Page 246 of 400 FirstFirst ... 146196236244245246247248256296346 ... LastLast
Results 2,451 to 2,460 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2451
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my P01Y using Tapatalk

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2452
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my P01Y using Tapatalk

  5. Likes Harrietlgy liked this post
  6. #2453
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    60 வது வருடங்கள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #2454
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Likes Harrietlgy liked this post
  10. #2455
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Harrietlgy liked this post
  12. #2456
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி- 03/11/1964.(எனது பெருமைக்குரிய 4000)

    அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

    எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

    ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

    என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

    (தொடரும்)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Likes sivaa, Harrietlgy liked this post
  14. #2457
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    4000 பதிவுகளை தொட்ட
    கோபால் அவர்களுக்கு
    எனது வாழ்த்துக்கள்.
    தங்களின் பதிவுகள் திரிக்கு பெருமை சேர்த்தவை. தொடரட்டும் தங்களின் எழுத்துச் சேவைகள்.

  15. #2458
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    4000 வது பதிவு.

    சிம்மக்குரல்...
    ________________


    எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.

    1952
    ஒலித்ததே ஓர் குரல்.

    "தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"

    இக்குரலுக்கு இதுதான்
    முதல்குரல்.
    அக்குரல் ஒலித்தது
    அதுமுதல்
    திரைகள் நடுங்கின
    அன்றுமுதல்.

    மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
    ஏற்றிய நெற்றியை
    கடைசி வரை
    ஏற்றிக்கொண்டே
    இருக்க வைத்ததும்
    இக்குரலன்றோ!
    ***
    "மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....

    "நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
    மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...

    குரலுக்கும் நடிப்புண்டு
    அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
    அதை
    இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
    என்பதை புத்தியில் வைத்த குரல்.

    ****
    "பரசுராமன் அவதாரம்.
    மனோகரன் மனிதன்.

    "என் வாள் களத்திலேதான் விளையாடும்
    கனிகளை காயப்படுத்தாது."

    பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
    பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
    இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
    மற்றதெல்லாம் உமிழ்.

    திரும்பிப் பார்க்காதவர்களையும்
    திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
    ஏளனம் செய்தோரை
    ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
    ***
    "பாடுவது என் தொழிலும் அல்ல
    சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
    இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."

    பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
    பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
    அது குரலுக்கும் உண்டு.
    அப்பெருமை இவரைத் தவிர
    வேறு எவருக்குண்டு?,
    ***
    "அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...

    உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...

    "நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."

    இது-
    மூதறிஞரை பேச வைத்த குரல்.
    ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.

    கண்டேன் சீதையை-
    இது காவியச் சொல்
    பரதனைக் கண்டேன்-
    இது அழியாச் சொல்
    ***
    "ஹ"

    இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
    செய்ததே!
    இந்த விந்தையான வேந்தன் குரல்.
    இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
    மொழிகளைத் தாண்டி
    சுண்டி இழுத்ததே

    "நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
    "இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."

    இரண்டும் ஒரு குரலாயினும்,
    ஒன்று காந்தம்
    ஒன்று சாந்தம்.
    அண்டை தேசத்தவர்களையும்
    ஆட்டிப் படைத்த குரல்.
    மண்டையை வியக்க வைத்த
    ஜாலக் குரல்.
    இதையா பிரதியெடுப்பது என்று
    ஓட வைத்த குரல்.
    ***
    "ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"

    தமிழ் எல்லை தாண்டி,
    பாரத பூமி தாண்டி,
    அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
    தட்டினார்களே கைகளை
    கொட்டினார்களே விருதுகளை

    "போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"

    பொழியும் வானத்தையும்,
    விளையும் பூமியையும்
    சாட்சிக்கு அழைத்த குரல் .
    தன்மானத்தை பறைசாற்றிய குரல்
    தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
    ஒலித்ததோ ஓர் குரல்
    உள் வாங்கி ஒலித்த குரல்களோ
    கோடி கோடி

    தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
    இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
    ***
    "ஆனந்தா!
    உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.

    இது-
    ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
    யாருக்கும் மசியாத குரல்
    ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
    பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
    ***
    "துரியோதனா!
    என் மானம் காத்த தெய்வமே.
    என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."

    அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
    ஆறையும் பேசவைத்த குரல்.
    யாரையும் வியக்க வைக்கும் குரல்.
    ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
    ***
    அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
    பங்கம் படவிரண்டு கால்பரப்பி
    சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
    என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

    யாரால் அறிய முடியும் சொக்கனை
    சொக்கனேவியப்பானேஇக்குரலினை

    மனிதருக்கு மரியாதை "ஜி"
    சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"

    ***
    "எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
    கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."

    இது
    வீரசிவாஜியாய்
    விழுப்புரத்து கணேசன் பேசியது.
    இந்தக்குரல்தானே
    வெண்தாடியை வியக்க வைத்தது
    மறுகணமே
    பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
    அதுதானே
    "சிவாஜி"
    ***

    நிற்க!
    கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
    எதை எழுதுவது?
    எதை விடுவது?
    சுருங்கக் கூறின்,

    "சிங்கத்திற்கு ஒரு குரல்
    சிவாஜிக்கு நூறு குரல்"

    வணக்கம்
    *********************************************

  16. Likes Harrietlgy liked this post
  17. #2459
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    தலைவரின் அபூர்வ புகைப்படங்களுக்கு என் லட்சோப லட்ச நன்றிகள். கண்டு உள்ளம் மகிழ்ந்ததை வார்த்தைகளில் வடிக்க இயலாது. வைத்த பார்வையை இன்னும் எடுத்தபாடில்லை. அந்த ஆங்கிலப் பெண்மணி தலைவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் போட்டோ தூள்.


    முரளி சார்,

    மிக்க நன்றி. தங்கள் முயற்சியில் பேரின்பம் அடைய காத்திருக்கிறேன். நிச்சயம் 'ஒளி'யில் ஆண்டனி, அருண் இவர்களுடன் அரங்கத்தில் இணையலாம். அதைவிட பெரும் பாக்கியம் வேறெதுவும் இல்லை.


    கோபால்,

    4000 மாவது பதிவு நச். மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நவராத்திரி பதிவுகளில் ஒத்துப் போகிறேன். முரண்பாட்டு மனிதர் என்றாலும் 'திலகம்' பற்றிய பற்றிய முழுமையான பதிவுகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருவதற்கு பாராட்டுக்கள். நீண்ட நாட்கள் சென்று இன்று கைபேசியில் கலந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி. சினிமா, நாடக விளக்கம் செமை.



    எத்தனையோ நடிகர்கள் நம் தெய்வத்தைப் பின்பற்றி தந்தை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அது மகன் அல்லது மகளுடனான உண்மையான பாசத்தில் ஒட்டாமல் தனித்தேதான் தெரிந்திருக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்த மட்டுமே அவர்கள் முயலுவது கண்கூடாக நமக்குத் தெரியும். ஆனால் 'திலகம்' அப்படியா? அவர் நடிக்கவே வேண்டாம். விதிவசத்தால் வீட்டை விட்டு ஓடிப்போன மகளின் புகைப்படத்தை மார்போடு அணைத்து கையில் சுமந்திருக்கும் ஒரே ஒரு போஸே மகள் மேல் அவர் காட்டும் பாசத்தையும், பிரியத்தையும் நூறு தலைமுறைகளுக்கு உணர்ச்சி பொங்க உணர்த்திக் கொண்டிருக்கும். இதில் மற்றவர் எங்கே அவரை நெருங்குவது? சூரியனை வெறும் மெழுகுகள் நெருங்க முடியுமா? வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' இதற்கும் பொருந்தும்.

    செந்தில்வேல் சார்,

    4000 கடின உழைப்புக்கும் 'நன்றியோ நன்றி' என்று ஓங்கிக் குரல் தருகிறேன். இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ஆதவனாரே!

    சுந்தரத் தமிழில் சுந்தரைப் பற்றி பாடி சுகம் தந்ததற்கு மனமுவந்த நன்றி! அற்புதமான (சிவாஜி பாட்டு) கவிதைகளுக்கும் நன்றி! ரசித்துப் பருகி மகிழ்கிறேன். நேரமின்மையால் அதிகம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    பரணி சார்,

    'செலுலாய்ட் சோழன்' தொடரை தொடர்ந்து தந்து மகிழ வைப்பதற்கு நன்றிகள். ஒரே மூச்சில் படிக்க வைக்கும் அதியற்புத கட்டுரைகள்.


    சிவா சார்,

    உங்கள் பாணியே தனி! உங்கள் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. 'தங்கச் சுரங்க' ஸ்டைல்களுக்கு நன்றிகள். தொடர்ந்து மகிழ்வியுங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks Harrietlgy thanked for this post
    Likes sivaa, Harrietlgy liked this post
  19. #2460
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •