Page 228 of 400 FirstFirst ... 128178218226227228229230238278328 ... LastLast
Results 2,271 to 2,280 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2271
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2272
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Harrietlgy liked this post
  6. #2273
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை சேனல் 25.09 16
    அன்று இரவு 11மணிக்கு

    " இன்றும் புதுசு"

    என்ற தலைப்பில் ஒளிபரப்பிய
    "அந்த நாள்" படத்தின் சிறப்புக்களை இந்த நாளில் பகிர்ந்து கொண்ட
    ராகவேந்திரா சார்,
    முரளி சீனிவாஸ் அவர்களுக்கு
    என் இனிய பாராட்டுக்கள்&வாழ்த்துக்கள்.

  7. #2274
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன்

    By RP.Rajanayahem

    image: https://encrypted-tbn1.gstatic.com/i...W7EvWAV_caDX8V


    image: https://encrypted-tbn3.gstatic.com/i...hj6jOYozEz_gQQ


    image: https://encrypted-tbn1.gstatic.com/i...76n48XVZ4ZU6ug

    திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
    ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
    நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

    பராசக்தி மூலம் புயலாக வீசி,
    மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
    உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

    ’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
    ”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

    எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
    என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

    குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

    வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

    image: http://upload.wikimedia.org/wikipedi...n_19620824.jpg

    தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.

    கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
    “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
    அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
    உடல் நான் அதில் உரம் நீ
    என உறவு கண்டோம் நேர்மையாய்
    பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
    ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

    இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

    ”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

    சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”

    ”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
    மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
    இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
    கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


    ”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
    இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
    ’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
    தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
    ’உன்னைச்சொல்லி குற்றமில்லை
    என்னைச்சொல்லி குற்றமில்லை!
    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
    நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதை தவிக்க விட்டான்
    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி’

    இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
    why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!

    ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

    ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

    ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


    ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

    ’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

    ’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
    சட்டி சுட்டதடா கை விட்டதடா’

    ’நவராத்திரி’ நவரச நாயகன்.
    ’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

    ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”

    சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

    ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

    ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

    ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

    உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

    சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.

    கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!


    1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
    அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
    அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
    ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

    ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
    ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
    நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
    இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
    ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


    ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

    ’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
    அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
    தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
    தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

    மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
    திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
    அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
    அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

    புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
    பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

    ’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

    அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

    நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

    ’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

    திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

    காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

    தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்

    வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
    ’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).
    பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’

    1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
    டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

    சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
    “ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
    உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

    ........
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes Harrietlgy liked this post
  9. #2275
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sivaji, an actor nonpareil

    By Our Tamil Nadu Bureau

    CHENNAI, JULY 21. The news of the demise of Sivaji Ganesan plunged the State in grief. Besides members of the Celluloid world, politicians cutting across party lines and ardent fans expressed shock and distress over the death of the veteran actor. A number of cine personalities hurried over to the hospital to pay their last respects to the departed actor, including top stars Kamal Hassan,

    Rajnikant and Mrs. Latha Rajnikant, Vijayakanth, Radhika Sarathkumar, Bharathiraja and Ibrahim Rowther.

    The Chief Minister, Ms. Jayalalitha, said the death of Sivaji Ganesan was an irreparable loss to the art world, particularly Tamil cinema. She conveyed her condolences to the bereaved family.

    The DMK president and former Chief Minister, Mr. M. Karunanidhi, said the death had caused unbearable grief to him. Recalling his long friendship with Sivaji Ganesan, Mr. Karunanidhi said the actor ushered in a revolution in the Tamil art world. He won the acclaim of artistes world-wide. Mr. Karunanidhi conveyed his condolences to the bereaved family. The CPI State Secretary, Mr. R. Nallakannu, said Sivaji Ganesan fetched honours for Tamil Nadu by his excellent acting.

    Mr. G. A. Vadivelu, president of the Janata Dal (secular), said the death was a loss not only for Tamil Nadu but for the entire nation.

    Veteran Tamil director, Mr. K. Balachander, said Sivaji was an actor nonpareil. ``It is doubtful if there will ever be an actor of his calibre in Indian cinema. Working on him with one movie (Ethiroli) was a big learning experience for me. There is a lot we can learn from him''.

    A visibly upset Mr. M. S. Viswanathan, music director of yesteryear said, ``I am overwhelmed by grief at the loss of my long time friend and colleague, Sivaji Ganesan. I have been closely associated with him in several films and have watched him at his work. Surely, it is the end of a glorious chapter in Indian cinema''.

    Mr. Mukta Srinivasan, who has produced several films starring Sivaji Ganesan, said the actor had dedicated his life to the cause of the nation. ``He was a true follower of Kamaraj and his ideals. Sivaji Ganesan knew the intricacies of stage and screen acting. The loss is too heavy for the nation to bear, particularly to those who were deeply concerned with the growth of aesthetic sense in cinema acting. We are not going to get another Sivaji Ganesan''.

    Mr. AVM Saravanan, producer said, ``It is a void in the film world that can never be filled. There are only two eras in tamil film industry, before Sivaji and after Sivaji. The death of Sivaji is the end of an era''.

    Mr. Vijayakanth, president, South India Film Artists Association said, ``he was the `Father' of the industry. His loss can never be filled''. Mr. Kothandaramaiah, president, South India Film Chamber of Commerce, expressed the condolences on behalf of the Chamber, ``the lighthouse of cinema is lost. We are all in the dark. It is an irreparable loss to Indian cinema, more specifically for Tamils all over the world. This veteran actor was a rare comet in the annals of film industry''.

    Mr. Sarath Kumar, MP and actor who was shooting for a film at Gobichettipalayam said, ``Sivaji Ganesan was a born actor, a doyen in the film industry. Everyone of us must take a leaf out of his book''.

    Mr.Kamal Hasan ``he was like a father to me. I am as grieved as his sons''.

    Ms. Radhika, actress, said ``I think we have lost a great legend and I sincerely hope he will be remembered by every single Tamilian who was inspired by him''.

    The Tamil Nadu Kalai Ilakiya Perumandram, while condoling the death of Sivaji Ganesan, said he proved that an individual could be a chapter in the film world.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2276
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதரில் மாணிக்கம்-1973.




    என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)

    இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.




    படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.




    இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.




    ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.

    ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).




    என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Harrietlgy liked this post
  12. #2277
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் உடல்மொழி:

    நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.

    ---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.

    ---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

    ---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

    ---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

    ---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
    .
    ---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

    ---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

    ---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
    காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
    NT is always a wonder and much ahead of his time !!!

    --- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

    ---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

    --- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.

    ---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

    ---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

    ---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......


    ---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
    பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!

    ---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
    மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...

    ---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

    ---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

    ---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

    ---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

    ---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

    ---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

    --- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .

    ---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

    ---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

    ---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

    ---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .

    ---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

    ---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

    ---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

    ---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

    ---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

    ---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

    ---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

    ---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

    ---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

    ---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.


    "தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

    ---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

    --- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

    ---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

    --- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

    ---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

    --- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
    எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

    ---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,


    --அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

    ---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

    ---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

    ---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

    ---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

    ---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

    ---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.

    --- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

    ---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!

    ---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
    சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..


    --- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..

    ---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..

    ---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்

    ---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..

    பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

    கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

    தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

    எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

    சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

    தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

    உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

    அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

    அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

    சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.

    சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.

    அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .

    துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.


    பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.

    பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.

    யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.

    வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.

    ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Likes sivaa, Harrietlgy liked this post
  14. #2278
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "துணை"(1/10/1982).


    அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.

    இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

    தசரத ராமன்-

    1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

    2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

    3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

    4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

    5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

    6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

    7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

    8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

    9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

    10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

    இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

    வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes sivaa, Harrietlgy liked this post
  16. #2279
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சம் மறப்பதில்லை 20: நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை! Posted by: Peru Thulasi Palanivel Updated: Thursday, September 29, 2016, 16:19 [IST] -oneindia.com

    தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர் திலக'மாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன்.

    அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி, தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களை சரியான முறையில் உள்வாங்கி அந்த கதாபாத்திரத்தின் போக்குப்படி சிரிப்பது, நடப்பது, கோபப்படுவது, கண்ணீர் விடுவது என்று அனைத்தையும் தனது முகபாவங்களினாலும், உடல் அசைவுகளினாலும் அப்படியே செய்து காட்டுவதில் உலகத் திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்மையானவர், நிகரற்றவர். சிவாஜிக்கு நடிப்பதற்கு கிடைத்த கதாபாத்திரங்களைப்போல் வேறு எந்த நடிகருக்கும் ஏன் இந்தியத் திரைப்பட அளவில் உள்ள எந்த கலைஞர்களுக்கும் அமையவில்லை. 'நவராத்திரி' படத்தில் அப்பாவியாக, முரடனாக, டாக்டராக, குடிகாரனாக, தொழுநோயாளியாக, விவசாயியாக, கூத்துக் கட்டுபவராக, காட்டிலாகா அதிகாரியாக, காவல்துறை அதிகாரியாக இப்படி ஒன்பது விதமான வேடங்களை எந்த விதமான கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல், மேக்கப்பின் மூலம் எந்த மேஜிக்கும் செய்யாமல் ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை காண்பித்து நடிப்பினால் மட்டும் வித்தியாசத்தை காட்டி நடித்து சாதனைப் புரிந்த ஒரே நடிகர் உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான் என்றால் அது மிகையான செய்தி அல்ல.

    'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நாடக நடிகராக அர்ஜீனன், நந்தனார், ஸ்ரீமுருகன், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகவத்சிங், திவான்பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா, கொடிக் காத்த திருப்பூர் குமரன் இப்படி ஒன்பதுவிதமான நாடகங்களில் ஒன்பது விதமான வேடங்களை ஏற்று நடித்து சிறப்பித்தவர் நடிகர் திலகம். 'தெய்வமகன்' படத்தில் அப்பா, பெரியமகன், சிறிய மகன் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நடித்து படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம். இதற்காக இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக முதன்முதலில் போட்டியில் கலந்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். தேர்வுக் குழுவிலிருந்த பலரும், இந்த மூன்று வேடங்களையும் ஒரே நடிகர் நடித்தார் என்பதை முதலில் நம்பவில்லை. 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். 'கௌரவம்' படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். 'மனிதனும் தெய்வமாகலாம்' படத்தில் ஆத்திகன் & நாத்திகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாட்டும் பரதமும்' படத்தில் பாட்டையும், பரதத்தையும் இணைக்கும் இருவிதமான கதாபாத்திரம். 'திரிசூலம்' படத்தில் தந்தை, மூத்தமகன், இளையமகன் என்று மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பும் மூன்றுவிதமாக இருந்தது. அதனால் படமும் ஹிட்டாகி வசூலையும் தந்தது. 'எமனுக்கு எமன்' படத்தில் எம தர்மராஜனாக, எதிர்க்கும் இளைஞனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார். 'வெள்ளை ரோஜா' படத்தில் புனிதமான கிறிஸ்துவ பாதிரியாராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்டட நடிப்பை வெளிப்படுத்தினார். 'சந்திப்பு' படத்திலும் இரட்டை வேடமேற்றார். 'எங்க ஊர் ராஜா', 'என் மகன்', 'சிவகாமியின் செல்வன்', 'புண்ணியபூமி', 'விஸ்வரூபம்', போன்ற படங்களில் இரட்டை வேடமேற்று நடித்தார். 'பலே பாண்டியா' படத்தில் 3 வேடங்கள்.

    ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட வேடமேற்று நடிகர் திலகம் சாதனைப் புரிந்தார். ஒரு வேடத்தை ஏற்றிருந்த படங்களிலும், ஒப்பற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடித்தார். முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நடித்த சிவாஜி, 'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார். 'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார். 'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார். 'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார். 'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார். 'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார்.

    'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார். 'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார். 'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார். 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார். ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார். 'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார்.

    எண்பதுகளின் மத்தியில் தன் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகம். அவற்றுள் முக்கியமானது 'முதல் மரியாதை' படத்தில் ஊரே மதிக்கும், ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இழந்த ஊர்ப் பெருசு வேடம். சிவாஜின் வாழ்க்கையில் காவியப் படமாக நின்றது. நடிகர் திலகத்தின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் இசையும் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தன

    சிவாஜி கணேசன் படங்களில் கவுரவ வேடங்களில் வந்தவர் ரஜினி. ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். எண்பதுகளில் ரஜினியின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் சிவாஜி. அவற்றில் முக்கியமானவை விடுதலை. படிக்காதவன். விடுதலை படத்தில் யாருக்கு முக்கியத்துவம், ரஜினிக்கா.. சிவாஜிக்கா? என இரு தரப்பு ரசிகர்களுக்குள் எழுந்த மோதலால் பெரும் கலவரமே ஏற்பட்டது தியேட்டர்களில். 'படிக்காதவன்' படத்தில் மீண்டும் ரஜினியுடன், அவரது பாசமிகு அண்ணனாக வந்தபோது அதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். வெள்ளி விழா கண்ட படம் அது. சிவாஜிக்கு கடைசி படமாக அமைந்தது ரஜினியின் படையப்பாதான்.

    நடிப்பு வாரிசு என்று அழைக்கப்படும் கமல் ஹாஸனுடனும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடித்த அளவுக்கு இல்லை. இருவரும் இணைந்து நடித்தவை மூன்று படங்கள்தான். ஆரம்ப நாட்களில் நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜியின் வில்லத்தனம் கொண்ட மகனாக கமல் நடித்தார். பின்னர் சத்யம் படத்தில் சிவாஜியின் தம்பியாக கமல் நடித்திருப்பார். சிவாஜி - கமல் சேர்ந்து நடித்த மூன்றாவது படம் தேவர் மகன். சிவாஜிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். படத்தின் தரமும் சிவாஜி நடிப்பும் தேசிய விருதுக்கு மரியாதை சேர்த்தன என்றால் மிகையல்ல.

    'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. குறிப்பாக பசும்பொன் படத்துக்காக இன்னொரு தேசிய விருதே அவருக்குத் தந்திருக்க வேண்டும். இன்றைய தலைமுறை நடிகரான விஜய்யுடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும், 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மூத்தவராகவும் நடித்திருப்பார்.

    இப்படி எண்ணிக்கையில் அடங்காத எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞராக இன்றுவரையிலும் ஈடு இணையாற்றவராக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார். அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்' என்று சிவாஜியைப் பாராட்டினார். சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது 'சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது' என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

    மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். 'எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,' என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.

    சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்...

    தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர். - முதறிஞர் ராஜாஜி

    உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். - தந்தை பெரியார்

    நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். - பெருந்தலைவர் காமராஜர்

    எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். - கலைஞர் மு. கருணாநிதி.

    தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். - எம்.ஜி.ஆர்.

    சிவாஜியின் நடிப்பாற்றலை 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். -
    என்.டி. ராமாராவ்

    புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். - செல்வி. ஜெ.ஜெயலலிதா, முதல்வர்

    எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம். - ஏவிஎம் சரவணன்.

    குறிப்பு: வரும் அக்டோபர் 1-ம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 87வது பிறந்த தினம். அதையொட்டி அவரைப் பற்றி இந்தத் தொடரில் மேலும் சில கட்டுரைகள் வெளியாகவிருக்கிறது. -

    தொடரும்...
    Last edited by Gopal.s; 30th September 2016 at 07:45 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Likes sivaa, Harrietlgy liked this post
  18. #2280
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மனக் கோயிலில் வீற்ற இறைகளுக்கு நிஜகோயிலும்

    கண்டன மதங்கள் தமிழ்மதம் தலைநிமிர ஒரேஇறை

    பணிக்கான தமிழ்மன கோயிலின் கொற்றவனுக்கு

    மணி கோ யிலில் வீற்றிருக்க காலம் வந்ததே கண்டதே

    பெருமிதத்துடன் தொழ தமிழனுக்கு தமிழ்க் கோட்டம்

    இருதிசைகளில் தொழுகை அன்னையில்ல திசையொ ன்று

    ஆட்சியன்னை தந்த மணிக் கோயில் திசையின்று

    மாட்சிமைமிக்க மகாசிவனுக்கும் ராஜராஜனே கண்டான்

    கோட்டம் திருவிளையாடிய சிவனுக்கோ தமிழ் அய்யன்

    தந்தருளிய சிலையொன்று அன்னையின் மண்டபமொன்று

    அந்தவகையில் ஆட்சியாளர் கடன் தீர்த் தனர் தமிழர்க்கு

    திகதியில் காணும் திருநாள் தித்திப்பல்ல உவப்பல்ல

    ஆகமக் கடவுள் போல நட்சத்திர,திதிகளில் காணும் திருநாளே

    நல்மரபாம் நம்மிறைகளுக்கு நடிப்பின் கலையிறைக்கும் காண்போம்

    வெல்வது தமிழேயென தரணி காண செல்வோமினி தமிழ்மண்டபம்

    இத்திருநாள் குடும்ப கொண்டாட்டமல்ல மக்கள் திருநாள்

    முத்தமிழும் முத்தமிடும் முதற் திருநாள் முதற் தமிழனுக்கு

    மாற்றோர் பண்பாள ர்களின் சிற்றவைக்கு பிரதியாக

    போற்றுவோர் போற்றும் மறத்தமிழனின் பேரவை

    உண்டு கொழுக்காமல் உண்ணாமல் வென்று

    கண்ட மண்டபம் கண்ட கண்ணிமைக்காத சந்திரனுக்கு

    என்றுமே வென்றுநிற்கும் அதிசய எழுத்தால் அர்ச்சித்த

    மன்றமே வியந்து போற்றும் கோபாலனின் தலைவணக்கம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  19. Likes sivaa, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •