Page 255 of 400 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2541
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதவன் ரவி!

    'அன்பைத் தேடி' காட்சி விளக்கம் அருமை. தங்கள் ரசனை மெச்சத் தகுந்தது.

    தங்கள் விருப்பம் போல மரணப்பிடியில் இருக்கும் பாதிரியாரிடம் மடிந்து, ஒடிந்து விழும் ஆண்டனியின் உடல் மொழியையும், உள்வேதனைகளையும் இன்னும் வெளிக்கொணர முயல்கிறேன். அதைவிடவும் இன்னொரு சிறப்பான காட்சி. அவ்வளவு இலகுவாக வார்த்தைகளில் வடித்துவிட இயலாது. அதை நம் ராகவேந்திரன் சாருக்காக எழுதுவதாக கூறியிருந்தேன். இப்போது அது உங்களுக்குமாக சேர்த்து விரைவில்.



    'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலில் 'சுந்தர' சுந்தர் உண்மை நிலையை உணருமுன் மாடியில் கருவண்ண உடையில் நின்றபடி தன்னை கருவருத்தவளை அழுத்தமான இறுக்கத்துடன், ஆழ்மனதில் புதைந்து போன ஆழமான மாறாத வடுக்களுடன், நெஞ்சமெல்லாம் வஞ்சமாக 'பாடுடி...பாடு. உன் நடிப்புக்கெல்லாம் மயங்கிய ஏமாளி சுந்தர் என்று இப்போதும் என்னை நினைக்கிறாயா? என்னிடமே நடிக்கிறாயா?... இனி உன் ஆட்டம் செல்லாது' என்று பழைய காதலி உமாவை மெளனமாக, அதே சமயம் தீர்க்கமாக, மூர்க்கமாக முறைத்தபடி (மனைவிக்கும் தெரிந்துவிடாதபடி) நிற்கும் அந்த ஒரு வினாடிக் காட்சியை தங்கள் கவிதை நடையில் ஆழமாகத் தருக.

    (முரளி சாரும், ராகவேந்திரன் சாரும், நானும் இமை கொட்டாமல் பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து, வியந்து வியந்து இப்போதும் வியக்கும் காவியக் காட்சி. எப்போதும் வியக்கப் போகும் விலையில்லா உயரிய உயிர்க் காட்சி)

    Last edited by vasudevan31355; 15th November 2016 at 11:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, adiram, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2542
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி வாசு சார்...

    பாராட்டுகளுக்கு,

    தாங்கள் விரைவில் எனக்குத்
    தரவிருக்கிற ஞான ஒளிப் பரிசுக்கு,

    இவனெழுதுவான் என்ற நம்பிக்கையோடு எனக்கு "இரு மலர்கள்" பரீட்சை வைத்த அன்புக்கு,

    இன்னும் அத்தனைக்கும்.

    இதோ.. எனக்குத் தெரிந்த வரை தேர்வு எழுதியிருக்கிறேன்.

    திருத்துங்கள்.. ( சரியான வார்த்தை!)



    * அந்த அழகு விழி இரண்டும்
    அன்றிருந்தது
    காதலிக்கான வரவேற்பறையாக.

    இன்று ஆனது..
    அவளைக் கொல்ல
    ஆயுதங்கள் தயாராகும்
    பட்டறையாக.


    நல்லவர்களின் கோபம் சக்தி வாய்ந்தது என்பதற்கு சுந்தரின் கோபம் விளக்கம். கனல்
    கக்கும் அவன் கண்களிரண்டும் காதலி மீதான
    ஈவு, இரக்கத்தை எல்லாம் விலக்கும்.


    * அந்த காந்த விழி இரண்டும்
    அன்றிருந்தது
    காதலெனும் கோயிலிலே
    தீபமாக.

    இன்று ஆனது
    காதலியின் துரோகத்தைக்
    கொளுத்த வந்த
    தீப்பந்தமாக.


    சுந்தரின் கோபம் சாதாரணமானதல்ல. 'சாம்பார்
    சரியில்லை' என்று மனைவியோடு மதியம் துவங்கி, சாயங்காலம் சமாதானமாகி விடுகிற
    சராசரிகளின் கோபமில்லை. தாமத வருகைக்காக
    மேலதிகாரி கடிந்து கொள்ளும் போது கனிந்து
    சிவந்து, மறுநாள் அவரே மன்னிப்புக் கேட்டதும் மடிந்து விடுகிற கோபமில்லை. அது, ஒரு ஆண்மகனின் கோபம் மட்டுமல்ல. ஆண்மையின் கோபம்.

    கண் மண் தெரியாத கோபமல்ல. கண்ணுக்குள் உறுத்தலாய் இருப்பவளின் மீதான கோபம்.

    வலிக்க,வலிக்கத் தாக்கும் கோபமல்ல. வலி தாங்கிய உள்ளத்தின் கோபம்.

    இழப்பை உண்டாக்க முனையும் கோபமல்ல.
    இழப்பின் கோபம்.

    தன்னை விலக்கிச் சென்றவளின் வாழ்வழியச்
    சாபமிடும் வக்கிரக் கோபமல்ல. தன் பக்கம்
    இருக்கும் நியாயத்தையும்,உண்மையையும்
    உணர்த்தும் உக்கிரக் கோபம்.


    * அந்த எழில் விழி இரண்டும்
    அன்றிருந்தது
    காதலுக்கும்,காதலிக்குமான
    வழிபாட்டுத் தலமாக.

    இன்று ஆனது
    காதலிக்கான
    தண்டனைக் களமாக.


    சுந்தரின் கோபத்தில் நியாயமிருக்கிறது. அவனது
    கோபம் "பதிலுக்குப் பதில்" என்கிற வன்மமில்லை.
    "உமா ஏன் தன் வாழ்வினின்றும் நீங்கினாள்.. ஏன்
    தனக்கு அவள் துரோகம் செய்தாள்" என்றெல்லாம்
    அவனைத் துளைத்தெடுக்கும் அவனது மனசாட்சியின் கேள்விகளுக்கு அவனால் சொல்ல முடிந்த ஒரே பதில் அந்தக் கோபம்.


    * அந்தக் காந்த விழி இரண்டும்
    அன்றிருந்தது
    காதல் கவிதைகளின்
    அடிகளாக.

    இன்று ஆனது
    காதலியைத் தகர்க்க வந்த
    வெடிகளாக.


    'காதலி துரோகம் செய்யவில்லை..தியாகம்
    செய்திருக்கிறாள்' என்பது கதையின் நாயகன்
    சுந்தருக்குத்தான் தெரியாது. நம் காவிய நாயகனுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றும்
    தெரியாதது போல், நிஜ சுந்தராகவே ஆகி,நடிகர் திலகம் பார்க்கும் அந்த அக்கினிப்பார்வை..
    காலகாலத்துக்கும் வியப்பல்லவோ?


    * அந்த வெளிச்ச விழி இரண்டும்
    அன்றிருந்தது
    அன்பு மொழிப் பேச்சாக.

    இன்று ஆனது
    புயலொன்றின் வீச்சாக.


    காதலையும், காதலனையும் தியாகம் செய்த
    ஒருத்தி வேதனை மிகுதியில் பாடுகிறாள்.. அவள்
    பாடுவதை இன்றைக்கு மற்றொரு குணவதியின்
    கணவனாக,ஒரு அழகுப் பெண் குழந்தையின்
    தகப்பனாக இருக்கிற அவளது முன்னாள் காதலன் ஒரு வெறுப்பான, அலட்சியம் மிகுந்த கோபமான பார்வை கொண்டு பார்க்கிறான்.
    இது காட்சி.

    ஒரு தியாகவதி பாடுவதாய் வரும் இப்பாடல்
    தாய்க்குலத்தைத் தன் வசம் ஈர்க்கிற பாடல்.
    நியாயமாக இந்தப் பாடல், நாட்டியப் பேரொளியை
    கவனிக்க வைக்கிற பாடல். அதில் ஒரு நெருப்புப்
    பார்வை பார்க்கும் ஒரு விநாடியை எடுத்துக்
    கொண்டு, எலலோரின் கவனத்தையும் தன் வசம்
    ஈர்க்கிறார்..நடிகர் திலகம்.

    உப்பரிகையில் கையூன்றி அய்யன் பார்க்கும்
    அந்தக் கூர்மைப் பார்வை என்னவோ நொடிப் பொழுதுதான்.

    ஆனால் அந்த அற்புதப் பார்வை நம் நெஞ்சங்களில் நிலைப்பதென்னவோ..யுகக்
    கணக்கிலன்றோ..?



    Sent from my P01Y using Tapatalk

  5. Thanks saradhaa_sn thanked for this post
    Likes Harrietlgy, adiram, saradhaa_sn liked this post
  6. #2543
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் ஆதவன் ரவி,

    'அன்பைத்தேடி' படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் காடசியிலும், இருமலர்கள் படத்தின் நான்கு நிமிடப்படலில் சில வினாடிகளே வந்து போகும் காடசி பற்றியும் உங்கள் ஆழ்ந்த விவரிப்பு கண்டு அசந்தேன். என்னவொரு தீர்க்கமான ஆய்வு மற்றும் விவரிப்பு. அந்த அற்புத கண்களின் அன்றைய நிலையையும், இன்றைய சூழலையும் புலப்படுத்துவதில் தான் என்னவொரு கவிதை நயம்.

    முன்பு முரளியண்ணா இந்தக் காடசியை விவரித்த பாங்கு மீண்டும் மனதில் அலைகளாக மோதுகிறது. மரப்பிடியில் கையூன்றியபடி கண்களில் கோபம் கொப்பளிக்க, ஸாரி கோபமென்று சொல்ல முடியாது ஒருவித கடுப்புடன் நின்று பார்ப்பதும், பக்கத்தில் நின்ற மனைவி பாடத் தொடங்கியதும், அதை எதிர்பாராதவர் போல திடுக்கிட்டு திரும்புவதும் எத்தனை தத்ரூபம் இவர் நடிப்பில்.

    இவர்களின் முன்கதை தெரியாத அப்பாவி மனைவி, ஆசிரியையின் சோகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பாடலில் பங்குபெறுவது எத்தனை இயல்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    இப்படங்களின் இருவேறு காடசிகளை உங்களுக்கே உரிய தனி நடையில் விவரித்து அழகு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    வாசுவின் நடையில் முரட்டுப்பயல் ஆண்டனியின் அட்டகாசங்களுக்கு காத்திருக்கிறோம்.

  7. #2544
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Aathavan Ravi;1311164]நன்றி வாசு சார்...


    ***உப்பரிகையில் கையூன்றி அய்யன் பார்க்கும்
    அந்தக் கூர்மைப் பார்வை என்னவோ நொடிப் பொழுதுதான்.

    ஆனால் அந்த அற்புதப் பார்வை நம் நெஞ்சங்களில் நிலைப்பதென்னவோ..யுகக்
    கணக்கிலன்றோ..? ****

    அருமை.அருமை.ஆதவன் அவர்களே.பாராட்டுக்கள்.

  8. #2545
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    1974 தீபாவளி வெளியீடாக 'அன்பைத்தேடி' குமபகோணம் நூர்மஹால் தியேட்டரில் திரையிடப் பட்டு மூன்று முறை பார்த்தாகி விட்டது. படம் நன்றாகவே இருந்தது. என்ன காரணமோ கூட்டமில்லை. அன்றைக்கு கும்பகோணத்தில் சிறந்த தியேட்டர் அதுதான். சவாலே சமாளி அங்குதான் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பிற்காலத்தில் செல்வம் என்று பெயர் மாற்றப் பட்டபின் அண்ணன் ஒரு கோயில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    குறைந்த நாட்களே ஓடிய அன்பைத்தேடி அன்றைக்கு எடுக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு இறுதிநாள் மாலைக்காட்சி போனோம். மறுநாள் திரையிடப் போகும் புதிய படத்துக்கு ஸ்லைடு காண்பித்தனர். இருபத்து மூன்று நாட்களிலேயே அன்பைத்தேடிபடம் எடுப்பதை அறிந்து மனது வலித்தது. இரவு ஒன்பதரை மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தோம். அன்பிற்கினிய எம்.ஜி.ஆர். ரசிக நண்பர்கள் அன்பைத்தேடிக்காக கட்டப்பட்டிருந்த, மெருகு கலையாமல் இருந்த நமது கொடிகள், பேனர்கள், ஸ்டார்கள் ஆகியவற்றை கொஞ்சம்கூட சேதப்படாமல் அவிழ்த்து ஒருபக்கம் பத்திரமாக வைத்துவிட்டு, மறுநாள் அங்கு திரையிடப்பட விருக்கும் "சிரித்து வாழ வேண்டும்" படத்துக்காக அவர்களுடைய பேனர்கள், ஸ்டார்கள், தோரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

    அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஸ்டார் மற்றும் பேனர்களை நமது மன்றத்தினர் சைக்கிள்களிலும் தட்டு வண்டிகளிலும் திருப்பி எடுத்து சென்றனர். நாங்கள் இதய கனத்துடன் வீடு திருப்பினோம்.

  9. #2546
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார், சாரதா மேடம் வருகையால் திரி மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.

    ஆதிராம் சார்,

    'ஞான ஒளி' பதிவை படித்துப் பாராட்டியதற்கு நன்றி. தங்களின் 'அன்பைத் தேடி' கும்பகோண நினைவலைகள் என் நினைவலைகளை தட்டி எழுப்பி விட்டன. கடலூர் நியூசினிமாவிலும் நீங்கள் குறிப்பிட்ட அதே நிலைமைதான். ஆனால் ஓடினால் ஓடியது இல்லையென்றால் இல்லை என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளும் ஒரே ரசிகர்கள் தலைவரின் ரசிகர்களாகிய நாம் மட்டுமே. இதற்காக நாம் தனியாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தங்களின் 'ஒளியார்' பட்டமெல்லாம் 'அவர்' ஒருவருக்கே. தாங்கள் என் மீது கொண்ட பற்றுதலுக்கு என் மனமார்ந்த நன்றி.
    Last edited by vasudevan31355; 16th November 2016 at 08:21 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2547
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதவன் ரவி!

    அபாரம். சுந்தர் பார்வை பற்றிய பரிமாற்றக் கவிதை நடை வெகு அழகு. ரசித்து சுவைத்து மகிழ்ந்தேன்.

    //'காதலி துரோகம் செய்யவில்லை..தியாகம்
    செய்திருக்கிறாள்' என்பது கதையின் நாயகன்
    சுந்தருக்குத்தான் தெரியாது. நம் காவிய நாயகனுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றும்
    தெரியாதது போல், நிஜ சுந்தராகவே ஆகி,நடிகர் திலகம் பார்க்கும் அந்த அக்கினிப்பார்வை..
    காலகாலத்துக்கும் வியப்பல்லவோ?//

    அதுதான் நடிகர் திலகம்.

    பரிக்ஷை வைத்தவரையே படபடப்புடன் ஒரே மூச்சில் ரசித்துப் படிக்க வைத்த ஆதவக் கவியே! உன்னை மனமுவந்து பாராட்டுகிறேன்.



    சுந்தருடைய கோபமெல்லாம் உமாவிடம் வெடிக்கும் அந்த அற்புதக் காட்சியில் அப்பட்டமாகத் தெரியும். உமாவின் பக்கம் நியாயம் இருப்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் நடிகர் திலகம் குத்தீட்டிகளாய் உமாவை கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் போது உமாவின் பக்கம் நமக்கு பரிதாபம் ஏற்படுவதை மறக்கடித்து விடும் நம்மவரின் அந்த விஸ்வரூபக் காட்சி நடிப்பு. 'நல்லா அப்படிக் கேள் தலைவா' என்று நியாயம் உணர்ந்த நாமே அரங்கில் எழுந்து நின்று கத்தத் தோன்றும். அது மட்டுமா? உமா மீது கோபம் மட்டுமே கொண்டிருந்தவர், ஆத்திரம் மட்டுமே கொண்டிருந்தவர், அவளால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டுமே மனதில் நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தவர், பொங்கிக் கொண்டிருந்தவர், ஏன் நாம் 'ரிஜெக்ட்' செய்யப்பட்டோம் என்ற ஓயாத கேள்விகளுடன் உள்மனதில் போராடிக் கொண்டிருந்தவர்.... அவளை பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுது துளைத்து, அக்கினிப் பிராவகமாய்ப் பொங்கி, இறுதியில் இந்த மனிதர் உமாவின் மேல் கொண்ட கோபம் கோபமே அல்ல...அது அவள் மீது கொண்ட பாசம்...அவள் மீது கொண்ட நேசம்...அவள் மீது கொண்ட தீராக் காதல்...அவள் மீது கொண்ட அக்கறை என்பதை பட்டவர்த்தனமாக நம்மை ஒரு நொடிப் பொழுதில் உணரச் செய்து, உமாவையும் உணரச் செய்து 'ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கிறே?' என்று விம்மி வெடித்து நெஞ்சு வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு ஒரு பொங்கு பொங்கி, தன்னையும் மீறி அழுது அலம்பல் பண்ணுவாரே! அதுவரை அவள் மேல் இருந்த கோபமெல்லாம் தற்காலிகமே என்பது போலல்லவா அந்த அழுகையும் அக்கறையும் இருக்கும்! 'நீ எக்கேடு கெட்டாவது போ...எனக்கென்ன? என்னை ஏமாற்றியவள் அல்லவா!' என்ற சராசரி துன்பக் காதலனைப் போலவா நம் சுந்தர்? மனம் முழுதும் மண்டிக் கிடைக்கும் ஏமாற்றப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட சோகத்தைவிட 'எப்படி இருந்த நம் காதலி நம் கண்முன்னமேயே இப்படி உருக்குலைந்து நிற்கிறாளே' என்ற இரக்கமும், அக்கறையும் அவள் மீது இருந்த கோபத்தையும் தாண்டி அந்த அழுகையில் வெளிப்படுவது அல்லது வெளிப்பட்டுவிடுவது ஏமாற்றப்பட்ட காதல(ன்)ர்களுக்கு புது இலக்கணம் அல்லவோ! அதை உலகிற்கு உணர்த்திக் காட்டுவது சுந்தரா அல்லது நடிகர் திலகமா என்கின்ற கேள்விக்குத்தான் எனக்கு இன்றுவரை விடை தெரியவில்லை.

    (என்ன மனிதரய்யா இந்த மகான்! அந்த வாயும், அந்த அழகு அழுகையும், அடடா! என்ன பிறவி அது!)



    நன்றி ஆதவன். சுந்தர் பார்வை பற்றிய தங்கள் கவிதைப் பார்வை களிப்பூட்டி அதே சமயம் கவலையிலும் ஆழ்த்திவிட்டது. சுகக் கவலையில்.
    Last edited by vasudevan31355; 16th November 2016 at 10:46 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes Harrietlgy liked this post
  12. #2548
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேர்வு வைத்த பேராசிரியரிடமிருந்து மதிப்பெண் எதிர்பார்த்து பதைப்புடன் காத்திருந்த போது,
    மற்றொரு மதிப்புமிகு பேராசிரியையிடமிருந்து
    இனிப்பே வந்து விட்டது.

    நன்றி.. சாரதா மேடம்.. மிக்க நன்றி.

    நெகிழ்த்திய தங்களின் வாழ்த்து, இந்த மாணவனுக்கு மிகவும் பெருமை.

    ---------------
    என்றும் அன்பு மாறாத தங்களின் பாராட்டுகளுக்கு
    நன்றி.. செந்தில்வேல் சார்.

    Sent from my P01Y using Tapatalk

  13. #2549
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றியோ நன்றி.. வாசு சார்.

    தேர்வில் தேறி விட்டேன் என்று சந்தோஷக் குதியல் போடும் நேரம்.. அய்யன் நடிகர் திலகம்
    எனும் ஆசான், கை நிறைய எண்ணற்ற புதுப்
    பாடங்களோடு சிரிக்கிறார்.

    Sent from my P01Y using Tapatalk

  14. #2550
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •