Page 207 of 400 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2061
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    (நன்றி www,sivajiganesan.in)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2062
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 12.08.16 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான உலகத்திலே ஒருவன் என்று உயர்ந்து நிற்கும் மக்கள்தலைவரின் உயர்ந்த மனிதன் வெற்றக்காவியம் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. எத்தனை யுகங்கள் ஆனாலும் நமது நடிகர்திலகத்தின் படங்களுக்கு என்றும் மக்கள் ஆதரவு இருக்கும் என்பது கலையுலகம் கண்ட உண்மை. என்று கலையுலக ராஜா நமது நடிகர்திலகம் தான் என்ப...தை நிரூபித்த மக்களுக்கு நன்றி நன்றி.
    அன்புள்ள இதயங்களே, 14.08.16 ஞாயிறு மாலை ரசிகர்கள் அனைவரும் கூடும் சிறப்புக் காட்சி நடைபெறுகிறது. மதுரை மற்றும் மதுரைக்கு அருகில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் நாளை மாலை சென்ட்ரல் திரையரங்கில் கூடிடுவோம் உயர்ந்த மனிதனைக் காண...
    எந்த வேலை இருந்தாலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி நமது ரசிகர் அனைவரும் திரண்டு அரங்கு நிறையச் செய்வோம்.
    என்றும் மக்கள்தலைவர் புகழ் பரப்பும் பணியில்
    கா.சுந்தராஜன்.


    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. Likes Harrietlgy liked this post
  5. #2063
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2064
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #2065
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes Harrietlgy liked this post
  10. #2066
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பட்டுக்கோட்டையாரைப் போல சிறிய வயதிலேயே மிகப் பெரிய அளவில் புகழ் பெற்று அதே போல சிறிய வயதிலேயே தன் மறைவின் மூலம் மிகப் பெரிய இழப்பை தமிழ்த்திரையுலகிற்கு உண்டாக்கி விட்டார் திரு நா. முத்துக்குமார். அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2067
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 137 – சுதாங்கன்




    இத்தனை வாரம் இந்த தொடரை படித்து வந்த சிவாஜியின் தீவிர ரசிகர்களுக்கு ஒரு கோபம் இருக்கலாம்! சிவாஜியை பற்றி இத்தனை சிலாகிக்கும் இவன், அவரது `பா’ வரிசை படங்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்கிற ஓர் அங்கலாய்ப்பு இருந்திருக்கலாம்!

    ஆனால், அந்த படங்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டு மென்பதற்காகவே அதை வருடவாரியாக வரிசைப்படுத்தவில்லை. சிவாஜியின் சாதனைகளில் முக்கியமானது அவரது `பா’ வரிசைப் படங்கள்தான்! தமிழ் சினிமா சரித்திரத்தில் அவரது `பா’ வரிசை படங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு!

    கதை, கதாபாத்திரங்கள், நடிகர்கள், பாடல்கள், அந்த பாடல்களிலிருந்த கற்பனை வளம், அருமையான இசை என்று எல்லாமே சேர்ந்து தமிழ் சினிமா சரித்திர மகுடத்தில் அந்த படங்கள் இன்றும் வைரக்கற்களாக ஜொலிக்கின்ற*ன! `பாத காணிக்கை படத்தை தவிர, பல பா வரிசை படங்கள் சிவாஜி நடித்தது! `பாதகாணிக்கை’ மட்டும்தான் கே. சங்கர் இயக்கத்தில் வந்த படம். மற்ற எல்லாப் படங்களுமே பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தவை!.

    அவர் சிவாஜியை வைத்து இயக்கிய கடைசி ‘பா’ வரிசைப் படம் ‘பாலாடை!’ ஒரு முறை பீம்சிங்கின் புதல்வர் எடிட்டர் லெனினோடு பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், ` இந்த ‘பா’ என்பது சென்ட்*டிமெண்ட்*டா*க வைத்தாரா என்பது தெரியாது.

    ஆனால் அந்த தலைப்புக்கள் எல்லாமே படத்தின் கதையோடு பொருந்தி இருந்தன. உதாரணமாக, `பாசமலர்’ படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தலைப்பு படத்தின் கதையோடு பொருந்துகிறதா இல்லையா? இன்னும் சொல்லப்போனால், அந்த தலைப்பை கொடுத்ததே கண்ணதாசன்தான்! அதே போல் `பாகப்பிரிவினை.’ அதுவும் கதையோடு பொருந்தியதா இல்லையா?’ என்றார்.

    சிவாஜிக்கு ‘பா’ வரிசை படங்கள் எல்லாமே நன்றாக ஓடின! இந்தப் படங்களில் சிவாஜி, இயக்குநர் பீம்சிங், கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானவை இந்த படங்கள்.

    மேலும், அந்தக் காலத்திலிருந்த மிகச்சிறந்த நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே நல்ல திரைப்படங்களை தமிழுக்கு தந்தார்கள். அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு டீம் ஒர்க் மேலோங்கியிருக்*கும் எந்த கதாபாத்திரமும் சோடை போகாது! உதாரணமாக, `பாகப்பிரிவினை’ படம்! இதில் டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எம்.என் நம்பியார், எம்.வி. ராஜம்மா, சரோஜாதேவி எல்லோரும் சிவாஜியுடன் நடித்திருப்பார்கள்.

    இந்த படத்தில் சிவாஜிக்கு கை, கால் ஊனமான ஒரு பட்டிக்காட்டான் வேடம். இந்த படத்தில் எந்த இடத்திலேயும் சிவாஜியின் அந்த ஊனமற்ற கையின் நிலை மாறாமலேயே இருக்கும்! இத்தனைக்கும் இந்த படத்தில் அவருக்கு நடனமாடவேண்டிய ஒரு கிராமியப் பாடல்.

    `ஏரோடும் எங்கள் சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்’ பாட்டில் வலது கையில் வேப்பிலை கொத்தை வைத்துக்கொண்டு ஆடுவார். அந்த ஆட்டத்தின் போது கூட அந்த ஊனமுற்ற கை அதே நிலையில்தான் இருக்கும்.

    இந்த படத்தில் பாசப்பிணைப்புள்ள அண்ணனாக டி.எஸ். பாலையாவும், அவரது தம்பியாக எஸ்.வி. சுப்பையாவும் நடித்திருப்பார்கள். குடும்பத்தை பிரிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் எம்.ஆர். ராதா!

    இந்த படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததற்கு இன்னொரு காரணம் இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள்தான்! `பாகப்பிரிவினை’ படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பாக இருந்தாலுமே அதில் முக்கியமாக இன்றும் மக்களால் விரும்பி கேட்கப்படும் பாடல் ஒன்று உண்டு!

    ஊனமுற்ற கணவனுக்கு முதலிரவில் மனைவி ஆறுதல் சொல்வதைப் போல் அமைந்த பாடல் அது! அந்த பாடலை இன்று கேட்டாலும், கதைக்காக எழுதப்பட்ட பாடலா, அல்லது அந்த பாடலிலிருந்து படத்தின் கதை உருவானதா என்கிற அளவுக்கு அதன் வரிகள் அமைந்திருக்கும். அந்த பாடல் இதுதான்! கணவனுக்கோ கை ஊனம்! அவனை மனைவி ஊக்கப்படுத்த வேண்டும்! கண்ணதாசன் எழுதியிருப்பார்!

    ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!

    உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?

    சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

    சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ?

    கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?

    கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா?

    காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன்!

    உயிர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்!’

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருந்தாலும், வருங்கால தலைமுறைக்கு இந்த வரிகளின் ஆழம் புரிய வேண்டுமென்பதற்காக இந்த பாடலை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த பாடலில் வரிகளை கவனித்தால், அதில் கணவனை உற்சாகமூட்டும் வரிகளும் இருக்கும். அதே சமயம் தான் எப்படிப்பட்ட பெண் என்பதையும் அந்த மனைவி சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்திருந்த பாடல் இது! அதே போல் சிவாஜிக்கு வெற்றிகரமாக அமைந்த படம் என்பது `பாவமன்னிப்பு.’

    இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமையை போற்றுவதாக படம் அமைந்திருக்கும். இந்த படங்கள் வெற்றி பெற்றதற்கு இன்னொரு முக்கிய காரணம், கதாபாத்திரங்களை தேர்வு செய்த முறை!

    `பாசமலர்’ படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் ஜோடியாக நடித்தாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    அதனாலேயே அதற்கடுத்து வந்த படங்களில் அவர்கள் ஜோடியாகவே நடிக்கவில்லை. `பாவமன்னிப்பு’ படத்தில் சாவித்திரிக்கு ஜோடி ஜெமினி கணேசன். `பார்த்தால் பசி தீரும்’ படத்தில் சாவித்திரியும் ஜெமினியும் தான் காதலர்கள்.

    `படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் சாவித்திரிக்கு ஜோடி பாலாஜி. மேலும் இந்த ‘பா’ வரிசை படங்களில் நடிக்கும் போது சிவாஜி தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதைத்தான் பார்த்தார். அதில் தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களாக இருந்தாலுமே அவர் நடிக்க தயங்கியதேயில்லை. `பார் மகளே பார்’ படத்தில் பாதி படத்திற்கு மேல் அவருக்கு முதிர்ந்த வேடம்தான். அதுவும் நடிகை விஜயகுமாரி, புஷ்பலதா ஆகியோரின் தந்தையாக நடித்திருப்பார்.

    இந்த படங்கள் வெற்றியடைந்ததற்கு இன்னொரு காரணத்தையும் சிவாஜி சொல்லுவார். ` இந்த காலகட்டத்தில் இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர்கள், முக்கிய நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து கதையமைப்பு, கதாபாத்திரங்கள், பாட்டுக்கள் பற்றியெல்லாம் கலந்து பேசி முடிவு செய்வோம். அந்த படத்தைப் பற்றிய சிந்தனையாகவே இருப்போம்’ என்றார் சிவாஜி.

  12. #2068
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 138 – சுதாங்கன்.



    சிவாஜியின் மறக்க முடியாத `பா’ வரிசை படங்களில் முக்கியமான படம் `பாசமலர்’. இந்த படம் சிவாஜியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் நீங்காத இடம் பெற்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த படத்தின் தாக்கம் இருந்தது. அதுவும் அண்ணன், தங்கை இருக்கும் வீடுகளில் இந்த படத்தின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

    ஒவ்வொரு அண்ணனும் தன்னை சிவாஜியாகவும், ஒவ்வொரு தங்கையும் தன்னை சாவித்திரியாகவும் நினைக்கும் அளவிற்கு அந்த படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அன்பு, சகோதர பாசம், உறவு, கடமை போன்ற கருத்துக்களை ஒரு குடும்ப கதையாக்கி `பாசமலர்’ மூலமாக மக்களுக்குச் சொன்னார்கள்.

    இந்த படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி, தங்கவேலு, எம்.என். ராஜம் என எல்லோரும் ஒரு டீமாக வேலை பார்த்திருப்பார்கள்.

    தமிழில் இந்த படம் பெற்ற வெற்றியை கொண்டு இந்த படத்தை இந்தியிலும் சிவாஜி பிலிம்ஸ் எடுத்தது.சிவாஜியின் தம்பி சண்முகம் இந்த படத்தை தயாரித்திருந்தார். சிவாஜியின் தம்பிதான் சிவாஜி நாடக மன்றத்தையும் துவக்கினார். பிறகு அவரே சிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு சினிமா கம்பெனியையும் ஆரம்பித்தார்.

    ‘பாசமலர்’ படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். ஒரு சமூக படத்தின் வசனத்தை ‘கட்டபொம்மன்’ ‘திருவிளையாடல்’ வசனத்திற்கு பிறகு கோயில் விழாக்களில் ஒலிபரப்பு செய்தார்கள்.

    அப்படியென்ன அந்த வசனத்தின் சிறப்பு? சிவாஜியின் தங்கை சாவித்திரியை ஜெமினி காதலிப்பார். ஆரம்பத்தில் சிவாஜிக்கு இந்த காதலில் விருப்பமில்லை. இந்த காதல் தெரிந்ததும் சிவாஜிக்கும், ஜெமினிக்குமிடையே கைகலப்பே நடக்கும். அதை தொடர்ந்து பெரிய முதலாளியான சிவாஜி, தன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சிலரை வேலை நீக்கம் செய்வார்!!

    அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஜெமினி, சிவாஜியிடம் போய் நியாயம் கேட்பார். இந்த காட்சியின் வசனங்களில் அனல் பறக்கும். இதில் சிவாஜியும் ஜெமினியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்.

    இந்த படத்தில் சிவாஜியின் பெயர் ராஜு.

    சிவாஜியின் அறைக்குள் நுழைவார் ஜெமினி.

    தன்னுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் அழைத்துப் போவார் ஜெமினி.

    ஜெமினியின் பெயர் ஆனந்தன்!

    ராஜு: என்ன?

    ஆனந்தன்: இவர்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டாயாமே ?

    ராஜு : ம்.

    ஆன: எதற்காக?

    ராஜு: அதை கேட்க நீ யார்?

    ஆன: நான் ஒரு தொழிலாளி. நாங்களெல்லாம் ஒரே சமுதாயம். இதில் ஒருவன் பாதிக்கப்பட்டால், அதைப் பற்றிக் கேட்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையின் பெயரால் கேட்கிறேன். இவர்கள் நிறுத்தப்பட்டதற்கு நீ சரியான காரணம் சொல்ல வேண்டும்.

    ராஜு: அவசியம் சொல்லத்தான் வேண்டுமோ?

    ஆன: ஆமாம்! எதற்கும் காரணம் சொல்ல வேண்டிய காலம் இது!

    ராஜு: அதிகம் வேலையில்லாத காரணத்தால், ஆள் குறைப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    ஆன: அந்த அவசியத்திற்கு குறிப்பிட்ட இவர்களை மட்டும்தான் பலி கொடுக்க வேண்டுமா?

    ராஜு! இதில் எந்த குறிப்புமில்லை. கணக்குப்படி வேலை செய்யாமல் கவுரவ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்..அதுவும் தற்காலிகமாக.

    ஆன: எனக்காகச் சொல்லும் நொண்டி சாக்கு இது! இதை நான் நம்புவதற்கில்லை.

    ராஜு: ஐ டோண்ட் கேர்!

    ஆன: ம். எனக்குத் தெரியும் இது பிறந்த நாள் நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு. சொந்த விரோதத்தை வைத்துக்கொண்டு எனக்கு நண்பர்களாயிருக்கிற நலிந்தோரையும், மெலிந்தோரையும் உன் காலடியில் போட்டு நசுக்கப் பார்க்கிறாய். முறைப்படி உன் பலத்தை காட்ட வேண்டியது என்னிடமே தவிர, முதுகெலும்பில்லாத பேசும் பிரேதங்கள் மீதல்ல.

    ராஜு: ம். உன் சொந்த பழியைத் தீர்த்துக் கொள்வதற்காக, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு என் மீது படையெடுத்து வந்திருக்கிறான். உங்களுக்காகப் பரிந்து பேச வந்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள்.

    ஆன: இல்லை, இவர்களுக்காகத்தான் பரிந்து பேச வந்திருக்கிறேன். அன்றொரு நாள் உன் தங்கையைப் பார்க்கச் சென்றதற்காக நீ வேலையிலிருந்து விலக்கப்பட்ட போது இதே இடத்தில் உனக்காகவும் நான் பரிந்து பேசியிருக்கிறேன் என்பதை மறந்து விடாதே.

    ராஜு: அதெல்லாம் பழங்கதை.

    ஆன: இடைக்காலத்தில் கிடைத்த இந்த நாற்காலிக்கு மதிப்புக் கொடுப்பதற்காக இவர்களின் நட்பை இழந்துவிடாதே.

    ராஜு: வஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கவுரவத்தை இழப்பதை விட உன் கூட்டத்தை இழப்பது மேல்.

    ஆன: சொந்த விஷயத்திற்குப் போகாதே. நான் வந்தது நம்மைப் பற்றி பேசுவதற்கல்ல. நாளெல்லாம் பாடுபட்டு நீ இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான இவர்களைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன்.

    ராஜு: உன்னைப் போன்ற சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு பாவம் ஒன்றும் அறியாத இந்த தொழிலாளர்கள் தங்களுடைய இன்பத்தையெல்லாம் இழப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அனுதாபப்படுகிறேன்.

    ஆன: யார் சுயநலவாதி? ஒருவனுடைய சுகத்திற்காக பலர் பாடுபட வேண்டுமென்கிற ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா அல்லது பலருடைய நன்மைக்காக ஒருவன் வாழ வேண்டுமென்கிற பொது நலம் பித்தனான நான் சுயநலவாதியா?

    ராஜு: ம்.. பொதுநலம். பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தை குளிர வைக்கவா? காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஓய்வு பெறுவதற்காகவா? கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? இல்லை, இதெல்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டுமென்ற பேய்வெறி. அந்த வெறிதான் உனக்கு.இதற்கு பெயர் பொதுநலம்.

    ஆன: புரியாமல் பேசாதே. மெழுகுவர்த்தி எரிந்து ஒளியைக் கொடுப்பதோடு, தன் மேனியையும் உருக்கிக்கொள்கிறது..ஊதுவத்தி நறுமணத்தைக் கொடுத்த பிறகு, உருவமற்று சாம்பலாகிறது. தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக்கட்டையைப் போல்தான் தியாகிகளும், பொதுநலவாதிகளும் என்பதைப் புரிந்து கொள்.

    ராஜு: இப்படியெல்லாம் பேசி பேதங்கள் உண்டாக்கு வதற்குத்தான் அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய் நீ.

    ஆன: இல்லை. உன்னிடம் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். ஏன்? ஒரு தொழிலாளி முதலாளியாக மாறியிருக்கிறானே என்று. இப்போது ஆத்திரப்படுகிறேன். இந்த முதலாளி, தான் ஒரு மாஜி தொழிலாளி என்பதை மறந்துவிட்டானே என்று.

    ராஜு: இல்லை.. இல்லை. இவனும் நம்மோடு சேர்ந்தவன்தானே? ஆனால் இன்றோ ……

  13. #2069
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 139 – சுதாங்கன்.



    ராஜு: பல பேரை வைத்து வேலை வாங்குகிற அளவுக்கு இவனுடைய நிலை உயர்ந்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் உனக்கு.

    ஆன: தனக்குத் தண்ணீர் இல்லாததால் ஒரு செடி கருகுமே தவிர, வேறொரு செடிக்குக் கிடைக்கிறதே என்று ஏக்கத்தால் எந்தச் செடியும் எரிவதில்லை. இந்த தத்துவத்தில் வளர்ந்து கவலையில்லாத வாழ்க்கை நடத்துகிற என்னை விட்டுவிட்டு எவனாவது கையாலாகாதவனிடம் உன் வயிற்றெரிச்சல் கதையைச் சொல்.

    ராஜு: மிஸ்டர் ஆனந்தன்! ஐ ஆம் தி ஸோல் புரொப்ரைட்டர் ஆப் திஸ் கன்சர்ன். ஐ கேன் டூ வாட்டெவர் ஐ லைக்!

    ஆன: தோஸ் டேஸ் வேர் கான் மிஸ்டர் ராஜு. நவ், ஈச் பார் ஆல் அண்டு ஆல் பார் ஈச்.

    ராஜு: ஷட் அப் ஐ ஸே!

    ஆன: இந்த ஆணவத்தால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அழிந்து போயிருந்ததை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

    ராஜு: இந்த ஆர்ப்பாட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திண்டாடுவதை நான் உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

    ஆன: ராஜு! இனி நாம் பேசிக்கொண்டே போனால், அதன் முடிவு என்ன ஆகும் என்று நம் இருவருக்குமே தெரியாது. இறுதியாக உன்னை எச்சரிக்கிறேன். இவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்.

    ராஜு: நோ! ஐ சே நோ!

    ஆன: அப்படியா ! மறுபடியும் எச்சரிக்கிறேன். கூட்டுறவு பண்டக சாலை மூடப்பட்டதை எதிர்த்து அன்று எழும்பிய அதே போராட்டக் குரல் நாளை இந்த சுவற்றிலும் எதிரொலிக்கும்.

    ராஜு: ம். லிஸன் மை பாய், லிஸன்… இம்முறை உன் போராட்டத்தால் இத்தொழிற்சாலை கதவுகள் பூட்டப்படாது. உன் கைகள் பூட்டப்படும்.

    ஆன: அதோடு உன் கர்வமும் ஓட்டப்படும்.

    ராஜு: நில். ஆனந்தன், நீ உன்னுடைய ஆட்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு இங்கே எரியும் மின்சார பல்புகளை எல்லாம் அணைத்துவிட்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இதே இடத்தில் எப்போதும் ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு சுடர் விட்டு கொண்டிருக்கும் அந்த சொற்ப வெளிச்சத்தின் கீழே அற்பர்களின் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் நீ குறிப்பிட்ட அந்தத் தொழிலாளி ராஜு. அதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை தொடங்கு. முழங்கு, முரசு கொட்டு, மூலைக்கு மூலை நின்று திட்டு.. கெட் அவுட்!

    (போய் விடுகிறான் ஆனந்தன்!)

    இந்த காட்சி முடியும் போது, அடுத்த காட்சிக்கான வசனங்கள் காதில் விழாது. அந்த அளவுக்கு இருவரின் நடிப்புக்கு கைத்தட்டல் கிடைக்கும்.

    சிவாஜி, ஜெமினி இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.

    தன் படங்களில் தன் சக நடிகர்களும் தங்கள் திறனை காட்ட வேண்டும் என்று நினைப்பார் சிவாஜி!

    ஆனால் இந்த இருவரையும் விட `பாசமலர்’ படத்தில் வெற்றி பெற்றது சாவித்திரி என்றே சொல்ல வேண்டும்.

    இது பற்றி ஒரு முறை நான் சிவாஜியுடனேயே பேசியிருக்கிறேன்.

    `ஆமா, அவதானே ஜெயிக்கணும்? படத்தில் தலைப்பு என்ன? `பாசமலர்’தானே? மலர் என்றாலே பெண்ணைத்தானே குறிக்கிறது? மேலும் சாவித்திரி நல்லா நடிச்சதனாலேதான் அந்த படமே அந்த அளவுக்கு வெற்றி பெற்றது’ என்றார் சிவாஜி!

    இந்த படத்தை நான் பார்த்த போது அது எட்டாவது முறையோ என்னவோ ரிலீஸ் ஆகியிருந்த நேரம்.

    அந்த காலகட்டத்தில் இந்த படம் எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் பெண்கள் கூட்டம் அலைமோதும்!

    அவர்கள் ஏற்கனவே பார்த்த படம்தான். ஆனாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் கொட்டகையிலேயே பெண்களின் அழுகுரல் கேட்கும்.

    இந்த படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் ஜோடியாக நடிக்கவே முடியவில்லை.

    சில வருடங்கள் கழித்து அவர்களை ஜோடியாக வெற்றி கண்டவர் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!

    அந்த படம் `கை கொடுத்த தெய்வம்.’

    அந்த படத்தில் கூட சிவாஜியும், சாவித்திரியும் இரண்டே காட்சிகளில்தான் சந்திப்பார்கள்.

    அதுவும் இரண்டாவது அதாவது கிளைமாக்ஸில் சாவித்திரி தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போயிருப்பார்.

    அவரை சிவாஜி தன் மடியில் கிடத்தி கழுத்தில் தாலி கட்டுவார்.

    அந்த படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது!

    அடுத்து வந்த ‘பா’ வரிசை படம் ஏ.வி.எம் நிறுவனத்தின் `பார்த்தால் பசி தீரும்.’

    இந்த படத்திலும் சிவாஜியின் உடன்பிறவாத தங்கையாக, குருட்டுப் பெண்ணாக வருவார் சாவித்திரி!

    இந்த படத்தின் கதையை ஏ.சி திருலோகசந்தர் எழுதியிருந்தார். இயக்கியது ஏ.பீம்சிங்!

    இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு இரட்டை வேடம்!

    இந்த படம் 14.1.1962ம் ஆண்டு வெளியானது!

    இந்த படம் உருவானதைப்பற்றி ஏ.வி.எம் சரவணன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    `என்னுடன் நெருங்கி பழகி எப்பொழுது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வந்து என்னுடன் பேசிவிட்டு, சாப்பிட்டுவிட்டு போகும் உரிமையை எடுத்துக் கொண்ட இரண்டு கலைஞர்கள் உண்டு. ஒருவர்– நடிகர் எஸ்.ஏ. அசோகன், இன்னொருவர்– எஸ்.வி.சுப்பையா.

    அடிக்கடி யாரையாவது அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் அறிமுகப்படுத்தி வைப்பது அசோகனின் வழக்கம். அப்படி என்னிடம் அவர் அறிமுகப்படுத்தி வைத்தவர்களில், ஏ.சி. திருலோகசந்தர் குறிப்பிடத்தக்கவர்.

    `இவர் நிறைய கதைகள் வச்சிருக்கார். ரொம்ப அழகாக சொல்லுவார். நீங்க ஒரு நாள் கேக்கணும்’ என்றார்.

    சரியென்று ஒரு நாள் கதை கேட்டேன். நான், அசோகன், திருலோகசந்தர் மூவரும் என் அறையில்.

    திருலோக் கதை சொல்லத் தொடங்கினார். பாதியில் திடீரென ஏதோ நினைத்துக்கொண்டார் போல அசோகன்! அவர் திருலோக்கைப் பார்த்து `அண்ணே! நீங்க அந்த ஸ்வார்ட் பைட் கதையை சொல்லலியா?’ என்று கேட்டார். அதற்குள் நான் ஒரு நான்கைந்து பென்சில்களை சீவி முடித்துவிட்டேன். திருலோகசந்தர் ரொம்பவும் நொந்துவிட்டார்.

    `அவரு என்னன்னா, ஸ்வார்ட் பைட் கதை சொல்லலியான்னு திடீர்னு கேக்கறாரு. நீங்க என்னடான்னா பென்சில் சீவிக்கிட்டு இருக்கீங்க? யாரும் கதை கேக்கற மாதிரி தெரியலியே?’ என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

    `நான் உங்க முகத்தை பார்க்கலையே தவிர, கதையை நீங்க சொன்ன வரைக்கும் கவனமாகவே கேட்டேன். நான் வேணும்னா சொல்றேன். கேளுங்கள்’ என்று அவர் சொன்ன கதையை அப்படியே `ரிபீட்’ செய்தேன்.

    பிறகு …..

    (தொடரும்)

  14. #2070
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    My Independance Day wishes for all participants and Readers of Mayyam .(15th Aug)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •