன் சீ சீ ஃபிரம் சைனா'

    நடிகர் திலகம் ஒவ்வொருவருக்கும் அந்தந்த நாட்டை சேர்ந்த முறையில் ஒரு பக்கமாக தலை சாய்த்து எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமலே சிரிக்க மனமில்லாமல் லேசாகச் சிரித்தபடி வணக்கம் தெரிவிப்பது கொள்ளை அழகு. அறிமுகப் படலங்கள் முடிந்ததும் 'இதுங்களுக்கெல்லாம் வணக்கம் ஒரு கேடு' என்ற அர்த்தத்தில் வாய்க்குள் கண்டபடி தீட்டித் தீர்த்து தனக்குத் தானே முனகிக் கொள்வது டாப்.

    மல்லிகா என்ற லைலா('வெண்ணிற ஆடை' நிர்மலா)வை ஸ்பை அறிமுகப்படுத்தி ராஜனை ஆழம் பார்த்தவுடன்

    'அவள் மல்லிகா இல்லை...இங்கே அவள் பெயர் லைலா'



    என்று சொல்லியவாறு மல்லிகாவின் கதையை ராஜன் பிட்டு பிட்டு வைத்து நக்கலாக சிரித்தபடியே, ஸ்பையின் வயிற்றில் சைடில் நின்றபடியே தன் வலது முழங்கை மணிக்கட்டால் இடித்து கொக்கரிக்கும் கட்டம் கொட்டைகைகள் கூரைகளை பிய்ந்து விடச் செய்யும் கட்டம். ஓ.ஏ.கே தேவரின் வயிற்றில் இடித்துவிட்டு தலையை மேலே சாய்த்து ஆனந்தமாக தம் 'பப்' பண்ணுவது இன்னும் அட்டகாசம். இழுத்துவிட்டு 'தம்'மை விரல்களுக்கிடையில் கிடுக்கி வைத்து அநியாயத்துக்கு ஸ்டைலாக நேர்நோக்கி ஆஷ் தட்டுமிடம் இன்னும் இன்னும் அட்டகாசம்.

    அதே போல 'மணிப்பயல்' நாகேஷ் பற்றி அறிந்திருந்தும் சொல்லாமல் தெரியாது போல, ஏமாளி போல் ராஜன் காட்டிக் கொள்ள, (வில்லனிடம் தன்னை அதீத புத்திசாலி என்று காட்டிக்கொள்ளாத நரித்தனம்) நாகேஷ் 'சிங்கம் இங்கே ஏமாந்து போச்சு.... நான் நிர்மலாவுக்கு அண்னன் மாதிரி நடிச்சேன்' என்று கேலி செய்ய, நடிகர் திலகம் தேவரை ஒரு பார்வை பார்ததுவிட்டு பார்வையை அப்படியே சுழற்றி நாகேஷ் பக்கம் திருப்பி,

    'ஈஸ் இட்? நான் ஏமாந்துட்டேன்னு வச்சுக்கோ!'

    என்று தோல்வியடைந்தது போல காட்டிக் கொள்வது அருமையோ அருமை. 'மணிப்பயல்' பெருமைகளை தேவர் புகழும்போதும் நடிகர் திலகத்தின் முகபாவங்கள் 'உன்னைப் பற்றி எல்லாம் தெரியும்டா' என்பது போல நாகேஷ் பக்கம் இருக்கும். "நான் நினைச்ச அளவுக்கு உங்களுக்குத் திறமையில்லே" என்று நாகேஷ் நையாண்டி செய்யும் போது,

    'ஈஸ் இட்? ஐ வில் கெட் யூ' என்று திலகம் ஸ்டைலாக ஆங்கில பதில் உரைப்பதும் ஜோர்.

    அதே போல அமுதா(பாரதி)வை அங்கு கொண்டு வந்து நிறுத்தி ஸ்பை லைலா (நிர்மலா) வை புகழும்போது நடிகர் திலகம்,

    'I know...I know'... (இரண்டு முறை அற்புதமாகச் சொல்வார்) நரி இவள்... நல்ல தந்திரசாலி' என்று சொல்லுமிடமும் எக்ஸலென்ட்.

    பாரதியை மீண்டும் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் செல்லும்போது தேவர் ராஜனின் முகம் என்ன பிரதிபலிக்கிறது என்பதை ஓரக்கண்ணால் தெரிந்து கொள்ள பார்வை வீச, அதுவரை போலியான சந்தோஷங்ககளை வெளிக்காட்டிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் முகம் இறுக்கமாகும். பார்வை மேல் நோக்கியபடி சிகெரெட் வாயில் புகைய சிந்தனை பலமாகும். இதை புரிந்து கொண்ட வில்லன் "அமுதாவை காப்பாத்தணும் அப்படிங்கிற யோசனையா?' என்று கேட்க (பலே! சரியான வில்லன்) மறுபடியும் நடிகர் திலகம் சிரித்தபடி நார்மலுக்கு வந்து அதை ஆமோதிப்பது போல சைகை செய்வது சிறப்பு. (ஓ.ஏ.கே. தேவரும் உணர்ந்து நன்றாகக் பண்ணியிருப்பார்)

    'இன்ப நிலையத்தில் இன்பம் பொங்கட்டும்...லெட் அஸ் என்ஜாய்'

    என்று ஸ்பை சொன்னவுடன் ஒலிக்கும் உற்சாகமான 'மெல்லிசை மாமன்னர்' டி.கே.ராமமூர்த்தியின் வெஸ்டர்ன் இசைக்கு அனைவரும் நடனமாட, நடிகர் திலகத்தையும் ஆட வில்லன் அழைக்க, ஆட்காட்டி விரல் காட்டி 'முடியாது' என முதலில் மறுத்து, பின் மனோகர் தள்ளிவிட்டவுடன் குரூப் டான்ஸர் நந்தினி மற்றும் நிர்மலாவுடன் நடிகர் திலகம் ஆடத் தொடங்கி அமர்க்களம் பண்ணுவது அட்டகாசத்திலும் அட்டகாசம். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடனங்களில் ஒன்று இது. நந்தினியுடன் (லட்சுமி) வலதுகாலை பின்னுயர்த்தி, வலது கையை மேலே உயர்த்தி, வாயைப் பிளந்து சிரித்தபடியே ஒற்றைக்காலில் ஆடியபடியே தத்திப் பின்தொடர்வது ரகளை. நிச்சயம் முரளி சார் இதை ரசித்திருப்பார். (ராமமூர்த்தி அவர்களின் விதவிதமான மேற்கத்திய பின்னணி இசைக்கருவிகளின் அம்சமான ஒலிகள் அருமை. இதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்) ஹீராலாலின் நடன அமைப்பு தூள்.



    ஒரு இடத்தில் மிக அற்புதமான மூவ்ஸ் கொடுப்பார். 'விடுவிடு'வென ஒலிக்கும் கிடாரின் பின்னணிக்கு ஏற்ப கைகளை சற்று விரித்த நிலையில் வைத்து வலது காலை முன்னிறுத்தி உடலை சற்று பின்னால் சாய்த்து இடுப்புக்குக் கீழே பிரமாதமாக ஷேக் செய்வார். ஷேக் செய்து முடித்தவுடன் அட்டகாசமாக 'வாக்' ஒன்று கொடுப்பார். அடடா! செம டான்ஸ் நடை அது. இதையெல்லாம் அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் பிறவி எடுத்ததன் பயனை முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

    மறுபடியும் சொல்கிறேன். கம்பீரமான ஆனால் அதே சமயம் கடினமான மூவ்மெண்ட்கள். படுஅலட்சியமாக இந்த டான்ஸ் அவரது அசைவுகளில் நம்மை பரவசப்படுத்தும்.

    நாகேஷின் வழக்கமான 'அக்ரோபேடிக்' அக் மார்க் ஆட்டங்களும் ரசிக்க வைக்கும்.

    நடனம் முடிந்தவுடன் தேவர் ஒரு வசனம் சொல்வார்.

    "டான்ஸ் பார்க்கிறதே இன்பம்...பார்க்கிறவங்களே அதில் பங்கெடுத்துகிட்டா அதைவிட இன்பம்"

    எவ்வளவு உண்மை!

    நடிகர் திலகம் இந்த டான்ஸில் பங்கெடுத்து அனாயாசமான ஸ்டெப்களைக் கொடுத்து இந்த நடனக் காட்சியை எங்கோ கொண்டு சென்று விட்டார். அவரால் முடியாதது என்று எதுவுமே இல்லையோ!

    "இனி சொந்த விஷயத்தைப் பேசலாமே' என்று மனோகர் அழைத்தவுடன் கோர்த்திருந்த கைகளில் ஒன்றை எடுத்து மூக்கின் மேல் விரலை பக்கவாட்டில் கோதி, மூச்சை உள்ளிழுத்து

    'with pleasure'

    என்று அமர்க்களமாக பின் பக்கம் திரும்பி ஒரு நடை போடுவார் பாருங்கள். அப்படியே இந்த மனுஷரை உச்சி முகர்ந்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்கத் தோன்றும்.

    நீள்டேபிளின் (இதற்கு 'ஜேம்ஸ்பாண்ட் டேபிள்' என்றே பெயர். நீண்ட டேபிளின் இருபுறமும் வில்லனும், நாயகனும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பார்கள் ஜென்டிலாக) அருகே சேரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகம் தன் முன்னால் குவிந்து கிடைக்கும் தேவர் கொடுத்த உடல் மறைக்கும் பணக்கட்டுகளை கோபமாக இரு கைகளாலும் தள்ளிவிடும் அழகே அழகு. வெறி கொண்ட சிங்கத்தின் அங்க அசைவுகளை அந்த கைகள் அப்படியே தத்ரூபமாக நமக்கு காட்டும்.

    தேவரின் கட்டளைகளுக்கு செவி சாய்க்காமல் வாதாடி இறுதியில் 'என்ன செய்வீர்கள்?' என்று கேட்டவுடன் 'என்ன செய்வேன் தெரியுமா?' என்று வில்லன் கோபமாக சுற்றியிருக்கும் தன் அடியாட்களை நோக்க, அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடமுள்ள ரிவால்வர்களை எடுக்க, அதைத் தன் அகல விழிகளால் ஆழ நோக்கும் நடிகர் திலகம் பதிலுக்கு,

    'நான் என்ன செய்வேன் தெரியுமா?'

    என்று கேட்டபடி சட்டென்று தன் ரிவால்வரை எடுத்து அத்தனை பேர் கைகளையும் சடுதியில் சுட்டுத்தள்ளி, துப்பாக்கியின் முனையில் புகையும் புகையை வாயால் 'ப்பூ' என்று ஊதி சாமர்த்தியமாக சிரிக்கும் இடம் 'சவாலே சமாளி' என்று கூப்பாடு போட வைக்கும்.

    தேவர் இப்போது ராஜனிடம் இன்னொரு வசனம் சொல்வார். அதுவும் நிதர்சனமான உண்மை.

    'பேச்சு, செயல் எல்லாமே பிரமாதம்'



    அதன் பிறகு தேவர் நடிகர் திலகத்திடம் கை கொடுப்பது போல கொடுத்து அவரது உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கும் எலெக்ட்ரிக் ஷாக்கரால் ராஜனின் கையை துடிதுடிக்க பொசுக்கிக் கரியாக்குவது... ராஜன் ஷாக் தாங்க மாட்டாமல் அலறுவது என்று 'திடுக்' காட்சிகள் நாம் எதிர்பாராமல்.

    அற்புதமான காட்சி. நான் பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ராகவேந்திரன் சார் புண்ணியத்தில் இன்று என் ஏக்கத்தைத் தணித்துக் கொண்டேன். நன்றி ராகவேந்திரன் சார்.

    ராகவேந்திரன் சார்,

    நான் இதுவரை அலசிய 'தங்கச் சுரங்க'க் காட்சி வர்ணனைகளை உங்களுடைய இன்றைய நிழற்படம் ஒன்றே அப்படியே பட்டவர்த்தனமாக உணர்த்திவிட்டது. நடிகர் திலகம் ஸ்டைலாக விரல்களால் சிகரெட் ஆஷ் தட்டும் ஸ்டில்லைத்தான் ரசித்து அனுபவித்து தாங்கள் இன்று பதிவிட்டுள்ளீர்கள். மேல்வரிசைப் பற்களையும், கீழ்வரிசைப் பற்களையும் ஒன்றே சேர்த்தவாறு, லேசான வஞ்சகச் சிரிப்புடன், கையில் விரல்களுக்கிடையே புகையும் சிகெரெட்டுடன் முகத்தில் வெ(ற்)றித்தனத்தைக் காட்டும் நம் ராஜனை இங்கே கொண்டு வந்து நிறுத்தியதற்கு மிக்க நன்றி. அதனால் ராஜனைப் பற்றி சில வரிகள் எழுத சந்தர்ப்பம் கொடுத்ததற்கும் மேலும் நன்றி!

    ஒரு கொசுறு செய்தி.

    'தங்கச் சுரங்கம்' படம் வெளியாகும் போது கடலூரில் ரிலீஸ் அன்று படப்பெட்டி வரவில்லை. அனைவரும் காத்துக் கிடந்த வேளையில் (*நான் அம்மாவுடன் காத்துக் கிடந்தேன்) ரசிகர்கள் பொறுக்க மாட்டாமல் மதியம் நான்கு மணிவரை வெயிட் செய்துவிட்டு பின் பாண்டிக்கு படம் பார்க்க சைக்கிளில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். கடலூர் நியூசினிமா அருகே பர்மா ஷெல் ஏஜென்ட் நடத்திய பெட்ரோல் பங்க் ஒன்றில் நமது அதிதீவிர ரசிகர் ஒருவர் வேலை செய்து வந்தார். வண்டிகளுக்கு பெட்ரோல் போடும் கடைநிலை ஊழியர் அவர். அவர் பெட்ரோல் பங்கில் சொல்லிவிட்டு படம் பார்ப்பதற்காக பெர்மிஷனும் வாங்கிக் கொண்டு இறுதியில் படப்பெட்டி வராத காரணத்தால் அவரும் பாண்டிக்கு பயணம் செய்ய தயாரானார். அதற்காக தன் ஓனரிடம் மீண்டும் அனுமதி கேட்க, அதற்கு ஓனர் மறுக்க "போய்யா...நீயுமாச்சு....உன் வேலையுமாச்சு" என்று அந்த ரசிகர் பெட்ரோல் போடும் கருவியை வீசி எறிந்து விட்டு ரசிகர்களோடு ரசிகராக சைக்கிள் எடுத்து மிதிக்கத் துவங்கி விட்டாராம். வேலையையும் தூக்கி எறிந்து விட்டு தன் தெய்வத்தைப் பார்க்க கிளம்பிய நடிகர் திலகத்தின் தீவிர பக்தர்கள் இன்னும் இவரைப் போல ஆயிரக்கணக்கில் எத்தனை பேர்! அவருக்கு வேலை போனது போனதுதானாம். இதை என்னுடைய சீனியர்... நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் ஒருமுறை சொல்லி சிலாகித்தார்.

    இதுமாதிரி ரசிகர்கள் நடிகர் திலகத்தைத் தவிர வேறு எவருக்கு வாய்க்கும்? சொல்லுங்கள்.

    இப்போது ராஜனைப் பார்த்து ராஜ சுகம் பெறுங்கள்


    Last edited by vasudevan31355; 18th December 2016 at 05:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Harrietlgy, sivaa liked this post
  7. #2855
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Vasu Sir
    Welcome to Inba Nilaiyam...
    ஆம். நம் இதய தெய்வத்தைப் பற்றி நாம் நினைவு கூறும் ஒவ்வொரு இடமும் இன்ப நிலையம் தானே.
    தங்களுடைய அற்புதமான நினைவலைகளுக்கும் அதைப் பகிர்ந்து கொண்ட மேன்மையான எழுத்தாற்றலுக்கும் நான் எப்படி பாராட்டினாலும் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
    அபாரம். நம்முள் சிஐடி ராஜனின் தாக்கம் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு இதுவே சான்று.
    தங்களுடைய ஒவ்வொரு வரிக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய பாராட்டுக்கள்.
    நன்றி
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2856
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த ஒரு படத்திற்கே நாம் இப்படி அடிமையாகி இருக்கிறோமே, இது போன்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு படத்தை அவர் மட்டும் அளித்திருந்தால்..

    ஹ்ம்ம்....

    இதற்கு மேல் எழுதினால் தாங்காது..

    The one and only NT the Great
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2857
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2858
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2859
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2860
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    good morning sir

    குறைந்தபட்சம் good morning சொல்வதற்காகவாவது
    இத்திரிக்கு தினசரி வரும் தங்களுக்கு தலை வணங்குகிறேன் சார்.

    பாகம் 18 ன் பக்கம் 286
    இப்பக்கத்தில் திரு ராகவேந்திரா அவர்களின்
    5 நாள் good morning இடம்பெற்றிருக்கிறது
    அதாவது ஒரு பக்கம் 5 நாட்களாகியும்
    நகரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

    (மீண்டும் வருகிறேன்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •