Page 378 of 400 FirstFirst ... 278328368376377378379380388 ... LastLast
Results 3,771 to 3,780 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3771
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    எதை எதிர்பார்த்திருந்தோமோ... அது அப்படியே
    சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதில் கூட அத்தனை சந்தோஷமில்லை.

    இங்கே நாம் எதிர்பார்த்தது எங்கே கிடைக்கப் போகிறது என்று சலித்திருக்கும் சூழலில், நாம்
    எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கிற
    போது வருகிற சந்தோஷம் அலாதியானது.

    அப்படியொரு சந்தோஷம் எனக்கு " வாணி ராணி"
    திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு காட்சிகளைப் பார்க்கையில் கிடைத்தது.
    *****

    போன வருஷத்துக்கு முந்தின வருஷம் நான்
    பணிபுரியுமிடத்தில் பெண்களெல்லாம் ஒன்று கூடி
    மகளிர் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்.

    ஒரே விதமாய் உடையணிந்து, எல்லோருக்கும் இனிப்பு பரிமாறி... மிக உற்சாகமாய்க் கொண்டாடினார்கள்.

    நான் மகளிர் தினத்திற்காக எழுதி வைத்திருந்த
    ஒரு கவிதையை விழா துவங்குவதற்கு முன்பே
    அவர்களிடம் கொடுத்து வாழ்த்துச் சொன்னேன்.

    ஆனால், விழா துவங்கிய சில நிமிடங்களில் அதை
    மீண்டும் என்னிடமே தந்து, என்னையே ஒலிபெருக்கியில் வாசிக்கும்படி கேட்டுக் கொள்ள,
    பெண்கள் விழாவில் என் குரலா என நான் தயங்கத்துடனே வாசித்தேன்.

    என் தயக்கத்தை சந்தோஷத் திகைப்பாக மாற்றியது அந்த மகளிர் அரங்கம். கைதட்டல்கள்
    என் எழுத்துகளைக் கௌரவித்தன. நிறைய பாராட்டுகள்.

    " வென்று சிரிக்கிற
    ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால்
    நின்று சிரிப்பது நீங்கள்தானே?"
    - என்கிற வரிகள் மிகவும் ரசிக்கப்பட்டவை.

    பெண்கள் பேசப்படுமிடத்தில், ஒரு ஆண்.. நான்
    பேசப்பட்ட கர்வமிகு மகிழ்விலிருந்த எனக்கு
    அப்போது "வாணி ராணி" எனும் பெண் பேசப்படும்
    கலைக்களத்தில் ஒரு ஆணாக வென்று வந்த
    வணங்குதலுக்குரிய முன்னோடி நடிகர் திலகம்தான் நினைவுக்கு வந்தார்.
    *****

    " வாணி ராணி" யில் அய்யன் ஏற்றிருக்கிற அந்த
    "ரங்கன்" கதாபாத்திரத்தை வேறு யாரேனும்
    செய்திருந்தால், ரங்கனை வாணியும், ராணியும்
    சுலபமாய் ஜெயித்திருப்பார்கள்.

    கால் பதித்த மாத்திரத்திலேயே நுழைந்த இடத்தை
    தனதாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நடிகர்
    திலகத்தாலேயே ரங்கன் நம் மனதில் நின்றான்.
    வென்றான்.

    இத்துடன் நான் இணைத்திருக்கிற 11.09 நிமிடக்
    காணொளியின் முதல் 4.00 நிமிடங்களை எடுத்துக் கொண்ட இரண்டு காட்சிகளே இங்கு நான் குறிப்பிட விரும்புவது.

    ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் என்கிற சராசரி
    நிலையிலிருந்து ஒரு திரைப்படத்தின் போக்கை
    மாற்றி, ஒரு கதாபாத்திரத்தை ஜனங்கள் ஊன்றிக்
    கவனிக்கிற உயர் நிலைக்கு நடிகர் திலகம் மாற்றியிருக்கிறார்.

    மூன்று மணி நேர சினிமாவில் மொத்த நேரமும்
    பேசப்படுவது அந்த கதாநாயகியரின் இரட்டை
    வேடங்களே. அவற்றை ஜெயித்து தன் பாத்திரத்தைப் பேச வைக்க நான்கே நிமிடங்கள்
    போதுமானதாயிருக்கிறது... நடிகர் திலகத்திற்கு.

    நிறையக் குடித்து விட்டு, தன் வீடே தெரியாது
    தள்ளாடும் நாயகனை நாயகி அவனது குடிசை வீட்டுக்குள் அழைத்து வருகிறாள். " இதுதான்
    உங்க வீடு" என்கிறாள். அங்கேயே அய்யனின்
    திறமை விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது.

    அவன் குடிப்பது உற்சாகத்துக்கில்லை.. உள்ளே வாட்டும் கவலை வெப்பம் தணிக்கவே என்பதும்,
    அவனருந்தும் மதுத்திரவம் அவன் அநாதையாகி
    அவலப்பட்ட கொடுமை எரிக்க அவன் மனதில்
    ஊற்றும் அமிலமென்பதும் நமக்கு விளங்குகிறது.

    படிப்பறிவற்ற ஒரு எளியவன் அவன் மீது கரிசனம்
    கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், நமக்குமாக
    தன் வேதனை பகிரும் அந்த முதல் காட்சி அற்புதமானது.

    கிண்டல் மிகுந்த ஒரு மொழியில் நாயகன் தன் வேதனை வாழ்வுக்குத் தரும் விளக்கத்தில்தான்
    எத்தனையெத்தனை உணர்வுகள் வெளிப்படுகின்றன?

    " காரை உதிர்ந்து போன சுவரு, கயிறு அறுந்து
    போன கட்டில், கரையான் புடிச்சுப் போன ஜன்னல்.. ஓட்டை.. உடைசல்.. ஈயம், பித்தளை.. பேரீச்சம்பழம்..." - இது, தனது ஏழ்மையில் சலித்துப் போய் கொட்டும் கேலி மழை.

    " யாராவது குடியிருந்தா அது வீடு. இங்க யாரு
    குடியிருக்கா? யாரு " குடி" இருக்கான்னு கேக்கிறேன்..!? - இது, தன்னையும், தனது சாராய சிநேகிதத்தையும் திறமையாய் வெளிப்படுத்தும்
    சாதுர்யம்.

    சிறு வயதில் தான் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட
    சோகம் பகிரும் இடத்தில் அய்யனின் முகம் காட்டும் பல நூறு பாவங்களில் ஒரு அநாதை இளைஞன் தாண்டி வந்த இருபத்தைந்து வருட
    வாழ்க்கை கண் முன்னே வருகிறது.

    " எல்லோரும் இந்நாட்டு மன்னராம்" என்று மகா நக்கலாக சொல்லி விட்டு நமக்கு நேரே கை நீட்டி,
    நாக்கு மடித்து, ஒரு கெட்ட வார்த்தையை தவிர்த்து
    அவர் காட்டும் பாவனை... நம்மில் இயல்பு மீறி
    வக்கணையாய்ப் பேசிப் பழகுவோருக்கு மௌன
    எச்சரிக்கை.

    தனக்கென்று யாருமில்லாத சோகம், உனக்கு நான் இருக்கிறேன் என்றொருத்தி வந்தவுடன் மாறுவதாய் அந்தக் குமுறல் காட்சி முடிகிறது.
    *****

    விடிகிறது.

    இதோ... தொடரும் இந்தக் காட்சியில் வேறொரு
    அய்யனைப் பார்க்கலாம்.. சற்று முன் புயல் போல்
    ஆட்டங் காட்டியவர், இப்போது தென்றலாய் இதம்
    பேசுகிறார்.

    உறங்கி எழுந்தவனின் முகத்தை மட்டுமல்ல.. திருந்தி எழுந்தவனின் முகத்தையும் அவரில்
    பார்க்கலாம்.

    முன்னே பின்னே கடவுளை வணங்கியறியாதவன்
    கோயிலுக்குப் போய் கடவுளிடம் மனம் விட்டுப்
    பேசினால், அது இப்படித்தான் இருக்கும் என்பது
    சர்வ நிச்சயம். இப்படியொரு நடிப்பற்புதம் இதற்கு
    முன்போ.. இதற்குப் பின் இன்று வரையுமோ நம்
    நடிகர் திலகத்தினாலன்றி வேறு யாராலும் நிகழ்ந்ததில்லை என்பதும் சத்தியம்.

    பாசாங்கு என்பதே துளியும் இல்லாத ஒரு எளியவன் கடவுளை நோக்கிப் போகும் நடையைப்
    பாருங்கள்.. ஏதோ.. இது வரை தவறாக நினைத்து,
    இப்போதுதான் நல்லவர் என்றுணர்ந்த ஒரு பெரிய
    மனிதரைப் பார்க்கப் போவது போல் ... எளிமையாக!

    " நம்ம ராணி இல்ல ராணி..." தனக்கானவளை கடவுளுக்கு அறிமுகப்படுத்தும் வெள்ளந்தித்தனம், ஒரே ஒரு " ஒப்புரானே" கொண்டு செய்யும் உயர்ந்த சத்தியம், "புத்தி சொல்லி பக்கத்தில வச்சுக்கப்பா" என்று தன் தவறு திருத்தி தன்னைக் கடவுளிடம் சரண் செய்யும் நற்பண்பு, " மத்தபடி நீ அதைச் செய்யி..
    நான் இதைச் செய்யறேன்னு வியாபாரம் பேச வரலே.."- என்று கடவுளிடம் கூட விட்டுக் கொடுக்காத அற்புதமான நேர்மை, " காசிருந்தா
    கற்பூரம்.. இல்லாட்டி கையெடுத்து ஒரு கும்பிடு"
    - என்று கடவுளின் முன் கடவுளுக்கே கற்றுத் தருகிற யதார்த்த வாழ்வியல்...

    இந்த கலை வியப்புகளையெல்லாம் நான்தான்
    எழுதுகிறேன் என்கிற கர்வமல்ல.. இந்தப் பதிவு.
    நானும் எழுதியிருக்கிறேன் என்கிற பெருமிதம்.
    *****

    இந்தக் காட்சியில் முருகனிடம் வாணிஸ்ரீ வேண்டிக் கொள்வார்.. "முருகா.. அவர் உன்னை
    மறந்தாலும், நீ அவரை மறக்காதே!"

    நான் வேண்டிக் கொள்கிறேன்.. " முருகா.. என்
    மனதிலிருந்து எந்த நினைவை மறக்கடித்தாலும்,
    அய்யனை மறவாமல் நினைக்க வை!"

    Vaani Rani - Sivaji Ganesan | Vanisri ( Double Ro…:

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3772
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3773
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes Harrietlgy liked this post
  7. #3774
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    நன்றி வாசு அவர்களுக்க்கு. பதின்மூன்று வயதில் இந்த பாட்டைப் பார்த்து, நடிகர் திலகத்தின் ரசிகராகவும் தீவிர ரசிகராகவும் ஆனார். இந்த பாடல் என் மனதில் மிகவும் நெருக்கமாக இருக்கிறது, ஏனென்றால் உயர்ந்த இசைத்தட்டு T.M.S குரல் மற்றும் நடிகர் திலகத்தின் முகம், கை, விரல் வெளிப்பாடு, நம்பமுடியாத அற்புதம்.

    Please do the analysis of vasanthathil oru naal song "vendum vendum ungal uravu" sad part. NT's facial expression simply amazing.

    நடிகர் திலகத்தின் 1980 திரைப்படங்களில் ஒவ்வொன்றும் அவரது முந்தைய 1970 மற்றும் 60 இன் திரைப்படங்களை விட உயர்ந்ததாக இருக்கிறது.

  8. #3775
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1320461]'பாட்டும் பரதமும்' (புதிய பதிவு)

    This movie re-released in Madurai Meenakshi on 1988 and run for 2 weeks houseful and made huge collection.

  9. #3776
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 32 வசந்தத்தில் ஓர் நாள்காட்சி - படத்தின் உச்சக்கட்டம்கதை..டாக்டர் ராஜசேகர் மிகப் பெரிய செல்வந்தர். தொழில் நிமித்தம் மலேசியா செல்லும் அவர் எதிர்பாராத ஒரு உடல் வலியால், ஒரு நாட்டு வைத்தியரிடம் செல்லும் படியான நிர்ப்பந்தம் நேர்கிறது. அவருடைய மகள் நீலாவின் யதார்த்தமான அன்பும் பரிவும் அவளிடம் அவரை ஈர்க்கின்றன. அவளும் அவரை விரும்புகிறாள். தன் மகளுக்குத் திருமணமாக வேண்டும் என்கிற ஒரே ஆசையில் வாழும் வைத்தியரும் சம்மதிக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் திருமணமாகாமலேயே காதலர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விடுகின்றனர். அவசர காரணமாக தாய் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்ந்த்த்தில் ராஜசேகர் நீலாவை திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாய்க் கூறி புறப்பட்டு விடுகிறார்.பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி மலேசியாவுக்கு வருகிறார் நாட்டு வைத்தியர் காலமாகி விட்டார், தன் காதலி நீலாவும் ஒரு மகளை ஈன்று விட்டு பைத்தியமாய் பல ஆண்டுகள் திரிந்து கடைசியில் மாண்டு விடுகிறாள். அவள் மகளான ராஜி ஒருவனிடம் காதல் வயப்பட்டிருந்தாள். அவனும் அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி விட்டு சென்று விடுகிறான்.பல ஆண்டுகளாக ராஜசேகர். பல வகையில் முயற்சி செய்து ஒரு வழியாய் தன் மகள் ராஜியைக் கண்ணால் பார்க்கும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவருடைய மகள் அங்கே ஒரு விலைமாதாய் வாழுகிறாள். தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறாமல், மெல்ல மெல்ல அவள் மனதைக் கரைத்து தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.. ஒரு கட்டத்தில் அந்த விடுதி முதலாளியான பெண்மணியும் தன் நல்லெண்ணத்தின் காரணமாக ராஜியை அவர் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறாள்.ராஜியும் ஒரு கட்டத்தில் மனம் மாறி அவருடன் செல்ல சம்மதிக்கிறாள். . அவருடைய களங்கமற்ற அன்பு அவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன்னால் அவர் வாழ்வில் இன்னல் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவருடன் பொய்யாக சண்டை போட்டு விட்டு மீண்டும் விடுதிக்கு வருகிறாள். ஆனால் விடுதி முதலாளியான பெண்மணி அவருடனேயே சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவளைத் திருப்பி அனுப்புகிறாள்.அந்த விடுதியை விட்டு வெளியேறி ராஜசேகருடன் வாழ்வதற்காக அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ராஜி வருகிறார்.இதன் பிறகு என்ன நடந்த்து. ராஜசேகர் தன் மகளுடன் சேர்ந்தாரா. ராஜி அவரை ஏற்றுக் கொண்டாளா. இது தான் உச்சக்கட்டக் காட்சி. இந்தக் காட்சியைத் தான் இன்று நாம் காண இருக்கிறோம்.ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்கு ஆய்வு செய்து கிட்டத்தட்ட ஒரு மனோதத்துவ நிபுணராய் தன்னை நிலைப்படுத்தி, (PSYCHO ANALYSIS) அதற்குள் புகுந்து அந்த கதாபாத்திரத்தின் மன நிலையை நன்கு உள்வாங்கி வெளிப்படுத்துவதால் தான் நடிகர் திலகம் இன்றும் ஈடிணையற்ற உன்னத கலைஞராய் விளங்குகிறார். மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் சிக்கிக் கொள்ளும் போது எப்படி அதை வெளிப்படுத்த வேண்டும், எப்படி அதற்கான REACTION தர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். தன் மகளே தன்னை மணமுடிக்க வேண்டும், தன்னோடு வாழ வேண்டும் எனக் கேட்டு வரும் போது அவர் வெளிப்படுத்தும் அந்த அதிர்ச்சி, அவளிடம் உண்மையைக் கூறும் போது வெளிப்படைத் தன்மை, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என மகளிடம் கூறுவதன் மூலம் தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளுதல், மகளிடம் உண்மையைக் கூறி விட்ட பின் ஏற்படும் நிம்மதி, அவள் என்ன செய்தாலும் பரவாயில்லை என எதிர்கொள்ளும் துணிவு, தன் உணர்வை அவள் ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறும் போது ஏற்படும் ஏமாற்றம், சோகம், ஊரை விட்டுக் கிளம்பும் சமயம் அவளை சந்திக்கும் போது ஏற்படும் ஒரு சிறிய நம்பிக்கை, என அமர்க்களப் படுத்துகிறார் தலைவர்.எல்லாவற்றிற்கும் மேலாக வசனமே இல்லாமல் பார்வையிலேயே அன்பைப் பொழிந்து அவள் மனதை மாற்றி அவள் தன்னை நம்பும் படி செய்வது, தந்தையும் மகளும் சேர மாட்டார்களா என பார்வையாளர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அது நிறைவேறிய பின் அனைவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியைத் தன் நடிப்பால் நகர்த்திச் செல்லும் அசாத்திய தன்னம்பிக்கை...நடிப்பின் இமயத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி. இதில் நடிகர் திலகத்துடன் போட்டி போடுபவர்கள் பலர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர், இவர்களை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு நடிகர் திலகத்துடன் கைகோர்த்து இணையாய் நடந்து செல்லும் மெல்லிசை மன்னர்.காலங்களைக் கடந்து நிற்கும் காவிய நாயகனின் வசந்தத்தில் ஓர் நாள், காலமெல்லாம் நாம் ரசித்து மகிழுவதெல்லாம் திருநாள்.நடிகர்கள் ராஜசேகர் - நடிகர் திலகம்நீலா மற்றும் ராஜி - ஸ்ரீப்ரியாநாட்டு வைத்தியர் - வி.கே. ராமசாமிவிலைமாது விடுதி முதலாளி - மனோரமாவிலைமாது தரகர் - தேங்காய் சீனிவாசன்ராஜசேகரின் சமையல்காரர் - ராமராவ்ஒளிப்பதிவு - விஸ்வநாத் ராய்வசனம் - ஆரூர்தாஸ்படத்தொகுப்பு - பி.கந்தசாமிஇசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்திரைக்கதை டைரக்ஷன் ஏ.சி. திருலோக்சந்தர் https://www.facebook.com/vee.yaar/vi...4937166556951/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Harrietlgy liked this post
  11. #3777
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    டிவி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்,
    காலை 10 மணிக்கு " கௌரவம்" ஜெயா மூவியில்,
    பிற்பகல் 1:30 க்கு " பணம் " கலைஞர் டிவியில்,
    பிற்பகல் 2:30 க்கு " கீழ் வானம் சிவக்கும்" வசந்த் டிவியில்,
    மாலை 6:30 க்கு " ஆனந்தக் கண்ணீர் " கேப்டன் டிவியில்,...
    இரவு 7:30 க்கு " பந்தம்" முரசு டிவியில்,
    இரவு10 மணிக்கு "பட்டிக்காடா பட்டினமா" ஜெயா மூவியில்,
    கண்டு மகிழ்வோம்





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #3778
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #3779
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    'பாபா முத்திரை'.1958-ல் வெளிவந்த உத்தம்புத்திரன் படத்திலேயே காட்டி விட்டார்.எனவே சிவாஜியின் பாதிப்பில்லாமல் எந்தப்படமும் இல்லை என்பதே உண்மை !







    இது போன்ற " நச் " பதிவுக
    ளை தொடர்ந்து போடுங்கள்
    இலுப்பை பூ சுவைத்திடும்
    இன்றை சினிமா ரசிகனுக்கு
    அன்றைய சிறப்புகள் தெரிய
    வேண்டும் !
    .................................................. ........
    நம் தெய்வம் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம், பஞ்ச் டயலாக் பேசுவோரெல்லாம் அவருக்கு ஈடாக முடியாது VCGT அண்ணா....

    .................................................. ......................
    உண்மை. அந்த கண்கள் நம்மிடம் எப்படி பேசுகிறது. அது தான் நமது கலைக்குரிசிலின் சிறப்பு. இன்று வரை நம்மை கட்டி போட்டிருப்பதும் அவர் தான்.


    (முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #3780
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நான் +1 படித்துக் கொண்டிருந்த காலம் வருடம் 1987 விடுதியில் தங்கி படித்து வந்திருந்தேன், அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் " ஒளியும் ஒலியும் என்ற அரை மணி நேர நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இருக்கும் என்பதனால் நாங்கள் விடுதியை விட்டு தெருவின் கோடியில் அமைந்திருந்த பஞ்சாயத்து டிவியில் பார்ப்பது வழக்கம், அப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் டிவி என்பது கிடையாது, அதனால் கூட்டம் நிரம்பி வழியும், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் மட்டுமே இடம் பெறும், அந்த ஐ...ந்து பாடல்களில் நடிகர் திலகம் பாடல் ஒன்றாவது இடம் பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும்,
    அன்றைய நிகழ்ச்சியில் நான்கு புதிய பாடலுடன் நடிகர்திலகத்தின் " சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" எங்கிருந்தோ வந்தாள் படப் பாடல் இடம் பெற்றது, பாடல் ஓடிக் கொண்டிருந்த போது ஒருவர் நையாண்டி செய்தார், "சிவாஜி எதுக்கு பைத்தியம் பிடித்தவர் போல் நடிக்கிறார்"

    நாங்கள் விடுதிக்கு வந்து அந்தப் பாடலை பற்றியே பேசிக் கொண்டோம் எதற்காக நடிகர் திலகம் அப்படி நடிக்கிறார், நாங்கள் யாரும் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பார்க்கவில்லை எனவே நடிகர் திலகம் கேரக்டர் பற்றி தெரிய வாய்ப்பில்லை,
    ஆனால் நடிகர் திலகம் பாருங்கள் ஒரு பாடல் காட்சியிலேயே சாதாரண பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய நடிப்பை கொடுத்து இருக்கிறார்..



    (முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)

    கதாபாத்திரத்தை தாண்டி நடிகன் தெரியக்கூடாது,,, சிவாஜி அவர்களின் நடிப்பின் சூட்ஷமமே அதில்தான் அடங்கி உள்ளது,,, இன்ன வேஷம் என்ற கூடு ஒன்று செய்து வைத்திருப்பார்கள்,,, அதற்குள்ளே போய் அழகாக உட்கார்ந்து கொண்டு பர்ஃபாமென்ஸ் செய்வார்,,, சுறுக்கமாக சொன்னால் கூடுவிட்டு கூடு பாயும் மாயாவி,,,,

    .................................................. ..........

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்.!பாடலில்
    அண்ணன் ரொம்ப அழகாக
    அவருக்கு பிடித்த உடையில்
    கண்களில் நீர் ததும்ப நடித்திருப்பார். படத்தில் திருப்பு முனை காட்சி அது.!.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •