Page 146 of 400 FirstFirst ... 4696136144145146147148156196246 ... LastLast
Results 1,451 to 1,460 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1451
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1452
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes Russellmai, Harrietlgy liked this post
  6. #1453
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, sankara1970 liked this post
  8. #1454
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks sivaa thanked for this post
    Likes sivaa, Russellmai, Harrietlgy liked this post
  10. #1455
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    வெண்திரைக் காகிதத்தில்
    நாங்கள் விரும்பி வாசித்த
    வெளிச்சக் கவிதை நீங்கள்.

    பல கோடிக் கண்களின்
    நிரந்தரக் கனவு நீங்கள்.

    இதயம் நிறைந்த
    எங்கள் நடிகர் திலகத்திற்கு
    இணையாக வந்தவர்களில்
    இணையற்றவர் நீங்கள்.

    உங்கள் அழகு முகத்தில்
    நவரச பாவங்களும்
    ஒப்பனை போல்
    ஒட்டிக் கிடந்தது.

    நடனம் என்கிற மகாகலை
    உங்கள் திறமைப் பாதங்களைப்
    பிரிய மனமின்றி
    கட்டிக் கிடந்தது.

    மனசு நிறைந்தவர்கள்
    பிரிந்து போனாலும்
    மறக்க முடியாத பலவற்றை
    கொடுத்து விட்டுத் தான்
    போயிருக்கிறார்கள்.

    உங்களைப் போல...

    வில்லவனின் அரசவையை
    இனிமையாக்கிய நடனம்...

    "முல்லை மலர் மேலே"
    பாடிக் கொண்டு
    படகில் போகும் பயணம்...

    "கோபியர் கொஞ்சும்
    ரமணனாக" காட்டும்
    ஜாடைகள்...

    "நலந்தானா"வையும்,
    மறைந்திருந்தே பார்க்கும்
    மர்மமென்ன" வையும்
    மறக்காத மேடைகள்...

    அத்தனையும் தந்த
    உங்களைப் போல.

    எங்கள் இதயங்களில் சுடரும்
    அமரதீபமே...!

    உங்கள் பிறந்த தினத்தில்
    வணக்கம்.


  11. Thanks Russellmai thanked for this post
    Likes sivaa, RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  12. #1456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அரிய ஆவணங்களை பதிவிட்டு வரும் சிவா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  13. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  14. #1457
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,




    அடுத்து ஏ.பி.என். ‘திருமால் பெருமை’ படத்தில் எடுத்துக்கொண்டது விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப் பொடியாழ்வார் கதையைத்தான்! இவர் அரங்கப்பெருமான் கோயிலுக்கு அருகில் ஓர் அழகான பூஞ்சோலை அமைத்து அதில் மலரும் மலர்களைக் கொண்டு தினமும் அரங்கனுக்கு மாலை சூட்டி மகிழ்ந்து வந்தார்.
    அறிவும், அழகும் ஒருங்கே பெற்றிருந்த விப்ரநாராயணர் மீது ஒரு தாசிப் பெண்ணான தேவதேவி காதல்கொண்டாள். பெண்ணாசையே இல்லாத விப்ரநாராயணருக்கு காதல் அனுபவத்தைக் கொடுக்கவே அந்த பகவான் நாராயணன் தேவதேவியை அனுப்பினான் என்கிறது ஆழ்வார்கள் வரலாறு!
    பெண்களையே திரும்பிப் பார்க்காத விப்ரநாராயணர் தேவதேவியின் வலையில் விழுவார்! அதனால் அவர் பட்ட துன்பங்களும், பிறகு விப்ரநாராயணரும், தேவதேவியும் அந்த அரங்கனுக்கே அடிமையானார்கள் என்பதும் தான் இந்த வரலாற்றுச் சுருக்கம்! இதில் விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடியாழ்வாராக சிவாஜியும், தேவதேவியாக பத்மினியும் நடித்திருப்பார்கள்.
    முதலில் பெரியாழ்வாராக அழகிய பெண் ஆண்டாளின் தந்தையாக வயோதிகராக வந்த சிவாஜி, அடுத்த வரலாற்றில் அழகான இளைஞன் விப்ரநாராயணனாக வந்து அசத்தியிருப்பார்! சிவாஜி என்கிற கலைஞனை வைத்துக்கொண்டுதான் எத்தனை பாத்திரப் படைப்புக்கள்!
    அடுத்த கதை திருமங்கை மன்னன் வரலாறு! சோழ சாம்ராஜ்யத்தில் ஒரு குறுநில மன்னன், திருமங்கை மன்னன்! சிறந்த கல்விமான்! அதே சமயம் சரசங்களில் அதிகம் ஈடுபட்டான்! அவனை அதிலிருந்து நல்வழிப்படுத்தி தன் பக்தனாக்க, மேலோகத்திலிருந்து ஓர் அழகிய குழந்தையை பூலோகத்திற்கு அனுப்பி அந்த குழந்தையை ஒரு வைத்தியரைக் கொண்டு வளர்க்க வைப்பார் அரங்கன்.
    அந்தப் பெண் வளர்ந்ததும் அவளுக்கு ‘குமுதவல்லி’ என்று பெயர்! அவளை திருமங்கை மன்னனுக்கு மணமுடிக்க வைப்பார்கள். அவள் திருமங்கை மன்னனை அரங்கன் சேவையில் திருப்புவாள்! அன்றிலிருந்து அரங்கனின் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்யத் தொடங்கினான் திருமங்கை மன்னன்! இதனால் ராஜ்ஜியத்தில் பொருட்கள் எல்லாம் செலவானது! இதனால் சோழ மன்னனுக்கு கட்ட வேண்டிய கப்பத்தை கட்டாமல் அவனுக்கும் சோழனுக்குமே பகை உண்டாகிற நிலை வரும்! பிறகு மன்னனோடு நட்பாகி, மன்னனின் அனுமதியோடு அதே நற்காரியங்களை தொடர்வான்!
    இப்போதும் பணப் பற்றாக்குறை! இதில் அரங்கனுக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்கிற ஆசை வரும் திருமங்கை மன்னனுக்கு! பணப்பற்றாக்குறையினால் இருப்பவர்களிடம் கொள்ளை அடிக்க ஆரம்பிப்பான்! அவனை நல்வழிப்படுத்த ஒரு நாள் அரங்கனும், அலைமகளும் திருமண தம்பதிகள் போல் கூட்டமாக வருவார்கள்! அந்த கூட்டத்தை திருமங்கை மன்னன் கொள்ளையடிப்பான்!
    அப்போது மாப்பிள்ளையாக இருக்கும் அரங்கனின் கால் மெட்டியை கழற்ற முடியாது! திருமங்கை மன்னனே அதை கழற்ற முயல்வான்! கழற்ற முடியாது! அந்த `மாப்பிள்ளை’யின் காலை எடுத்து தன் வாயில் வைத்து பல்லால் அதை இழுக்க பார்ப்பான் மன்னன்! முடியாது! இந்த காட்சியில் சிவாஜி கணேசன் திருமங்கை மன்னன்!
    மாப்பிள்ளை அரங்கனான சிவகுமார்! இந்த காட்சியைப் பற்றி சிவகுமார் தன் புத்தகத்தில் பதிவு செய்திருப்பார்! இந்த காட்சி சென்னை திருநீர்மலைக்கருகே இருந்த ஒரு வெட்டவெளியில் எடுத்தார்கள். அந்த இடம் சுத்தமான இடம் கிடையாது!
    காட்சியில் திருமங்கை மன்னன் அரங்கனின் காலை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். நடிப்பாக இருந்தாலும் சிவாஜி தன் காலை தொட்டு வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவகுமாருக்கு தயக்கம்!
    ` டேய்! காலை குடு! அப்போதான் இந்த காட்சி சரியாக இருக்கும்’ என்று சொல்லி அவருடைய காலை எடுத்து தன் வாயில் வைத்து கொள்வார்!
    நெகிழ்ந்து போனார் சிவகுமார்! நடிப்பென்று வந்துவிட்டால் எதையும் சாதிக்க துணிந்துவிடுவார் சிவாஜி! அவருடைய ஈடுபாட்டிற்கு அளவே கிடையாது! இதே போல் ஒரு சம்பவத்தை 28.03. 2003 குமுதம் வார இதழில் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் பதிவு செய்திருப்பார்!
    `சிவாஜி கணேசன் என்னை ‘மாப்ளே! மாப்ளே!’ என்றுதான் கூப்பிடுவார்!
    சாவித்திரியை ‘தங்கை’ என்றுதான் அழைப்பார்! அதனால் மாப்பிள்ளை முறை என்பார்! சிவாஜி கதாநாயகன் ஆவதற்கு முன்பு வேலை கேட்டு ஜெமினி ஸ்டூடியோவிற்கு வந்தார்.
    ஆனால் அப்போது அங்கு வேலை இல்லை.
    இதற்கு பிறகு கொஞ்ச நாட்களிலேயே ‘பராசக்தி’ படத்திலே நடிக்கிற வாய்ப்பு வந்திடுச்சு!
    அந்தப் படத்தில் அருமையாக நடித்திருந்தார். ஒரு நல்ல நடிகர் கிடைச்சிருக்காருன்னு நான் சந்தோஷப்பட்டேன்! சிவாஜியும், நானும் இணைந்து நடித்த முதல் படம் ‘பெண்ணின் பெருமை!’ முதல் படத்திலேயே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம்! ஒரு காட்சியில் நான் அவரோட கன்னத்தில் ஓங்கி அறையற மாதிரி சீன்! உடனே சிவாஜி என்கிட்ட “மாப்ளே, உண்மையிலேயே என் கன்னத்தில் அடிச்சிடு.இல்லேன்னா வேறு எங்காவது படாத இடத்தில் பட்டுடப்போவுது”ன்னு சொன்னார்.
    நானும் சரின்னு சொல்லிட்டேன்.
    ஆனால் ஷாட்டின் போது அவரோட கன்னத்தில் எப்படி அடிக்கிறதுன்னு தயக்கம்! அதனால் அடிக்கிற மாதிரி ஆக்ஷன்தான் பண்ணினேன்.
    அதுதான் வினையாக மாறிடுச்சு!
    என் கை அவர் உதட்டில் பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு!
    `மாப்ளே, இப்படி பண்ணிட்டியே, நீ கன்னத்தில் அடிச்சிருந்தா வலியோடு போயிருக்குமே!’ ன்னு சொன்னார்!
    ரத்தத்தை பார்த்ததும் எனக்கு சங்கடமா போயிடுச்சு!
    இதற்குப் பிறகு 1958ம் வருஷம் நான் ‘கல்யாணப் பரிசு’ படத்தில் நடிச்சுக்கிட்டிருந்தேன்.
    அந்த நேரத்தில்தான் ஜெய்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பு! அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் ஏதோ காரணத்தினால் நடிக்க முடியாமல் போயிடுச்சு! அதில் வெள்ளையத்தேவன் வேடத்தை நான்தான் பண்ணினேன்.
    அதற்கு பிறகு கூட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்கள்ல நடிச்சோம்.
    சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பல படங்கள்ல நடிச்சோம்.
    ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, எல்லா படங்களுமே நல்ல படங்களா அமைஞ்சுது.
    எல்லாப் படங்களும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பிரமாதமாக ஓடியது.
    அந்த நாட்கள் எல்லாம் என்னால் எப்போதும் மறக்க முடியாதவை’ என்று சொல்லியிருந்தார் ஜெமினி கணேசன்!
    இதே போல்தான் வி.கே. ராமசாமி 7.10.1987ம் வருடம் தேவி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்– `சிவாஜி பாரத நாட்டின் பெருமை என்று சொல்லியிருந்தார்! செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தவர் சிவாஜி! ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் வேலை செய்தார்!
    அவர் ஒரு………!
    (தொடரும்)

  15. #1458
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The Cosmology and Seismology of Love!!

    கண்ணும் பெண்ணும்......விண்ணும் மண்ணும்.....

    The cosmic power of sky controls earth.....the seismic power of lady confuses the lad!

    உலகின் நிகழ்வுகளைக் கண்ணுற்று மகிழவே நமக்கு இறைவன் கண்களைத் தந்திருந்தாலும் காதல் பருவத்தில் அகக்கண் மூடி புறக்கண் திறப்பது காதலியின் வனப்பை ரசித்திடவே!

    மண்ணில் அரும்பும் துரும்பும் கரும்பும் விண்ணை நோக்கியே விரும்பும் திரும்பும்! மண்ணில் நிகழ்வுகள் விண்ணின் பார்வையிலேயே!!

    காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான் காதலன்....காதலன் விண்ணைப் பார்க்கிறான்....காதலியோ மண்ணைப் பார்க்கிறாள்....
    பார்வைகள் நேர்கோட்டில் சந்திக்கும்போதோ பிரளய பூகம்பம்...மின்னல் பூக்கள்.....பாசமழை....அலைபாயும் கடலாகிக் கொந்தளிக்கிறது மனம் !

    இதுதான்...இந்தப் பார்வையின்சங்கமம்தான்....புவிமாந்தரின் காதல் மந்திர மாளிகையின் கதவுகள் திறந்திடும் கடவுச்சொல்!

    மண்ணை நோக்கி விண்ணையும் இறங்க வைக்கும் பெண்ணின் கண்களே காதலின் கலங்கரை விளக்கம்......காதல் மாலுமிக்கோ விண்ணில் நின்று வழிகாட்டும் துருவநட்சத்திரம்!! விண்ணும் மண்ணும் வாழ வைக்கும்.... நம்மைக் காதலில் வீழ வைக்கும்..... பிரம்மாஸ்திரங்களே பெண்ணும் கண்ணும் !!


    The cosmic power anchors the love!



    The seismic power cracks the love!!

    Last edited by sivajisenthil; 12th June 2016 at 11:00 PM.

  16. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai, sivaa, KCSHEKAR liked this post
  17. #1459
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது NTFANS நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் 12.06.2016 அன்று மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகத்தின் Evergreen Classic அமர தீபம் திரைப்படத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் சார்பாக அவர்களது வாரிசுகளை நம்முடைய அமைப்பு கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. படத்தின் கதை வசனகர்த்தா ஸ்ரீதர் சார்பாக அவரது துணைவியார் திருமதி தேவசேனா, நடிகையர் திலகம் சாவித்திரி சார்பாக திருமதி விஜய சாமுண்டேஸ்வரி, படத்தின் நிழற்படக் கலைஞர் அருணாசலம் சார்பாக திரு ரமேஷ்குமார், திரு எம்.ஆர்.சந்தானம் சார்பாக திரு சந்தான பாரதி, படத்தின் தயாரிப்பு நிர்வாகி திரு பி.வி.சத்தியம் சார்பாக திரு சித்ரகலா சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திரு சி.வி.ராஜேந்திதிரன் மற்றும் திரு கங்கை அமரன் கலந்து கொண்டனர். நமது அன்புச் சகோதர்ர் ராம்குமார் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார்.

    முன்னதாக நமது அமைப்பின் பொருளாளர் திரு முரளி அவர்கள் படத்தின் சிறப்பினைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர்களும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    திரு கங்கை அமரன் அவர்கள் இத்திரைப்படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்ததோடு, தேனுண்ணும் வண்டு பாடலை தன் வளமையான மற்றும் இனிமையான குரலில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

    தொடர்ந்து அமர தீபம் திரைப்படம் திரையிடப்பட்டது.

    நடிகர் திலகத்தின் ஹீரோ எண்ட்ரி பாடலான நாணயம் மனுஷனுக்கு அவசியம் பாடலின் வரிகள் அங்கங்கே பலத்த கரகோஷத்தைப் பெற்று, நடிகர் திலகத்தின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கும் வலிமை பெற்றவை என்பதை நிரூபித்தன.

    இவ்வளவு இயல்பாக நடிகர் திலகம் நடிக்கும் போது அவரை ஏன் தேவையில்லாமல் ஓவர் ஆக்டிங் என விமர்சிக்கிறார்கள் என வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டது, நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிப்பவர்கள் உண்மைக்கும் தங்கள் சொல்லுக்கும் தொடர்பற்றவர்கள் என்பதை மட்டுமின்றி எந்த பாத்திரத்திற்கு எப்படி நடிக்க வேண்டும் என இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் என நிரூபித்தது.



    திரு கங்கை அமரன் அவர்கள் தேனுண்ணும் வண்டு பாடலை சிலாகித்து பாடிய போது...



    திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர்கள் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது..



    நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் சார்பாக திருமதி விஜயசாமுண்டேஸ்வரி அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.



    திரு எம்.ஆர். சந்தானம் அவர்கள் சார்பில் திரு சந்தான பாரதி அவர்கள் பங்கேற்றார். அன்புச் சகோதரர் திரு ராம்குமார் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கியபோது..



    அமரதீபம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி திரு பி.வி.சத்தியம் அவர்கள் சார்பாக அவரது புதல்வர் திரு சித்ரகலா சுந்தரராஜன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.



    அமர தீபம் படத்தின் நிழற்படக் கலைஞர் திருச்சி அருணாச்சலம் அவர்களின் சார்பாக அவரது புதல்வர் திரு ரமேஷ் குமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.


    கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த அளவிற்கு பார்வையாளர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
    Last edited by RAGHAVENDRA; 14th June 2016 at 06:38 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. #1460
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பல இடங்களில் பலத்த கரகோஷத்தைப் பெற்ற நாணயம் மனுஷனுக்கு அவசியம் பாடல் காட்சி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, sivaa, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •