Page 135 of 400 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1341
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்!

    கதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்!

    அங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்!



    இங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்!



    மயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் !மக்கள்திலகம்!


  2. Likes Russellmai, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1342
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    High Voltage Thunderbolts in NT movie climaxes!

    நடிகர்திலகத்தின் திரைப்பட இடி மின்னல் மழை அதிர்வுகள் ! மனதை விட்டகலாது நங்கூரமிட்ட உச்சக்கட்ட திருப்புமுனைகள்!!

    Part 1 : தங்கப்பதுமை!

    தங்கப்பதுமை திரைக்காவியத்தில் கட்டிய மனைவியின் மாண்பறியாது இருட்டுப் பள்ளத்தில் உருண்டு புரண்டு கண்கெட்டபிறகு சூரியநமஸ்காரம் செய்திட விழையும் அறியாமைகள் நிறைந்த கைப்பாவைக் கதாநாயகன் பாத்திரத்தை அணு அணுவாக நமது உள்ளங்களில் பதித்திட்ட நடிகமேதையின் உச்சகட்ட நடிப்பாளுமை இடி மின்னல் மழையாகப் பொழிந்திட்ட நிகழ்வு !!


    பட்டிதொட்டியெங்கும் பரிபாலனம் செய்திட்ட பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இசைசித்தரின் ஆளுமைக்குரலில் நடிகர்திலகத்தின் இடிப்பந்தாக இதயத்தை ஊடுருவும் குணாதிசய வெளிப்பாட்டில் காலங்களை வென்று நடிப்பின் பாடப் பக்கமாக நிலைத்ததில் வியப்பென்ன மலைப்பென்ன !!

    ஞானப் பெண்ணே !
    மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே....அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே....


    கவிசித்தரின் வைர வரிகளுக்கு இசைசித்தரின் வெண்கலக் குரல் குழைவில் பொன் முலாம் பூசும் நடிப்புசித்தர் !

    Last edited by sivajisenthil; 4th June 2016 at 07:32 PM.

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  6. #1343
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    June 5th....World Environ Day!

    NT's environ song!
    ஆயிரம் கண் போதாதே வண்ணக்கிளியே தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும் இயற்கை அழகை ரசித்து பசித்து ருசித்து புசித்திட !



    உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரங்கள் இயற்கையிலேயே இறைவனால் படைக்கப் பட்டவையே. இயற்கையின் சுழற்சியை எதிர்த்து எவராலும் எந்த நிகழ்வையும் உண்டாக்கவோ அழிக்கவோ முடியாது. அவ்வண்ணம் செய்யப்படும் முயற்சிகள் பேரழிவையே தந்து வந்திருக்கின்றன என்பது காலம் என்னும் ஆசான் நமக்குப் போதித்து தந்த பாடங்களால் நாம் கற்றுக் கொண்டவையே !இயற்கையை மாசுபடுத்தாமல் பாதுகாத்திட உறுதி ஏற்போம் !!


    regards,

    Senthil
    Last edited by sivajisenthil; 5th June 2016 at 01:17 PM.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  8. #1344
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அப்போது அந்த படத்தின் பெயர் வேறு. ஒரு புது பாடகர் நடிகர்திலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க பட்டார். பேசிய விதத்தை வைத்து யூகித்த ந.தி ,என்ன கொல்டியா? என கேட்டு ,இத பாரு நீ பாடற மாதிரி பாடு. நான் பாணிய மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாராம். பாடும் விதத்தை கூர்ந்து கவனித்து ,நடிகர்திலகம் நடித்த அதிசயத்தை கண்ட பாடகர் அப்படியே மெய் மறந்தாராம். திராவிட மன்மதனின் ரசவாத பாடல்.சுமதி என் சுந்தரி பிறகு சூட்ட பட்ட நாமகரணம்.



    முழுக்க முழுக்க தேவ் ஆனந்த் பாணி படம்.பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர்திலகம்,தன்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ராஜாவில் ,தேவ் ஆனந்தை விட அழகாக,இளமையாக,புதுமையாக,energetic ஆக ,நடைக்கு நடை ,காட்சிக்கு காட்சி புது மெருகுடன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜாவின் இரண்டில் ஒன்று. இன்னொரு தகவல், இதன் வெற்றிதான் இன்னொரு நடிகரை அரசியலில் பாய வைத்ததாம்.



    எனது favourite erotic காட்சி. திராவிட மன்மதனும், அவருக்கென்றே ஸ்பெஷல் ஆக பிரம்மா படைத்த அழகியும் .புலமை பித்தன் வேறு படத்திற்கு எழுதிய பாடலை மெல்லிசை மன்னர் இதற்கு பயன் படுத்தி ,உயிரூட்டி உள்ளார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  10. #1345
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  12. #1346
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Russellmai thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, Harrietlgy liked this post
  14. #1347
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Written by Mr. Sudhangan,




    பெரியாழ்வார் கோதையிடம் அதை வாங்கி அப்படியே படுத்திருக்கும் அந்த அரங்கனுக்குச் சூட்டுவார். இப்போது அந்த அரங்கன் தங்கமாக ஜொலிப்பான்! திகைத்து போவார் பெரியாழ்வார்!
    ‘இறைவா! என்னே உன் கருணை! குழந்தை மீது நீ கொண்டுள்ள அன்பை இந்த சிறியேன் புரிந்து கொள்ள இத்தனை பெரிய நாடகமா? குழந்தையிடம் நீ காட்டிய பரிவை புரிந்து கொள்ளாமல் புலம்பினேன், கதறினேன், கண்ணீர்விட்டேன்! என் உள்ளம் கவர்ந்த பெருமாளே, உன் பெருமையை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்!
    அப்படியே தன் மகள் பக்கமாக திரும்பி, ‘கோதை! இனி நீ என் குழந்தையல்லம்மா! அந்தத் தெய்வத்தின் குழந்தை! அவனருளை பூரணமாக பெற்றிருக்கும் உன்னை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு என்னைப் பொறுத்துக் கொள்!'
    ‘அப்பா !’ என்பாள் கோதையான குட்டி பத்மினி!
    ‘ நீ போட்டுக்கொண்ட மாலையை அந்த பெருமாள் சூடிக்கொண்டார் என்றால், நீதானம்மா இன்று முதல் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி! எதிர்காலத்திலே உன் நாக்கிலிருந்து வரும் திருமொழி எல்லாம் ‘ நாச்சியார் திருமொழி’ என்றே நாடெல்லாம் புகழட்டும்! ஆண்டவன் உலகத்தை ஆண்டான்! நீ அவனை ஆண்டு விட்டாய்! ஆண்டவனையே நீ ஆட்கொண்டதால் இன்று முதல் உனக்கு ஆண்டாள் என்று பெயர் நிலவட்டும்!
    ‘அப்பா இவ்வளவும் அந்த கண்ணன் செய்த கள்ளத்தனம்தானே!'
    ‘ஆமாம்! அந்த கண்ணனின் கபடநாடகத்தை யாரறிவார் ? அம்மா! நீ அந்த கண்ணனையே நினைத்து பாடு! பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறுவதைப் போல உன்னோடு சேர்ந்து நானும் மணம் பெறுவேன்!'
    அப்போது கோதை பாட ஆரம்பிப்பாள், ‘ ஹரி! ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா’
    அந்த பாடல் முடியும்போது சிறுமியாக இருந்த கோதை என்கிற சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பெரிய பெண்ணாக கே.ஆர்.விஜயாவாக மாறுவாள்!
    அடுத்து ஆண்டாளுக்கு திருமணம் செய்து கொடுக்காததைப்பற்றி ஊர் பேசும்!
    ‘விஷ்ணுஜித்தர் என்கிற பெரியாழ்வார் அந்த குழந்தையை பெத்திருந்தா காலாகாலத்தில கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார். எங்கோ தோட்டத்தில கிடைச்ச குழந்தைதானே! அதனாலதான் பெரியாழ்வார் அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்காமல் வீட்டோடு வெச்சிண்டிருக்கார்’ என்று பேசுவார்கள்!
    வீட்டுக்கு வருவார் பெரியாழ்வார். தன் மகளிடம் பேசுவார்– ‘ஒரு பெண் மங்கை பருவத்தை அடைந்துவிட்டால், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்ட கதைதான் ஒரு தகப்பனுக்கு!'
    ‘என்ன சொல்கிறீர்கள்! ஒன்றும் புரியவில்லையே?' என்று கேட்பாள் ஆண்டாள்!
    ‘ விரைவில் உன்னை பிரியும் நேரம் வந்துவிட்டதம்மா.’
    ‘பெற்றவர்கள் யார் என்று தெரியாத என்னை அன்னையாய், தந்தையாய், ஆசானாக இருந்து வளர்த்த தங்களைப் பிரிவதா? அய்யய்யோ! இது தாள முடியாத வேதனை’ என அலறுவாள் ஆண்டாள்!
    ‘இன்னும் உனக்கு திருமணம் செய்துகொடுக்காமல் இருக்கிறேன் என்று ஊரார் என் மீது சுடுசொல்லை வீசுகிறார்களே! அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை!'
    ‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! தாங்கள் அதற்கு செவிசாய்க்க வேண்டாம்!
    ‘ தீயினால் சுட்ட வடுவை தாங்க முடியும்! நாவினால் சுட்ட வடுவை மனம் தாங்குமா? விரைவில் திருமணம் செய்து வைக்கப்போகிறேன்!'
    ‘திருமணமா? எனக்கா? பிள்ளை பருவத்திலேயே திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனுக்கு என்னை அர்ப்பணித்துவிட்டதாக தாங்கள்தானே சொன்னீர்கள்! உங்கள் திருவாக்கு பொய்யாகலாமா? வேண்டாம் சுவாமி! வேண்டாம்! மனத்தூய்மையோடு சொல்கிறேன்!
    மாதவன் மலரடிக்கு சேவை செய்வேனே அல்லாது மானிடர்க்கு திண்ணமாக வாழ்க்கைப்பட மாட்டேன்’ என உறுதியாகச் சொல்வாள் ஆண்டாள்.
    ‘ஆண்டவனை வணங்கலாம்! அவன் திருவடிக்கு நீ சேவையும் செய்யலாம்! மனித குலத்தில் பெண்ணாக பிறந்த உன்னை தேடி வந்து அந்த பெருமான் மாலை சூடுவாரா?’
    ‘ஏன் சூடமாட்டார்? அறியாப் பருவத்திலிருந்து அடியாள் சூடிக்கொடுக்கும் மாலையை ஏற்றுக் கொள்ளும் எம்பிரான் என்றாவது என் மணமாலையை ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவார்?'
    ‘கடவுளை கணவனாக அடைய முடியுமா? உன் எண்ணம் ஈடேறுமா? என்ன பைத்தியக்காரத்தனமிது?'
    ‘பார்க்கும் ஒளி, கேட்கும் ஒலி அனைத்திலும் அந்த ஆண்டவன் திருவுருவத்தையே காண்கிறேன்! அந்தக் கண்ணனை எண்ணி கன்னியாகவே காலங்கழித்து இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விடுகிறேன். என்னைப் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம்.’ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவாள்.
    ‘ஆண்டாள்! அந்த அரங்கம் மீது ஆணையிட்டு கூறுகிறேன்! உன் பிடிவாதத்தை விட்டுவிடு, விரைவில் ஒரு மணமகனைத் தேடி உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறேன். அவனுக்கு மாலை சூட நீ உன் மனத்தை பக்குவப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.'
    ‘ வேண்டாம். எனக்குத் திருமணமே வேண்டாம்!’
    இப்படிச் சொல்லிவிட்டு ஆண்டாள் நகர ஆரம்பிப்பாள்.
    ‘ எங்கே போகிறாய்?’
    ‘இந்த உலகத்தை விட்டே போகிறேன்!’
    ‘என்னிடம் பேசக்கூடிய பேச்சா இது?’
    ‘வளர்த்த பெண்ணிடம் காட்ட வேண்டிய பரிவா இது ?’
    ‘ இது தேவையில்லாத குழப்பம்!’
    ‘ என்னை தெய்வம் காக்கும்!'
    ‘இந்த உலகத்தில் கண்கண்ட தெய்வம்?'
    ‘ அன்னையும் தந்தையும் !’
    ‘ பெற்றோருக்கு தேவை ?’
    ‘ அறிவுள்ள பிள்ளைகள் !’
    ‘‘பிள்ளைகளின் கடமை?’
    ‘பெற்றோர் சொற்படி நடப்பது!’
    ‘ஆ..ம்! அந்த வார்த்தையையே பொன்மொழியாகக் கொண்டு நான் சொல்கிறடி நட !’
    சொல்லிவிட்டு கோபமாக போய்விடுவார் பெரியாழ்வார்! இந்தப் படம் வந்த போது எனக்கு 10 வயது! இந்தப் படத்தை பார்த்த பிறகுதான் ஆழ்வார்களின் மேன்மையும் ஆண்டாளின் அருமையும் எனக்குப் புரிய ஆரம்பித்தது!
    ஒரு படம் என்பது பள்ளிச் சிறுவர்களின் மனதில் பல பாதிப்புக்களை உருவாக்க முடியும்! ஏ.பி. நாகராஜன் புராணக் கதைகளை மனதில் விதைத்தார்! பி.ஆர். பந்துலு சரித்திரத்தையும், இதிகாசத்தையும் மனதில் வளர்த்தார்!
    பீம்சிங் தன் 'பா' வரிசை படங்களினால் மனதில் ‘பாச’ மலர்களை தொடுத்தார்! கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குடும்ப சிக்கல்களை குழப்பமில்லாமல் சொன்னார்! ஸ்ரீதர் சிவாஜியின் பல்வேறு பரிமாணங்களை காட்டினார்!
    அடுத்து திருமாலின் பெருமைதான் என்ன?
    (தொடரும்)

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, eehaiupehazij, Russellmai liked this post
  16. #1348
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பொக்கிஷம் .................................................. ............................நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தகவல் பதிவுகள் அவர் சார்பாக வெளிவந்த பத்திரிகைகள் படவெளியீட்டு மலர்கள் மற்றும் பட விளம்பர கட்டிங்குகள் முதலிய பொக்கிஷங்களை எனது முன்னைய பேனா நண்பரும் தற்போதைய முகநூல் நண்பருமான திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் பத்திரமாக இதுநாள்வரை பாதுகாத்து வைத்திருந்து அந்த அனைத்து பொக்கிஷ பதிவுகளையும் நண்பர் திரு மேஜர் தாசன் அவர்கள்மூலம் அண்மையில் நான் சென்சென்னை சென்றிருந்தவேளை என்வசம் ஒப்படைத்திருந்தார். அந்தப்பொக்கிஷங்களை நான் பெற்றுக்கொள்ளகாரணமான அந்த இரண்டு இனிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் சென்னை சென்றவேளை நண்பர் திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் வெளியுர் சென்றிருந்ததால் அவரை நேரில் சந்திக்கமுடியாமல் போய்விட்டது.அடுத்தடவை நிச்சயம் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. திரு சடகோபன் ஶ்ரீனிவாசகோபாலன் அவர்கள் மூலம் கிடைத்த சில பதிவுகளை முன்னர் பதிவிட்ருந்தேன் நேரம் கிடைக்கும்பொழுது ஏனையவை இங்கே பதிவிடப்படும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes sss, KCSHEKAR liked this post
  18. #1349
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, eehaiupehazij liked this post
  20. #1350
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  21. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •