Page 221 of 400 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    தொடரும்...
    Last edited by senthilvel; 18th September 2016 at 08:21 PM.

  5. Likes Harrietlgy liked this post
  6. #2203
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செந்தில்வேல்,

    வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு பதிவுக் குவியலுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இதில் என்ன சிறப்பு என்றால் பல்வேறு பத்திரிக்கை பதிவுகள் பல்வேறு காலகட்டத்தை உள்ளடக்கி வந்திருக்கின்றன. 1960-களில் தொடங்கி 1990கள் வரை உள்ள காலகட்டத்தின் கண்ணாடியாக அவை விளங்குகின்றன. இதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு ஜெயித்துக் காட்டுகிறேன் படத்தின் விளம்பரம்,

    1977-ல் தொடங்கி நடிகர் திலகத்தின் படங்கள் விண்ணை முட்டும் சாதனைகள் படைத்துக் கொண்டிருந்த நேரம். 1978 தொடக்கம் முதல் அதிலும் குறிப்பாக 1978 மார்ச் என்று சொல்ல வேண்டும், தினசரி நடிகர் திலகம் நடிக்கும் ஒரு புதிய படத்தின் முழுப்பக்க விளம்பரம் தினத்தந்தியில் வைத்துக் கொண்டிருந்தது. காலையில் பேப்பரை பிரித்தவுடன் இன்று என்ன படத்தின் விளம்பரம் வந்திருக்கிறது என்று தேடுவோம்.

    அந்த நேரத்தில் தொடங்கப்பட்டு வெகு வேகமாக வளர்ந்து வந்த படம்தான் ஜெயித்துக் காட்டுகிறேன். இந்த படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் அன்றைய காலத்தில் மிக பிரபலமாகிக் கொண்டிருந்த ஸ்டெப் கட் [Step Cut] தலைமுடி ஸ்டைலை அது போன்ற ஒரு விக் தயாரித்து அதை நடிகர் திலகம் அணிந்திருப்பார். மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் அலெக்ஸ். ஆம், ஞான ஒளிக்கு பிறகு அவர் ஏற்று நடித்த கிறிஸ்துவ கதாபாத்திரம் இந்த படத்தில்தான் அமைந்தது. படம் வெகு வேகமாக வளர்ந்து வந்தது.

    ஏற்கனவே 1972-ல் ராஜபார்ட் படப்பிடிப்பில் இருக்கும்போதே நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் நடிக்கும் அன்னை பூமி என்ற படத்தை தயாரிப்பதாக குகநாதன் அறிவிப்பு செய்திருந்தார். அந்த விளம்பரமும் [நீங்கள் அதை இங்கே திரியில் பதிவிட்டிருந்தீர்கள்] மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அது நடைபெற இயலாமல் போனது. ஆகவே 1978-ல் ஜெயித்துக் காட்டுகிறேன் படம் பெரிய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருந்தது. நண்பர்கள் பலருடனும் இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் மற்றும் படமாக்கப்பட்ட காட்சிகளை பற்றி [பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வைத்து] விவாதித்தது இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது.

    துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில்தான், சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1978 மே 5 அன்று தச்சோளி அம்பு படத்திற்காக சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இடது முழங்கைக்கு கீழே plate-கள் பொருத்தப்பட்டு அதன் காரணமாகவே 2 மாதங்களுக்கும் மேலாக நடிகர் திலகம் ஓய்வெடுக்க நேர்ந்தது. அதனால் பல படப்பிடிப்பு schedule- களும் மாற்றி அமைக்கப்படவேண்டிய சூழல். அப்போது தள்ளி போடப்பட்ட இந்த படம் அப்படியே drop ஆனது. அறிவிக்கப்பட்ட தொடங்கப்பட்ட படங்களில் ஒரு சில நமது ஆர்வத்தை தூண்டி விடும். அது போன்ற ஒரு ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்திய சில நடிகர் திலகத்தின் படங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வெள்ளித்திரையில் காட்சியளிக்க இயலாமல் போனபோது மனது வேதனைப்பட்டது உண்டு. அந்த வகையில் மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரை இந்த படம் வெளிவராதது ஏமாற்றமே! அந்த விளம்பரத்தை மீண்டும் இங்கே பதிவு செய்து அந்த நினைவலைகளில் நீந்த வைத்த உங்களுக்கு என தனிப்பட்ட நன்றி.

    உங்களது அபாரமான உழைப்பிற்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!

    அன்புடன்

  7. Likes Harrietlgy liked this post
  8. #2204
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    செந்தில்,
    தங்களுடைய அயராத உழைப்பிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களைப் போன்ற அடுத்த தலைமுறை ரசிகர்கள் அதற்கும் அடுத்த தலைமுறை ரசிகர்கள் என நடிகர் திலகத்தின் ஆளுமை பரவிக் கொண்டே போகும் போது இன்னும் நூறு தலைமுறைகளுக்கு அவர் புகழ் பரவும் என்பதில் ஐயமில்லை.

    முரளி சார் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். ஜெயித்துக் காட்டுகிறேன் விளம்பரம் தமிழகம் முழுமைக்குமே பரபரப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பலமாக உண்டாக்கியது. அதுவும் விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகம் அப்படத்திற்காக பதியப்பட்ட பாடலின் பல்லவி என நினைக்கிறேன். இசை கூட சந்திரபோஸ் அமைத்ததாக ஞாபகம். சரியாக நினைவில்லை. அவசர அவசரமாக பேப்பர் வாங்கி வந்து யாரும் படிப்பதற்கு முன்பே கத்தரித்து வைத்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. துரதிருஷ்டவசமாக பல அபூர்வமான விளம்பரங்களை சேகரிக்க முடியாமல் போயிற்று. அது இன்று வரைக்கும் வருத்தமே. என்றாலும் தங்கள் மூலமாக அவற்றைப் பார்க்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Harrietlgy liked this post
  10. #2205
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நண்பர் செந்தில்வேல்
    தங்கள் தொடர் பதிவுகளை பார்க்கும்பொழுது
    தாங்கள் பொள்ளாச்சி சென்று பொக்கிஷப் புதையலை
    எடுத்துவந்துவிட்டீர்கள் என்று தெரிகிறது
    அசத்துங்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Harrietlgy liked this post
  12. #2206
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    [
    Originally Posted by senthilvel ஏங்க வைக்கும் விளம்பரம்
    இந்தப்படமும் திரைக்கு வந்திருந்தால்...
    அது உந்தன் சாதனையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாகவல்லவா இடம் பெற்றிருக்கும்.

    செந்தில்வேல் சார்
    நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர அணிவகுப்பு
    மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

    70வதுகளில் அன்னை புமி விளம்பரம் நண்பர்கள்மூலம் கிடைத்தது
    நடிகர்திலகம் மிக ஸ்டைலில் நிற்கும் முழுஉருவ படத்துடன் பஞ்
    வசனத்துடன் அவ்விளம்பரம் அமைந்திருந்தது
    சித்திராலயா பத்திரிகை என நினைக்கின்றேன்
    அவ்விளம்பரம் தங்களிடம் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி





    =senthilvel;1307700][/QUOTE]

    "நானா வம்புக்கு வரமாட்டேன்
    அதுதான் பண்பாடு-அது
    தானாக வந்தா விடமாட்டேன்
    அப்புறம் உன் பாடு"


    இந்த பட விளம்பரத்தைப்பற்றித்தான்
    நான் முன்னர் கேட்டிருந்தேன்
    படத்தின் பெயர்தான் மாறுபட்டுவிட்டது
    எனினும் தங்கள் கைக்கு அது கிடைத்திருக்கிறது
    அதன்மூலம் எங்களுக்கும் மீண்டும்
    அதனை பார்க்கும் வரம் கிடைத்துள்ளது
    நன்றி நன்றி நன்றி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Harrietlgy liked this post
  14. #2207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயித்துக்காட்டுகிறேன் படம் நின்று போனதற்கு என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்கிய திரு முரளி சீனிவாஸ்அவர்களுக்கும்
    திரு.ராகவேந்திரா சார்,திரு சிவா சார் அவர்களின் கருத்துகளுக்கும்,விளக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  15. #2208
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அறிவித்து நின்று போன படங்கள் அல்லது பாதியில் நின்ற படங்கள்.
    (நினைவுக்கு எட்டிய வரை)

    1)ஜீவ பூமி (கே.சோமு-ஏ.பீ.என்)

    2)அன்புள்ள அத்தான் (சிவாஜி-ராகினி)

    3)சாணக்யா (பந்துலு)

    4)ஞாயிறும் திங்களும் (தேவிகா ஜோடி)

    5)பைத்தியக்காரன்.(பத்மினி ஜோடி)

    6)ஒரு பிடி மண்.(ஸ்ரீதர்)

    7)உமாபதியின் பெயரிட படாத படம்(மதுரை திருமாறன் இயக்கம்)

    8)குகநாதன் பெயரிட படாத படம்.(சிவாஜி-கே.ஆர்.விஜயா)

    9)பம்பாய் பாபு.(வீ.கே.ஆர்)

    10)உடல் பொருள் ஆனந்தி.(ராம்குமார் பிலிம்ஸ்)

    11)மௌனம் எனது தாய்மொழி (கோஷிஷ் தழுவல்).

    12)துள்ளி வருகுது வேல்.(கலைஞர்)

    13)ஜெயித்து காட்டுகிறேன்.(குகநாதன்)

    14)அன்னை பூமி.(குகநாதன்)

    15)வயசு அப்படி. (கலாகேந்திரா )

    16)தேஷ் பிரீமி (மன்மோகன் தேசாய்-அமிதாப்-உத்தம் குமார்)-ஹிந்தி

    17)தமிழன் (மணிரத்னம்-சுஹாசினி-ஜீ.வீ.)

    18)பாலு மகேந்திரா பெயரிட படாத படம்)

    19)திப்பு சுல்தான் (பலமுறை )

    20)தேவன் கோயில் மணியோசை (பீ.ஆர்.சோமு)

    21)பூப்போல மனசு (பீ.என்.சுந்தரம் இயக்கம்)

    22)லட்சியவாதி
    Last edited by Gopal.s; 22nd September 2016 at 07:47 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Thanks Harrietlgy thanked for this post
    Likes Harrietlgy liked this post
  17. #2209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes Harrietlgy liked this post
  19. #2210
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •