Page 257 of 400 FirstFirst ... 157207247255256257258259267307357 ... LastLast
Results 2,561 to 2,570 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2561
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆஹா! என்ன அருமையான கட்டுரை! முரளி சாரின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. அதை சரியான நேரத்தில் மீள்பதிவு செய்த ஆதிராம் சாருக்கு மிக்க நன்றி. கார்த்திக் சாரின் பதில் பின்னூட்டப் பதிவைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். மனிதர் வருவேனா என்கிறார். வாருங்கள் கார்த்திக் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks adiram thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2562
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Viduvadhaaga illai.

    Meendum Murali Sir's post about "IRU MALARGAL" particularly about that song and pose..

    Over to Murali sir......

    இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.

    ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தபடி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.

    Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது. அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.

    அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.

    இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது

    அலையில் மிதந்த மலர் கண்டு

    அதன் மேல் கருணை மனம் கொண்டு

    குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.

    பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?

    பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.

    அன்புடன்

  5. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy liked this post
  6. #2563
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கடந்த 2011-ல் 'யூ டியூபி'ல் நான் அப்லோட் செய்த நடிகர் திலகத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் கரகாட்டப் பாடலான 'என் ஆசை ராசா' படப் பாடலுக்கு (கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு) இவ்வளவு ரசிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. மெயிலைத் திறந்தால் தினம் இப்பாடலைப் பற்றிய கமெண்ட்களும், பாராட்டுகளும் வராமல் இருந்ததில்லை. இளைஞர்கள், முதியவர்கள், நடுத்தர வயதினர் என்று இப்பாடலின் வீச்சு அனைவரிடமும் ஆழமாக உள் இறங்கியிருக்கிறது. வயதானாலும் சிம்மம் சிம்மம்தான் என்று இதன் மூலம் தெரிகிறது. பல பேர் நெகிழ்வுடன் இப்பாடலைப் பற்றி குறிப்பிடுகின்றனர். இதுவரை 384,363 பார்வையாளர்களோடு டியூபில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது இப்பாடல். இந்த கமெண்ட்களையெல்லாம் பார்த்து விட்டு நான் இந்தப் பாடலை மறுபடி பார்த்த போது ஆடிப் போய் விட்டேன் என்றுதான் கூற வேண்டும். அந்த வயதிலும், குறிப்பாக உடல் பாடுபடுத்திய சங்கடங்களையும் தாண்டி நம் யுகக் கலைஞர் இப்பாடலுக்கு கரகம் எடுத்து ஆடி அனைவரையும் வாய் பிளக்கச் செய்திருப்பது நிஜமாகவே மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்பாடல் அந்த மகானின் உண்மையான ரசிகர்களுக்கு கண்களில் நீரை ஆறாகப் பெருக வைக்கிறது. எத்தனை காலமானாலும் இந்த உன்னத நடிப்பு சிங்கத்துக்கு உலகம் உள்ளமட்டும் ரசிகர் பட்டாளம் திரண்டபடியேதான் இருக்கும் என்பது திண்ணம்.

    வெங்கடேஷ் காவை என்ற இளைஞன்

    'நான் பார்த்து ரசித்து அழுதது எனது தந்தையாருக்காக'

    என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டிருப்பது இப்பாடலின் வெற்றிக்கு ஒரு சான்று.
    Last edited by vasudevan31355; 18th November 2016 at 08:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2564
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு!



    வாழ்க்கையில் நான் சந்தித்து பேசிப் பழகிய போது என்னைக் கவர்ந்த பலரது இன்ஸ்பிரேஷன் என் கதாபாத்திரங்களை முழுமை ஆக்கிக்கொள்ள பெருமளவில் உதவியது.

    "திருவருட்ச் செல்வர்" படத்தில் எனது நடிப்பு காஞ்சிப்பெரியவர் அவர்களிடம் இருந்து பெற்ற இன்ஸ்பிரேஷன் என்று என்னிடம் சிலர் சொனனார்கள். அந்த சமயத்தில்ப பெரியவரை நேரில் நெருங்கி நான் சந்தித்ததில்லை என்றாலும், அவருடன் இருந்த பலர் அவரைப்பற்றி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். பெரியவர்களைப் பற்றி நூல்களில் படித்திருந்தேன். இவற்றை எல்லாம் மனதில் கொண்டிருந்ததால், அவற்றின் மூலம் கிடைத்த இன்ஸ்பிரேஷன் "திருவருட்ச் செல்வர்" படத்தில் உதவியிருக்கின்றன என்று நினைக்கிறேன். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரியவர்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது, நண்பர்கள் சொன்னது மெத்தப் பொருத்தமானது என்பதை உணர்ந்தேன்.

    "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் பாரதனாகத் தோன்றியுள்ளேன். ராமாயணத்தை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறுவனாக இருந்த பொழுதே அதில் என்னைக் கவர்ந்த பாத்திரம் பரதன். அப்போதே பரதன் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டான். "சம்பூர்ண ராமாயணம்" படப்பிபிடிப்பு முடிந்ததும் அதைப் பார்த்து விட்டு, என்னை வாழ்த்தி மூதறிஞர் ராஜாஜி அவர்கள், 'பரதன் வாழ்க, பரதன் வாழ்க' என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட நிகழ்ச்சி இன்னமும் என் கண்ணில் காட்சியாகவே தெரிகிறது.

    வாழ்க்கையில் எனக்கு நல்ல அபூர்வமான சில நண்பர்கள் கிடைத்தார்கள்.சிலருடன் பேசும் பொழுது,பழகும் போது , அவர்களது பேச்சு, அசைவு, நடை, உடை, பாவனை, போன்றவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

    'வியட்நாம் வீடு' படத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் திரு.நாராயணசாமி, 'கவுரவம்' படத்தில் டி .வி.எஸ்.கிருஷ்ணா (கிச்சு) ..இப்படி சொல்லலாம். 'ரங்கூன் ராதா' படத்தில் சார்லஸ் போயரின் இன்ஸ்பிரேஷன்.

    இதைப்போல நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

    (சினிமா எக்ஸ்பிரஸ் 01.11.82 இதழ்)

  8. #2565
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 152 – சுதாங்கன்.




    சிவாஜி கணேசன் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தை சிவாஜியின் நண்பர் எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்தார். எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்திருந்தார். அது 42வது முறையாக அன்று அரங்கேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கூட கவனித்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு போனார் சிவாஜி. எஸ்.ஏ. கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்தார்.
    `நாளைக்கு எங்கே நாடகம்?’ என்று கேட்டார். சொன்னார்கள். `நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க. அப்புறம் இந்த நாடகத்தை நம்ப சிவாஜி நாடக மன்றம் நடத்தும். எஸ்.பி. சவுத்ரி நான்தான்’. அவர் அப்படிச் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் திகைத்தனர். அடுத்ததாக ` சரி! நாடக ஆசிரியர் எங்கே?’ என்றார்.
    மகேந்திரனை கொண்டு போய் அவர் எதிரே நிறுத்தினார்கள். `உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என்றார் நடிகர் திலகம். `நான் எழுதிய ‘நிறைகுடம்’ பட பூஜையில்.. உங்களிடம் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்’ என்றார் மகேந்திரன்.
    `சரி! ஆசிரியரே… நாளைக்கு நாடகம் நடக்கும்போது நான் மேடையில் ‘சைடு ஸ்டே’ஜில் இருப்பேன். நீங்களும் எனக்கு பக்கத்தில் இருக்கவேண்டும். எனக்குத் தோன்றுகிற சில ஐடியாக்களைச் சொல்கிறேன்’ என்றார்.
    அதன்படியே மறுநாள் நடந்தது. அவருக்கு அருகில் மகேந்திரன் அமர்ந்திருந்தார். நாடகம் முடியும் வரை மகேந்திரனிடம் சிவாஜி எதுவும் பேசவில்லை. கடைசியில் `அந்த படவா ராஸ்கலை நான் (சவுத்ரி) சுட்டுக்கொல்ல வேண்டும்! என்ன சொல்றீங்க?’ என்றார். மகேந்திரனும் `சரி’ என்றார். ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தின் இறுதியில் கவர்னரிடம் தங்கப்பதக்கம் வாங்கும் ஒரு நாளில் எஸ்.பி. சவுத்ரி தற்கொலை செய்து கொள்வார்.அதாவது தன்னை பழிவாங்க நினைக்கும் முயற்சியில், மகன் தனது வாழ்க்கையை அழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக! இதைத்தான் நடிகர் திலகம் மாற்ற வேண்டுமென்றார். இப்படித்தான் ‘இரண்டில் ஒன்று’ நாடகம் ‘தங்கப் பதக்கம்’ ஆனது. மூன்றே நாட்கள்தான். நாடகப் பிரதியைப் படிக்கச் சொல்லி, கொண்டே கண்மூடிக் கேட்பார். அவ்வளவுதான், நான்காம் நாள்,
    ` கிராண்ட் ரிகர்சல் ( இறுதி ஒத்திகை). மறுநாள், மியூசிக் அகாடமியில் ‘தங்கப் பதக்கம்’ நாடகம் அரங்கேற்றம். சென்னை நகரம் முழுவதும் திரைப்பட போஸ்டர் மாதிரி ‘தங்கப் பதக்கம்’ நாடக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் நாடகம் பார்க்க வந்திருந்தார். மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்கு போய் சிவாஜியை எட்ட நின்று பார்த்தார். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடம்பு எகு போல நிமிர்கிறது.
    `மூன்று நாட்கள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் இவர் எப்படி வசனம் பேச போகிறார் என்பது மாதிரியான சந்தேகக் கேள்விகளை மகேந்திரனுக்குள் எழுந்தது. அரங்கில் மணியடித்தது. நாடகம் தொடங்கியது. மகேந்திரன் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை.
    மகேந்திரனின் வசனத்திற்கு தனது நடிப்பு ஆற்றலால், குரல் வளத்தால், அதை உன்னதமாக பயன்படுத்த தெரிந்த மேடை அனுபவத்தால், புதியதோர் அழகையும், உயிரோட்டத்தையும் கம்பீரத்தையும் சிவாஜி படைத்துக் காட்டியபோது மகேந்திரன் வியந்தே போனார்.
    மகேந்திரனுக்குள் அப்படியொரு பிரமிப்பு! நாடகம் முடியும் வரை அமோகமான கைத்தட்டல்கள் ஓயவில்லை. நாடகம் முடிந்ததும், மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்குப் போனார். ஒப்பனை கலைக்கப்பட்டு களைப்புடன் அமர்ந்திருந்தார் நடிகர் திலகம்.
    நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்துக்கும் ஒப்பற்ற நடிப்புக்கும் அவர் தனது உடலின் சக்தி மொத்தத்தையும் செலவழித்திருந்தார். ஒப்பனை கலைவது வரை சவுத்ரியாக வாழ்ந்தவர், இப்போது தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகிவிட்டார்.
    மகேந்திரனைப் பார்த்ததும், `என்னப்பா உன் டயலாக்கையெல்லாம் நான் ஒழுங்காக பேசினேனா?’ என்று ஒரு மாணவனைப் போலக் கேட்டார்.
    மாபெரும் நடிகர்! மகேந்திரனின் கண்கள் கலங்கின. மனம் சிலிர்த்தது.
    ‘தங்கப் பதக்கம்’ நாடகம் இந்தியா முழுக்க நடைபெற்று இணையற்ற வெற்றியை ஈட்டியது. அதன் பிறகு மும்பையில் நடந்த நாடகத்திற்கு மட்டும்தான் மகேந்திரனால் போக முடிந்தது. நடிகர் ராஜ்கபூர் உட்பட மற்ற பிரபல நடிகர்களில் பெரும்பாலானோர் சிவாஜியின் காலை தொட்டு வணங்கி, அவரது நடிப்பின் மேன்மையை ஆராதித்த காட்சியை மகேந்திரனால் இன்றும் மறக்க முடியவில்லை. அது சிவாஜி என்ற மகா கலைஞனது மொழி தாண்டிய அற்புத நடிப்பாற்றலின் வல்லமையை மட்டுமல்ல, நாடகக்கலையின் சிறப்பையும் உன்னதத்தையும் மகேந்திரனுக்கு ஆழமாக உணர்த்தியது. ‘தங்கப் பதக்கம்’ 100 வது நாள் நாடகத்தின்போது மேடையில் மகேந்திரனுக்கு மோதிரம் அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தார் நடிகர் திலகம். ஒரு நாள் மாலை நேரத்தில் துக்ளக் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார் மகேந்திரன். அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஒரு முழுப் பக்க விளம்பரம் வந்திருந்தது. ‘தங்கப் பதக்கம்’ திரைப்படம் ஆகப்போகிற விளம்பரம் அது! மகேந்திரனுக்குள் ஓர் அதிர்வு. இதனால் தான் மிகவும் நேசிக்கும் துக்ளக் பணி பாதிக்கப்படுமோ என்று பயந்தார். அவர் நினைத்தபடியேதான் நடந்தது.
    சிவாஜி பிலிம்ஸிலிருந்து மகேந்திரனுக்கு அழைப்பு வந்தது. நடிகர் திலகத்தின் தம்பி சண்முகம்தான் பேசினார். `படம் முடியும் வரை ஷூட்டிங் நாட்களில் நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்க வேண்டும்!’ என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
    படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி விட்டன. செட்டுக்கு போக வேண்டுமென்றால், துக்ளக்கிலிருந்து மகேந்திரன் விலக வேண்டும். மகேந்திரனால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் சோ பெருந்தன்மையோடு, `இது சிவாஜி படம். நீங்கள் கூட இருந்தால்தான் சரியாக இருக்கும்’ என்று பெருந்தன்மையோடு மகேந்திரனை அனுப்பி வைத்தார்.
    ‘தங்கப் பதக்கம்’ தயாராகி சென்னை சாந்தி தியேட்டரில் ரிலீஸானது. ஆரம்ப காட்சியில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டராக, அந்த காலத்து இன்ஸ்பெக்டர் மாதிரி சிவாஜி அரை டிராயரோடு ஜீப்பில் இருந்து ரவுடி மேஜர் சுந்தரராஜனை மடக்க வருவார். அவர் ஜீப்பிலிருந்து அவரது பிரவுன் கலர் ஷூ தெரிந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கும். பாடல்களும் ‘தங்கப் பதக்கம்’ படத்திற்கு மெருகு சேர்த்தன. நாடகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அதாவது சோவுக்கு இரட்டை வேடம் ஒன்றை திரைக்காக உருவாக்கினார்கள். அதில் சோவின் ஒரு கதாபாத்திரம் அரசியல்வாதி. பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.
    (தொடரும்)

  9. #2566
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2567
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes Harrietlgy liked this post
  13. #2569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. #2570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •