Page 259 of 400 FirstFirst ... 159209249257258259260261269309359 ... LastLast
Results 2,581 to 2,590 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2581
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    9000 பதிவுகளை கடந்த வாசு சார்
    வாழ்த்துக்கள்.

    தங்களின் தொடர் பதிவுகளை
    இத்திரியில் எதிர்பார்க்கின்றேன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2582
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    4000 பதிவுகளை கடந்த
    கோபால் , செந்தில்வேல்
    இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2583
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி-3.

    இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

    உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

    மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

    1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

    2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

    3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

    4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
    நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி ,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி (சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

    5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

    6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

    7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

    8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

    9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
    வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

    இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.
    Last edited by Gopal.s; 22nd November 2016 at 08:12 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks Harrietlgy, adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  6. #2584
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி- 03/11/1964.(எனது பெருமைக்குரிய 4000)

    அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

    எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

    ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

    என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

    ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
    நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

    இதில் ஒரு விஷயம்.

    எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

    அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

    குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

    டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

    கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

    சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

    செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

    வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

    ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

    உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

    இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

    பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

    அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

    இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

    இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

    உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

    மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

    1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

    2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

    3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

    4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
    நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

    5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

    6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

    7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

    8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

    9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
    வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

    இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.
    Last edited by Gopal.s; 22nd November 2016 at 08:10 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  8. #2585
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
    3 மாத காலத்துக்குள்
    எனது குடும்ப உறவுகளில்
    இருவரது (மைத்துனர்,மாமனார்)இழப்பு
    காரணமாக திரியில் அதிகமாக பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
    சிவா சார்
    இழப்புகள் ஈடு செய்ய முயலாதவை.அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  9. #2586
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Siva,

    My hearty Condolences to your inconsolable losses of you Father in law and Brother in law.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2587
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள சிவா சார்,

    உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். உறவுகளை இழந்து வாடும் உங்கள் மனதுக்கு, திரியில் பங்கேற்பதன் மூலம் ஆறுதலும் அமைதியும் கிடைக்க வேண்டுகிறோம்.

  11. #2588
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள கோபால் சார்,

    நவராத்திரியின் ஒன்பது கதாபாத்திரங்களையும் நீங்கள் அலசியிருக்கும் விதம் அருமை ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கு உள்ளேயும் பல்வேறு குணாதிசயங்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் ஆய்ந்திருக்கும் விதமே தனி. ஏற்கெனவே பலர் சொன்னது போல நாடக நடிகன் சிங்காரம் ஒரு கதா பாத்திரமென்றால், அவர் மேடையில் கொண்டுவந்த சத்தியவான் பத்தாவது பாத்திரம். எனவே அப்போதே நம்மவர் தசாவதாரம் செய்துவிட்டார்.

    இதில் வரும் சத்தியவான் சாவித்திரி யும், பாபுவில் வரும் கீசக வதமும் ஒரிஜினல் தெருக்கூத்தின் வடிவங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    அருமையான ஆய்வுக்கு பாராட்டுக்கள்.

  12. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy liked this post
  13. #2589
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவா சார்,

    துயரமான செய்தி. மிகவும் வருத்தமாக உள்ளது. குடும்ப உறவுகளை இழந்து வாடும் தங்களுக்கு மன ஆறுதல் கிடைத்திட இறைவனை வேண்டி என்னுடைய ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2590
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    நவராத்திரிக்கு மெனக்கெட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. அற்புதம் என்றால் அது சும்மா.

    ராதா முழுநேரக் குத்தகை எடுத்துக் கொண்டாலும் (அதுவும் பலமுறை நாடக அரங்கேற்றங்கள்) தலைவர் ஒரே படத்தில் அதுவும் குறிப்பிட்ட நிமிட நேரங்களில் ரோகியாய் தன்னை மாற்றிக் கொண்டது அவர் ஒருவருக்கே உரித்தானது.

    என்னுடைய பெஸ்ட் வீரப்பன்தான். அடுத்து கொலைகாரன்.

    குடிகேடியின் குணாதிசயங்கள் விசித்திரம். காமமும், அச்சமும் கோர்த்த மணியான கேரக்டர். டயலாக் டெலிவிரி அதிசயங்கள் காலாகாலத்துக்கும் வியக்க வைப்பவை.

    ஒரு தூண்...அதை மட்டுமே வளைத்துப் பிடித்து இந்த நடிப்புத்தூண் நடிப்பின் அஸ்திவாரமாய் இக்காட்சியை அல்லோலகல்லோலப்படுத்தும் அதிசய ஆச்சர்யங்கள். மாஸ்க் கிடையாது..தோலுரித்தல்கள் இல்லை..கெமிக்கல் கலவைகள் கிடையாது. மெழுகுப பூச்சுக்கள் கிடையாது. நவீன தகிடுதத்த தொழில் நுட்ப ஏமாற்று சித்து வேலைகள் கிடையாது.

    ஒரு சிறு குச்சி கையில் கிடைத்தாலும் அதையும் நடிக்க வைத்து விடுவார்.

    அது மட்டுமா?

    'ஏண்டி...என்னை உனக்குப் பிடிக்கலையா?' என்று தன் மனைவியுடனான நினைவுகளை அருகில் தட்டிலிருக்கும் ஒரு கொய்யாப் பழத்தை எடுத்து கடித்தபடி, அதை சுவைத்தபடி பகர்வார். பின்னால் இசையற்ற நிசப்தம். குரல் மட்டுமே வினாடிக்கு வினாடி வித்தியாச மாடுலேஷன்களில் மகிமை புரியும். எவெரெஸ்ட்டுக்கு ஏறும்...பரங்கிமலைக்குத் தாழும். இடையில் எங்கெல்லாமோ போயிட்டு வரும்.

    பழச்சுவையை சுவைத்து அந்த வாய் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

    'நீ வேற யாரையாவது காதலிச்சு உன் இஷ்டத்துக்கு விரோதமா எனக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்களா?

    இது அவர் மனைவிடம் கேட்டதாக சாவித்திரியிடம் சொல்வது.

    இப்போது மனைவியின் பதிலாக அவர் சொல்வது எத்தகைய ஆச்சர்யம்! அப்படியே மனைவியின் மனதிலிருந்து ஒலித்த வார்த்தைகளை பாவம் மாறாமல் நமக்குச் சொல்லுவார்.

    'அய்யய்யோ...அய்யய்யோ..அப்படியெல்லாம் சொல்லாதீங்க...என்று தொடர்வார். 'அய்யய்யோ...அய்யய்யோ' என்று இரண்டு முறை மனைவியின் அதிர்ச்சி வசனமாக அவர் உச்சரிக்கும் தொனியை எந்த நடிகனும் செய்ததில்லை. வசனங்கள் முடிந்து சிறிது கேப் விட்டு மறுபடி பேசுவார். தொண்டையில் அடைக்கும் கொய்யாப்பழத்தை விழுங்கி, ரசிக்காமல் ருசித்து, கடமைக்கு கடித்து, தன்னையறியாமல் உதட்டில் ஒட்டியிருக்கும் பீஸை நாக்கால் தடவி வாய் உள்ளே செலுத்தி ,கண்களை மேல்நோக்கிய நிலையில் நிறுத்தி, இருத்தி பிளாஷ்பேக் கதையை கன கச்சிதகிமாக சொல்வார்.

    'எங்க அம்மா அப்பா பணத்தைக் கொடுத்து உங்களை ஏமாத்திட்டாங்க' என்று மனைவி சொன்னதாக சொல்லி இப்போது தான் கேட்ட கேள்வியை இங்கே சொல்வார். அதுதான் டாப்போ டாப்.

    'என்னா ஏமாத்திட்டாங்க?'

    இந்த ஒற்றைவரிதான். இந்த வரிக்கு அவர் தரும் அந்த அர்த்தபுஷ்டியான குரல்...அதன் வளம்....ஒரு அப்பாவி அல்லது குழந்தைத்தனத்தின் பிரதிபலிப்பு அந்தக் குரலில் தெரியும். உதடுகளை ஒன்று சேர்த்து பிதுக்கி கொய்யா சதையை மென்று விழுங்கும் நேரமும் இதில் அடங்கும்.

    'காசநோய்'எனும்போது குரல் தழுதழுத்து நடுங்கும்.. தூணின் இந்தக் பக்க கட்டிப்பிடித்தலுக்கு பிறகு அந்தப் பக்கம் மாறுவார்.

    மனைவியோ, நடந்த சம்பவங்களோ காட்சிகளாகக் காட்டப்படாமல் வெறும் சொல்லாலேயே, வசனங்களாலேயே, உச்சரிக்கும் பாணியாலேயே அதை அப்படியே நடந்த சம்பவம் போல பிளாஷ்பேக்காக நம் மனதில் காட்சிகளாக விரியவைக்க இவரன்றி வேறு ஒருவரை காட்டிவிட முடியுமா?

    என்னய்யா நடிப்பு! உடம்பு அலட்டல் இல்லை...கைகால் அலட்டல்கள் இல்லை. வெறும் முகம். ஒரே ஒரு கொய்யாக் கனி. வீட்டின் தூண் மட்டுமே. வசனங்கள் மட்டுமே. நடிப்பின் மொத்த பாடமும் அந்த இரண்டு நிமிடங்களில் அத்தனை பேருக்கும் எளிதாக விளக்கப்பட்டுவிடும். அதுதான் எங்கள் ஒரே ஒரு அய்யா.

    'நானென்ன கெழவனா? என்ற வாலிபக் கேள்வி. 'அங்'.... என்ற இழுவைக் கேள்வி தொடர்ச்சியில் மிளிர்வார்.

    எப்படி இவரைத்தவிர மற்ற எவரையும் நடிகராக மனது ஏற்கும்?

    எங்களை வாழ்நாள் முழுக்க தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் மானத் தமிழனல்லவோ என் நடிப்புக் கடவுள்!

    'நவராத்திரி'யின் நவ நாயகர்களின் நவரசங்களை ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் ஆணித்தரமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தங்களுக்கு ஒரு 'சபாஷ்'
    Last edited by vasudevan31355; 23rd November 2016 at 01:52 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •