Page 362 of 400 FirstFirst ... 262312352360361362363364372 ... LastLast
Results 3,611 to 3,620 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3611
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    5002 வது பதிவு

    (ஏற்கெனவே பதிவிட்டதுதான்)

    எங்க ஊர் ராஜா...
    நடிப்பின் கோர தாண்டவம்

    இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
    வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
    வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
    அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
    மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
    ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
    அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
    சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
    அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
    பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
    அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.

    யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
    என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
    தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
    ஊட்டும்.

    வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.



    !குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
    இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)


    பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...

    பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.

    தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
    அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
    சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.



    பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
    இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.



    !பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
    இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
    காட்டியிருயிருப்பார்.

    நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
    இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
    தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
    கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.

    நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
    இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.

    ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
    முடிவில்
    வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
    சென்று சென்று திரும்பி வருவதும்
    என்று நடிப்பு ராஜாங்கம் நடத்தியிருப்பார்.

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3612
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3613
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3614
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 167– சுதாங்கன்.




    இந்த ஆண்டு அந்த இன்னொரு படம் `வியட்நாம் வீடு’. இது சிவாஜியின் சொந்த தயாரிப்பு. இந்தப் படத்தின் மூலமாகத்தான் எழுத்தாளர் சுந்தரம் ‘வியட்நாம் வீடு’ சுந்தரமானார். நூறு படங்களில் நடித்த பிறகு சிவாஜி மீண்டும் மேடைக்கு வந்த நாடகம் இது.
    `ஏன் நீங்கள்தான் பெரிய நடிகராயிற்றே? ஏன் மீண்டும் மேடைக்கு வந்தீர்கள்? ‘சிவாஜியிடம் ஒரு முறை கேட்டேன்.
    `ஒரு கலைஞன் அவனுடைய திறமையை நேரடியாக மக்கள் முன்னாடி நிரூபிக்கணும். அப்போ அவங்க கொடுக்கிற கைத்தட்டலும் பாராட்டும்தான் ஓர் உண்மையான கலைஞனுக்கு வெகுமதி. சினிமாவில சம்பாதிக்கிறது வாழ்க்கைக்கு. மேடைதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கிற உண்மையான அங்கீகாரம்’ என்றார் சிவாஜி.
    குடும்பத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை வைத்து இந்த நாடகத்தை எழுதியிருந்தார் சுந்தரம். சிவாஜியும், பத்மினியும் பிராமணத்தமிழ் பேசி அருமையாக நடித்தனர். இந்த படத்தை இயக்கியவர் பி. மாதவன். இந்த வருடம் வந்த இன்னொரு படம் `எதிரொலி.’ இந்த படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். இந்த படம் சிவாஜி படமாகவும் இல்லை கே.பி. படமாகவும் இல்லை. அதனால் படம் தோல்வியடைந்தது.
    இந்த வருடத்தில் வந்த மற்ற படங்கள் ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் 15.08.1970ம் வருடம் வந்த படம் ‘ராமன் எத்தனை ராமனடி’. 20.10.70ம் வருடம் தீபாவளி நாளில் வந்த இரண்டு படங்கள் ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் சாந்தி தியேட்டரில் வெளிவந்தது. பக்கத்திலேயே இருந்த தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியான படம் சொர்க்கம். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ மூன்றுமே நூறு நாட்களை கடந்து ஓடின. ‘ராமன் எத்தனை ராமனடி’, ஓர் ஏழை கிராமத்தான் பெரிய நடிகனாவது மாதிரியான கதை. படம் படு அமர்க்களமாக ஓடியது. இந்த படத்தில் சிவாஜி தொலைக்காட்சிக்காக நடித்த ‘சத்ரபதி சிவாஜி’ காட்சிகளை படத்தில் இணைத்திருந்தார்கள். இந்த தொலைக்காட்சி படத்திற்கு மட்டும் தஞ்சைவாணன் வசனமெழுதியிருந்தார். படத்தின் மொத்த கதை – வசனத்தையும் பாலமுருகன் எழுதியிருந்தார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் பாலாஜியின் தயாரிப்பு. இந்திப் படமான ‘கிலோனா’வின் தமிழ் வடிவம்தான் ‘எங்கிருந்தோ வந்தாள்’. இந்தியில் சஞ்சீவ் குமார் நடித்திருந்தார். ஆனால், தமிழில் சிவாஜி நடித்ததை பார்த்த சஞ்சீவ் குமார் `இதில் ஒரு சதவீதம் கூட நான் நடிக்கவில்லை’ என்றார்.
    இந்த படத்தின் கிளைமாக்ஸை எடுக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இந்தியிலிருந்து கொஞ்சம் மாற்றம் செய்ய நினைத்தார் இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் செய்ய நினைத்த மாற்றங்களின்படி கிளைமாக்ஸ் முழுவதும் ஜெயலலிதா மீதுதான் இருக்கும். காலையில் மற்ற காட்சிகளை எடுத்தார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். மதிய உணவுக்குப் பிறகு கிளைமாக்ஸ் எடுக்க வேண்டும். அது முழுவதும் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை எப்படி கதாநாயகன் சிவாஜியிடம் சொல்வது? தயங்கிக் கொண்டேயிருந்தார் இயக்குநர் திருலோகசந்தர்.
    நேரமாகிக் கொண்டிருந்தது. சிவாஜி திருலோக்கை அழைத்தார். `ஏன், என்ன லேட்?’ என்றார்.
    `ஒரு விஷயத்தை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலே.’
    `பரவாயில்லை சொல்லுங்க.’
    கிளைமாக்ஸ் முழுவதும் அம்மு(ஜெயலலிதாவை நெருக்கமானவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) மேலே இருக்கும்!’ என்றார் திருலோக்.
    `அதனால என்ன? படத்தின் டைட்டில் ‘எங்கிருந்தோ வந்தாள் தானே? வந்தான் இல்லையே?’ என்றார் சிவாஜி.
    அவருக்கு அவருடைய பாத்திரத்தை விட படத்தின் வெற்றிதான் முக்கியம். அந்த படத்தின் கிளைமாக்ஸில் ஜெயலலிதா பின்னி எடுத்திருப்பார். அந்த படம் இந்திப் படத்தின் ரீமேக்காக இல்லாமலிருந்திருந்தால், அந்தப் படத்திற்கு ஜெயலலிதாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்கும்.
    ஜெயலலிதா நடிக்கும்போது தியேட்டரில் கைத்தட்டல் பலமாக இருக்கும். அதற்கு சிவாஜி காட்டும் ரீயாக்*ஷனுக்கு விசில் பறக்கும். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ ஆகிய மூன்று படங்களிலும் இன்னொரு பெரிய ஹீரோ, எம்.எஸ். விஸ்வநாதன். மூன்று படங்களின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்!
    ‘சொர்க்கம்’ படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. பணத்தினால் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்திற்கு கட்டபொம்மனுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதியிருந்தார்.
    இதே ஆண்டில் வந்த இன்னொரு படம் `பாதுகாப்பு.’ இந்த படத்தை இயக்கியவர் `பா’ வரிசை படங்களின் வல்லவரான பீம்சிங்தான் இந்த படத்தை இயக்கினார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது.
    இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.
    இந்த ஆண்டு வந்த இன்னொரு படம் ` விளையாட்டுப் பிள்ளை’. இந்த படத்தின் கதை முதலில் ஆனந்த விகடனில் `ராவ் பகதூர் சிங்காரம்’ என்கிற பெயரில் நாவலாக வந்தது. `தில்லானா மோகனாம்பாள்’ கதையை கலைமணி என்கிற பெயரில் எழுதிய கொத்தமங்கலம் சுப்புதான் இந்த நாவலை எழுதியிருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு சொந்தமாக பத்மினி நடித்திருந்தார்.
    இந்த படத்தை அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன் தான் தயாரித்தார். ஆனால் இந்த படத்தை துவக்கியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன்தான். ஆனால் இந்த படம் முடிவடைவதற்கு முன்பே அவர் இறந்து போனார். அதனால் அவர் இறந்த பிறகுதான் படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த படத்திற்காக தன் முழு அர்ப்பணிப்பை கொடுத்திருந்தார் சிவாஜி. இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது.
    அடுத்த ஆண்டும் ஆதாவது 1971ம் ஆண்டு ‘இரு துருவம்’, ‘தங்கைக்காக’, ‘அருணோதயம்’, ‘குலமா குணமா’, ‘பிராப்தம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘சவாலே சமாளி’, ‘தேனும் பாலும்’, ‘மூன்று தெய்வங்கள்’,
    ‘பாபு’ ஆகிய படங்கள் வெளியாகின.
    (தொடரும்)

  7. #3615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை ராயலில் உத்தமன்...

    புது படங்களை பார்க்கவே ஆட்கள் வராத நிலையில் இன்று மாலை உத்தமனை தரிசிக்க
    வருகை புரிந்தவர்கள் 300 நபர்களுக்கு மேல்.
    என்றும் போல் " உத்தமர் " வசூலிலும் ராஜா
    பழைய திரைப்படத்திற்கு 3000 ரூபாய் செலவழித்து தனி நபராக போஸ்டர் ஒட்டிய கோவை ரேணுகோபாலுக்கு பாராட்டுக்கள்.
    தியேட்டரில் வழக்கம் போலவே அதகளம்.
    பட்டாசு வேடிக்கை, தலைவரை வாழ்த்தி கோஷங்கள், பாலாபிசேகம், ஆட்டம் பாட்டமுமாய் உத்தமன் இனிதே நடைபெற்றது.









  8. Likes sivaa liked this post
  9. #3616
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear senthilvel sir,
    congrats for crossing another milestone of 5000 posts
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #3617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Dear senthilvel sir,
    congrats for crossing another milestone of 5000 posts
    Thankyou sir

  11. #3618
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Senthilvel.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3619
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Congrats Senthilvel.
    Thankyou sir

  13. #3620
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இரண்டு வருடங்கள்
    5000 பதிவுகள்
    அயராத உழைப்பு
    வாழ்த்துக்கள் செந்தில்வேல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •