Page 363 of 400 FirstFirst ... 263313353361362363364365373 ... LastLast
Results 3,621 to 3,630 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

 1. #3621
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2013
  Location
  QATAR
  Posts
  313
  Post Thanks / Like
  Congrats Mr. Senthilvel.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #3622
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  சிவா சார், பரணி சார்
  நன்றி

 4. Likes sivaa liked this post
 5. #3623
  Senior Member Devoted Hubber
  Join Date
  Sep 2008
  Location
  BANGALORE
  Posts
  495
  Post Thanks / Like
  FROM THE FACEBOOK

  நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரின் , சமீபத்திய, " தங்கப்பதக்கம் " தமிழ் திரைப்படம் தொடர்புடைய ஒரு கருத்தினை கண்டபோது, சுவைமிகுந்த விறுவிறுப்பு நிறைந்த - அந்த திரைப்படத்தினை மீண்டும் காணும் ஆவல் கொண்டு...கண்டு ரசித்தேன்... ரத்தமும் சதையுமாக ஒரு காவல் துறையின் வீரமிக்க, கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடிகர்திலகம் வாழ்ந்த ஒரு அற்புதமான திரைப்படத்தினை பார்த்து ரசித்து சுவைத்தேன், படத்தின் காட்சிகளின் சிறப்பினில் என்னை மறந்தேன்...என்பதே உண்மை.

  இன்றைய காவல்துறையினரை உயர்வு படுத்தி.. கதையின் நாயகனை கடமை வீரனாக உயர்வு படுத்தி.. நாயகனை பிரம்மாண்டப்படுத்தும், காவல் துறையினரை வீரமிக்கவர்களாக...துணிவுடைய சிங்கங்களாக உருவகப்படுத்தும்... சமீப காலப் படங்களான, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மூன்று முகம், காக்கி சட்டை, சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு.. சிங்கம் 1 -2 -3 போன்ற... படங்களுக்கு அடித்தளமிட்ட,
  அந்த காவியத்தினை ஆம்..." தங்கப்பதக்கம் " எனும் காவல்துறையினரின் பெருமையினை 1974 - ஆம் வருடத்திலேயே உயர்த்திப்பிடித்த நடிகர்திலகத்தின்..ஒப்பற்ற காவியங்களில் ஒன்றான... சிறந்த படத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கி இருக்கவேண்டிய...ஒரு திரைப்படமான... அந்த படத்தினை காணும்போது மெய்சிலிர்த்தது.
  அகமகிழ்ந்தேன்...கதையின் போக்கினில் கரைந்து போனேன்...

  இப்படியும் இந்த கதாபாத்திரத்தினை மனதுக்குள் வடிவமைத்து கதையினை உள்வாங்கி...நடிப்பினை வெளிப்படுத்த இயலும் எனும் கலைக்குரிசிலின் திறம் கண்டேன்.. ஆஹா... என்ன ஒரு அருமையான நடிகர் நடிகையரின் கூட்டணி...இதனை நடிப்பு என்று கூறவே இயலாதே.. கதாபாத்திரங்கள் அத்துணை பேரும் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருந்தனர்.

  கடமையினை தனது உயிராக கருதும் ஒரு காவல் துறை அதிகாரி, அன்பான மனைவி, அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை..
  குடும்பத்தினர் மீது மட்டற்ற பாசம் கொண்டிருந்தாலும்... எந்த நிலையிலும் தனது கடமையினை விட்டு கொடுக்காத அந்த இரும்பு மனிதருக்கு வாய்த்த மகனோ...ஒரு திருடனாக, மாறி எதிரே நின்று சவால் விட...கடமையா, குடும்பமா, மகன் என்ற பாசமா ? என்ற கேள்விக்கான விடையே இந்த திரைப்படம்.
  சிறுவயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை அப்பா கண்டிக்க, கோபமுற்ற மகன் வீட்டில் பணத்தினை திருடிக்கொண்டு ஓடி மும்பை சென்று அங்கே ஒரு திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறுவர் சீர்திருத்த சிறையினில் அடைபட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகியும் சிறையில் பழக்கமான நண்பர்கள் துணையுடன் மாபெரும் கொள்ளை செயல்களை நடத்தி தந்தைக்கே சவால் விடும், சவடால் காட்டும் அற்புதமான பாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தினில் ஸ்ரீகாந்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்...மறக்க இயலாத ஒரு கதாபாத்திரம்... நடிகர் திலகம் எனும் இமயத்தினை தைரியமாக எதிர்கொண்டு...வித்தியாசமான முறையில் தனது பங்களிப்பினை சிறப்பாகவே செய்துள்ளார்...

  பாசத்துக்குரிய ஒரே மகனான ஸ்ரீகாந்துக்கு பரிந்து பேசுவதா...நியாயத்துக்கு நேர்மைக்கும் காவலனாக இருக்கும் பிரியத்துக்குரிய கண்ணின் மணியான கணவனுக்கு துணையாக நிற்பதா என்று...பாசப்போராட்டத்தில் வென்று காட்டியுள்ளார் கலையரசி K.R. விஜயா அவர்கள்... அவரின் நடிப்பும் கதறும் கதறலும்...நம்மை கலங்க வைக்கிறது...
  இந்தப்படத்துக்கான வெற்றிக்கு கதை வசனம் மிகப்பெரும் பலம் என்றே கூற வேண்டும். காட்சிக்கு காட்சி...கைத்தட்டல்களை பெற்றுத்தரும் வகையிலும் நடிகை நடிகையர்களுக்கு பெயர் வாங்கி தரும் வகையிலும் ரசிகர்களின் மனதில் வேல் போல பாயும் வண்ணம் கூரான வசனங்கள்.. இன்றைய இயக்குனர் மகேந்திரன் அந்த காலக் கட்டத்தினில் வசனகர்த்தா... கதைக்கேற்ப பொருத்தமான வசனங்கள் படத்தின் விறுவிறுப்பினில் முக்கிய பங்கேற்கும் வண்ணம் அமைத்துள்ளார்.

  படத்தின் ஆரம்பத்திலேயே லேட்டாக வீட்டுக்கு வரும் சௌத்ரியை, கே.ர்.விஜயா. ஏன் லேட்டு என்று உரிமையுடன் கேட்டு, போலீஸ்காரன்.. ன்னா ஆயிரம் வேலை இருக்கும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வரமுடியுமா...என்று வெடிக்கும் கணேசனை,
  ஷூ...இது..போலீஸ் ஸ்டேஷனும் இல்லை.. நீங்க இப்போ இன்ஸ்பெக்டர்...ம் இல்லே ...ஒழுங்கா..கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல யூனிபார்மை கழட்டிட்டு வாங்க..என்று அதட்டி...விட்டு, ...
  மீண்டும் கே.ஆர். விஜயா...கோபமாக பேசுவதும்... யூனிபார்மை கழட்டியதும், சௌத்திரி, ஒரு கொலைகாரனை பிடிச்சேன்...அவன்கிட்டேர்ந்து ஸ்டேட்மென்ட் வாங்கறதிலே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று... சாந்தமாக பதிலளிப்பதும்...அப்படியே...அந்த காட்சி, இருவருக்குமான கிண்டலுடன் கூடிய காமெடியாக மாறி, பிறகு பாசத்துடன் கூடிய உருக்கமான காட்சியாக மாறுவதுவும் ரசமான காட்சி.

  அதைப்போல வேறொரு காட்சியில் ஜெகனுக்கு முதலிரவுக்கு அலங்காரங்கள் அனைத்தையும் செய்து விட்டு...பார்த்தால்..அவர்கள் உங்கள் அறையில் படுத்து தூங்கி விட்டார்களே...என்ற இடத்தினில் உள்ள ஜனரஞ்சகமான காட்சிகள்..மறுநாள் காலையில்... முகத்தில் குங்குமத்துடன் சிவாஜி படுக்கையில் இருக்க காபி கொண்டு வரும் பிரமிளா...பார்த்து சிரித்துவிட்டு ஓட...K.R. விஜயாவிடம்...என்னது இது...என்று விபரம் கேட்டுவிட்டு...ஐயோ..கர்மம்..கர்மம் மானமே போச்சு... எவ்வளவு இயல்பான காட்சிகள்...

  கணவன் மனைவியாக நடிகர் திலகம் மற்றும் விஜயாவின் நடிப்பு வெகு அன்யோன்யம், மிக இயல்பாக நடிப்பு என்று கூற இயலாதவண்ணம் அற்புதமான பெர்பார்மன்ஸ் .
  வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் லட்டு மாதிரியான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு கலக்கும் மேஜர் சுந்தர ராஜன், V.K. ராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும் அவர்களால் மிகவும் அருமையான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது..

  நான்கே பாடல்கள் ஆனால் நான்கும் நான்கு முத்துக்கள் என்றே கூறவேண்டும். இசையமைப்பும், பாடல்களும் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும், காட்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்ற நடிகர் திலகத்தின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஆடும் ஸ்டைலும், முக பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது... பாடல் காட்சிகள் படத்தின் வேகத்துக்கு தடை என்று கூற இயலாது...காட்சியோடு அத்துணை நேர்த்தியாக பொருந்தி உள்ளன...அதுவும் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடி உள்ளார்..காவிய வரிகளை தந்து பாடல்களை நம் மனதில் பதிய காரணமானவர் காவிய கவிஞர்... கண்ணதாசன் அவர்கள். பாடல் வரிகளுக்கு அவ்வளவு அழகாக உயிர்கொடுக்கும் பணியினை செய்தவர் பாடகர் திலகம்...T.M . சௌந்தர ராஜன் அவர்கள்.. அவருடன் துணைக்கு தேன் குரலரசி P.சுசீலா அவர்கள்.. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு...பாடலுக்கு திருவாளர் சாய்பாபா அவர்களும் கானக்குயில் வாணி ஜெயராம் அவர்களும் குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடல் காட்சி...

  இந்தப்பாடல் ஆரம்பிக்கும் சமயம்...நடிகர் திலகம்..வெகு இயல்பாக ஜோக்கடித்துக்கொண்டு..மிக ஜாலியாக மனைவியை கலாய்த்துக்கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும்...பாடலின் முடிவில் வரப்போகும் அதிர்வினை மனதில் இருத்தியே...இப்படி அமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

  ஒரு தலைசிறந்த நடிகரிடம்...எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து அவரின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொரு காட்சியும் அவரின் ஒவ்வொரு பரிமாணத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்.

  ஒரு பெரிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரியின் அந்த கம்பீரமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட கலவையாக காட்சியளித்து பாடலுக்கு நடனமாடுவதில் கூட...அந்த கண்ணியம் குறையாது...தனக்கே உரித்தான ஸ்டைலுடன் ஆடுவது அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. அவர் பாட கேட்கும்போது... K.R..விஜயாவின் அந்த வெட்கத்துடன் கூடிய நாணம்...ஆகா...அற்புதம்... காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக வரிகளை போட்டிருக்கிறார் பாருங்கள்...

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அன்புமணிவழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க எங்கள் வீடு கோகுலம் ;

  என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதவனோ
  தங்கமான மன்னனாம்

  அன்னை என்னும் கடல் தந்தது
  தந்தை என்னும் நிழல் கொண்டது
  பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம கண்ணன் பிறந்தான்
  நன்மை செய்யும் மனம் கொண்டது
  எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்

  வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான்
  கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான்

  மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது
  அந்தப்பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன் இந்தப்பிள்ளை
  நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும்
  கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன் (நல்ல)

  கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம்
  தாயின் பிள்ளைப் பாசமே தட்டில் வைத்த தீபமாம்

  பாசம் என்று எதைச் சொல்வது பக்தி என்று எதைச்சொல்வது
  அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
  பிள்ளை என்னும் துணை வந்தது
  உள்ளம் எங்கும் இடம் கொண்டது
  இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா (நல்ல)

  படத்தினில் என்னை கவர்ந்த இடங்கள் பல உண்டு...
  மிகப்பெரும் ரவுடியாக ஆரம்பத்தினில் வரும் மேஜரை...பண்ணையாராக/ மைனராக வரும் மனோகர் ஆகியோரை சண்டையிட்டு கைது செய்யும் ஸ்டைல் , அவர்களை எதிர்கொள்ளும் விதம்...கிண்டலான அந்த பேச்சு... போகிற மாட்டை போக்கில் விட்டு பிடிப்பது போல மனோஹரை வளைத்து கைது செய்து கொண்டுசெல்லும் லாவகம்..

  அந்தந்த இடங்களிலும் பொருத்தமான வசனங்கள்... ஜெகனை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியில்
  அப்பாவும் மகனும் சவால் விட்டுக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி...
  ஜெயிலில் இருந்து திரும்ப வந்ததும் ஜெகன் தனி வீடு பார்த்துக்கொண்டு போக முயலும் அந்த காட்சிகள்...

  வேறொரு காட்சியினில் இரும்பு மனிதராக கண்டிப்பு, கறார், பேர்வழியாக இருக்கும் சௌத்ரி...தீபாவளியன்று...வெடி வெடிக்க அஞ்சுவதும்...மனைவி வெடிக்கு நெருப்பு வைக்க போகும்போது...இவர்...பயந்து...பதறுவதும்...ரசமா ன காட்சிகள்.

  குடும்ப நண்பர் ராமசாமியின் அலுவலகத்துக்கு சென்று...அவரறியாமல் வேலைக்காரனிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு...அப்போதும் அவர் கவனிக்காமல் பின்புறம் வந்து தோளை பிடித்து விட கூற...இவரும் வந்து தோளை பிடித்து விட்டு...க்கொண்டு... ஷூ காலால் ஓங்கி ஒரு உதை விட்டுக்கொண்டே... உரிமையுடன் பேசும் பாங்கு... வீகேயாருடன் உள்ள காட்சிகள் அனைத்துமே...இருவரின் இயல்பான உரிமையுடன் கூடிய நண்பர்களாக நடிக்கும் நடிப்பும் காண்பதற்கு வெகு அழகு...

  சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த துயரத்துடன் கூடிய முகபாவமும் நடிப்பும், மனைவியிடம் காட்டும் அன்யோன்யமும்...பாசமும் நெஞ்சை அள்ளும்... காட்சியினை படமாக்கிய விதமும், பாடலினை இவர் உச்சரிக்கும் நேர்த்தியும்...வெகு.. அருமை.. மனிதர் எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்...கம்பீரம்தான்.
  சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
  மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குப்போகும் (சுமை)

  சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
  சிலைபோலச் சாய்ந்தால் கலை எங்கு போகும்
  குலமங்கை கூந்தல் கலைந்தாடலாமா
  மலர்சூடு கண்ணே மணவாளன் முன்னே (சுமை)

  மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
  நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
  அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
  அலங்கார மஞ்சம் நிதம் காக்கும் உன்னை

  இந்தப்பாடல் காட்சி காண..க்.. காண திரும்ப பார்க்கத்தூண்டும் நடிப்பு...அற்புதமான முகபாவம்...தனது பிரியம், நேசம், காதலுக்குரிய துணைவி... எழ இயலாமல் அமர்ந்த சூழலில் அவரை வைத்து வீல்சேரில் தள்ளிக்கொண்டே சோகத்தினை நெஞ்சிலே சுமந்து...உணர்வுடன் பாடும் காட்சி காணும் அனைவரையும் கலங்க வைக்கும்.. டிஎம்மெஸ்ஸின் குரல் மிகப்பெரும் பிளஸ் பாயிண்ட் இந்த காட்சிக்கு...

  ஜெகன் வேலை பார்க்கும் வங்கியில் பணம் திருடு போய்விட்ட காட்சியில் உள்ள வசனம்...நச் ...ரகம்...
  மிஸ்டர் ஜெகன்நாத், விசாரணை முடியற வரைக்கும் எங்கேயும் வெளியூர் போயிட மாட்டீங்களே...
  எங்க அப்பாவும் அம்மாவும் எம்மேல ரொம்ப பிரியம் உள்ளவங்க சார்...வெளியூருக்கு எங்கேயும் என்னை தனியா அனுப்ப மாட்டாங்க சார்.
  ஆனா...வேலூர் போணும்னா...தனியாத்தான் போகணும்....

  மேஜர் சுந்தர் ராஜனுக்கு அற்புதமான வாய்ப்புகள்.
  நடிகர் திலகத்தின் படங்களில் கிடைக்கும் இதிலும் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ள இடங்கள் பல. குறிப்பாக தன் மகள், சவுத்ரி வீட்டு மருமகளாகி உள்ள சூழலில் அவர் வீட்டுக்கு வந்து பேசும் காட்சிகள்...மருமகனுக்கு அறிவுரை கூறும் இடம், மருமகனை காப்பாற்ற தான் குற்றத்தினை ஏற்றுக்கொண்டு சரணடையும் இடம்.. என்று அழகான வாய்ப்புகள்...அத்தனை இடங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
  சோ அவர்களின் காமெடி படத்துக்கு மிகப்பெரும் பலமே...படம் முழுவதுமே..அன்றைய அரசியலை தைரியமாக விளாசி இருக்கிறார்.

  மீட்டிங்கில்...
  அமெரிக்காவையும்..ஜெர்மனியையும் எச்சரிக்கிறேன்...என்னிடம் விளையாடாதீர்கள்...
  நான் மனது வைத்தால் உங்கள் நாடுகளில் பூகம்பம் வெடிக்கும்...

  மீட்டிங்கில்...ஒரு கிழவியை மேடைக்கு கொண்டுவந்து தாய்க்குலமே...தாய்க்குலமே.. என்று கட்டிப்பிடித்து கொண்டு போட்டோ எடுத்து முடித்ததும்...டேய்...கிழவியை நவுத்துடா...இங்கே நின்னுட்டு கழுத்தறுக்குது...

  கையூட்டு வாங்கும் அரசியல் வாதியாகவும், நேர்மையான கான்ஸ்டபிள் ஆகவும் இரட்டை வேடத்தில் பின்னி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தினில் எம்ஜியார், கலைஞர் இருவரையும் அரசியல் ரீதியாக அவர்களின் அணுகுமுறைகளை மிக தைரியமாக வாரி விட்டுள்ளார். அவர் பகுதிக்கான வசனங்கள் நிச்சயம் அவருடையதுதான் போலும், அவர் வருகின்ற காட்சிகள் அத்தனையும் சர வெடிதான். உதவிக்கு சுருளி ராஜன் வேறு.
  சுருளி, அண்ணே..நம்பாளு ஒருத்தரு... எதிர்க்கட்சி நண்பரோட...கொஞ்சம்..தகராறு... தம்பி..கொஞ்சம் மில்லில இருந்துருக்காரு...
  சண்டைலே... கத்தியால வயித்துல கிழிச்சுருப்பாரு..போல இருக்கு
  குடல் வெளியே வந்துருச்சாம்..
  நியாயமா பாத்தா..வெளியே வந்த கொடலைதான் ஜெயிலுக்குள்ளே போட்டிருக்கணும்...
  எங்காளு ஒருத்தர் காரை ஏத்தி ஒரு குழந்தைய.. கொன்னுட்டாராம்...
  கொழந்தை ஸ்பாட்டுலே...யே செத்து போச்சாம்...
  இதைப்போய் ஒரு பெரிய கேசா..எடுத்துட்டு..யாரோ கான்ஸ்டபிள் சுந்தரமாமே எங்க ஆளை பிடிச்சு உள்ளே போட்டுட்டாராம்..
  அப்பாயிசம்னா.. என்னன்னு தெரியுமா...ஒனக்கு...

  கொழந்தை இருக்கா..செத்து போச்சே...
  சாகலே...சாகலே...இதோ பாருங்க..செத்து போன குழந்தையோட தகப்பன்
  தன்னோட கொழந்தை சாகலைன்னு எழுதிக்கொடுத்த லெட்டர்...
  எங்.. காள .. வெளியே விட்டுட்டீங்கன்னா..எல்லாருக்கும் நல்லது...
  என்ன சார் வெளயாடுறீங்களா...?
  காரியம் ஆனா நாங்க விளையாட மாட்டோம்..காரியம் ஆகலைன்னாதான்..விளையாடுவோம்...
  அட செத்துப்போன குழந்தையாவது...கண் முழிச்சு இதுதான் எங்கப்பான்னு சொல்லுதா..அதுவும் கெடயாது... நீங்க ஒரு நியாயத்துக்கும் கட்டுப்படாம போனா எப்புடி...

  அப்பாயிசம்னா..தெரியுமா...ஒனக்கு...
  என்ன சார் ஒரே அடியா குழப்பறீங்க...
  அதுதான்...அப்பாயிசம்...

  தாய்க்குலமே...என்ன அப்புடி கேட்டுட்டீங்க..ஒருவேளை ..அவங்கப்பா..நான் திரட்டுற நிதிக்கு அவரால முடிஞ்ச ஏதாவது... குடுத்தாருன்னா....
  இந்த நாட்டுலே..ஆயிரக்கணக்கான பேரு நாட்லே கிளிஜோசியம் பாக்குறாங்க...கிளி இல்லாம கஷ்டப்படறாங்க...அவர்களுக்கெல்லாம் கிளி வாங்கி குடுக்கப்போறேன்...
  ரோட்ல குப்பை பொறுக்கறவங்க...பல பேரு கோணி இல்லாம கஷ்டப்படறாங்க...அதுக்காக கோணி வாங்கி குடுக்கப்போறேன்...
  கிளி மறுவாழ்வு திட்டம்...கோணி வழங்கு திட்டம்...
  பணத்தை சிக்கனமாதான் செலவு செய்வேன்...ஒரே ஒரு லட்சம் கிளி வாங்குவேன்...
  அந்த கிளியெல்லாம் குட்டி போட்டதும்..
  என்னது குட்டியா...
  ஆமாம்...எல்லாருக்கும் கிளிக்குட்டி குடுப்பேன்... ஒரு ரூபாய்க்கு மூணு கிளி...

  சோ அவர்கள் நடித்த படங்களில் இதுவும் அவரின் பெயர் சொல்லக்கூடிய ஒரு படமே... அதுவும் குறிப்பாக அந்த கால கட்டத்தில், எம்ஜியாரை இவ்வளவு தைரியமாக விமர்சித்தவர் சோ..வாகத்தான் இருக்கமுடியும்...அதுவும் கூறும்கருத்துகள் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையும் கூட.

  ஜெகன் வேலை பார்க்கும் சிட்பன்ட் நிறுவனத்தில் கொள்ளை போன இரண்டு லட்ச ரூபாயினை ஜெகன்தான் திருடி இருக்க வேண்டும் என்று போடும் நாடகம்...அதன் தொடர்ச்சியாக பணத்தினை வெளியாக்கும் யுக்தி...காட்சிகள் ருசிகரமானவை...

  ஜெகன் கைது நிகழ்வுக்கு பிறகு..அடுத்த காட்சியில்...
  லட்சுமி...சாப்டாச்சா...
  ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
  விமலா...சாப்பிடலியாம்மா....
  (கண்ணீருடன்)...ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
  ஆல்ரைட்.. ஆல்ரைட்..டயமாச்சு சாப்பிட வாங்க...
  (அப்போதும் யாரும் வரவில்லை..)

  இப்போ வரப்போறீங்களா இல்லையா.. I... Say....come on...
  என்ற ஒரு அதட்டலில் இருவரும் ஓடிவர.. அவர்களுக்கு நடிகர் திலகம் உணவு பரிமாறிக்கொண்டே... சாப்பிடு..சாப்பிடு... என்று.. அவர்களை சாப்பிட வைத்து....
  விமலா..நான் என்னமா தப்பு செஞ்சேன்...அப்படி ஏதாவது செஞ்சிருந்தா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...
  லஷ்மி..ஒரு மாணவன் தப்பு பண்ணுனா...ஆசிரியர் தண்டிக்கறது இல்லையா..பிள்ளைங்க தப்பு பண்ணுனா..பெற்றோர்கள் தண்டிக்கறது இல்லையா..? குற்றம் செய்யறவங்க யாரா...இருந்தாலும்...தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்...நாளைக்கு நானே ஒரு தப்பு பண்ணுனா...கூட S.P..ங்கறதால என்ன விட்டுடவா..போறாங்க.... ..நெவர்...
  கைலே விலங்கு போட்டு ரோட்ல அழைச்சிட்டுதான் போவாங்க...

  நான் இதுவரைக்கும் எவ்வளவோ..குற்றவாளிகளை கைது பண்ணிருக்கேன்...நீ சந்தோஷப்பட்டிருக்கே..
  ஆனா இன்னிக்கு நம்ப வீட்டுக்குள்ளையே ஒரு குற்றவாளியை கைது பண்ணியிருக்கேன்... அதுல ஒங்களுக்கு வருத்தம்...
  ஏன்னா.. குற்றவாளி ஒனக்கு மகன்...
  அவளுக்கு கணவன்...
  ஆனா ஒன்னு மாத்திரம்...எல்லாரும் மறந்துட்டீங்க... அவன்... எனக்கும் மகன்...
  பெண்கள்.. நீங்கல்லாம்...தாங்க முடியாம அழுதுடறீங்க...
  ஆனா ...நான்... வெளியில் சொல்ல முடியாம... (கைகளால் நெஞ்சிலே தட்டிக்கொண்டு...கண்களில் நீர் நிறைய...) கலங்குகின்ற காட்சி...

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும், பாடல் வரிகளும், பாடிய விதமும்...அற்புதம்...நெஞ்சை பிழியும் அற்புதமான ஒரு காட்சி. பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
  அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
  அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
  இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா... இதற்கு மேலும் இந்த காட்சிக்கு இதைவிட சிறப்பாக வரிகள் போட இயலுமா..என்று சவால் விட்டிருக்கிறார் கவியரசு..

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

  சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
  அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
  சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
  அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

  ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
  நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
  பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
  எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
  ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
  அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

  மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
  அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
  துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
  ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
  அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

  நானாட வில்லையம்மா சதையாடுது
  அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
  பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
  அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
  அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
  இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.

  படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று...அந்த என்கொயரி காட்சி...மிஸ்டர் சவுத்ரி...ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து கைதி தப்பிச்சு போக நீங்களும் ஒரு காரணம் ன்னு கம்பளைண்ட் வருதே....என்று துவங்கும்...அந்த காட்சியில் துவங்கும் வேகம்...
  மிஸ்டர் சவுத்ரி...சாரி...என்கொய்ரி ன்ற முறைல...உங்களையே நான் கேள்வி கேட்க வேண்டியதா போச்சு..
  நோ...சார்...நோ...சார் ஒங்க சீட்ல இருந்தா நானும் அப்புடிதான் சார் கேட்பேன்...
  (டெலிபோன் வர)
  ஓ..ரியலி ...மிஸ்டர் சவுத்ரி..ஒரு குட் நியூஸ்...அந்த கைதியை...பிடிச்சுட்டாங்களாம்..
  ஓ Is It... வெரி குட்...சார்..
  தப்பி ஓட முயற்சி பண்ணுனானாம்..ஷூட் பண்ணிட்டாங்களாம்...
  ஓ...பைன் சார்...
  (அடுத்து ஒரு போன்...வர) ஓ... அப்புடியா...
  மிஸ்டர்..சவுத்ரி..
  (அதே விரைப்புடன்) எஸ் சார்...
  எ.. பேட் நியூஸ் பார் யூ...ஒங்க மனைவி..இறந்துட்டாங்களாம்....
  இங்கே துவங்கும்...ஒரு அற்புத நடிப்பின் துவக்கம்...
  உணர்வுகள் உடலை தடுமாற செய்ய..தடுமாற்றத்துடன்...சுதாரித்துக்கொண்டு ..
  நான் வீட்டுக்கு போலாமா சார்...

  இறுகிய முகத்துடன்...வீட்டுக்கு வந்து...படியேறி...வந்து...மனைவியை...சடலமாக காணும் பொழுதினில்.... (மருமகள் விமலா..கதறிக்கொண்டே காலில் விழுகிறார்...)
  லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு,
  ஏன் என் கூட பேச மாட்டேங்குற...
  நான் யூனி பார்ம்லே இருக்குறப்போ பேச பயப்படுவே....
  இதோ பார் நான் யூனிபாம் இல்லாம.. வந்துருக்கேன்...
  பேச மாட்டியா...பேசும்மா..
  நான் நேரம் கழிச்சு வருவேன் நீ எனக்காக தூங்கா ம காத்துக்கிட்டு இருப்பே...
  இப்போ நான் நேரத்தோட வந்திருக்கேன்.
  இப்போ நீ போயிட்டியே.... ...?
  நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்... ...?
  ஏம்மா என்னை விட்டுட்டு போயிட்டே...?
  எனக்கு யாருமே இல்லியேம்மா...
  என்ன தனிமரமா ஆக்கிட்டு போயிட்டியேம்மா....
  என்னால தாங்க முடியலேம்மா... என்று கூறிக் கொண்டே... வேரறுந்த மரமாக வீழ்ந்து கதறும் காட்சி...மைகாட்...மறக்கவே இயலாது...அந்த நடிப்பினை வழங்க இனி யாரால் இயலும்....
  நடிகர் திலகத்தின் படங்களில் நிச்சயம் முத்தாரமாக விளங்கும் படங்களில் இதுவும் ஒன்று...மீண்டும், இந்தப்படத்தினை மறு வெளியீடு செய்யவேண்டும்...நிச்சயமாக இன்றைய தலைமுறையினரை கூட கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
  TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

 6. Likes sivaa, Barani liked this post
 7. #3624
  Senior Member Devoted Hubber
  Join Date
  Mar 2013
  Location
  QATAR
  Posts
  313
  Post Thanks / Like
  செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 168– சுதாங்கன்.
  இரு துருவம்’ இந்த படம் இந்தியிலிருந்து வாங்கி எடுக்கப்பட்ட படம். `கங்கா- ஜமுனா’ என்கிற பெயரில் இந்தியில் இந்த படத்தை தயாரித்து நடித்தார் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார்.
  இந்த படத்தின் கதையையும் அவரே எழுதியிருந்தார். அந்தக் கதையை வாங்கி நடிகர் பி.எஸ். வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து அப்படி வந்த படம் தான் `இரு துருவம்.’ இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி. சந்தர்ப்பவசத்தால் சிவாஜி கொள்ளைக்காரனாக மாறுவதாக கதை. இதில் கொள்ளைக்காரன் அண்ணன் சிவாஜியை அவரது தம்பி முத்துராமனே பிடிப்பதாக கதை அமைந்திருந்தது.
  `தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே! உன்னை திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே’ என்கிற பாடல் மட்டும் பிரபலம். படம் சுமாராகத்தான் போனது. சென்னை வெலிங்டன் தியேட்டரில் வெளியான படம் இது. `பிராப்தம்’ தெலுங்கில் சாவித்திரியும்- நாகேஸ்வரராவும் ‘மூகமனசுலு’ (‘ஊமை உள்ளங்கள்’) என்ற படத்தில் நடித்தார்கள். இந்த படம் தெலுங்கில் மகத்தான வெற்றி பெற்று, வெள்ளி விழா கொண்டாடியது.
  பூர்வஜென்மத்தைப் பற்றிய கதை. அதை தமிழில் தயாரிக்க விரும்பினார் சாவித்திரி. நாகேஸ்வர ராவ் நடித்த வேடத்திற்கு சிவாஜி ஒப்பந்தமானார். ஆரூர்தாஸ் வசனமெழுதினார். கண்ணதாசன் பாடல்கள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படத்தை சாவித்திரியே டைரக்ட் செய்தார். நடிப்பில் தன்னிகரற்று திகழ்ந்த சாவித்திரியின் இந்தப் படம் தெலுங்கில் 25 வாரம் ஓடிய படத்தின் தமிழ் பதிப்பு – அதிர்ச்சி தரும் தோல்வியைத் தழுவியது.
  `சவாலே சமாளி’ – இந்த படமும் ஒரு வகையில் `பட்டிக்காடா பட்டணமா’ படத்தின் சாயலில் இருக்கும். பணக்கார பெண்ணுக்கும், ஏழைக்கும் நடக்கும் பொருந்தாத திருமணம் சம்பந்தமான கதை. இந்த படத்திற்கு நிதி உதவி செய்து தயாரித்து கொடுத்தவர் அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன். படத்தை தயாரித்து எழுதி இயக்கியவர், மல்லியம் ராஜகோபால். சிவாஜியும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருந்தார்கள். படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். பாடல்கள் எல்லாமே அருமை. படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் சுசீலா பாடிய `சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சுமதி என் சுந்தரி’, இது சிவாஜி, ஜெயலலிதா ஜோடியாக நடித்த மற்றுமொரு வெற்றிப்படம். இந்த படத்தை சி. வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். படத்தின் கதை, வசனத்தை சித்ராலயா கோபு எழுதியிருந்தார். இதில் சிவாஜிக்கு அமைந்த வித்யாசமான கதை. ஜெயலலிதாவிற்கும் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இது.
  இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப காட்சியிலே ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக யாரோ ஒருவர் நடித்திருப்பார். ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி! பாடலின் முடிவில்தான் கதைப்படி ஜெயலலிதா ஒரு நடிகை. அந்த காட்சிதான் அப்படி படமாக்கப் பட்டிருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான புடவைகளை இயக்குநரிடம் கலந்தாலோசித்து தானே காட்சிக்கு தகுந்த மாதிரி புடவைகளை ஜெயலலிதாவே தேர்ந்தெடுத்தாராம்.
  இதை இயக்குனர் சி.வி.ராஜேந்திரனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். இந்த படத்தில் `பொட்டு வைத்த முகமோ’ பாட்டில் சிவாஜி ஒரு அரைக்கை சட்டை அணிந்து வருவார். அப்போது இருந்த பின்னி நிறுவனம் சிவாஜிக்காக பிரத்யேகமாக தயாரித்த டிசைன் அந்த சட்டை.
  சிவாஜி அதை படத்தில் அணிந்த அந்த காலத்தில் அடுத்த வாரமே தெருவில் பல பேர் அதே மாதிரி சட்டையை போட்டுக்கொண்டு போனார்கள். சிவாஜிக்காக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்த முதல் படம் இது!
  சென்னை சித்ரா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய படம் இது.
  ‘தேனும் பாலும்’. சிவாஜிக்கு இரு மனைவிகள் கொண்ட படம். படம் சுமாராக போனாலும் பாடல்கள் எல்லாமே அருமை. இரு மனைவிகளாக சரோஜாதேவியும், பத்மினியும் நடித்திருந்தார்கள். ‘இரு மலர்’களில் இருவரை சிவாஜி விரும்புவதாக அமைந்த கதையை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், இதில் இரு தாரம் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை. சிவாஜிக்கு அமைந்த இன்னொரு வித்தியாசமான படம் ‘மூன்று தெய்வங்கள்’. படத்தை தாதா மிராஸி இயக்கியிருந்தார். இதில் சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மூவருக்கும் மேக்கப் கிடையாது. ஜெயிலிலிருந்து தப்பி வந்த மூன்று கைதிகள் ஒரு நடுத்தர குடும்பத்தில் வந்து அடைக்கலமாவதுதான் கதை.
  அந்தக் கைதிகளே பிறகு அந்த குடும்பத்திற்கு தெய்வங்களானார்கள் என்பதே கதையின் அடிப்படை. பாடல்களும், திரைக்கதையும் அருமையாக அமைந்த ஒரு நல்ல வெற்றிப்படம் இது. ‘தங்கைக்காக’ சுமாராக போன படம்.
  ‘அருணோதயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். ‘குலமா குணமா’! ‘பணமா பாசமா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் தலைப்பு வைத்து படம் எடுக்க ஆரம்பித்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். அப்படி அவர் எடுத்த படங்கள் ‘பணமா பாசமா’, ‘குலமா குணமா’, ‘உயிரா மானமா’ போன்ற படங்கள்.
  ‘குலமா குணமா’ படம் ஒரு படத்தின் திரைக்கதையை அந்தக் கதையின் மையக்கரு கெடாமல் எப்படி கொண்டு போகலாம், கதாபாத்திரத்தின் குணாம்சங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வசனங்கள் எழுதலாம், கதாபாத்திரங்களை அந்த பாத்திரத்தில் எப்படியெல்லாம் அப்படியே அந்த பாத்திரமாகவே வாழ வைக்கலாம் என்பவையெல்லாம் திரையுலகத்திற்கே இந்த படம் ஓர் உதாரணம் என்று சொல்லலாம்.
  ஒவ்வொரு நட்சத்திரமும், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். சிவாஜி, பத்மினி, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், நம்பியார் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உண்டு. தர்க்கரீதியான வசனங்கள். அதில் ஆழமான வாழ்க்கை கருத்துக்கள் என்று புகுந்து விளையாடியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். திரையுலகத்தில் பாடப்படாத ஒரு கதாநாயகன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இவரை நன்கு புரிந்து கொண்டவர் கமல்ஹாசன்தான். திரைக்கதையில் இவருக்கு இணை இவர்தான்.
  தான் எடுத்துக் கொண்ட கதையை திசை மாறாமல் கொண்டு செல்லுவார். அதில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் பல இருக்கும். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் கே.ஆர். விஜயா. இவரது திரைக்கதைக்கு ஏற்ற நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவரது பெரும்பாலான படங்களில் ரங்காராவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கும். அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்குவார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

 8. #3625
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  10,147
  Post Thanks / Like
  நான் ரசித்த சிவாஜி - 1
  இப்படியாகத்தானே நடிகர் ரெட்லோட்டஸிடமிருந்து வாங்கிய தங்கப்ப தக்கம் நாடகத்தை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பாகப் பலமுறை மேடையேற்றி பின்னர் திரைப்படமாக்கினார் நடிகர்திலகம். படம் செம ஹிட்டடித்தது. என் மாணவப் பருவத்தில் பார்த்தபோது படத்தின் கதையை, நகைச்சுவையை, விறுவிறுப்பை மட்டுமே ரசித்தேன். பின்னாளில் பார்க்கும் போதுதான் சிவாஜி என்கிற மகாநடிகளின் ஆளுமை படமெங்கும் வியாபித்திருப்பதைப் புரிந்து அவரை ரசிக்க முடிந்தது.
  துவக்கத்தில் இளவயது இன்ஸ்பெக்டராக அரைடிராயர் ...போட்ட போலீஸ்காரராக வரும்போது வேலையில் கண்டிப்பும், மனைவியிடம் பாசம் கலந்த கலகலப்பும், மகனிடம் பாசத்தை வெளிக்காட்டும் போதாகட்டும், பிறகு எஸ்.பியாக கம்பீரம், கண்டிப்பு ஆகிய போர்வைக்குள்ளே பாசத்தை ஒளித்து வைத்துள்ள மனிதராக நடிப்பதாகட்டும்... கலக்கியிருப்பார் மனுஷன். எந்தக் காட்சியைச் சொல்ல, எதை விட..? தன் மகன் திடீர்த் திருமணம் செய்து கொண்டு வந்ததைக் கண்டித்துவிட்டு, இரவு டைனிங்ஹாலில் (மற்றவர்களுக்குத் தெரியாமல்) மனைவியிடம் அவளைப் பற்றி பாசமாக விசாரிப்பார் பாருங்கள், செம்ம. அதே மகன் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்திருப்பதாகச் சொல்ல, அது எனக்குப் பிடிக்கலை என்பார். ஏன் என்று மகன் கேட்க, என் மகனைப் பிரிஞ்சு வாழற சக்தி எனக்கில்லைப்பா என்பதை (பீம்சிங் படங்களில் அவர் கதறி அழுவது போலெல்லாம் அழாமல்) ஒரு ஏக்கம் கலந்த தந்தையின் குரலில் கூறி, முகபாவத்திலேயே அதைக் காட்டிவிட்டுச் செல்வார் பாருங்கள்... க்ளாஸ்.
  மனைவி இறந்து கிடக்க, யூனிபார்மைக் கழற்றி விட்டு வந்து குமுறலை அடக்கியபடி பேசிவிட்டு பின் அடக்க முடியாமல் வெடித்து அழுவதாகட்டும், அம்மா செத்ததுக்கு காரணமே நீங்கதான் என்று குற்றம் சாட்டி கொள்ளி போட வர மறுக்கும் மகனிடம் குமுறலோடு உணர்ச்சிகளைக் கொட்டுவதாகட்டும்... மிகை நடிப்பில்லாத வேற லெவல் சிவாஜி. க்ளைமாக்ஸ் சீன் நீங்கலாக படம் முழுக்க நான் நடிச்ச பர்பாமென்ஸில் இந்த எஸ்.பி.சௌத்ரிக்குத்தான் முதலிடம்.
  இன்னொரு ரசனையான விஷயம், GOOD ONE FAMILY. UNIVERSITY பாட்டுக்கு அவர் போடுகிற ஆட்டம். காவல் அதிகாரியின் கம்பீரத்தை விட்டுக் குத்தாட்டமும் போட முடியாது, அதே சமயம் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிற நடனமும் வேண்டும். உடலைச் சிலிர்த்துக் கொண்டு தலையை ஆட்டுகிற குட்டி யானை மாதிரி (உடம்பு அளவைச் சொல்லலீங்க, அது பிற்கால சிவாஜி) அழகான அசைவுகளுடன் அவர் ஆடும் டான்ஸ் அத்தனை ரசனை இப்போ பாக்கறப்பவும். நீங்களும் மறுக்கா ஒரு வாட்டி பாருங்க இங்கே.  (from f b)
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 9. Likes Barani liked this post
 10. #3626
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  //அருணோதயம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.//

  'செலுலாய்ட் சோழன்' சிவாஜி தொடர் 168 சுதாங்கன் தொடரில் 'அருணோதயம்' படத்திற்கு இசை வி.குமார் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். அப்படத்திற்கு இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மஹாதேவன் அவர்கள் அல்லவா?
  நடிகர் திலகமே தெய்வம்

 11. #3627
  Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
  Join Date
  May 2010
  Location
  CHENNAI
  Posts
  1,639
  Post Thanks / Like
  Quote Originally Posted by senthilvel View Post
  5002 வது பதிவு
  .
  செந்தில்வேல் சார்,

  தங்களது 5000 பதிவுகள் - புதிய மைல்கல் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
  அன்புடன்

  K.CHANDRASEKARAN
  President
  Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
  sivajiperavai@gmail.com
  https://www.facebook.com/sivaji.peravai

 12. #3628
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  டியர் செந்தில்.

  எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் 5000 அற்புதப் பதிவுகள் என்ற மைல் கற்களைக் கடந்ததற்கு. உழைப்புக்கு முன் உதாரணம் உங்கள் அறிய பதிவுகள். வாழ்க வளமுடன்.
  நடிகர் திலகமே தெய்வம்

 13. #3629
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  5000பதிவுகளுக்கு வாழ்த்திய
  k.c சேகர் சார், வாசு சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.

 14. #3630
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  ஒரு எழுத்தில் ஈரம்,எள்ளல்,ஆழம்,எளிமை,வீர்யம்,சமகால நடப்பு,பல்வேறு தளங்களில் இழுக்கும் ஒரு அமானுஷ்ய நுட்பம் இதனூடே மிளிரும் நகைச்சுவை சூழ்நிலையா ,அங்கதமா என்று பிரித்தறியாமல் எழுத்தில் பொதிந்து ,ஒரு உணர்வை ,இசையின் அதிர்வுகள் தரும் உள்மன இசைவை தந்து, நல்ல இலக்கியங்களின் திசையில் கை பிடித்து கூட்டி செல்லும் ஒரு நயமான நன்னுணர்வு.

  இவையே அசோகமித்திரன். ஐந்து வயதிலிருந்து இலக்கியம் படிக்கும் கர்வத்தில் அறுதியிட்டு சொல்வேன். இவர்தான் இந்தியா கண்ட எழுத்தாளர்களிலேயே சிறந்தவர்.

  நமது திராவிடத்தின் அசிங்கமான நுண்ணரசியல், ஜாதி சார்ந்த விருப்பு வெறுப்புகளை, அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளை நிறுவனமயப்படுத்தி, வெறுக்கும் வித்தையை மட்டும் கற்பித்து,பொய்களை சரித்திரமாக்கும் பணியில், கலையிலக்கியத்தை வாகனமாக்கி கொண்டதால்(கம்பனை கூட விட்டு வைக்கவில்லை இவர்கள்) ,சிவாஜி,அசோகமித்திரன் போன்றோருக்கு கிடைக்க வேண்டிய உயரங்கள் கிடைக்கவில்லை.

  எனக்கு உண்மையில் மாமன் உறவே இல்லாத குறையை ,1980 இல் பரீக் ஷா நாடக குழுவில் இருந்த பரிச்சயமான பின் நேற்று வரை தீர்த்தவர் மாமா அசோகமித்திரன். என் திருமணம் முதல், என் மகன்கள் திருமணம் வரை அவர் இல்லாமல் நடந்ததேயில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் ,சமய சந்தர்ப்பம் இன்றி கதவை தட்டி அவர் இல்லம் செல்வேன்.

  ஒரு மனிதன் இளமையை தக்க வைக்க இக்காலத்தில் பல வசதிகள் உண்டு. ஆனால் கண்ணீரின் அளவு உங்கள் வயதை குறித்து விடுமோ? சிறு வயதில் தேவைக்கதிகமாக தேவையற்றவற்றுக்கு சிந்தி விடுவதால்,வயதின் வளர்ச்சியால் கண்ணீரின் அளவு குறைந்து, முக்கிய தேவைகளுக்கு கூட பற்றாக்குறையில் வைத்து விடுமோ?

  மாமா, சென்னை வந்தும் உங்களை பார்க்க முடியாவிட்டால் ,நான் வேறு எங்கு போக?
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •