Page 264 of 400 FirstFirst ... 164214254262263264265266274314364 ... LastLast
Results 2,631 to 2,640 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2631
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    எத்தனை அர்த்தம் கொட்டிக் கிடக்குது! ம்...நடத்துங்கள். இந்தோனேஷியாவில் என்ன இப்போது குளிர்காலமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2632
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2633
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சாரின் நடிகர் திலக புகைப்படங்கள் புல்லரிக்க வைக்கின்றன. ஆயிரம் நன்றிகள் ராகவேந்திரன் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2634
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடர்-15

    நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடர்-15



    நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடரை சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் தொடருகிறேன். இடையில் வேலைப்பளுவினால் தொடர் தாமதமானதற்கு வருந்துகிறேன்.

    இந்தத் தொடரில் இப்போது மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சியை கண்டு ரசிக்கலாம். நிஜமாகவே நிரம்ப வித்தியாசம்.



    பொதுவாக கண்பார்வையுள்ள நாயகனும், வில்லனும் மோதி பல படங்கள் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கண்பார்வையற்ற நாயகனும், கண் பார்வையுள்ள வில்லனும் மோதினால் எப்படி இருக்கும்? இது வித்தியாசம்தானே! அதுவும் கண்பார்வையற்ற மாலைக்கண் நோயால் அவதியுறும் பாடகர் நாயகன் நிர்மல் என்ற நம் 'தவப்புதலவர்' இந்த ஸ்டன்ட் சீனில் எனும்போது ஆச்சர்யங்களுக்குப் பஞ்சமென்ன? வழக்கத்தைவிடவும் அதிகமாக வாய் பிளக்க வைக்கிறார் இந்த சண்டைக்காட்சியில் நம் அருமை நடிகர் திலகம்.

    பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம், மோதல், அடிதடி, கும்மாங்குத்துக்களுக்கு பஞ்சமிருக்காது. சண்டைக்காட்சிகளில் அடி வாங்குவது, ஆக்ரோஷப்படுவது, திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்களே ஜாஸ்தி. ஆனால் நம் தவப்புதல்வனின் இந்த சண்டைக் காட்சியில் அவருக்கே உரித்தான நடிப்பும் சண்டையோடு சேர்த்து வெளிப்படும் தத்ரூபமாக. இது மிகவும் வியக்கத்தக்க ஒன்று. அது மட்டுமல்ல....இந்தக் காட்சியில் அருமையான நடிப்பு, சண்டையோடு புத்திசாலித்தனமும் இணைந்து ஜொலிப்பதைக் காணலாம்.



    பாடகர் நிர்மலான நம் நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் வியாதி. இரவானால் கண் பார்வை போய்விடும். பகலில் பிரச்னை இல்லை. ஹோட்டலில் பாடி சம்பாதித்த பணத்தை ஹோட்டல் ரூமில் நடிகர் திலகம் பர்ஸில் வைத்து தலையணையின் அடியில் வைக்க, அதை வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு வெளியே இருந்து கவனித்து விடுவார். 'சரி! இரவு வேளையில் அந்தப் பணத்தை அபேஸ் பண்ணிவிடலாம்' என்று முடிவு செய்து இரவு நடிகர் திலகத்தின் ரூமை கம்பி போட்டு திறந்து உள்ளே நுழைவார். ஆனால் வாசுவிற்கு நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் நோய் இருப்பது தெரியாது. உள்ளே நடிகர் திலகம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பார். ரூமின் உள்ளே ஷூ கால்களுடன் 'சரக் சரக்' என மெதுவாக வரும் வாசு தலையணையின் அடியில் உள்ள நடிகர் திலகத்தின் பர்ஸை நைசாக எடுக்க முற்படும்போது கட்டிலின் அருகே உள்ள மேஜை டிராயர் மீது இருக்கும் தண்ணீர் டம்ளரை தெரியாமல் தட்டிவிட்டுவிட, அந்த சப்தத்தில் 'திடு'மென எழுந்திருக்கும் நடிகர் திலகம் 'யாரது?' என்று குரல் கொடுத்து அதே டேபிளின் மீது இருக்கும் பெட் ஸ்விட்ச்சைப் போட, அறையில் பாதியில் லைட் வெளிச்சம் பரவ, வாசு அறையை ஒட்டிய சுவற்றில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு மறைந்து நிற்க, நடிகர் திலகம் கைநீட்டி தடவியபடி, கண் தெரியாமல் வந்த நபரைத் தேட முயற்சித்து வாசு அருகே வர, நடிகர் திலகத்திற்கு தான் தெரிவதாக நினைத்துக் கொண்டிருக்கும் வாசு 'மாட்டினோம்' என்று முடிவெடுத்து அப்படியே பயந்து கீழே அமர்ந்து கொள்ள, இந்த சண்டைக்காட்சிக்கான ஆரம்பக் காட்சி படுபயங்கரமாக சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். அனைவரையும் நிமிர்ந்து உட்காரவும் செய்துவிடும்.

    சுவற்றைத் தடவியபடியே வாசல் கதவின் பக்கம் வரும் நடிகர் திலகம் கதவு சாத்தியிருப்பதை உணர்வால் கண்டுபிடித்து சிறு திருப்தியை முகத்தில் காட்டுவார். அச்சு அசலாக கண் தெரியாதவர்கள் போலவே அவரது ஒவ்வொரு செய்கையும், பார்வையும், முகபாவங்களும் முத்திரைகள் படைத்தபடி இருக்கும்.

    கீழே உட்கார்ந்து 'ஏன் லைட் போட்டும் இவன் நம்மை பிடிக்கவில்லை? என்று ஆழ்ந்து யோசிக்கும் வாசு திரும்ப கட்டிலுக்குச் சென்று படுக்கும் நடிகர் திலகத்தை வாட்ச் செய்வார். நடிகர் திலகமோ மிகவும் உஷார் நிலையில் கண்களை தீர்க்கமாக விழித்தபடி படுத்திருப்பார். (படுக்கும்போது கூட கட்டிலில் எவ்வளவு அழகாகப் படுப்பார் தெரியுமா? கட்டிலில் அமர்ந்து தலையணையை செக் செய்து பார்த்துவிட்டு, முதலில் வலது காலை மெத்தையின் மேல் வைத்து நீட்டி, பின் மிக அழகாக இடது காலையும் சேர்த்து வைத்து, அப்படியே வலது பக்கமாக ஒருக்களித்து வலது கையை தலையில் தாங்கியபடி படுப்பார். அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மனுஷர் எது செஞ்சாலும் அது ஒரு தனி அழகுதான்)

    இப்போது வெறும் நிசப்தம். மியூஸிக் இருக்காது. வாசு நடிகர் திலகம் அருகே நடந்து வந்து தலைமாட்டின் அருகே நிற்பார். 'ஷூ' வின் சப்தம் மட்டுமே கேட்கும். நடிகர் திலகம் விழித்தபடி அந்த சப்தத்தை உன்னிப்பாக கவனிப்பார். வாசு விழித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் முகத்தருகே தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள தனது கையை அப்படி இப்படி ஆட்டுவார். ஆனால் நடிகர் திலகத்திடம் எந்த எக்ஸ்பிரஷனும் இருக்காது. (ஆனால் எக்ஸ்பிரஷன் இல்லாத கண் தெரியாத எக்ஸ்பிரஷன் சும்மா அமர்க்களப்படுத்தும்). வாசு அதை வைத்து நடிகர் திலகத்திற்கு கண் தெரியாததை முழுமையாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார். எனவே பயம் போய் தைரியமாக நடிகர் திலகத்தின் தலையணையின் அடியில் கைவைத்து வாசு பர்ஸை எடுக்க முயற்சிக்க, உணர்வில் அதை அதை புரிந்து கொள்ளும் நடிகர் திலகம் 'சட்'டென வாசுவின் இரு கைகளையும் பிடித்துவிடுவார். படுத்தபடியே பிடியை விடாமல் நடிகர் திலகம் வாசுவுடன் போராடுவார். வாசு தன் கழுத்தை நெறிக்க முயற்சிக்கையில் தடுமாறும் நடிகர் திலகம் திடுமென்று தனது கால்களை மடக்கி வாசுவின் கழுத்தில் கால்களால் பிடி போட்டு விடுவார். பிடித்தபடியே அப்படியே வாசுவைப் புரட்டி தன் முன்னுக்கு கொண்டு வந்து விடுவார். இப்போது நடிகர் திலகம் வாசுவுக்கு முன்னால் அமர்ந்த நிலையில். உட்கார்ந்தபடியே நடிகர் திலகம் வாசுவை கால்களால் கிடுக்கிப்பிடி போட்டு மடியில் வைத்து வாசுவின் நெஞ்சை கைகளால் (கண் தெரியாத ஒருவன் தன்னிடம் மாட்டிய ஒருவனை தோராயமாக சரியாகத் தெரியாத நிலையில் எப்படி ஒரு குத்துமதிப்பாகக் குத்துவானோ அப்படியே நடிகர் திலகம் வாசுவைக் கைகளால் குத்துவார். பார்வையையும் எங்கேயோ மேல்நோக்கிய நிலையில் வைத்தது குத்துவார்...வாவ்!) நெஞ்சுக் குத்தில் நிலைதடுமாறும் வாசு நடிகர் திலகத்தின் கால்களை கஷ்டப்பட்டு விலக்கி நடிகர் திலகத்தை கட்டிலிலிருந்து உருட்டிவிட்டு விடுவார்.

    நடிகர் திலகம் வாசுவின் கைகளை பிடித்தவுடன் 'மெல்லிசை மன்ன'ரின் அற்புதமான பின்னணி இசை பிரித்து மேய ஆரம்பிக்கும். இதை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். சும்மா அந்த திகில் பின்னணி சண்டைக் காட்சிக்கேற்ப 'பரபர'வென 'மெல்லிசை மன்னர்' பிரமாத ரீரிக்கார்டிங் தர, (பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல் அபாரம்) இக்காட்சியைப் பார்ப்பவர் அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

    கீழே உருண்டு விழும் நடிகர் திலகம் அருகிலிருக்கும் ஈஸிசேர் போனற சோபாவை பிடித்து எழுந்து, 'பரபர'வென பதறியபடி சுவற்றைக் கண்டுபிடித்து, அப்படியே கதவின் பக்கம் வந்து ரூம் வாசலை மறைத்தபடி நின்றுவிடுவார்.

    'என்கிட்டே இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காதே.. யார் நீ?'

    இப்போதுதான் வசனம் (தூயவன்) கேட்கும். அதுவரை திகில் நிசப்தமும், மிரட்டும் மியூஸிக்கும் மாறி மாறி இக்காட்சிக்கு வலு சேர்க்கும்.

    இடமிருந்து வலமாக சடுதியில் இடுப்பை மாற்றிப் போடும் அற்புத காட்சி



    வாசு வியப்புடன் நடிகர் திலகத்தை பார்ப்பார். கீழே கிடைக்கும் பர்ஸை, சிதறிக் கிடைக்கும் பணத்தை எடுப்பதுடன் வாசு அங்கே கிடைக்கும் சில்லறை நாணயத்தைக் கூடவா மனிதர் எடுத்து வைப்பார்! வாசுவும் சூப்பராக பண்ணியிருப்பார். இப்போது இசையே இல்லாமல் மீண்டும் மயான அமைதி. ஷூ சப்தத்துடன் வாசு நடந்து வந்து அங்கே இருக்கும் டீப்பாயின் மீது தெரியாமல் மோதிவிட, மிக கவனமாக அதை நடிகர் திலகம் தனது அறிவால் உள்வாங்கி 'சட்'டென்று அந்த ஈஸிசேரை பிடித்து வாசுவின் மேல் தூக்கி அடிக்க, வாசு நிலைதடுமாறிக் கீழே விழ, நடிகர் திலகமும் அந்த ஈஸிசேரிலேயே உருண்டு எதிர்த்திசையில் கீழே விழுவார். அற்புதமான காட்சி இது. கைகளைத் தரையில் ஊன்றியபடி கீழே விழும் நடிகர் திலகம் அப்படியே இடுப்பை ஒரு செகண்டில் இடமிருந்து வலமாக மாற்றி பிரட்டிப் போடுவார் பாருங்கள். அடடா! ஒரு வினாடிக் காட்சிதான் அய்யா அது! சும்மா பிச்சி உதறி விடும் இல்லையோ! (மேலே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள்) அதியற்புதமான இருக்கும்.

    ஷூ ஓசை கேட்டு கைகால்கள் பதறும். அப்படியே பாய்ந்து வாசுவின் கால்களை ஷூவுடன் இறுக்கமாக பிடித்துவிடுவார். இருவரும் படுத்து புரண்டபடி போராட, வாசு நடிகர் திலகத்திடம் இருந்து நழுவி கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனிக்க, நடிகர் திலகம் வாசுவை போக விடாமல் கட்டிப் பிடித்தபடி கழுத்தை இறுக்கி ஜன்னலருகே கொண்டு செல்ல, ஜன்னலில் தொங்கும் திரைச்சீலை நழுவி வாசுவின் தலையில் விழுந்து வாசுவின் பார்வையை மறைக்க, இப்போது இருவருக்குமே கண்தெரியாத சூழலில் அற்புதமான சண்டைக் காட்சி அமைப்பு.

    போராட்டம்... போராட்டம். இருவருக்கும் அப்படி ஒரு போராட்டம். இருவரும் இடைவிடாமல் போராட, முகத்தில் துணியுடன் தத்தளிக்கும் வாசு நடிகர் திலகத்தை மூர்க்கத்தனமாகப் பிடித்து தள்ளிவிட, நடிகர் திலகம் 'விறுவிறு'வென தவழ்ந்து, ஈஸிசேரை கண்டு பிடித்து, அதைத் தடவி எழுந்து, அதன் மூலம் கதவிருக்கும் இடத்தை மனத்தால் உணர்ந்து, 'டக்'கென்று வாசலை அடைத்தவாறு நின்றுவிடுவார். கதவு திறந்த நிலையில் இருக்கும். வாசு நடந்து வாசல் பக்கம் வர, ஷூ சப்தத்தை நடிகர் திலகம் உன்னிப்பாகக் கேட்பதை வாசு பார்த்து உஷாராகி விடுவார்.



    இப்போது செம காமெடி ஷூவை வைத்துதானே இவன் கண்டு பிடிக்கிறான் என்று வாசு ஷூக்களைக் கழற்றி லேஸால் இணைத்து முடி போட்டு, அப்படியே கழுத்தில் தொங்கவிட்டு, குழந்தை போல முட்டி போட்டு மெதுவாக தவழ்ந்து நடிகர் திலகத்தை நோக்கி நகர ஆரம்பிப்பார். (நிஜமாகவே வாசு இந்தக் காட்சியில் அனைவரையும் அவ்வளவு சீரியஸ் காட்சியிலும் சிரிக்க வைத்து விடுவார்) கால்களை அகலவைத்து வாசலில் நிலைக்கால்களை மேல்நோக்கிப் பிடித்தபடி வழி மறித்து நிற்கும் நடிகர் திலகம் வந்த திருடன் தப்பி விடக்கூடாது என்பதற்காக வலதுகையை அப்படியும் இப்படியுமாக அசைத்து அவனைத் தப்பவிடாதவாறு தேடியபடி இருப்பார். கழுத்தில் ஷூவுடன் நடிகர் திலகத்தின் கால்களின் இடைவெளியில் தவழ்ந்து புகுந்து தப்பிக்க வாசு முயல, அதில் பாதிக் கிணறும் தாண்டிவிட, பின் உடல் நுழையும்போது நடிகர் திலகத்தின் கால்களில் வசமாகப்பட்டுவிட, நடிகர் திலகம் வாட்டமாக வாசுவைப் பிடித்து வாசுவின் பின்புறங்களில் பதம் பார்க்க, எப்படியோ நடிகர் திலகத்தைத் தள்ளிவிட்டு வாசு தப்பித்தோம்...பிழைத்தோம் என்று ஓடிவிட....

    ஒரு அற்புதமான, அறிவார்த்தமான, நடிப்போடு கூடிய, நகைச்சுவையும் கலந்த, நம்பத்தகுந்த தூள் சண்டைக் காட்சி. முக்தாவின் படங்களில் பொதுவாக வியாபார ரீதிக்காக சண்டைக்காட்சிகள் ஒன்றிரெண்டு இடம் பெறும். ஆனால் 'தவப்புதல்வனி'ன் இந்த சண்டைக்காட்சி அமர்க்களம். உலகப்பெரு நடிகரும், உன்னத இசையமைப்பாளரும், சண்டைப் பயிற்சியாளர் மாதவனும் (மாதவனின் விறுவிறுப்பான சண்டைப் பயிற்சிக்கும், முக்தாவின் கற்பனைக்கும் ஒரு சலாம்) இந்த சண்டைக் காட்சியில் ஜொலிக்கிறார்கள். வில்லனும் சூப்பர். சண்டைக் காட்சியிலேயே தன்னுடைய கண் தெரியாத, உன்னத நடிப்பை சண்டை போட்டு சமாளித்தபடி வாரி வழங்கும் உத்தமரின் திறமையை எப்படிப் பாராட்ட!

    சிறுவயதிலேயே என் ஆழ் மனதில் மனதில் பதிந்து புதைந்துவிட்ட அற்புதமான இந்த சண்டைக்காட்சியை நீங்கள் மட்டுமென்ன ரசிக்காமலா இருந்திருப்பீர்கள்? இப்போது மீண்டும் பார்த்து அனுபவியுங்கள்.

    (http://anonymouse.org/ வழியே பதிவுகள் இடுவதால் youtube விடியோக்கள் இட முடியவில்லை. எனவே இன்று நான் அப்-லோட் செய்த 'தவப்புதல்வன்' பட சண்டைக்காட்சியின் வீடியோ லிங்க் கீழே)

    Last edited by vasudevan31355; 30th November 2016 at 05:54 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks adiram thanked for this post
    Likes Gopal.s, Harrietlgy, adiram liked this post
  8. #2635
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 153 – சுதாங்கன்.



    ‘தங்கப்பதக்கம்’ படம் வெளியாகி மகத்தான வெற்றியைக் கண்டது. தெலுங்கில் என்.டி.ராமராவ் ‘தங்கப்பதக்க’த்தை எடுத்து அவரே எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் நடித்தார். அதுவும் மிகப்பெரிய ஹிட். கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் ‘தங்கப்பதக்கம்’ எடுத்தார். அதுவும் மிகப்பெரிய வெற்றி. கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘தங்கப்பதக்கம்’ இந்தியில் ‘ஷக்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது.
    எஸ்.பி. சவுத்ரி கேரக்டரில் திலீப்குமாரும், மகன் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடித்தார்கள். இந்தியிலும் படம் பெரும் வெற்றியை அடைந்தது. இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதிய மகேந்திரன்தான் பின்னர் பிரபல இயக்குநர் ஆனார். மகேந்திரன் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர். பிறகுதான் சிவாஜி படங்களுக்குள் வந்தார். இவர்தான் சிவாஜி நடித்து முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘நிறைகுடம்’ படத்திற்கும் கதை எழுதினார்.
    படத்திற்கு திரைக்கதை, வசனத்தை சோ எழுதினார். மகேந்திரனுக்கு சிவாஜி மீது அளவு கடந்த ரசிப்பு உண்டு. அவர் தன்னுடைய புத்தகத்தில் `இயற்கை அதிசயங்களில் சிவாஜியும் ஒருவர்!’ என குறிப்பிட்டிருக்கிறார். நம்மை நினைத்து தூண்டுபவர் சிவாஜி. தமிழ் சினிமாவின் நிரந்தரப் பெருமை அந்த மகா கலைஞன்! உலக சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பலர் மூன்று, நான்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று மிகச் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
    நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்பதே வியப்பானது. கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் பெரிய காரியமல்ல.. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அமானுஷ்ய திறமை படைத்தவர் அந்த மேதை. சமூகப் படங்களா.. சரித்திர படங்களா.. புராண இதிகாச படங்களா...... அவர் எதைத்தான் விட்டு வைத்தார்? சத்ரபதி சிவாஜியை மாணவர்கள் கண்முன்னே கொண்டு வந்தவர். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னை நமக்கு அறிமுகப்படுத்தியவர். சிவபெருமான் இப்படித்தான் பேசியிருப்பார், நடந்திருப்பார், சிரித்திருப்பார் என்று நமக்குக் காட்டியவர். ‘தில்லானா மோகனாம்பா’ளில் நாதஸ்வர கலைஞனாக.. ‘மிருதங்க சக்ரவர்த்தி’யில் மிருதங்க வித்வானாக.. ‘கப்பலோட்டிய தமிழ’னில் வ.உ. சிதம்பரம் பிள்ளையாக.. ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் பாரதியாராக.. கர்ணனாக.. ‘திருவருட் செல்வ’ரில் அப்பராக.. புகழ்பெற்ற பிராமண வழக்கறிஞராக.. திருடனாக… வயதான தாத்தாவாக… கம்பீரமான போலீஸ் அதிகாரியாக.. உடல் ஊனமுற்றவராக… அப்பாவியாக…. மாமேதையாக அவரைப் போல நடிக்க வேறு எவராலும் முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது. ‘நவராத்திரி’யில் அவர் ஏற்று நடித்த ஒன்பது வேடங்களைப் போலவோ.. ‘தெய்வ மகனி’ல் அவர் நடித்த அப்பா, மகன்கள் கதாபாத்திரம் போலவோ.. ‘சபாஷ் மீனா’விலும், ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யிலும் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் போலவோ.. ‘திரும்பிப் பார்’, ‘அந்த நாள்’, ‘ரங்கூன் ராதா’, போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த வில்லத்தனம் கொண்ட அற்புத கதாபாத்திரங்களைப் போலவோ நடிப்பதற்கு வேறு எவரால் முடியும்?
    ‘நவராத்திரி’ படத்தின் இறுதிக் காட்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் காதலியிடம் பேசாமலேயே அவர் நடித்துக் காட்டிய அற்புதத்தை எளிதில் மறக்க முடியுமா?
    `அவர் சிவபெருமானாக நடித்ததைப் பார்த்த பிறகே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது’ என்று என்னிடம் சொன்னவர்கள் உண்டு. தமிழ் சினிமா, உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றைக்கும் பெருமைப்பட வேண்டும்.
    நமது அதிர்ஷ்டம்… அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது! அவருடன் நடித்தவர்களும், அவருடன் பேசிப் பழகிய அத்தனை பேருமே ‘நான் வள்ளுவன் காலத்தில் வாழ்ந்தவன்!’ என்று சொல்லும் அளவுக்கு பேறு பெற்றவர்கள். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம்!
    அந்த நடிப்புலக மாமேதை நான் எழுதிய வசனத்தைப் பேசினார் என்று அப்பாவை யானையாக நினைத்து சவாரி செய்து குதூகலிக்கும் குழந்தையைப் போல, சந்தோஷமாக ஆர்ப்பரிக்கிறேன்.
    நான் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவர் உயிரும் உருவமும் கொடுத்து வாழ்ந்து காட்டியதை, என் சந்ததியினால் மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட நடிப்புலக சக்ரவர்த்தியுடன்தான் எனக்கு எத்தனை விதமான அற்புதத் தருணங்கள்! நினைக்க நினைக்க பரவசமாக இருக்கிறது!
    அவர் ‘பராசக்தி’ படத்தில் பேசிய அழகைப் பார்த்துவிட்டு பள்ளி நாட்களில் அவருக்காகவே அந்த வசன புத்தகத்தை வாங்கி உருப்போட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். அப்பேர்ப்பட்ட பிறவிக் கலைஞன், எப்பேர்ப்பட்ட தொழில் பக்தி கொண்டவர் தெரியுமா? காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6.40க்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். மதிய சாப்பாடு இடைவேளை வரை செட்டை விட்டு வெளியே வரமாட்டார். மாலையில் நாடகம் என்றால், மதியம் ஒரு மணிக்கே நாடகமேடைக்கு வந்து தங்கிவிடுவார். காரணம்? நடிக்கப்போகும் நாடகத்துக்கு போடப்பட்டிருக்கும் அவருடைய வீடு அல்லது அரண்மனையே தான் வாழும் இடம் என்ற உணர்வை தனக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளத்தான்.
    நாடகம் தொடங்கி முடியும் வரை தன் பெயர் சிவாஜி கணேசன் என்பதையே மறந்து நாடகத்தின் ‘கட்டபொம்ம’னாகவோ, எஸ்.பி. சவுத்ரியாகவோ கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடுவார்.
    `அவருக்கு சராசரி உயரம்தான். ஆனால், மேடையிலும், சினிமாவிலும் அவரைப் பார்க்கும்போது உயரம் அதிகமாகத் தெரிவார். அது எப்படி?’ என்று சிவாஜி நாடக மன்ற இயக்குநர் எஸ்.ஏ. கண்ணனிடம் ஒரு நாள் கேட்டேன்.
    அதற்கு அவர், “சின்ன வயதிலிருந்து நானும் அவருடன் நாடகங்களில் நடிக்கிறேன். ஆனால் இவர் எப்படி இவ்வளவு உயரமாகத் தெரிகிறார் என்பது எனக்கே புரியாத புதிர்தான்” என்றார்.
    ஒரு சமயம் நான் திரைக்கதை எழுதிய படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில், அவரிடமே இந்த சந்தேகத்தைக் கேட்டேன்.
    அந்த மாபெரும் கலைஞன் சொன்னார், `இங்கே பாரு… நான் கால்களில் உயரமான ஹீல்ஸ் போடுவது கிடையாது. அதே போல, காலின் முன்பாதத்தை அழுத்திக் குதிகால் உயர்த்துவதும் கிடையாது. எனக்குத் தரப்படும் கதாபாத்திரத்தின் கவுரவத்தை, பெருமையை, மேன்மையை என் மனம் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். அதே நினைப்புடன் நடிக்கும்போது, என் பேச்சு, பார்வை, கையசைவு, நடை, இந்த உடல்மொழி எல்லாமே அந்த கதாபாத்திரத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு `எவ்வளவு உயர்ந்த மனிதன்’ என்ற கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்கிறார்கள். மேலும் தொடர்ந்து….
    (தொடரும்)

  9. #2636
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு கோபால் சார்,

    அருமையாக தொகுத்து தந்த மூன்று முத்தான காதல் காட்சிகள். மூன்றிலுமே நாயகன் நாயகிக்கு பாடல் கிடையாது (ஒன்றில் மட்டும் பின்னணியில் ஒலிக்கும்) ஓடிபிடித்தல் கிடையாது. ஆனாலும் நம்மை காட்சியுடன் ஒன்ற வைத்து விடக்கூடிய அந்த அதியற்புத காதலை உங்கள் வர்ணனையில் படிக்கும் சுகமே தனி. படித்தவுடன் அவற்றை காட்சியாக காணும் பரவசமே தனி.

    அருமையான விவரணை, பாராட்டுக்கள்

  10. #2637
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு ஆதவன் ரவி சார்,

    'வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்' பாடலை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்க படிக்க இன்பமாக இருக்கிறது. எத்தகைய ரசிப்பு தன்மை தங்களுள் புதைந்து கிடக்கிறது என்பதற்கு உங்கள் எழுத்துக்களே சாட்சி.

    நாற்காலியின் ஆதங்கம் பற்றிய உங்கள் கற்பனை பலே...

    டெல்லி மாநிலங்களவை நாற்காலி குதூகலித்தது "அந்த கலை மேதையை சுமக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது"

    தமிழக சட்டமன்ற நாற்காலி சாபமிட்டது "அந்த பாக்கியம் எனக்கு கிடைக்காமல் செய்த திருவையாறு வாக்காளர்கள் ஒழிக".

  11. Likes Harrietlgy liked this post
  12. #2638
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்பு வாசுதேவன் சார்,

    ஸ்டெப் - பை - ஸ்டெப் ஆக சண்டை போடுபவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதை ஸ்டெப் - பை - ஸ்டெப் ஆக எழுத்துக்களில் கொண்டு வர உங்களை விட்டால் வேறு யார்?.

    எல்லா சண்டைக் காட்சிகளையும் ஒரே மாதிரி செய்துவிட்டு போகிறவர்கள் மத்தியில், கொஞ்சம் பிசகினாலும் கேலியாகி விடக்கூடிய கடினமான சண்டையை, ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு கொஞ்சமும் ஊறு வந்து விடாமல் மிக கவனமாக செய்ய நம்மவரை விட்டால் வேறு யார்?.

    நாயகன் நம்மவர் என்பதால் அவரை மட்டுமே பாராட்டாமல் உடன் சண்டையிடும் வில்லனையும், சண்டை பயிற்சியாளரையும், பின்னணி இசை தந்தவரையும் இயக்குனரையும் சேர்த்து பாராட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்களை விட்டால் வேறு யார்?.
    Last edited by adiram; 27th November 2016 at 06:33 PM.

  13. #2639
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதவன் ரவி,

    உங்களுடையது வெள்ளி கிண்ணமல்ல." தங்க "கிண்ணம். மனதில் தங்க.

    அருமையான பாடலுக்கு ,அருமையான ஜோடிக்கு, அருமையான பதிவு.

    வாசு,

    தவப்புதல்வன் படம் முக்தா படங்களிலேயே சுவாரஸ்யமானது. (கே.ஆர்.விஜயா தவிர)அதுவும் இந்த காட்சியும் ,இதன் பின்னணி போராட்டமும். துவந்த யுத்தமல்ல இதுவென்ற போதிலும் ,அதை விட சுவாரஸ்யமானது.உனது உழைப்பை விட ,அதிக நேரம் பதிவை பார்த்து, காட்சி பார்த்து நேரம் செலவழித்தேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #2640
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •